• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

💕நெஞ்சம் மறப்பதில்லை!💕4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,164
Reaction score
6,069
Location
India
நெஞ்சம் மறப்பதில்லை! 4.

(NM.4.இதோ !எனது நாலாவது பதிவு தோழமைகளே! படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.எனக்கு
உதவியாக இருக்கும்.போரடிக்காமல் இருக்கானு முதல்ல சொல்லுங்கப்பா..போரடிச்சாலும் முதல்ல சொல்லுங்கப்பா..திருத்திக்க உதவும்)

NM.4.


"ம்மா! நான் இந்த முடியை பாதியா கட் பண்ணிக்கவா ?"

அடுக்களையிலிருந்து கையில் கரண்டியோடு வெளி வந்த சரஸ்வதி,
ஈரத்தலையில் துண்டை கட்டிக் கொண்டிருந்த மகளைப் பார்த்து,

"என்ன கேட்ட... இப்ப கேளு..."எனக் கேட்க,

அம்மா கேட்ட தோரணையில்,
"இல்லம்மா ...இவ்வளவு நீளமா முடிய வச்சுட்டு ...தலை தேய்க்க கஷ்டமா இருக்குல்ல, அதான்..."என்று மகள் இழுக்க,

"ஏன்டி... அவ அவ முடி வளரலைனு அமேசான் காட்டு எண்ணெய் ஆப்பிரிக்க காட்டு எண்ணெய்னு வாங்கித் தேக்கிறாளுக... அதை எல்லாம் தேச்சா முடி வளராதுனு தயாரிக்கிறவனுக்கும் தெரியும், விக்கிறவனுக்கும் தெரியும். அப்படி இருந்தும் கண்டதையும் வாங்கி தேக்கிறாங்க. இவ என்னடான்னா இருக்கற முடிய வெட்டுறாளாம்..."என நீட்டி முழக்க,

"நீங்க தானம்மா ஒழுங்கா தலை தேய்க்கத் தெரியுதா? தலை சீவத் தெரியுதானு எப்பப்பாரு திட்டிக்கிட்டே இருக்கீங்க.."

"ஏன்டி? மாசத்துல ஒன்னு ரெண்டு நாள் தான் நீயா தலைக்கு குளிக்கறே. மத்த நாள்லாம் நான்தானே தேச்சு விடுறே. தலைய சீவி ஒழுங்கா என்னைக்காவது பின்னிப் போட்டிருக்கியா? எப்பப்பாரு மொத்தமா சுருட்டி, நட்டுவாக்காலியாட்டம் ஒன்ன தலையில மாட்டிட்டுத்திரிய வேண்டியது."

"என்ன? தலையாய பிரச்சனை ஓடிட்டு இருக்கும் போல அம்மாவுக்கும் பொண்ணுக்கும் இடையில,"எனக் கேட்டவாறே கேசவன் அங்கு வர,

"வந்துருவீங்களே! பொண்ண ஒன்னு சொல்றதுக்கு முன்னாடி சம்மன் இல்லாம ஆஜராகிற வேண்டியது."

"இப்ப என்ன தாண்டி உன் பிரச்சினை?அங்க விட்டுட்டு இங்க பாயுற?"

"நான் என்ன சிங்கமா புலியா? உங்க மேல பாயறதுக்கு. எல்லாம் உங்க அருமை பொண்ணாலதான். ஒழுங்கா தல தேச்சு குளிக்க சொன்னா, தேக்க முடியல. முடிய வெட்டிக்கறேங்கறா. இன்னும் ஒரு வேலை ஒழுங்கா செய்யத் தெரியுதா?இல்ல... அடுக்களையில வந்து ஊடமாட ஏதாவது வேலை கத்துக்கலாம்னு இருக்காளா?"

"இப்ப அவ வேலை கத்துக்கிட்டு என்ன ஆகப்போகுது?"

