• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

💜என்னில் கலந்திடு உயிரே பாகம் 18💜

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
ஹாய் ஹாய் தோழாஸ் …!

இதுவரை கதைக்கு வாசகர்களுக்கு like and comments பண்ணுறவங்களுக்கும் ரொம்ப நன்றி கதை பிடித்திருந்தால் Share pannunga லேட்டா பதிவு செய்றேன் ரொம்ப சாரி மக்களே..!
IMG-20210520-WA0106.jpg


தனது நண்பர்களிடம் முகிலன் எதுவுமே கூறவில்லை . கூறி பத்மாவின் முன்னே கிண்டலடித்து சேமியா அவனும் மாடிக்கொள்ளுவோம் என்று கம்மென்று இருந்தான்.


சத்தமில்லா இரவு ஆசையா

முத்தமிட்ட சத்தம் ஆசையா



' என்ன முகிலா இது சத்தம் இல்லாத இந்த ராத்திரில முத்தம் கொடுத்த சத்தம் மட்டும் கேட்டுட்டு இருக்கே…! பாவி இன்னும் ஒரு நிமிடம் இருந்ததா என்னவாம் கைய புடுங்கிட்டு ஓடிட்டாளே…! ' முகிலனின் எண்ணம்


" முகிலா எதும் வேணுமாபா " லட்சுமி ,

"இல்ல மா " முகிலன்


'சத்தமா பேசிட்டோமோ ' முகிலன் ,


முகிலன் இது சரிவராது என்று இழுத்து போர்த்தி தூங்கிவிட்டான் .




இங்கு சேமியாக்கு பித்துபிடித்து விட்டது . ' அத்தை பையன் முத்தம் கொடுத்தா வாங்குவியா அப்போ உனக்கு புடிச்சிருக்கா ' ,


"ஐய்யையோ அப்போ நான் மாமாவ லவ் பண்ணுறேனா " சேமியா தனது அறையில் தனியே பேசிக்கொண்டு மாமா முத்தம் கொடுக்கும் மாமாவ திட்டி இருக்காலாம் சத்தம் போட்டுருக்கலாம் நீ யேன் அப்டி பண்ணல , அதுதானே. ….!


இப்படியே நாட்கள் சந்தோசமாக கழிய , மூவருக்கும் காலேஜ் ஆரம்பித்துவிட்டது. காலேஜ் செல்லதற்காகவே சீக்கிரம் எழவேண்டியாயிற்று , பாஸ்சிற்கு காத்திருக்க வேண்டும் அதிலும் சனநெரிசல் வியர்க்க வியர்க்க காலேஜ் சென்றடைந்தால் அங்கு ராக்கிங் இரண்டு தடவை பொருத்துக்கொண்டு சொன்னவற்றை செய்தான். மூன்றாம் நாள் பொறுக்கவில்லை . முகிலன் ,


செகண்ட் இயர் மாணவன் நளன் " அதோ அங்க பாரு அந்த பொண்ணு இந்த பக்கமா போகும் போது அவள நீ கட்டிப்பிடிக்கனும் " என்று முகிலனை அதட்ட , அவன் பயப்படவில்லை . வாடா போய்யிரலாம் என்று கதிர் பயத்தில் அழைத்தான். சோமு வாயே திறக்கவில்லை.


"உன் தங்கச்சிய கூட்டு வா கட்டிப்பிடிக்கிறேன்" என்றான் அசால்டாக முகிலன் , நளனுக்கு கோபம் தலைக்கேறியது ,


"ஏய் நாங்க உங்கள எல்லார்க்கும் சீனியர் " என்று நளனின் அல்லக்கை நண்பன் வாசு நளனிற்கு ஒர் கேத்து ,


"நீங்கதான்னா சீனியர் ஆச்சே நீங்களே கட்டிபிடிச்சுகிங்ண்ணா " என்றான் கதிர் , சோமுவால் சிரிப்படக்க முடியவில்லை .


அந்த பொண்ணும் அருகில் வந்துவிட்டால் நளன் அந்த பொண்ணனை " ப்ளு சுடிதார் இங்க வா " என்றான்.


