• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

💜என்னில் கலந்திடு உயிரே பாகம் 19 💜

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
இதோ வந்துட்டேன் அடுத்த பதிவோட
நண்பாஸ் !
லைக் கமெண்ட் பண்ணவங்களுக்கு ரொம்ப நன்றி

IMG-20210520-WA0106.jpg


எப்போதும் தூங்குகிறோம் எப்போதும் எழுகின்றோம் என்றே தெரியவில்லை இருவரும்.


நாட்டின் நடப்பில் ஏதோ நடக்கிறது நாமும் அதன் பின்னே நடப்போம் என்றாயிற்று .


அடுத்த நாளும் அதோ போல் சண்முகம் அலுவலாக அயலூருக்கு சென்றுவிட்டார்.


முகிலன் தனியே செல்லாமல் கதிர் சோமுவாயும் அழைத்துட்டு வந்தான். தோப்பிற்கு,




இங்கு மதியோ கொலுசு எப்படி எடுப்பது அம்மா கேக்கும் முன்னே எடுத்து விட்டு வந்துடலாம் , சேமியாவை நாடினாள் .


"சேமியா நம்ம கொலுசு தோப்புல வச்சுட்டு வந்துட்டோம் வாடி போய்ட்டு எடுத்துட்டு வந்துடலாம் ." மதி


"அசுக்கு புசுக்கு நேத்து என்னய்யா தனியா விட்டு வந்தள்ள நீயே போய் வாங்கிக்கடி " இன்னும் ஒன்னு கொலுசு மாமன் கைல என்றாள் சேமியா ,


சாரி டி அண்ணா தானே போக சொன்னார் அதுதான் நான் வந்துட்டேன் , ஏன்டி பள்ளிக்கூடத்துல இருந்து உனக்காக நானும் நடத்து வந்தேன் ல " என்று சேமியாவின் மனதை உருக்கி விட்டாள் மதி ,


"ஆனா ஒன்னு என்னோட கொலுசயும் சேர்த்து நீ தான் கேட்டு வாங்கிதரனும் " என்று ஒப்பந்தம் போட்டுக்கொண்டாள் சேமியா ,


சரி என இருவரும் உடை மாறிவிட்டு கிளம்பினர் . பத்மாவோ பட்டா பகலில் குறட்டை விட்ட படி நன்கு உறக்கம் மதி தனது தாயிடம் கூறி விட்டு வந்தாள்.


சேமியா "ஏய் ரெண்டு பேரும் ஒரே கலர் தாவணி " என்று கையை தட்டிக்கொண்டனர் .


தோட்டத்தின் உள்ளே வந்ததும் முதலில் கண்டதும் கதிரை தான் , கதிர் கையை காமித்தான் . இருவர் வருவதை


" ம்க்கூ சீக்கிரம் கேட்டு வாடி போலாம் " சேமியா ,


மூவரும் முழித்தனர். "முகில் அண்ணா எங்க கொலுசு …..? என்று மதி இலுக்க முகிலன் மதியின் கொலுசை மட்டும் கொடுத்தான். மதி சேமியாவின் கொலுசயும் கேட்க ,


"அந்த அம்மை கேட்ட மாட்டங்களோ ? " என்றான் முகிலன் ,


"நீங்க வேறனா வரும் போது ஒப்பந்தம் போட்டு தான் வந்தா நீ தான் வாங்கி தரணும்னு " என்று மதி சொல்ல ,


"ஏய் மாங்காய் திருடி என்கிட்ட கொலுச கேட்க உன் மாணம் தடுக்குதோ?" முகிலன் ,



'ஆமானு சொல்ல முடியல இல்லேனு செல்லாமல் தவிக்கிறேனே வேண்டும் என்றால் லஞ்சம் வேறு கேட்பானே என கம்மென்று இருந்தாள். சேமியா , அவள் நினைத்த லஞ்சம் முத்தம் தான் வேறு என்ன…!



தோப்பு வீட்டுக்குள் சென்று நேற்று பறித்த மாம்பழத்தில் இரண்டை மாத்திரம் எடுத்துக்கொண்டு வந்தான் முகிலன் ,


தோப்பு வீடேன்றால் பெரியளவில் இல்லை ஒரே ஒரு அறை மாத்திரம் காவக்காரன் ஓய்வு எடுப்பதற்கு மட்டும் .