"இன்னும் உங்களுக்கு அவ சின்னப்பொண்ணுனு நினைப்பா? காலேஜ் முடிக்கப்போறா. கல்யாணம் பண்ணி போற வீட்ல என்ன வளத்துருக்காங்கனு கேக்க மாட்டாங்க? போற வீட்ல மாமியாரா இவளுக்கு தலைதேச்சு சாம்பிராணி காட்டுவாங்க?"

"ஐ..! இந்த ஐடியா நல்லா இருக்கே. அப்பா! மாப்பிள்ளை பாக்குறப்ப ஒன் ஆஃப் த கன்டிஷனா இதையும்
சேத்துக்குங்க. மாமியார் தான் தலதேச்சு விடணும்னு"எனக்கூறி விட்டு ,"நான் போயி இப்ப காலேஜ் கிளம்புறேன்"என கூறிச் சென்ற மகளைப் பார்த்து

"ஹும்! அதது மாப்பிள்ளைக்கு கண்டிஷன் ‌போட்டா உங்க‌பொண்ணு
மாமியாவுக்கே கண்டிஷன் போடுறா.
யாரு வந்து மாட்டப்போறாங்களோ?.."
என அங்கலாய்த்துக் கொண்டே விட்ட வேலையைத் தொடர அடுக்களை சென்றார்.

அவர் கூடவே அடுக்களை சென்ற கேசவனும், எடுத்து வைத்திருந்த காய்களை நறுக்கியவாறே,

"ஏன்டி? இருக்கிறது ஒரு பொண்ணு. அவளையும் எப்ப பாத்தாலும் நொய் நொய்ங்கறே. அவளா ஏதாவது செய்ய வந்தாலும் ஏதாவது ஒரு கொறையச் சொல்லி செய்ய விட மாட்டேங்கற."

"அதெல்லாம் அப்படித்தான்! நீங்களும் செல்லம் கொடுத்து , நானும் செல்லம்
கொடுத்தா எப்படிங்க. பொம்பளப் பிள்ளையா இருந்தாலும் ரொம்ப பொத்திப்பொத்தி ‌வளக்க கூடாது. பூஞ்சையாப் போயிரும். என்ன தான் படிச்சாலும், வேலைக்குப் போனாலும் கல்யாணத்துக்குப் பின்னாடி அடுக்களை ராஜ்யம் பொம்பளங்க கையில தான். கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு சுடு தண்ணி ‌கூட வைக்க தெரியாததுக தான், கல்யாணத்துக்குப் பின்னாடி புருஷனுக்கு அது பிடிக்கும், பிள்ளைக்கு இது பிடிக்கும்னு சூப்பரா சமைக்க ஆரம்பிச்சுருவாங்க. அதனாலதான் நான் எந்த வேலையும் செய்ய விடுறது இல்ல. அதுக்காக சும்மா விட்டுற முடியுமா? அவ செய்ய வேண்டிய வேலைகளையும், அவளோட பொறுப்புகளையும் அப்பப்ப சொல்லிக் கிட்டே இருக்கோணும்,"என்று ராகம் இழுத்த மனைவியைப் பார்த்து,

"வாவ்! சூப்பர்டி! பயாலஜி எப்ப இருந்து சைக்காலஜி பேசுது,"என்றார் கேசவன்.

"இந்த கெமிஸ்ட்ரி எப்ப இருந்து அடுப்படி வந்து லவ்வாலஜி பேசுச்சோ,
அப்ப இருந்து. அப்புறம் இது சைக்காலஜி எல்லாம் ஒன்னும் இல்ல. பொண்ணப் பெத்த அம்மாக்களோட பேசிக் திங்க்காலஜி"

"சூப்பர்ஜி! சூப்பர்ஜி!அப்புறம்... என்ன அவ்ளோ ஈஸியா அடுப்படி கெமிஸ்ட்ரினு சொல்லிட்ட. புருஷனும், பொண்டாட்டியும் சேந்து கிட்ச்சன்ல வேல பாத்தா தான்டி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும்."