அவள் அருகில் வந்து எகத்தாளமாய் " என்ன " என்றாள் புருவம் உயர்த்தி , அந்த பெண்ணின் வாயில் ஒரு விரலை வைத்து "சத்தம் போடாம வாய மூடிக்கிட்டு இருக்கனும் " நளன் ,


அந்த பெண்ணும் என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போம் . என்று பொருத்திருந்தாள்.


நளன் முகிலனை பார்த்து " டேய் தம்பி அந்த பொண்ண கட்டிப்பிடி அப்போ நான் மன்னிச்சு விட்டுரேன்". முகிலன் கையை முறுக்கிக்கொண்டான்.


எதிர்பாராமல் பளார் என்று ஒரு அரை நளனின் கன்னத்தில் அந்த பொண்ணு , வாசுவுக்கு வலித்துவிட்டது போலும் தனது கன்னத்தை தேய்த்து கொண்டான்.


"நான் யாருன்னு தெரியுமா?" என்றாள் அந்த பெண் ,


"எ‌ன்னடி பேசும் போது கை நீட்டுற உன் அப்பா போலிஸ் சூ பாலிஷ் அப்டினு கத விடப்போறியா " ? என்று நளன் ஆக்ரோசமாக ,


" இல்ல டா இந்த காலேஜ் பிரின்சிபல் பேத்திடா " , டவுன்ல இருந்து வந்துட்டு கிராமத்து பசங்கள கண்டா இளக்காரம்? ,


"ஐயோ மேடம் சாரி இதுக்கு அப்புறம் யாரையும் ராக்கிங் பண்ணமாட்டோம். இதெல்லாம் பிரின்சிபல் கிட்ட சொல்லா வேண்டாம்" என்று கையேடுத்து கும்பிட்டனர் நளனும் அவன் கூட்டமும்,

போனால் போகுதுன்னு விட்டு விட்டால் அந்த பொண்ணு ,


வேறு என்ன என்று மும்மூர்த்திகள் வகுப்பை நோக்கி கிளம்பிவிட்டனர்.


அலோ …! அலோ ! என்று சத்தம் கேட்டு சோமு திரும்பினான். அந்த பொண்ணு நம்மல தான் கூப்பிடுது நில்லுங்க டா .


"ஆய் ஐயம் நிர்த்திக்கா நீங்க பாய்ஸ் தானே…! ஏங்க அவங்க கிட்ட கைய கட்டி நிக்கிறிங்க " ஒரு பெண் நானே ஒரு அரை விட்டேன் பதிலுக்கு நீங்க ரெண்டு விட்டுருக்கனும்.


ஓகே ஐயம் முகிலன் கை காமித்து கதிர் , சோமு என்றான் முகிலன் ,


"உங்களுக்கு என்னங்க நீங்க பிரின்சிபல் பேத்தி நாங்க பத்து பன்னன்டு கிலோ மீட்டர் தாண்டி வாரோம் . வீட்ல எங்கள வம்பு தும்புக்கு போகாதேனு சொல்லி அனுப்புறாங்க , காலேஜ் விட்டு வெளிய போகும் போது அவனுங்க எங்கள ஏதும் பண்ணமாட்டாங்கனு என்ன நிச்சயம்? " முகிலன்,


"ம்ம்ம்ம் நீங்க சொல்லுறதும் சரி தான் . நானும் உங்க டீம் ல ஜாயின் பண்ணிக்கிலாமா ? " நிர்த்திக்கா , யா சுவர் என்றான் முகிலன்,


வீ ஆ ஃபிரண்ட்ஸ் என்று கை குலுக்கிக் கொண்டார்கள். இறுதியில் வரை தப்பாக அமையபோவதில் அந்த நட்பு வட்டாரம். நிர்த்திக்கா கொஞ்சம் பெரிய இடத்துப் பொண்ணு டாக்டருக்கு படிப்பதே நோக்கம்

