• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

💕நெஞ்சம் மறப்பதில்லை!💕5.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,164
Reaction score
6,069
Location
India
நெஞ்சம் மறப்பதில்லை!5.

" என்ன லஷ்மி! கிளம்பிப் போற ஆதியாவையேப் பாத்துட்டு இருக்க?"

"இன்னும் எத்தனை நாளைக்கு, இந்தப்பிள்ள இப்படியே இருக்கும்?"

"ஏன்? அந்தப் பிள்ளைக்கு என்ன குறைச்சல்?"

"குறைச்சல்னு ஒன்னும் இல்லைங்க. எல்லாம். அதிகப்படியா இருக்கு. அதுதான்
பயமாவும் இருக்கு. குச்சிக்கு சேலை கட்டினாலே சுத்தி சுத்தி வருவானுக. விக்ரகம் மாதிரி இருக்கா. தங்கச்சிலையாட்டம் இவ வெளிய போயிட்டு வர்ற வரைக்கும் மனசு திக்குதிக்குனு இருக்குங்க."

"எனக்கு மட்டும் அந்த பயம் இல்லைனு நினைக்கிறியா?"

"பயந்தா மட்டும் போதுமா?உரியவங்ககிட்ட ஒப்படைச்சுட்டா
நிம்மதியா இருக்கலாமில்ல. இன்னைக்கு வந்ததும் இதைப்பத்தி பேசனும்ங்க. இப்படியே விட்டுட்டு இருக்க முடியாது!" எனக் கூறி விட்டு உள்ளே சென்ற மனைவியைப் பார்த்து,

'இவ பயப்படுறதும் சரி தான். ஆதியா பயப்படுறதும் சரி தான். இதுல யார் பக்கம் பேசறதுனு தெரியலையே?'என எண்ணியவாறே பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பும் வேலைக்கு
ஆயத்தமானார்.

கோவை 'ரேஸ்கோர்ஸ்' பகுதியில்
அமைந்திருந்த, இராமநாதன் குறிப்பிட்டிருந்த ரெஸ்டாரன்ட்டின்
பார்க்கிங் ஏரியாவில் தனது ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றாள்.

குரோட்டன்ஸ் செடி வகைகளும்,
வெறும் நிழலுக்காகவும் அழகுக்காகவும் மட்டுமே உருவாக்கப்பட்டு நெடிதுயர்ந்த பெயரே தெரியாத மரவகைகளுடன் குளுமையாக காட்சி தந்தது.

திறந்த வெளிப்பகுதியில் குடில்
போன்ற அமைப்புடன், நான்கு இருக்கைகளுடன் கூடிய ஒரு மேஜை என்ற அமைப்பில் பல குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மற்றொரு புறம் ஒரு உயர்தர ரெஸ்டாரன்ட்டிற்கே உரிய செயற்கை அருவியுடன் கூடிய நீரூற்றுகளும் அதில் அழகாக நீந்தும் மீன்களும் ஆங்காங்கே நளினமாக அழகுற உருவாக்கப்பட்ட சிலைகளுமாக காட்சி அளித்தது.

அவற்றை எல்லாம் பார்வையிட்டவாறே,'இவங்க எந்த டேபிள்னு தெரியலயே,'என எண்ணியவாறே தனது பார்வையை சுழற்றியவள்,
ராமநாதன் அமர்ந்திருந்த மேஜை கண்ணில் பட அவரை நோக்கி சென்றாள்.

"எக்ஸ்கீயுஸ்மீ சார். குட்மார்னிங்!"
என அவர் முன் நின்றவளை நிமிர்ந்து பார்த்த ராமநாதன்,

"வந்துட்டியாம்மா! வந்து உட்காரும்மா! என ஆதியாவுக்கு ஒரு இருக்கையைக் காட்டினார்.