"ஐயே! பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்குற வயசு வந்தாச்சு. இன்னும் கெமிஸ்ட்ரி பயாலஜின்னுட்டு.
இனிமே ஸ்கூல்ல பிள்ளைகளுக்கு கெமிஸ்ட்ரி நடத்தறதோட நிப்பாட்டுங்க. இப்படி கிட்சன்ல வந்து கெமிஸ்ட்ரி நடத்தாதிங்க!"

"என்னடி இப்படி சொல்லிட்ட? கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆனா தான்டி, ஃபிஸிக்கலா, பயாலஜி கிரியேட் ஆகும்."

"ஐயோ! அப்பவே எங்க அப்பாகிட்ட சொன்னேன். நானும் சயின்ஸ் டீச்சர்.
அவரும் சயின்ஸ் டீச்சர். கொஞ்சம் யோசிக்கலாம்ப்பா அப்படினு. அவர் தான் கேக்கல. இப்ப பாருங்க! எனக்கு இப்ப இது கிட்ச்சனா? லேபான்னே தெரியல?"

பெற்றொரின் நினைவுகளோடே அழகாக தலை சீவி, இடை தாண்டிய கூந்தலைத் தளரப் பிண்ணி பின்னலின் நுனியில் ரப்பர்பேண்ட்டைச் சுற்றினாள் ஆதியா!!

பெற்றொரின் புகைப்படத்தினருகே சென்றவள்,"நல்லாப் பாத்துக்கோங்க. ஒழுங்கா பிண்ணியிருக்கனா? என் ரூம் எப்படி நீட்டா இருக்கா? நீங்க விட்டுட்டுப் போன இந்த ஒரு வருஷத்துல, பொறுப்பா மாறி இருக்கேனா? நான் பொறுப்பா மாறணும்கறதுக்காக ரெண்டு பேரும் என்னைத் தனியா விட்டுட்டுப் போயிருக்க வேண்டிய அவசியமில்லை."
கண்களில் கண்ணீரோடும் வாயில் சிரிப்போடும் தினமும் தன்‌பெற்றொரின் புகைப்படத்தின் முன் நடத்தும் சம்பாஷனை இது.

பெற்றோரை இழந்த ஆரம்ப காலங்களில் இதே கேள்வியை கண்ணீரோடும், கதறலோடும் கேட்டுக் கொண்டிருந்தாள். பின் விரக்தியாக கேட்க ஆரம்பித்து, தற்பொழுது வெறுமையான புன்னகையோடுக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

காலமே சிறந்த மருந்து சில காயங்களுக்கு. ஆனால் சில வகையான துயரங்களுக்கு இனிமையான நினைவுகளே அருமருந்து.

'தன்னால் இதெல்லாம் செய்ய முடியுமா?'என்று அவளே வியந்ததுண்டு.

ஆதியாவின் அறைக்கு அவளது அம்மா வரும்பொழுதெல்லாம் "துணிமணி எல்லாம் ஏன் இப்படி போட்டு வச்சிருக்க!
புக்ஸெல்லாம் அலங்கோலமா கிடக்கு பாரு! படுக்கைய மடிச்சு வச்சிருக்கியா? எல்லாம் அப்படிஅப்படியே போட்டு வச்சிருக்க!ஒதுங்க வைக்க மாட்டியா?"என வாய் பாட்டுக்கு கேட்டுக்கொண்டே இருக்கும். கை அவற்றை எல்லாம் செய்து கொண்டே இருக்கும்.

இப்பொழுதும் அந்தக்‌குரல் அவளுக்குக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இவளது கை தன்னால் அவற்றை எல்லாம் ஒதுங்க வைக்கிறது.

சமையலும் அப்படித்தான்.லஷ்மி ஆன்ட்டி உதவியோடு, கையக் காலைச்சுட்டுக் கொண்டு சிறுக சிறுக கற்றுக் கொண்டாள்.