அப்புறம் எதற்கு இந்த ஆட்ஸ் காலேஜ்னு கண்டிப்பா கேப்பிங்க அமெரிக்கால படிக்க ஆசை அமெரிக்கா யூனிவர்சிட்டிக்கு அப்ளிகேஷன் எல்லாம் போட்டாச்சு செலக்டும் ஆகியாச்சு படிப்பு தொடங்க ஒரு வருடமோ இரண்டு வருடமோ ஆகும் அதுவரைக்கும் இந்த காலேஜ்ல தாத்தாவுக்கு பிடித்த பேத்தியாக இருக்க போற என்பதை தெரிவித்துக்கொண்டால் தனது நண்பர்களிடம் ,


சோமு வாயை பிளந்து "அப்போ உங்க மார்க் என்னாங்க"? ஆயிரத்தி நூற்றி பதினெட்டு என்றால் நிர்த்திக்கா


"யப்பா எம்புட்டு மார்க் ? முகிலா இவங்க உன்னை மாதிரி டா " கதிர்


ம்ம்ம்ம் என்று முடித்துவிட்டான் முகிலன் ,


பாடத்தில் எந்த சந்தேகமாக இருந்தாலும் அதை விளக்குவதே முகிலனுக்கு நிர்த்திக்காவிற்கு வேலை ஆயிற்று , என்னொரு சிரமம்

கிராமத்திலிருந்து டவுன் காலேஜுக்கு வருவதற்கு மூவரும் களைத்து விடுகின்றனர் . இதை கவனித்த நிர்த்திக்கா நீங்க எங்கயாவது தங்கலமே …..! என்றாள் நிர்த்திக்கா பணத்துக்கு நாங்க என்ன பண்ணுவோம் என்றான் முகிலன் ,


பணம் எதுக்கு தாத்தாக்கிட்ட நான் பேசுறேன். தாத்தா தனியா தான் வாடகை வீட்ல இருக்காரு நீங்க வீட்ல கேட்டு சொல்லுங்க என்று நிர்த்திக்கா கூற சரி கதிர் வீட்டிலும் சோமு வீட்டிலும் அனுமதி கிடைத்துவிட்டது . முகிலனுக்கு தான் சற்று தாமதமாக கிடைத்தது லட்சுமிக்கு அவ்வளவாக விருப்பமில்லை . இருந்தாலும் சனி ஞாயிறு விடுமுறைக்கு வந்துவிடுவான் என்று விட்டு விட்டாள். முகிலனுக்கு வருத்தம் தான் அம்மத்தா அம்மா மட்டும் அல்லாமல் குண்டச்சியையும் பார்க்க முடியாதே….!


இப்போது காலேஜ் சீக்கிரமாக கிளம்ப இலகுவாயிற்றே , சோமு இப்போ நன்று இழைத்து விட்டான் அவன் இருக்கும் மானிறத்திற்கு மெலிந்த உடல் அழகாக காட்சியளித்தார் . எல்லாம் இந்த பிரின்பலின் சமையல் தான்….!


வெள்ளிக்கிழமை காலேஜ் முடித்து வீட்டிற்கு வந்து ஞாயிற்றுக்கிழமை இரவு கிளம்புவது வழக்கம் இவ்வாறே மூன்று மாதங்கள் கழிந்தது .


"வா பா " என்று அன்புடன் அழைத்துக்கொண்டால் லட்சுமி இருங்கே இருங்க காபி போட்டு எடுத்து வாரேன்.


காபியுடன் வந்து கொடுத்துவிட்டு " என்ன முகிலா காலேஜ் சென்னைல இருக்க மாதிரி தங்கி படிக்கிற அளவுக்கு என்ன கஷ்டம் பஸ் வரும் வரைக்கும் நிற்க முடியலயா " ? என்று லட்சுமி கேட்டாள்.


"பஸ்சுக்கு நிக்கிறது பழக்கம் மா காலேஜ்க்கு போக லேட் ஆகிறுது உன்னை விட்டு பிரிஞ்சு இருக்க எனக்கு மட்டும் ஆசையா " என முகிலன் கூறும் வார்த்தைகளில் லட்சுமி உருகிவிட்டால் என்றே கூற வேண்டும்.


மூவரும் வெளியே வந்து சிறு தோட்டத்தை பார்வையிட்டனர்.