மதியிடம் அதை கொடுத்தான். மதிக்கோ அளவில்லா ஆனந்தம்

" என்னோட பழம் எங்க ?" என்று வாயை திறந்தால் சேமியா,


"தரமாட்டேன் போடி " என்றான் முகிலன் ,


"நானே எடுத்துகிறேன் நீ நவுரு " என தோப்பு வீட்டுகுள்ளே சென்று தேட ஆரம்பித்தாள் .


ஐந்து நிமிடம் கழித்து பத்து நிடமாகியும் மாம்பழம் கிடைக்கவில்லை.


"மாமா பழத்தை எங்கே வைச்ச ?" அப்பாவியாக சேமியா ,


இரு வாரேன் என்று அவனும் உள்ளே நுழைந்தான்.


முகிலன் வாரேன் என்றவுடன் முதலில் சேமியா செய்த வேலை தன் ஆடையை சரி செய்தாள் இடை தெரியாதவாறு


கதிர் சோமுவும் "இன்னைக்கு சேமியா பாவம் டா என்று புலம்பிக்கொண்டிருந்தனர். மதியோ அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை. தனக்கு கொலுசும் மாம்பழம் கிடைத்த திருப்தி ,


வாயை குவித்துக்கொண்டு கண்களை சற்று சிறிதாக்கி அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டாள்.


"பழத்த எடுத்து தாரேன் எனக்கு என்ன தருவ ? "


'ஆரம்பிச்சிடாரு ' , சேமியா " உனக்கு ஒரு மாம்பழம் தாரேன் மாமா "


"ஏன் எடுத்து வக்க தெரிஞ்ச எனக்கு எடுத்து சாப்பிட்றது என்ன பெரிய வேலையா? " முகிலன் ,


" மாம்பழம் வேணாம் கொலுச குடு கிளம்புறேன் "


"உனக்கு மாம்பழம் வேண்டாம் சரி ஆனா இந்த மாமாக்கு …! " என்றிலுத்தவன் ,


சேமியாவோ பயத்தில் ஒவ்வொரு அடியையும் பின்னே எடுத்து வைத்தாள். முகிலனின் கண்கள் அவளிதழை நோக்கியதை தவிர வேறேங்கும் பார்க்கவில்லை. அதற்கு மேல் சேமியாவால் பின்னே செல்ல முடியவில்லை சுவர் முட்டி விட்டது அவளை , முகிலன் அருகில் வந்து விட்டான். கோளிக்குண்டு கண்களை இருக்க மூடிக்கொண்டாள்.

இதழ்களை மட்டியுடன் இறுக்கி கொண்டாள். தாவணியை இரு கைகளால் பற்றிக்கொண்டாள். இவற்றை பார்த்து முகிலன் மௌயமாய் இரசித்துக் கொண்டே சிரிக்க கண்களை திறக்கவும் இதழ்களை தளர்த்தும் வரைகாத்திருந்தான்.


முருகா முருகா என்ற முனங்கள் வேறு சேமியாவுக்கு , பதினைந்து வினாடிகளில் கண்களை மெதுவாக திறந்து லேசாக இதழ்களை தளர்க்க முகிலனோ தாக்குதல் செய்ய தயாரானான். முனங்கிய இதழ்களை முனங்கவிடாமல் பூட்டிக்கொண்டான் அவன் இதழுடன் முத்தில் மொத்தமாய் மூழ்கிப்போனான் முகிலன் அவன் உயரத்திற்கு அவளால் ஈடு கொடுக்க இயலவில்லை . இருவருக்கும் மூச்சு வாங்கியது முத்தமும் முடிவடைந்தது.


வெட்கத்தில் தலை குனிந்தாள் அவள் , அவன் ஒரு விரலால் நாடியை உயற்றினான் . கலங்கிய கண்களுடன் முகிலனை அணைத்துக்கொண்டாள் . அவளு ஆறுதலாக தலையை வருடினான். " கண்டிப்பா நம்ம கல்யாணம் நடக்குமா மாமா? கெட்ட கெட்ட கனவா வருது மாமா ரொம்ப பயமா இருக்கு " சேமியா ,


" ஏய் கண்டதயும் யோசிக்காதா டி யே பொண்டாட்டி..! சீக்கிரம் எல்லாம் சரி ஆகி ஒரே வீட்ல எல்லாரும் சந்தோசமா இருப்போம் " என்றான் முகிலன் ,