அம்மா சொன்னது சரிதான். பிடிச்சவங்களுக்காக என்றால் எதையும் சீக்கிரம் கற்றுக் கொள்கிறோம்.

'தானும் அப்படித் தானே! அவனுக்காக என்று தானே சமைக்க ஆரம்பித்தோம்.'

மனதில் எண்ணங்கள் அவை பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்க, கை தன்னால் தனக்குத் தேவையானவற்றை எடுத்து வைக்க, அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

காலையில் தோட்டத்தில் பறித்த ரோஜாப்பூவை எடுத்துத் தலையின் பின்னால் சொருகிக் கொண்டே, மேஜை மீதிருந்த நிழற்படத்தைப்‌ பார்த்தாள்.

தன்னவனின் வலக்கரம் தன் தோளோடு அணைத்திருக்க, ஆதவனை நோக்கும் தாமரையாய் அண்ணாந்து அவள் முகம்!

போட்டோவை எடுத்து தன்னவனின் முகம் வருடி, எப்பொழுதும் போல்,"பை" சொல்லி வைத்து விட்டு தன்னறையை விட்டு வெளியே வந்தாள்.

பிள்ளைகளெல்லாம் பள்ளிக்குக் கிளம்பிவிட்டு, சாப்பிடத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

சதிஸோடு சேர்ந்து ஆதியாவும், அவர்களுக்கெல்லாம் தட்டு எடுத்து வைக்க, தண்ணி வைக்க என்று சிறு சிறு உதவிகளை செய்ய ஆரம்பித்தாள்.

அங்கு வந்த லஷ்மி,"ஆதியா! உனக்கு டைம் ஆயிருச்சு பாரு! நீ முதல்ல சாப்பிட்டுக் கிளம்புமா! நானும் அங்கிளும் இதெல்லாம் பாத்துக்கறோம்!" எனக் கூற,

"சரி ஆன்ட்டி!"என்றவாறு தட்டில் தனக்குத் தேவையானவற்றை எடுத்து‌வைத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள்.

இட்லியைப் பிட்டு, சாம்பாரில் தோய்த்து வாயில் வைத்தவள்,

"ஆன்ட்டி! இன்னைக்கு சாம்பார் வச்சது பாப்பாத்தி ஆன்ட்டியா?"

"எப்டிக்கா! ஒரு வாய் வச்சவுடனே யார் சமையல்னு கரெக்டா சொல்லிர்ற?"ஆச்சர்யமாய் சதீஷ்.

"அதுவாடா சதீஷ்! நம்ம மூனு ஆன்டிகளோட சமையலும் ஒவ்வொன்னும் ஒரு கைப்பக்குவம்டா. ஒன்னயொன்னு அடிச்சுக்கவே முடியாதுடா."என்று அவனிடம் கூறியவள்,

"பாப்பாத்தி ஆன்ட்டி! இன்னைக்கு சாம்பார் சூப்பர்! ரெண்டு இட்லி சேத்து உள்ள‌ போச்சு,"என்று பாப்பாத்திக்கும் பாராட்டுப் பத்திரம் வாசித்தால்.

"எங்க வீட்டுக்காரரு கூட இப்படி சொன்னது இல்லம்மா. நீ சாப்புடறப்ப
எல்லாம் சொல்ற."

"அவரு எப்படி சொல்லுவாரு? அவருக்குத்தா உண்மை தெரியும்ல?"_இது சதிஷ்.

"டேய் சதிஷ்! சமைக்கறவங்க, நம்ம சமைக்கறத எல்லோரும் நல்லா சாப்பிடணும்னு தான்டா நினப்பாங்க.
ஏதாவது ஒன்னுரெண்டு நாள் அப்படிஇப்படி தான் இருக்கும். நல்லா இருக்கும் போதெல்லாம் கம்னு திங்க வேண்டியது. என்னைக்காவது ஒரு நாள் உப்புஉரப்பு கூடிருச்சுனா காச்முச்சுனு கத்த வேண்டியது.
ஒரு நாள் சூப்பரா இருக்குனு சொல்லிப்பாரு! மறு நாள் ‌டபுள்‌ டேஸ்ட்டா உனக்கு கிடைக்கும்."