தக்காளி மற்றும் பச்சைமிளகாய் செடிகள் சிறு சிறு காய்களாக இருந்தன ஏனையவை காய்க்கும் பருவமாய் இருக்க கண் குளிர பார்த்தது மனதோரம் மகிழ்ச்சி மூவருக்கும் ,


தோட்டத்தை பார்த்த மகிழ்ச்சியோடு கதிர் சோமுவும் தத்தமது இல்லத்திற்கு சென்றனர்.


அசதியை போக்க முகிலனும் வீட்டினுள் சென்று இரவு ஏழு மணிக்கெல்லாம் உணவருந்தி உறங்கி விட்டான்.


சீக்கிரம் உறங்கியவன் சீக்கிரமாகவே விழித்துக்கொண்டான்.

விழித்தவன் காலை கடன்களை முடித்துவிட்டு செடிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தான். கதிரும் சோமுவும் பங்கெடுத்தனர்.


இவ்வாறே நேரம் கழிய காலை உணவருந்தி விட்டு கணக்கு பாட வகுப்பு எடுக்க மதி வீட்டு மாடிக்கு வந்தாயிற்று .


இன்று மதிக்கோ மாதந்த தொந்தரவு சுழன்று படுத்துக்கொண்டாள்.

கதிர் பார்வை மதியை தேட சேமியா தான் வந்து சேர்ந்தாள். " கொஞ்சம் இருந்து பார்ப்போம் மற்ற மூவரும் வரட்டும் " . என்றான் முகிலன் ,


"இன்னைக்கு மதி வரமாட்டா மாமா உடம்பு சரியில்லை " சேமியா,

கதிர் உடனே என்னவென்று வினவினான். "அது சின்ன ஜுரம் மாத்திர போட்டு இருக்க தூங்கினா சரியாகிடும்னா " என்று சமாளித்துக்கொண்டாள். கதிரும் உணர்ந்து கொண்டான் அவனுக்கு தங்கை உண்டு என்பதால்,


சோமு காபியுடன் வந்தான். நாலுபேருக்கு மூன்று காபியா? கதிரும் சோமுவும் ஆளுக்கு ஒன்று எடுத்துக் கொண்டனர். மீதி ஒன்றை நீ வைத்து பார்த்துக்கொண்டிருந்தனர் முகிலனும் சேமியாவும் ,


நீ பாதி….!

நான் பாதி கண்ணே…! என்று கதிர் கிண்டலடித்தான்


சேமியாவை பருகிவிட்டு தருமாறு முகிலன் கேட்டான் . சேமியாவும் அதே போல் செய்தாள் . எச்சில் காபியை அருந்தி முடித்ததும் மட்டுமே அவ்வளவு தான் வித்யாவும் சிவாவும் வந்துவிட்டனர் .


"இன்னைக்கு நான் சொல்லிரப்போரதில்லை நீங்க தான் எங்க மூனு பேருக்கு சொல்லித் தரனும் " என்றான் முகிலன்.


அன்றைய வகுப்பு மிகவும் விறுவிறுப்பாக இருந்தது சேமியா கூட ஒரளவு தேரிவிட்டால் முகிலனுக்கு அதுவே மிகப்பெரிய சந்தோசம்


"சரி இப்போ சேமியா மட்டும் விளக்கப்படுத்தட்டும்"என்றான் முகிலன் ,

சேமியா எல்லாவற்றையும் டான் டான்னு தெளிபடுத்தினாள். பரவாயில்லை தேர்ந்துவிட்டாளே என்றான் முகிலன் , உச்சி குளிர்ந்தது சேமியாவுக்கு , சரி இன்னைக்கு போதும் நாளை பார்க்கலாம் என்றான் முகிலன் ,


வீடு திரும்பிவிட்டனர் அம்மத்தா நல்ல நேரம் பார்த்து தக்காளி மற்றும் பச்சைமிளகாய்களை பறித்து வைத்திருந்தார். அவற்றை எல்லாம் விதைகளை கொடுத்த வீட்டிற்கு பகிர்ந்தளித்தனர்.