நன்றி சொல்லி விட்டு அமர்ந்தவள்.
"சாரி சார்! லேட்டாயிடுச்சு" என்க,

"பரவாயில்லம்மா! நானே கிளம்பிட்டுதானே உன்னைக் கூப்பிட்டேன். சத்யா ஃபோன் பண்ணினதும், நான் மட்டும்தான் வரலாம்னு நினச்சேன். அப்புறம்தான் உன் ஞாபகம் வந்தது. உங்க ரெண்டு பேரையும் அறிமுகப்படுத்தி வச்சுட்டா, அவருக்குனு தனியா ஒரு செகரட்ரிய அப்பாயின்ட் பண்ணிக்கிற வரைக்கும் நீ அவர் கூட இருப்பேனு தான் உன்னையும் வரச்சொன்னே."

"அது தானே சார் என் வேலையே!" இதை நீங்க சொல்லணுமா?"

இவர்கள் பேசிக்கொண்டிருக்க, சத்யபிரகாஷ் வருவதைக் கண்ட ராமநாதன், எழுந்து சென்று சிறு பிள்ளையைப் போல் தனது நண்பனைக் கைபிடித்து அழைத்து வந்தார். நண்பனைக் கண்ட குதூகலம் அவர் முகத்தில். அதுக்கும் குறையாத சந்தோஷம் சத்யபிரகாஷிடமும்.

இந்த வயதிலும் தனி கம்பீரம் கொண்ட தோற்றம். முகத்தில் நான் எல்லாம் கண்டவனாக்கும் என்ற அனுபவத்தின் சாயல். அந்த அனுபவம் தந்த நிதானமான பார்வை.

இந்த சந்திப்பை சத்யபிரகாஷ்,
இராமநாதன் கம்பெனியிலேயே நிகழ்த்தி இருக்கலாம். ஆனால் ஏதோ ஒன்று அவரை நெருடுகிறது. இன்னும் முழுமையாகக் கம்பெனி பரிமாற்றம் நடைபெறாத நிலையில், அங்கு கால் வைக்க அவருக்கு விருப்பம் இல்லை. இன்னும் சின்ன சின்ன ஃபார்மாலிட்டிஸ் முடிக்க வேண்டியுள்ளது. நண்பனின் எண்ணம் அறிந்த ராமநாதனும், அவரை வற்புறுத்தவில்லை.

சந்தித்துக்கொண்ட நண்பர்கள் இருவரும் நலம் விசாரிப்பில் தொடங்கி, குடும்பம், பிசினஸ் என சுற்றம் மறந்து பேச ஆரம்பித்து‌விட்டனர். தொழில் ரீதியாக இருவரும் பிரிந்த பிறகு
சந்தித்துக்கொள்ளாமல் இல்லை.
பிசினஸ் மீட்டிங், பொது விசேஷங்கள் என சந்திக்கும் பொழுது பொதுவான நல விசாரிப்புகள் இருந்தது தான். ஆனால் தனிப்பட்ட முறையில் இவ்வாறு சந்தித்துக்கொண்டது இல்லை.

சுற்றம் மறந்து பேசும் நண்பர்களையே ஆதியா பார்த்துக் கொண்டிருந்தாள்.

வயது, தகுதி, கௌரவம் என அனைத்தையும் மறந்து தனது இயல்பை வெளிக்கொணரும் சக்தி தோழமைக்கு மட்டுமே உண்டு .

ராமநாதனும் நண்பனைக் கண்ட
சந்தோஷத்தில் ஆதியா இருப்பதையே மறந்து விட்டார்.

சட்டென்று ஞாபகம் வந்தவராக,
"அடடே! சத்யா! உன்னைப் பாத்த சந்தோஷத்துல, இந்தப் பொண்ண மறந்துட்டேன் பாரு. இது ஆதியா. நம்ம கம்பெனில அக்கவுண்ட்டன்ட்டா இருக்கு.," என அறிமுகப்படுத்தி வைக்க,

சட்டென்று எழுந்து ஆதியா, கை குவித்து வணக்கம் வைத்தாள். அடுத்து இவர் தான் எம்.டி என்கிற பதட்டம் வேறு.

பதிலுக்கு வணக்கம் சொன்ன சத்யபிரகாஷ்,"உட்காரும்மா! என்ன சாப்பிடுற?"எனக் கேட்க,
சற்று சகஜமாகியவள்,

"எனக்கு காஃபி மட்டும் போதும் சார்! நான் இப்ப தான் சாப்பிட்டு வந்தேன்."