"சூப்பரா பேசுறக்கா. யார் கிட்டக்கா கத்துக்கிட்ட."

"எங்க அப்பா கிட்ட இருந்து தான். அவரு எங்கம்மா சமையல ஒரு நாள் கூட குறை சொன்னதில்ல."

"ஆன்ட்டி அவ்ளோ சூப்பரா சமைப்பாங்களாக்கா!"

"ஆமாடா! ஆனா அதைவிட சூப்பரா எங்கப்பா, எங்கம்மாவை லவ் பண்ணினாருடா!"

பேசிக்‌கொண்டே சாப்பிட்டு முடித்தவள், தனது ஸ்கூட்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள், லஷ்மியிடமும், சண்முகத்திடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.

கேட் அருகே வந்தவுடன் ,தனது கைபேசி அழைப்பு விடுக்க, எடுத்துப் பார்த்தவள்
எம்.டி.என்றிருக்க அழைப்பை ஏற்றாள்.

"ஹலோ! குட் மார்னிங் சார்!சொல்லுங்க சார்!"

"குட் மார்னிங் ஆதியா! கிளம்பிட்டியாம்மா?""

"இதோ இப்ப தான் சார் ‌வண்டிய ஸ்டார்ட் பண்றே!"

"சரிம்மா! இப்ப நீ ஆஃபிஸுக்கு போக வேண்டாம்..."*****"ரெஸ்டாரன்ட்க்கு வந்துருமா! சத்யப்பிரகாஷ்... அதாம்மா என் ஃபிரெண்டு நம்ம கம்பெனியப் பத்தின சில டீடெயில்ஸ் கேட்டிருந்தாரு. நீயும்
வந்தேனா கொஞ்சம் உதவியா இருக்கும். ஒன்னும் பயப்படத் தேவையில்ல. ஓபன் ரெஸ்டாரன்ட் தான்மா!"

"ஐயோ! என்ன சார் நீங்க ‌இருக்கும் போது எனக்கென்ன ‌பயம்? வந்துறேன் சார்,"
என அழைப்பைத் துண்டித்தவள்,
சண்முகத்திடம் தகவலைத் தெரிவித்துவிட்டு ரெஸ்டாரன்ட் நோக்கி வண்டியை செலுத்தினாள்.
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
நல்லா இருக்கு ... வார்த்தைகளுக்கு இடையில் space விடுங்க மா

https://forum.smtamilnovels.com/index.php?threads/தமிழில்-நிறுத்தற்-குறிகள்-பயன்பாடு.12975/ இந்த லிங்க்ல இருக்குறத படிச்சு பாருங்க மா... இன்னும் பெஸ்டா கொடுக்க உங்களுக்கும் ஐடியா கிடைக்கும். வாழ்த்துகள் ஈஸ்வரி
 




Last edited:

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
யாரு அது இவளோட அவன்??

அதானே போன யூடில பேரண்ட்ஸ் இல்லனு போட்டிங்கனு பார்த்தேன் கனவா??

பட் செம்மயா இருந்துச்சு அந்த காண்வர்சேசன் அழகான காதல்

ஆதியா முடிய வெட்ட போனியா ரொம்ப தப்புமா .பொண்ணுகளுக்கு முடி தான் அழகு

நல்லதொரு பதிவு😍💓
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
அவங்க அம்மா அப்பா நல்ல couple னு தெரிந்து.... ❤

எப்படி இறந்தாங்க.... 😔

அவனுக்காக சமைக்க கத்துக்கிட்டாங்களா.... 🧐

அப்போ சூர்யா அஹ் ஏற்கனவே தெரியுமா.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top