இப்படியே நாட்கள் வேகமாக சென்றது . வாரவாரம் வீட்டிற்கு வருவதும் காலேஜ் செல்வதுமாக இருந்தவர்கள். நிர்த்திக்காவும் இப்போது மூவரையும் வா போ என்று பேசும் அளவிற்கு வந்துவிட்டது. நிர்த்திக்காவின் தாத்தாவும் நல்லா பசங்க படிப்பிலும் சரி குணத்திலும் சரி என்றே இவர்களின் நட்பிற்கு தடையாக இல்லை . காலம் சென்ற போக்கில் இவர்களுக்கும் அரும்பாக இருந்த மீசை இன்று கம்பீரமாக ஆனால் காலேஜ்க்கு இது பொருத்தமில்லை என்று

அவ்வளவாக மீசை வளர்ப்பதில்லை . மூம்முர்த்திகளும் இரண்டரை வருட கல்லூரி படிப்பை முடித்து விட்டனர் . நிர்த்திக்காவும் இன்னும் ஆறு மாதத்தில் அமெரிக்கா சென்றிடுவாள்.




இங்கு சேமியா மதிக்கு சிவா வித்யா அனைவரும் பத்தாம் வகுப்பு பாஸ் பன்னிரெண்டாம் வகுப்பில் ஒன்றரை வருடம் முடிந்து விட்டது.

சேமியா மதியும் சேர்ந்தலே அந்த இடம் அவ்வளவு தான்….! நல்லா இருந்த மதியையும் சேமியா கேடுத்துவிட்டாள் என்றே கூற வேண்டும். இருவரும் சேர்ந்து செய்யும் சேஷ்டைகள் அதிகம்



அப்படி தான் ஒரு நாள் கையும் களவுமாக மாட்டிக்கொண்டாள் முகிலனிடம். சண்முகத்தின் ஐந்து ஏக்கர் மாந்தோப்பு ( ஐந்து ஏக்கர் வரைக்கும் சண்முகம் தோப்பு ) மீதி இருக்கும் இடம் வேறு ஒருவரின் அதுவும் சண்முகம் அவ்வளவாக பேசுவதும் இல்லை.


" மதி நம்ம தோப்பு மாங்காய் நல்லாவே இல்லை ஓரே புளிப்பு பக்கத்து தோப்பு மாங்காய் இல்ல இல்ல மாம்பழம் மரத்துல இருக்கும் போதே தோல் மஞ்சள் நிறமா இருக்கு வெட்டும் போதே தேன் வடியும் டி " சேமியா ஆர்வமாய் ஆசையாக சொல்ல மதிக்கும் ஆசை வந்துவிட்டது.


"சரி வா போய் மாங்காய் பறிக்கலாம்" என்றாள் சேமியா ,


"எப்டி டி போறது " என்று மதி கேட்க ,


"ஆமாம் நீ புதுசா தோப்புக்கு வர மாதிரி கேக்குறியே? குறுக்க தான் வேலி இல்லையே டி ஏணிய ஒரு பக்கம் புடி நான் மத்த பக்கம் புடிகிறேன். " சேமி ,



இருவரும் காலில் இருக்கு கொலுசை கலட்டிவிட்டனர். பூனை போல் நடந்தனர். இந்த பக்க மரம் சரியா இருக்கும் அப்போ தான் யாரும் வந்து போடிரலாம் . என்று இருவரும் திட்டமிட்டுக் கொண்டனர்.


"ஆளுக்கு ரெண்டு மாம்பழம் சரியா" ? சேமியா ,




"சரி " என்றாள் மதியும் ,


ஏணியில் ஏற மதிக்கு பயம் என்பதால் துணிச்சலின் சிங்கம் சேமியா ஏறிக்கொண்டாள். தட்டு தடுமாறி நான்கு பழங்களை பறித்து மதியிடம் கீழே போட்டாள் மதி அதை எல்லாம் ஓரமாய் வைத்து விட்டாள்." சரி டி நான் இறங்குறேன் " சேமியா ,


"சேமியா யாரோ வர சத்தம் கேக்குது " மதி ,


"அதெல்லாம் தெரியாது நீ ஒழுங்கா ஏணிய புடி " சேமியா ,


அங்கு முகிலன் வந்துவிட்டான் . சண்முகத்தின் தோப்பிலிருந்து பார்க்க ஏதோ தாவணி தெரிந்தது ' அதுவும் பக்கத்து தோப்பில் எப்டி பக்கத்து தோப்புக்கரருக்கு பொண்ணே கிடையாதே ' நமக்கு எதுக்கு நம்ம மாமா கூப்பிட்டாறு வந்தோம் வந்த வேலையை பார்ப்போம்.