"சரி " மாமா என்றாள் மூக்கை உறிஞ்சு கொண்டு சேமியா ,


முகிலனும் கிண்டலாக மூக்கை உறிஞ்சு கொண்டே " சிரிச்சுட்டே சொல்லலாமே ? என்றான் ,


"போ மாமா" என்றாள் சிரித்துக்கொண்டே சேமி


கன்னத்தை பிடித்து "யே சீனி குட்டி சக்கரக்கட்டி " என்று கொஞ்சினான். கால காட்டு சேமி என்று கூற அவளும் காலை நீட்டினாள் .


முகிலன் உடனே குனிந்து கொலுசை மாட்டி விட்டான். பின் தனது மீசை கொண்டு சேமியாவின் காலில் தேய்த்தான். "கூ..கூசுது மாமா " என்றாள் சேமியா,


கதிர் வெளியே இருந்து " டேய் முகிலா மழை துரலா இருக்கு நாங்க உள்ள வரலாமா? " சத்தம் கொடுத்தான்.



இருவரும் விலகிக்கொண்டு " உள்ள வாங்க டா " என்றான் முகிலன் ,


வாசலில் வரும் போது மதியின் கால் சறுக்கி விட்டது. மதியின் பின்னே வந்த கதிர் மதியை இடையுடன் தாங்கி பிடித்து விட்டான்.


பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

பார்த்ததாரும் இல்லையே

உலரும் காலைப் பொழுதை

முழு மதியும் பிரிந்து போவதில்லையே

நேற்று வரை நேரம் போகவில்லையே

உனதருகே நேரம் போதவில்லையே

எதுவும் பேசவில்லையே….!



" டேய் கதிரு பின்னணி இசை டேப் ரெகார்ட் தேய்ஞ்சு போச்சிடா மதிய நெரா நிமிர்த்தி விடு " என கேலி செய்தான் முகிலன்,


கதிர் கிண்டலாக முறைத்து பார்த்தவன். முகிலை " புரியுது டா உன் இதயம் கருகுற வாசம் இங்க வரைக்கும் வருது. " என்றான் முகிலன்


சோமு பேச்சை மாற்றி விட்டான்.


"என்னடா இவ்வளவு நேரமா பழம் தேடுனியா " என்று சோமு

' நான் தேடிய பழமே வேறு ' முகிலன்,


" இடையில பல்லி கத்துற சத்தம் கேட்டுச்சு " கதிர் கிண்டலடிக்க

சோமு அதனை வழி மொலிந்தான்.


"எனக்கு கேக்கலயே" என்றாள் மதி ,


"நீ சின்னபுள்ள மதிமா உனக்கு கேட்காது " கதிர் ,


"மழை விட்டதும் வீட்டுக்கு கிளம்புறோம் மாமா" என்றாள்.


சரி என்றவன் " நாங்க இன்னைக்கு இரவு பிரின்ஸ்பல் வீட்டுக்கு கிளம்புறோம் காலைல காலேஜ் போக நேரம் சரியா இருக்கும் " என்றான் முகிலன் ,


"மறுப்படியும் அடுத்த வாரம் வருவியா மாமா? " என்றாள் சேமியா முகிலனை பார்த்து ,


"இல்லை சேமி ஆறு மாசம் ஆகும் " முகிலன் ,


ஹஹஹ "ஏன் மாமா அவ்ளோ நாள் ? , அத்தை சொல்லுறது சரியா தான் சென்னைல படிக்கிற மாதிரி ரீலு விட்ர " என்று புழுங்கிக்கொண்டாள் சேமியா ,


"பார்றா அப்டி இல்லை இத்தனை நாள் எப்டியோ ஓடிட்டு இதுக்கு காலேஜ் நேரம் பகுதி நேர வகுப்பு , கருத்தரங்கு அது இதுன்னு ஆரம்பிச்சிரும் அப்றம் எங்க வராது ? " என முகிலன் கூற சேமியாவின் முகம் வாடியது.