"சரிம்மா!" எனக் கூறி விட்டு நண்பனின் விருப்பத்தைக் கேட்டு இருவருக்கும் உணவு வகைகளை‌ஆர்டர் செய்தார்.

"அப்புறம் சத்யா! எப்ப கம்பெனிக்கு வந்து பொறுப்பெடுத்துக்கப்போற?"
ராமநாதனே பேச்சை ஆரம்பிக்க,

"அடுத்த வாரம் ஒரு நல்ல நாள் வருது. அன்னைக்கே சின்னதா நம்ம அளவுல மட்டும், ஒரு பூஜைக்கு ஏற்பாடு பண்ணிட்டு
பொருப்பெடுத்துக்கறேன் ராமா!"
அதுக்கப்புறமா அஃபிஷியலா நம்ம பிசினஸ் வட்டாரங்களுக்கு தெரியப்படுத்திக்கலாம்!"


"சரி... சத்யா! உன் இஷ்டப்படியே செய். என்னோட பிஏ மூனு‌மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆகி போயிட்டாங்க. கொஞ்ச நாள் தானேன்னு நான் பிஏ அப்பாயின்ட் பண்ணிக்கல. அடுத்து வர்றவங்க
அவங்களுக்குத் தகுந்த மாதிரி செலக்ட் பண்ணிக்கட்டும்னு விட்டுட்டேன். அந்தப் பொறுப்பையும் ஆதியா தான் பாத்துக்குது. அதனால தான் உனக்கு அறிமுகப்படுத்தலாம்னு வரச்சொன்னேன்.பிஏ செலக்ட் பண்ணிக்கிற வரைக்கும் ஆதியா உனக்கு உதவியாக இருக்கும்."

"வேலைக்கு ஆள் செலக்ட் பண்றதெல்லாம் என் பேரனுடைய‌ வேலை ராமா! அதுல நான் தலையிட மாட்டேன். பொருப்பெடுத்துக்கறது மட்டும்தான் என் வேலை.நிர்வாகப் பொறுப்பு அவனோடது."

"உன் பேரன் என்ன சொல்றான் சத்யா!"என்ற ராமநாதன் கேள்விக்கு,

"அவனுக்கு முதல்ல இஷ்டமில்லை தான். அப்புறமா நான் எடுத்து சொல்லவும் அம்மாவும் பையனும்
புரிஞ்சுகிட்டாங்க,"என்றார்.

"நம்மளை புரிஞ்சுக்கற உறவுகள் கிடைக்கிறது ஒரு வரம் சத்யா..!"

"அதுல நான் எப்பவுமே கொடுத்து வச்சவன்." சிலாகித்துக் கொண்டார் சத்யபிரகாஷ்.

"உன் அருமை என் பிள்ளைகளுக்குத் தான் தெரியல. ஆனா, நீ வெளியேறிய பிறகு தான் அவங்களுக்கு புரிஞ்சுது. நம்ம அப்பா முதல் போட்டதால மட்டுமே இந்த கம்பெனி வளரல, உன் உழைப்பும் முக்கிய காரணம்னு. அதுவும் நல்லதுக்கு தான் சத்யா! இல்லைனா உன் திறமை முழுசும், நன்றிக் கடன்ங்கிற பேருல இந்த ஒரு கம்பெனிக்குள்ளேயே அடங்கிப் போயிருக்கும். உன்னோட வளர்ச்சியைப் பாத்து எவ்வளவு பெருமப்பட்டுருக்கேன் தெரியுமா?"

நண்பனைப் பார்த்த சந்தோசத்தில்,
தன்னை மறந்து பேசிக் கொண்டிருந்த ராமநாதனைப் பார்த்த சத்யபிரகாஷுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

நண்பனின் முன்னேற்றம் கண்டு
பொறமைப்படாமல், அதுவும் தன்னால் கை கொடுத்து தூக்கி விடப்பட்டவன் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் பேசும் நண்பனைப் பார்த்தவர்க்கு, நட்பு விஷயத்திலும் தான் கொடுத்து வைத்தவன் என்றே தோன்றியது.