"மாமா……. மாமா……." என்று கத்தி பார்த்தான். இல்லையே ,

சரி தோப்பு முடியும் சென்று பார்ப்போம் என்று எல்லை வரை வந்தான்.


கொலுசை பார்த்தவன் 'இது சேமியாவோட கொலுசு இங்க தான் இருக்கால அந்த தாவணி சேமியா தானா '


சேமியா வரும் வரை ஒரு மாமரத்தின் பின்னே ஒழிந்து விட்டான்.


" மதி நான் சொன்னே பார்த்தியா யாரும் வரமாட்டாங்கனு சும்மா பயந்துகிட்டு " சேமியா ,


"அதான் நான் பார்த்துட்டேனே" ……! முகிலன் முன்னாடி வந்தான் .


"ஐய்யோ உன் மாமா வந்துட்டாரு சேமியா"..! மதி


" எங்க? " சேமி


" அங்க " மதி ,


"என்ன ரெண்டு பேரும் கூட்டுக்களவாணி தனம் பண்ணுறிங்களா? "


"இல்ல முகில் அண்ணா இவ தான் என்னய்யா உசுப்பிவிட்ட மாம்பழம் தேன் மாதிரி இனிக்கும்னு சொன்ன " மதி


"சரிமா நீ கிளம்பு மா " முகிலன் , தப்பினோம் பிழைத்தோம் என்று மதி ஓடிவிட்டாள்.


"என்ன விட்டு போகாத மதி" சேமியா ,


"மாமா தான் மாந்தோப்புக்கு வர சொன்னார் மாமா எங்க ?"முகிலன் ,


"அப்பா அசலூருக்கு போயிருக்காரு வர சாயந்தரம் ஆகும் " என்றாள் சேமியா ,


"கிட்ட வாடி " முகிலன் ,


பூனை போல் வந்தாள் சேமியா , "யேன் இப்பிடி திருடி திங்கிற" என்று முகிலன் வினவ ,


தனது முட்டைகண்களை நன்றாக உருட்டிக்கொண்டு தாவணியில் நான்கு மாம்பழங்களை சுற்றி இருந்தால் தான் அப்பாவி என்பது போல் ஒரு பார்வை


"பழத்தை கீழே போடு டி " முகிலன்


"மாட்டேன் எவ்வளவு கஷ்டப்பட்டு பறிச்சேன் தெரியுமா உனக்கு ? " நொந்துக்கொண்டாள் சேமியா ,


"மாமா வரட்டும் ஊரான் தோப்பு மாங்காயா திருடி திங்குறானு சொல்லுறேன் திருடி திங்கிறது தப்பில்ல? " முகிலன் அதட்ட ,


"நான் ஒன்னும் திருடி திங்கல தோப்புக்கரருக்கு தெரியாம பறிச்சேன் அவ்வளவு தான். ….! " அப்பா கிட்ட சொல்ல வேணாம் மாமா அப்புறம் வெளிய விடவே மாட்டாங்க குளம் கட்டிய கண்களுடன் சேமியா,


"ரெண்டும் ஒன்னு தான் டி மக்கு கழுத ….. கிட்ட வாடி " முகிலன் ,


சேமியா பழங்களை மெதுவாக கீழே வைத்துவிட்டு முகிலன் அருகில் சென்றாள். சேமியாவின் தோள்களில் கையை போட்டவாறு " மாமா மாம்பழம் கேட்ட வாங்கி தர மாட்டாரா " என்றான் முகிலன் ,


