💕நெஞ்சம் மறப்பதில்லை!💕2.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

S.M.Eshwari.

Author
Author
Joined
Jun 7, 2021
Messages
81
Reaction score
92
Points
18
Location
Mangadu
நெஞ்சம் மறப்பதில்லை.2.

"அக்கா இந்த கணக்கு மட்டும் ஆன்சர

வரல"

"ஏண்டா பிளஸ் பண்ண வேண்டிய இடத்தில மைனஸ் பண்ணி வச்சா எப்படிடா வரும்".

"போங்கக்கா.....,பக்கபக்கமா படிக்கசொன்னா கூட படிச்சரலாம்.....
ஆனா இந்த கணக்கு மட்டும் சுட்டு
போட்டாலும் வர மாட்டேங்குது,..
என அங்களாய்த்துக் கொண்டவன....சதிஸ்.
ஆதியாவைசுற்றி பலதரப்பட்ட வயசுக்குட்பட்ட பிள்ளைகள் பதினைந்து பேர் அமர்ந்து இருந்தனர்.அவர்களின் ஹோம் வோர்க்கைப் பார்த்து என்னென்ன செய்ய வேண்டும் என சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தாள்.
"ஏம்மா..... நீயே.. அலுப்பா வந்திருக்க.....கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க கூடாதா? இது சண்முகம்.

"இல்ல ஆங்கிள்...,கொஞ்ச நேரம் தான்,சதிஷ் இந்த வருஷம் டென்ந்த்
இல்லையா? ஏற்கனவே ஐயா கணக்குல புலி..... கொஞ்சம் கேப் விட்டா போதும்....ஒன் பிளஸ் ஒன் என்னன்னு கேட்டா முழிப்பான்."
"சரிம்மா.... சீக்கிரம் முடிச்சுட்டு போய் ரெஸ்ட் எடு..இவங்களை எல்லாம் சண்டே புடிச்சு ஒக்கார வை..."
"ஐயோ!.... அப்பா...அந்த ஒரு நாளாவது
எங்கள பிரியா விட சொல்லுங்க...".

"ஆமா......" என அனைவரும் கோரசாக கத்த ....

"அப்பனா அக்கா சொல்றத சீக்கிரம் முடிக்க பாருங்க... நா அம்மா கிட்ட சொல்லி சாப்பாடு எடுத்துவைக்க சொல்றேன்...."என்று கூ றிய சண்முகம் சாப்பாட்டு ஹால் நோக்கி சென்றார்.

அந்த பதினைந்து பிள்ளைகளும் சண்முகம் பெறா மல் பெற்ற பிள்ளைகள்.திருமணம் முடிந்து சில வருடங்கள் கழிந்தும் ,பிள்ளை செல்வம் கிடைக்காத நிலையில்,சொந்தஙகள் இரண்டாம் திருமணத்திற்கு வற்புறுத்த,..."ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டு ,என் பொண்டாட்டிக்கு ம் , வரப்போர வளுக்கும் என்னால வஞ்சனை செய்ய முடியாது....எங்களுக்கு பொறக்கலனா
என்ன?....…. நாங்க தத்து எடுத்து வளத்துட்டு போரோம்..." என முடிவாக கூறி விட்டார்.

"யாருக்கோ , எங்கயோ..எப்படி பிறந்த பிள்ளை யை எல்லாம் இந்த வீட்டு வாரிசாக ஏத்துக்க முடியாது...! என பெற்றவர்களும் , உடன் பிறந்தவர்களும் கூறிவிட, தன் பங்கு சொத்தை பிரித்து வாங்கி கொண்டு,தன் மனைவியோடு வெளியேறி விட்டார்.
அப்படி வந்த அவர் முதன் முதலாக பொறுப்பேற்று கொண்ட குழந்தை தான் சதிஷ். சுருக்கமா சொல்லனும்னா அவஙகளுக்கு தலைச்சன் பிள்ளை. அதன் பின் ஒவ்வொன்றாக பதினைந்து பிள்ளைகள் வந்து சேர , சட்ட சிக்கல்கள் வராமல் இருக்க "அன்பகம்"
எனப் பெயரிட்டு உரிமம் பெற்றுக்கொண்டார்.
இதற்காக யாரிடமும் உதவி என்று சென்றதில்லை. பிள்ளைகளையும் அதற்கு மேல் சேர்த்து கொள்ளவில்லை. மீறி வரும் பிள்ளைகளை தனக்கு தெரிந்த இல்லங்களுக்கு சிபாரிசு செய்து , சேர்த்து விடுவார்.
"தானும் கஷ்டப்பட்டு ,பிள்ளைகளையும் கஷ்டப்பட விடக்கூடாது என்பது அவர் எண்ணம்.
"நம்ம பெத்து இருந்தா கூட ஒன்னோ ரெண்டோ தான் ,பெத்து இருப்போம்..ஆனா..இப்ப பாரு எத்தனை குழந்தைக....பதினாறும் பெற்று பெரு வாழ்வு மாதிரி....என மனைவி லட்சுமியிடம் பெருமை பேசுவார்....