" ஆறு மாசம் பார்க்கவும் முடியாது பேசவும் முடியாது " என்றாள் அவள் ,



"அப்போ அண்ணா எங்களுக்கு கணக்கு பாடம் " என்றிலுத்தாள் மதி ,


"இது படிக்கிற புள்ளைக்கு அழகு" என்று மெச்சிக்கொண்டான் கதிர் ,


"நிர்த்திக்கா ஃபேன்க்கு நம்பர் தாரேன் அவங்களுக்கு அடிச்சு கேட்டுக்கோ மாமா " என்று முகிலன் கூற மதியும் சரி என்றாள்.


"யாரு மாமா ஏதோ பெண் தோழினு சொன்னியே அவங்களா மாமா ? சேமியா , ம்ம்ம்ம் என்றான் முகிலன் ,



"நிர்த்திக்கா எங்க நம்ம கூட தங்குறா " சோமு ,


"அவளே விளக்க படுத்துவாடா " கதிர் ,




"சேமியா மழை விட்டுறிச்சி போலாம் " மதி


"சரி மாம்பழத்தை குடு " சேமியா ,


மாம்பழத்தை கொடுத்துவிட்டு " கவனமா இருக்கனும் ரெண்டு பேரும் நல்ல மார்க் வாங்கணும் " என்று புத்திமதிகளை கூறினான் முகிலன் ,


இருவரும் கிளம்பி விட்டனர் . ஐவருக்குமே சோர்வு !



லட்சுமியுடன் போராடி அனுமதி வாங்கிக்கொண்டான் . மூவருக்குமே

புறப்பட்டனர். போகும் வழியில் சண்முகத்திடம் கூறி சென்றனர்.

சேமியாவின் முகத்தை பார்க்க மனம் எழவில்லை அவனுக்கு திரும்பிவிட்டான்.


அரை மணி நேர பஸ் பயணம் அதற்கு ஒரு மணி நேரம் பஸ்ஸிற்கு காத்திருப்பு , கால் கடுக்க பஸ்ஸில் ஏற கதிரும் சோமுவும் , முகிலனுக்கு மாத்திரம் மனம் கடுத்தது.


ஒரு வழியாக பஸ் பயணம் தரிப்பிடத்தில் இறங்கிக்கொண்டர் .


"சார் " என்று கதவை தட்டினான் சோமு ,


கதவை திறந்த சாருக்கு மகிழ்ச்சி


"இனி எனக்கு பொழுது போய்விடும் நீங்க இல்லாத வீடு வெறுமை" என்று தன் கவலையை தெரிவித்தார். சார் ,


சோமுவின் அம்மா உணவு கொடுத்துவிட்டிருந்தார். சார் உண்பதற்கு

மனம் நிறைய உண்டவர் " இப்போ தான் தெரியுது சோமு உடல் பருமனின் இரகசியம் இப்டி ஒரு சமையல் ஹா ஹா " சார் ,


முகிலன் "ஆமா சார் உங்க கைபக்குவத்துல இழைச்சிட்டான் சோமு " என்று கேலிக்கையுடன் படுக்கைக்கு சென்றனர்.


'தாயையும் தாரத்தையும் ஆறு மாதம் பாராது இருக்க வேண்டும்.

எல்லாம் வல்லா இறைவா நீயே எனக்கு துணை ' முகிலன்


இருள் அகன்ற வானம் வெளிச்சத்தை பரப்ப சூரியன் வந்துவிட்டான் என்று காலை பொழுதை உணர்த்தியது .


காலை எழுந்தவர்கள் வேலைகளை முடித்து விட்டு பிரின்ஸ்பாலுடன் கிளம்பிவிட்டனர்.


முதல் வேலை நிர்த்திக்கா வந்ததுடன் விடயத்தை கூறினான் .

முகிலன் , நிர்த்திக்காவும் சரி என்றாள்.


தினமும் காலை எழுந்து படிப்பதும் உணவருந்துவதும் உறங்குவதும் தான் வேலை மூவருக்கும் காலேஜ் முடிந்து வீட்டிற்கு வர ஆறு மணி ஆகிவிடுகிறது. துணி துவைப்பது சலவை இயந்திரம் பாத்திரம் கழுவும் வேலை என்று பெரிதாக இல்லை தாம் உணவருந்திய தட்டை தாமே கழுவி வைப்பார்கள். இப்படியே நாட்கள் செல்லச் சார் கருத்தரங்கில் அதிக நேரம் செலவளிப்பார் . அதனால் கடை சாப்பாடு ஆயிற்றே எல்லா செலவுகளையும் சாரே ஏற்றுக்கொண்டார். இப்படி ஒரு சார் வாய்ப்பது கொடுப்பனையே …..!