"வாங்கித்தருவாரு மாமா ஆனா திருட்டு மாம்பழம் சுவையா இருக்கும் அது தான் ….! " சேமியா ,


"நீயே ஓத்துகிறியா இப்போ திருட்டு மாம்பழம்னு சரி மாமா கிட்ட சொல்லாம இருக்கனும் அது நீ எனக்கு ஐ லவ் யூ மாமானு சொன்ன நான சொல்ல மாட்டேன். " சைக்கிள் கேப்பை கூட விடுவதாக இல்லை முகிலன் ,


"சொன்ன அப்பாகிட்ட சொல்ல மாட்ட தானே. ..! " பயத்துடன் சேமியா ,

இல்லை என்று தலை அசைத்தான் முகிலன் ,


"ஐ...ஐ. .. ஐ லவ் யூ மாமா" என்றாள் வெட்கத்துடன் சேமியா ,


" வெட்கத்தை பார்த்தவன் உண்மையா நீ என் காதலை உணர்றியா சேமியா? " ஆர்வமாய் முகிலன் , ஆமாம் என்பது போல் தலை அசைத்தாள் ,


"ஏய் குண்டச்சி….!" என்றான் அவன் , போ மாமா என்று முகத்தை மூடிக்கொண்டாள். "இப்டி எல்லாம் ஏமாத்திட்டு ஓடலாம்னு பாக்குறியா " முகிலன் ,


"இல்லை மாமா உண்மையா நிஜமா. ..! " அவள் ,


"அப்போ ஒரு முத்தம் குடு மாமாக்கு " முகிலன் ,


"எனக்கு பயமா இருக்கு மாமா வேணாம் மாமா " சேமியா ,


தாவணி தானே அணிந்திருந்தாள் சேமியா இடை தெரிவது வழக்கமாயிற்று அதுவும் முகிலனுக்கு இன்று இலகுவாயிற்று . தன் வரண்ட கைகளால் சேமியாவின் மென்மையான இடையை மென்னையாய் இறுக்கப்பற்றி தன்னோடு அணைத்து கொண்டான்.


சேமியா கூச்சம் தாங்க முடியாமல் குதிக்கால்கள் எட்டி முகிலனின் கன்னத்தில் இதழ் பதித்தாள். ஒரே ஒரு ஒற்று தான் ஒரு வினாடிக் கூட செல்லவில்லை. மறு கணம் நாணத்தால் சேமியாவின் முகம் பூமியை பார்த்தது.


"ஐய்யையா இது என்ன குழந்தை தனமா இருக்கு " முகிலன் அசடுவழிந்தான். எனக்கு தெரிந்ததை தான் என்னால் தர முடியும் என்றாள் அப்பாவியாக சேமியா ,


அப்போ சரி நான் கத்துதறேன் என்று அவளது செவ்விதழை விரல்களால் வருடியவன் இதழருகே சென்றான். முகிலனின் முகத்தை தள்ளினால் " கல்யாணம் பண்ணிக்காம தப்பில்ல மாமா ? அவளது கேள்வி ,


" அட நீ என்ன டி தப்பில்ல சக்கரசாதத்துல உப்பில்லனுக்கிட்டு " இதற்கு மேல் பொறுமை இல்லை முகிலனுக்கு சேமியாவின் முகத்தை தன் கைகளில் ஏந்திக்கொண்டு அவளிதழை தன்னிதழால் கவ்விக்கொண்டான் . சேமியாவின் கண்ணிமைகள் இறக்கை அடித்தன . இருவரின் மூச்சுக்காற்று ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டது . பயத்தில் சேமியாவின் கண்கள் அணையை கடந்த வெள்ளம் ஆயிற்றே. கண்ணீர் துளிகள் முத்தத்தை முடிவடைய செய்தது.


" யேன் டி அழுற " முகிலனுக்கும் பயம் ஆயிற்று.