தனது எம்.டி இப்படி மனம் விட்டு பேசுவதைக் கண்ட‌ ஆதியாவிற்கு
ஆச்சரியமாக இருந்தது. அவர்களின் தனிப்பட்ட விஷயம் பேசும் பொழுது தான் அங்கிருப்பது சரியா என்ற எண்ணமும் எழுந்தது.

அதற்குள் அவர்கள் ஆர்டர் ‌செய்திருந்த உணவு வகைகள் ‌வரவும் பேச்சு சற்று மாறியது.

"அப்புறம் சத்யா! உன் பேரனைப்பத்தி சொல்லு. இப்ப பிசினஸ் வட்டாரத்துலயே அவன் தான் நம்பர் ஒன்னா இருக்காம் போல!"

"நம்பர் ஒன் நம்பர் டூ இதுல எல்லாம் எனக்கும் அவனுக்கும் நம்பிக்கை இல்லை ராமா!இன்னைக்கு நாமன்னா நாளைக்கு இன்னொருத்தர். அதனால நாம செய்யறதை சிறப்பா செய்யணும். அவ்ளோதான்."

"பரவாயில்ல சத்யா! உனக்குக் கைகொடுக்க பேரன் வந்துட்டான். என் பேரனுக இப்ப‌தான் காலேஜ்ஜூ, ஸ்கூலுன்னு போரானுங்க. அதுவும் வெளி நாட்டுல."

"அதுக்குத்தான் காலாகாலத்துல கல்யாணம் பண்ணனும்கறது,"எனக் கூறிவிட்டு சத்யபிரகாஷ் சிரிக்க,

"எது? நீ பண்ணது காலாகாலத்துல
பண்ண கல்யாணமா? ஆதியா!
நீயே சொல்லும்மா!
பொண்ணுக்கு கல்யாண வயசு எத்தனைன்னு கவர்மெண்ட் சொல்லுது,"எனக் கேட்க,

தீடீரென்று தன்னைப் பார்த்து கேட்கவும் ஒரு கணம் தயங்கினாள்.

ஒருவர் நிகழ்கால எம்.டி. இன்னொருவரோ வருங்கால எம்.டி. இவர்கள் சம்பாஷனையில்
கலந்து கொள்ளலாமா? அஃபிஷியல்னா பரவாயில்லை. பேசத்தெரியாமல் ஏதாவது பேசி விட்டால் என்ன செய்வது என யோசித்துக் கொண்டே ,"இருபத்தி ஒன்னு சார்"என்றாள்.

"பொண்ணுக்கே இருபத்தி ஒன்னு ஆனா சத்யா கல்யாணம் பண்ணினது இருபது வயசுல."என ராமநாதன் கூற,

"பால்ய விவாகமா சார்?"சட்டென்று ஆதியா கேட்டு விட ராமநாதன் வாய் விட்டு சிரித்தார்.

'தேவையில்லாம வாய் விட்டுட்டோமோ? என ஒரு கணம் தயங்கியவள், சத்யபிரகாஷைப் பார்த்து,"சாரி சார். தெரியாம...,"என இழுக்க,

"அடடே! இதுக்கு ஏம்மா? சாரி எல்லாம் கேக்குற. இவங்களும் இதையே சொல்லி தாம்மா கிண்டல் பண்ணுவாங்க.இப்ப என் பேரனும் இதைச் சொல்லி தான் கிண்டல் பண்ணுறா,"என்று தன்னை இலகுவாக்கிய சத்யபிரகாஷை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

"என்னம்மா அப்படி பாக்குற..."

"இல்ல சார்! புது எம்.டி. எப்படி இருப்பாரோனு ஒரு பயம் இருந்துச்சு. ஆனா இப்ப இல்ல‌ சார்."

"அப்ப.... என்னைப் பாத்தா ...ஒரு எம்.டி.ங்கற பயம் வரல..."

"பயம் எதுக்கு சர் வரணும். மரியாதைதான் வரணும். எனக்கு உங்க மேல‌மரியாதை தான் வருது. பயம் வரல."