ஆறு மாதத்தில் முன்று மாதங்கள் கழிந்துவிட்டன.


சேமியாவோ படிப்பதை மட்டும் நோக்கமாக வைத்திருந்தாள் ' மாமா கேட்கும் போது நல்ல மார்க்கா சொல்லனும் ' இதை தவிர வேறு எண்ணம் அவளிடம் இல்லை.மதி அதற்கு மேல் படிப்பு படிப்பு படிப்பு ,




அன்று நிர்த்திக்கா பிராதுடன் வந்தால் , " இங்க வாங்க டா மூனு பேரும் "


"என்ன நிர்த்தி கோபமா இருக்க ? " என்றான் கதிர் , முகிலனும் சோமுவும் முழிக்க


" மேக்ஸ்ல டவுட் கேட்டா சொல்லி குடு சொன்ன நானும் சரி சொன்னேன். அதே மாதிரி கணக்கு எல்லாம் சொல்லி குடுத்தேன்.

திடீர்ன்னு ஒருத்தி முகில் மாமா எப்டி இருக்காங்க , சாப்பிட்டாங்கல உடம்பு நல்லா இருக்கா இப்டியே நேத்து நைட் பத்து மணில இருந்து பன்னன்டு மணி வரை பத்து வாட்டி கால் பண்ணி டார்ச்சர் பண்ணிட்டா உங்க லவுஸ் எல்லாம் சொல்லவே இல்லை " என்று கூறிவிட்டு மூச்சை விட்டாள் நிர்த்திக்கா, முகிலன் முட்டைகண்களை உருட்டிக்கொண்டான் .



"நிர்த்தி என்ன பத்தி யாரும் கேக்கலயா " ஈஈஈஈஈஈஈ என்று அசடுவழிந்தான் கதிர் ,


"அடபாவி நீயுமா என்றாள் கதிரை , சோமு உன் ஆளு ? "


"ஐயோ நிர்த்தி என் மூஞ்சிக்கு ஆள் எல்லாம் கிடைச்சா பெரிய விஷயம் தான்….! " சோமு ,


"முகிலன் சார் கொஞ்சம் முன்னாடி வரீங்களா? "


பம்மிக்கிட்டு முன்னாடி வந்தான் . அவனின் காதை பிடித்துக்கொண்டாள் நிர்த்திக்கா,


"எப்போ உன் அன்பு காதலிய காட்ட போற " நிர்த்திக்கா ,


"எக்ஸாம் முடியட்டும் நிர்த்தி" முகிலன் ,


" கதிர் நீ " நிர்த்தி ,


" காட்டுறேன் என்ன பத்தி எதுவும் கேட்காத சரியா " கதிர் , ஏன் என்று நிர்த்தி வினவினாள் .


"நான் அவள லவ் பணணுறது அவளுக்கு தெரியாது " கதிர் , சரிடா என்றாள் நிர்த்தி



அதிலிருந்து சேமியாவும் தினமும் விசாரித்து விடுவாள் . நிர்த்தியும் முகம் சுளிக்காமல் நல்லா இருக்கான் என்று கூறுவாள் .


மதி சேமியா சிவா வித்யாவும் நிர்த்திக்கா ஆலோசனைகளை நன்றாக கேட்டு படிக்க ஆரம்பித்துவிட்டனர்.



ஆனால் இங்கே காலை எழுந்த முதல் காலேஜ் அப்புறம் பகுதி நேர வகுப்பு சனி ஞாயிறு கூட சார் தூங்க விடுவதில்லை கருத்தரங்கு என்று எழுப்பி விடுவார் .


"கருத்தரங்கு போய் போயி காதே அருந்தும் போச்சு " என்று கதிர் புலம்ப ,


"காதோட கழுத்தும் அருந்து போச்சு " தன் பங்குக்கு சோமு


" வாய மூடிட்டு கவனிங்க டா இதுதான் கடைசி கருத்தரங்கு " முகிலன்


5 நிமிடம் பிறகு



" டாய் கதிரு இன்னைக்கு + 2 கடைசி பரீட்சை முடிச்சுட்டு சேமியாவும் மதியும் வீட்டுக்கு வந்துருப்பாங்களா டா ? முகிலன்


" ம்க்கூ முகிலா சார் கருத்தரங்குல கருத்தா பேசுறாரு கவனிடா" என்றான் சோமு ,


கதிர் மௌயமாய் சிரித்தான். ஐந்து மாசம் பொறுத்திருந்து அவனுக்கு ஐம்பது நிமிடம் பொறுக்க முடியவில்லை.