"முத்தம் குடுத்த குழந்தை பிறக்குமா மாமா " என்று விம்மி விம்மி அழுதாள் சேமியா ,


முகிலன் வயிறு குலுங்க சிரித்தான். " உனக்கு இத யார் சொன்னது ? ,


" நான் நிறைய படத்துல பார்த்து இருக்கேன் மாமா மதியும் நானும் பேசிப்போம். முத்தம் குடுத்தா குழந்தை பிறக்கும்னு " கவலையுடன் சேமியா ,


"அப்டி எல்லாம் குழந்தை பிறக்காது கல்யாணம் ஆனா மட்டும் தான் குழந்தை பிறக்கும் சரியா நீ மனச போட்டு குழப்பிக்காத … சமாளிப்பதற்கு போதும் போதும் ஆயிற்று முகிலனின் முழிகள் பிதுங்கியே விட்டது.


"நம்ம எப்போ மாமா கல்யாணம் பண்ணிக்கிறது " அப்பவும் சேமியாவை பிடித்த பயம் போவதாக இல்லை.


" உனக்கும் எனக்கும் பரீட்சை முடிஞ்சு மூனு மாசத்துல நான் அம்மா கிட்ட பேசுறேன் . அம்மா மாமா கிட்ட பேசுவாங்க " என்றான் முகிலன் ,


" யே அம்மாவ நினைக்க பயமா இருக்கு மாமா " சேமியா ,


"அதெல்லாம் அப்போ பார்த்துகிலாம் இப்போ விடு " என முகிலன் பதிலளித்தான்.


"சரி நான் கிளம்பறேன் மாமா "என்று சேமியா கூற முகிலன் சேமியாவின் தாவணியை பற்றி இழுத்தான். "ஏன்டி போயே ஆகனுமா" ?


"ஆமா மா மாமா அம்மா தேடுவாங்க என்கூட வந்த மதி கிளம்பிட்டா தானே …! " சேமியா ,


"குண்டச்சி இன்னும் ஒன்னே ஒன்னு " கெஞ்சிதலாக முகிலன் ,


"போடா கருவாயா" என்றாள் கையை தட்டிவிட்டு ஓடிவிட்டாள். ….


பத்மா குளிக்க சென்றதால் சேமியா தப்பிக்கொண்டாள்.


அதன் பிறகு சண்முகம் வரும் வரை முகிலன் காத்திருந்தான் . சண்முகமும் வந்து சேர்ந்தார் . " மாமா என்னை வர சொன்னீங்க "


"தோப்பா காவகாத்துட்டு இருந்த மாடசாமி மனைவிக்கு பிரசவமாம் அவன் வரவில்லை அதான்யா உன்னை கொஞ்சம் வச்சுட்டு போகலாம்னு இருந்தேன் நீயே இங்க தான் இருக்க , மாங்காய்க்கு பருவம் சரியா களவாணி பயலுங்க ஜாஸ்தி அதுதான் பா சரி நீ கிளம்பு முகிலா மணி ஆறரை ஆகிடுச்சு " சண்முகம் ,


"சரி மாமா நாளைக்கு இதே நேரம் வந்துடுறேன் " முகிலன், சரி பா என்றார். சண்முகமும் இன்முகத்துடன் ,


' ஒரு முத்ததுக்கே மொத்தமா தொலைஞ்சிட்டேனே. …….! '


நீ கொடுத்த முத்தம்

தப்பேன்றால் உன் இதழில்

என் இதழ்களால்

நான் எழுதிய வரிகள் சரியே…!


முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்

இதழ் மொத்தம் இதழ் மொத்தம் வெந்ததும்

அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே…!


ஏதேதோ கவிதையும் பாடலும் தோன்றி மறைந்தன.

தலைக்கேறியது பித்தம் ஒர் முத்ததில் நித்தமும் சித்தம் கலங்க போகிறான் முகிலன் உறக்கமற்ற இரவானது அன்று …!


சேமியாவோ பாவம் பாதி தூக்கத்தில் எழுந்து ' பத்மாக்கு தெரிந்தால் அவ்வளவு தான்…! ' என்று மனதில் குமுறல் …..





இதுக்கு அப்புறம் தான் நம்ம கதையின் உச்சகட்டங்கள் ஆரம்பம். .!


எப்பி எப்டி இருக்குனு மறக்காம

comments பண்ணிருங்க நண்பாஸ்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top