"எங்க அதுல ஒன்னு குறையுதே "!
"பதினாறாவது குழந்தை தாண்டி நீ!....என்னோட கடைக்குட்டி!... செல்லக்குட்டி....! என்று மனைவியிடம் காதல் பேசுவார்.

யாரும் அற்றவர்கள் என்று எவரும் இல்லை. அன்பு செய்ய தெரியாதவர்களே ஆதரவற்றோர்.

"ஆதிம்மா....!உன்னை ஆண்டி கூபிடுறா.... போய் என்னனு கேளு..நா இவஙகள பாத்துக்கறேன.",

இப்படியே விட்டா ...ஆதியா நகரமாட்டாள் எனத்தெரிந்து அவளை உள்ளே அனுப்பி விட்டார்..

"என்ன ஆன்டி கூப்பிட்டங்கிளா? .

"ஆமாம்மா.....இந்த சாப்பாடெல்லம் எடுத்து வைக்கணும்.".... என்றார் தன் கணவரின் எண்ணம் புரிந்தவராக.

சற்று நேரத்தில் பிள்ளைகளும் வந்துவிட ,சாப்பாட்டு வேலையை முடித்தனர்.

சற்று பெரிய பிள்ளைகளும்,சதிஷின் உதவியோடு சிறு சிறு வேலைகளை செய்து ஒதுங்க வைத்தனர்.

லட்சுமி அம்மா உதவிக்கு இரண்டு முதியவர்களும் உண்டு.வயதானவர்கள் என்பதால் இரவில் சீக்கிரம் சாப்பாடு கொடுத்து படுக்க அனுப்பி விடுவார்.
எல்லோரும் படுக்கைக்கு தயாராக..., ஆதியா..தோட்டத்து பக்கமாக வந்தாள.

எவ்வளவு அலுப்பாக இருந்தாலும்
தோட்டத்து பக்கம் வந்து பவளமல்லி செடியின் கீழ் சற்று அமர்ந்தாலே அவளுக்கு அன்னை மடியின் இதம் கிடைத்து விடும்.

ரெண்டு கிரவுண்ட இடத்தில் தங்கள் தேவைக்கு மட்டும் வீட்டை கட்டிகொண்டு மீதி இடம் முழுதும் தோட்டமாக்கி இருந்தார் ஆதியாவின்
அம்மா.!
அதில் அவர் நட்ட பவளமல்லி செடி பெரிதாகி பூத்து குலுங்க ஆரம்பிக்கவும் அதை சுற்றி,உட்காரும்
அளவிற்கு திட்டு ஒன்றை அவள் அப்பா போட்டு விட்டார்.

இரவு சாப்பாட்டுக்கு பின் ......,கொஞ்ச நேரமே ஆனாலும ,........அங்கு அமர்ந்து,
மூவரும் கதை அளப்பது வழக்கம்.

பொழுது சாய மொட்டாக இருக்கும் பவள மல்லி,இருள் கவிழ, மொட்டவிழ்ந்து இதமாக மணம் பரப்பும்.காலையில் மரத்தை சுற்றி பவளத்தையும் முத்தையும் கலந்து கொட்டினார் போன்று கொட்டிக்கிடக்கும்

செடி நட்டவரும், திட்டுஅமைத்தவரும்,
இல்லாத பொழுதும்....,ஆதியா அங்கு வந்து அமர்ந்தாலே பெற்றோரின் இதத்தை உணர்வாள்.

அது மட்டும் தானா....?

பவளமல்லி வாசனையில் இதமாக கண் மூடியவளின் ....காதோரம்...சற்று கரகரத்த குரலில்... "தியா....." என்னும் இதமான அழைப்பு....கண்ணோரம் சூடான நீர்த்துளி.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top