கருத்தரங்கு முடிந்தவுடனே" நிர்த்தி எனக்கு ஒரு உதவி மதியும் சேமியாவும் எக்ஸாம் முடிச்சுட்டு வந்துருப்பாங்க கொஞ்சம் போன் போட்டு கேளேன்.


"டேய் சித்தி வீட்ல போன் இருக்க டா ? " சோமு ,


"அப்புறம் எதுல இத்தனை நாளா பேசுனா இருக்குடா பெரிய டப்பா போன் டா " ஆர்வமாய் கதிர் ,


"அப்போ சேமியா ?" சோமு,


"மாமா கிட்ட போன் இருக்கு அதுல பேசுவா டா சோமு "முகிலன் ,


"சரி நிர்த்தி இவன் விட்டா பேசிக்கிட்டே இருப்பான் நீ கால் பண்ணு "


கால் பண்ணவும் மதி எடுத்தாள். " நிர்த்தி பேசுறேன் பரீட்சை நல்லா பண்ணியா மதி ? "


"ஆமா கா நல்லா பண்ணினேன் நேரம் பத்தல கணக்குல ரெண்ட விட்டுடேன். " மதி ,


" சரி மா பரவாயில்லை சேமியா இருக்கால" நிர்த்தி


இதோ கூட்டிட்டு வரேன் என்று சென்ற மதி "சேமியா…! உனக்கு ஒரு கால் சீக்கிரம் வாடி " என வாசலில் இருந்து கத்தினாள்.


அவ்வோசை சேமியாவின் செவியை தாண்டி பத்மாவின் செவியை சென்றடைந்தது. சேமியாவும் ஓடி வந்துவிட்டாள். அவளின் பின்னே பத்மா வந்தாள். அது சேமியாக்கு மதிக்கும் தெரியாது.


" யார் டி " சேமியா


"நிர்த்தி அக்கா " மதி


அங்கு போனை முகிலன் கையில் கொடுத்துவிட்டாள் நிர்த்தி


"அக்கா நான் நல்லா பரீட்சை எழுதினேன் " சேமியா ,


" அக்கா இல்ல முகிலன் பேசுறேன் "


"மாமா ஆஆஆ நீயா ? எப்டி இருக்க சாப்டியா உடம்ப பத்திரமா பார்த்துக்கோ மாமா எத்தன நாளைக்கு அப்புறம் உன் குரல் கேக்குறேன். " சேமியா ,


அவள் வைத்திருக்கும் பாசத்தை புரிந்துகொண்டான் முகிலன்

" நல்லா தான் இருக்கேன் பரீட்சை நல்லா எழுதுனியா அது போதும். "


"ம்ம்ம்ம் ஐ லவ் யூ மாமா " என்றாள் சேமியா ,


பக்கத்தில் நண்பர்கள் இருப்பதால் அவ்வளவாக பொருட்படுத்தவில்லை " சரி நான் போன வைக்கிறேன் வகுப்பு இருக்கு என்று கட் செய்து விட்டான்.


அவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பத்மா ' காதல் பண்ணுறியா அதுவும் அந்த பயல காதல்ல கறி அள்ளி பூசுறேன் அப்பனுக்கும் பிள்ளைக்கும் காட்டுறேன் நான் யாருன்னு '



"ரெண்டு பேரும் நல்லா எழுதியிருக்காங்கலாம் அது போதும்" என்று முகிலன் கூற கதிர் சோமு நிம்மதி அடைந்தனர்.


இங்கு சேமியா மதி இருவரும் சந்தோசமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தனர் .




பாவம் இன்னும் சில நாட்களில் அவள் கழுத்தில் தாலியும் கண்ணில் கண்ணீர் என்று நடக்க போவதை அறியாதிருந்தாள்.

சேமியாக்கு கல்யாணம் நடந்து அடுத்தவாரம் சோமுவுக்கு எப்டினு அடுத்த எப்பில பார்ப்போம் மக்களே!



மறக்காமல் comment பண்ணிருங்க நண்பாஸ்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top