"ரெம்ப தெளிவா பேசுறேம்மா. இந்த நடை ,உடை ,வேஷம் எல்லாம் தொழில் வட்டாரத்துக்காக போடறதும்மா! இன்னும் உள்ளுக்குள்ள மக்களோட மக்களா வியாபாரம் பாத்த அதே மிளகா, வெங்காய கமிஷன் மண்டி சத்யன் தாம்மா!என்றவரின் மீது ஆதியாவிற்கு மரியாதையும் தாண்டி பக்தியே வந்து விட்டது என்று சொல்லலாம்.

ஒருவரின் வெற்றி என்பது எவ்வளவு உயர்ந்தாலும் தன்னிலை மறவாதிருப்பது தானோ?

இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ராமநாதன்,

"தெ கிரேட் ப்ரகாஷ் அண்ட் க்ரூப்ஸ் ஆஃப் கம்பெனியோட எம்.டி க்கு ரெம்ப தான்‌ தன்னடக்கம்" என்று கூற,

அதைக் கேட்டவளோ, சட்டென்று திரும்பி சத்யபிரகாஷைப் பார்க்க,
அவள் உணர்வு என்னவென்று அவளுக்கே புரியவில்லை.

"சார்! அப்படினா லாஸ்ட் வீக், பிஸினஸ் மேகஸின்ல வந்தது...,"என இழுக்க,

"என் பேரன் சூர்யபிரகாஷ் தாம்மா!"

'என் கண்ணாவோட தாத்தாவா?'
என எண்ணியவளுக்கு அதன் பின் அங்கு நடந்த பேச்சு வார்த்தைகள் எதுவும் அவள் கருத்தில் நினைவில் இல்லைலை.

தன் கண்ணனைத் தவிர!
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
ஆதியா மைண்ட் வாய்ஸ்.... singing the song😉😀😀

கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே
கண்ணா..............
கண்ணா..............
கண்ணன்தானே

கண்ணன்தானே
 




S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,164
Reaction score
6,069
Location
India
பதிவிற்கு பாடல் தந்தமைக்கு நன்றி!💕💕💕💕
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
அட அட கண்ணணா பார்ரா

ஏற்கனவே சந்திச்சுருக்காங்களா என்ன?

எப்போ மீட்டிங்

செம்மையா போகுது

பால்ய விவாகம்😜😜😜 ரொம்ப தப்பாச்சே
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
சத்யா தாத்தா and ராம்நாதான் தாத்தா friendship.... 😊

உரியவன் கிட்ட ஒப்படைக்கணுமா.... 🤔

பிரகாஷ் அஹ் ஆதி க்கு எப்படி தெரியும்.... 🤔

ஆன ஏன் அவர் தாத்தா கு அவங்கள தெரில....

கதை நல்லா போகுது dr.... 🤩
 




S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,164
Reaction score
6,069
Location
India
சத்யா தாத்தா and ராம்நாதான் தாத்தா friendship.... 😊

உரியவன் கிட்ட ஒப்படைக்கணுமா.... 🤔

பிரகாஷ் அஹ் ஆதி க்கு எப்படி தெரியும்.... 🤔

ஆன ஏன் அவர் தாத்தா கு அவங்கள தெரில....

கதை நல்லா போகுது dr.... 🤩
உங்களது அத்தனை கேள்விகளுக்கும் பதில் அடுத்தடுத்த எபில தெரியும் மா💓

Thank youuuuuuu so much dear 🙏🥰🥰🥰🍫🍫🍫🍫
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
பேரன் தாத்தாவ கொள்ளு தாத்தாவாக்க ஏற்கனவே முயற்சி பண்ணிருப்பான் போலயே🧐🧐🧐

நல்லா இருக்கு சிஸ்டர் அப்டேட் 👍
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
பேரன் தாத்தாவ கொள்ளு தாத்தாவாக்க ஏற்கனவே முயற்சி பண்ணிருப்பான் போலயே🧐🧐🧐

நல்லா இருக்கு சிஸ்டர் அப்டேட் 👍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top