• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

💜என்னில் கலந்திடு உயிரே பாகம் 20💜

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
ஹாய் மக்களே இதோ நம்ம கதையோடு
அடுத்த பதிவு


IMG-20210520-WA0106.jpg

சேமியா சிரிப்பிற்கு யார் கண் பட்டதோ ?



கடைசியாக மூம்முத்திகளின் பரீட்சை முடிய இருப்பது மூன்று நாட்கள் காலேஜ் விடுதறை பரீட்சை என்பதால் , கருத்தரங்கு பகுதி நேர வகுப்பு எல்லா தொல்லை விடுப்பெற்று நிம்மதியாய் இரவு படுக்கையில் அமர்ந்திருந்தனர் . சாருக்கும் கொஞ்சம் ஓய்வு எப்போதும் முகிலன் பரீட்சை நாட்களில் புத்தகத்தை தொட மாட்டான். ஆதாலால் இப்போது சேமியாவின் நினைவுகளில் ஆழ்ந்த விட்டான் .


கிட்ட தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு கொடுத்த இதழ் முத்தம் இன்று நினைக்கும் போது ஜிவ்வென்று இருந்தது . அவனுக்கு ,

அறவே இல்லை உறக்கம்
அதற்கும் இல்லை இரக்கம்
இமைகள் ஒன்றாக எப்போதும் சேராமல்
இடையில் நின்றாயே இது நியாயமா?
BP ஏறி போச்சு இள ரத்தம்
நெஞ்சில் கார்கில் போல ஒரு யுத்தம்
அடி அர்த ராத்திரி summer மாதிரி
வெப்பம் தாக்குதடி கண்ணில்
எதிர் மின்னல் தாக்கவே தீயும் …..

உதட்டை உரசி
அனலை எழுப்பி
விட்டால் போதுமா
அதரம் ஏங்கும் நிலை
காய்ந்த செடிக்கு நீரே!

கனவில் மிதந்தவைனை சோமுவின் குரல் களைத்தது.

"என்னடா முகிலா டூயட்டா " சோமு

" அதன் களச்சுட்டியே அப்புறம் என்ன ? " முகிலன்

"சீக்கிரம் ஊருக்கு போய்ட்டு அம்மா அப்பாவ பார்க்கனும் டா " சோமு ,

"ஆமாம் டா " என்றனர் கதிரும் முகிலனும் ,

அப்டியே அயந்துறங்கினர் .




இங்கு சேமியா கலங்கம் இல்லாத புன்னகையுடம் வலம் வந்து கொண்டிருந்தாள் ,

பாலர் வகுப்பு குழந்தையாய்
இருந்த என்னை
காதலனாய் நீ வந்து
முத்தத்தில் மொத்தமாய்
குமரி ஆக்கிவிட்டாயே!


இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு அவளின் நிலை என்ன ?


அடுத்த நாள் காலை

மும்முரமாய் பத்மாவின் தீவிர திட்டத்தின் பணிகளை முடித்து விட்டாள்.
கடைசியாக ஒன்று அதை தான் சரியாக செய்து விடுவேன் என்ற நம்பிக்கை வேறு அவளது கணவாரான சண்முகம் அலுவல் தொடர்பாக வெளியூர் செல்வது வழக்கம் . அருகில் என்றாள் வந்துவிடுவார். தொலைவு என்றால் இரண்டு மூன்று நாட்கள் தங்கிவிடுவார்.

அன்று செவ்வாய் கிழமை வெளியே கிளம்பும் போதே கால் தடுக்கியது. மீண்டும் வெள்ளிக்கிழமை தான் வருவேன் என்று நீர் அருந்தி விட்டு கிளம்பினார். சண்முகம் ,


"சேமியா நாளைக்கு உனக்கு கல்யாணம் பிடாரி அம்மன் கோவில்ல " என்று பத்மா பேச்சை ஆரம்பித்தாள் .

"நான் உன்கிட்ட கேட்கவே இல்லயே கல்யாணம் பண்ணி வைய்யினு
அப்பா வரட்டும் நான் அப்பா கூட பேசிக்கிறேன் " சேமியா ,

"பெத்தவளுக்கு தெரியாத ? எப்போ எந்த நேரத்துல யாரா கல்யாணம்
பண்ணி வைக்கணும்னு ." பத்மா ,

" நீ தான் என்ன பெத்தியானு சந்தேகம் தான் எனக்கு! மாமன மட்டும் தான் கட்டிகிடுவேன் வேறு எவனையும் கட்டிக்க மாட்டேன் " உணர்ச்சி வசப்பட்டு விட்டாள் சேமியா,

"என்னடி ஒரே பொண்ணு செல்லாமா வளர்த்தது தப்பா போச்சு அந்த பயல கட்டிக்க விட மாட்டேன் " என்று பத்மாவின் தும்பிக்கையால் ஓங்கி ஒர் அரை அவ்வளவு தான் சேமியா பிஞ்சு கன்னம் சிவந்தாயிற்று.

சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து மதியும் அவளது மகேஷும் ஓடி வந்தனர்.

"பத்மா இதென்ன வயசுக்கு வந்த பெண்ணை இப்டி அடிக்கிற ?" மதியின் தாய்,

நடந்தவற்றை சேமியா அழுது கொண்டே கூறினாள். மகேஷிடம்
" என்ன இருந்தாலும் அண்ணன் இல்லாத நேரம் நீ இப்டி எல்லாம் செய்றது தப்பு " மகேஷ் ,

மதி ஆறுதலாய் சேமியாவின் தோளை பற்றிக்கொண்டாள் .

"கல்யாணம் பண்ணினா இரண்டரைலட்சம் ரொக்கமாக கிடைக்கும் " பத்மா,

"அப்போ நீ கட்டிகோ " சேமியா,

"காசுக்காக புள்ளைய விக்க போறியா" என்று மதி தாய் பத்மாவை அதட்ட ,

"இங்க பாரு மகேஷு அது பெரிய இடம் என் பொண்ணு நல்லா இருப்பா என் பொண்ணு என் இஷ்டம் பெத்த நானே கொள்ளுவேன் பாலங்கிணத்துல தள்ளுவேன் " பத்மா ,

"வேற ஒருத்தன கல்யாணம் பண்ணுறதுக்கு பாலங்கிணத்துல உன் கையால தள்ளி விட்டுரு , வேற ஒருத்தனுக்கு வாக்கப்பட்டா அடுத்த நிமிசமே பொணமாயிருவேன் , அப்பா கையால மட்டும் இல்ல அப்பத்தா அத்தை கையாலயும் நீயும் செத்த " சேமியா ,

மதியும் தோழியை விட்டுக்கொடுக்கவில்லை " பதினெட்டு வயது பொண்ண நீங்க அடிக்க கூடாது அத்தை " ,

"நேத்து பேஞ்ச மழைல மொளச்ச காளான் நீ எனக்கு புத்தி சொல்லுறியா? " பத்மா ,

"சேமியா வா மா நம்ம வீட்டுக்கு போகலாம் " என்று மகேஷ் சேமியாவின் கையை பற்றி இழுத்துக்கொண்டு வாசல் வரைக்கும் தான் வந்தார் . அதற்குள் பத்மா வாசலில் இருந்த விறகு கட்டை எடுத்து , மகேஷ் பிடித்திருந்த கையை ஒரே அடி எழும்பு முறியும் அளவிற்கு ,

மதி பத்மாவை தள்ளி விட முயல அவளால் அந்த யானையை அசைக்க முடியவில்லை. பத்மா மதியை பலமாய் தள்ளி விட்டாள் சுவற்றில் மோதிய மதி மயங்கி சரிந்தாள் . சேமியா மதி தன் மடியில் எழுப்ப முயற்சிக்கும் இடையில் மகேஷின் உடல் முழுவதும் தன் கோபத்தை தீர்த்தாள் பத்மா , மகேஷும் நான்கு அடியை பரிசாய் வழங்கினார். பத்மாவிற்கு

மதி எழுப்பியதும் " மதி அம்மா ஆஸ்பத்திரி அழச்சிட்டு போ ரத்த ரத்தமா வருது டி " சேமியா,

"போறேன் டி அதுக்கு முதல் அண்ணாக்கு தகவல் சொல்லிட்டு போறேன் " மதி ,

"சொல்லுவ டி சொல்லுவ எப்டினு பார்க்குறேன் " என்று பத்மா மதியின் வீட்டிற்குள் அவசரமாய் ஓடி இருக்கும் ஒரு டப்பா போனையும் கீழே போட்டு உடைத்தாள் . கிராமத்தில் தொலைபேசிக்கு பஞ்சம் அதில் பத்மா செய்த வஞ்சம்! ,

மதிக்கு வேறு வழியில்லை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றாள் .

இங்கோ சேமியா நிலை இன்னும் மோசமாகியது. விடாமல்" மாமன தான் கட்டிகிடுவேன் "என்று பல முறை சொல்லிவிட்டாள். பத்மாவின் காதில் ஈயத்தை ஊற்றியது போல் தோன்றியது . விறகு கட்டையால் நன்கு மொத்தினால் பத்மா சேமியாவை , அப்பவும் சேமியா விடாமல் "மாமா தான் என் கணவன் " என்ற அர்ச்சிக்க பத்மா சிங்கம் போல் கர்ச்சித்து கத்தியை அடுப்பில் இட்டு நன்கு பழுக்க காய்ச்சி தொடையில்லும் கால்களிலும் நாளைந்து சூடுகளை இட்டாள். அம்மா என்று கத்தாமல்" மாமாஆஆஆ வலிக்குது மாமாஆஆஆ சீக்கிரம் வா மாமா என்னை கூட்டிட்டு போ " என்று சிறு பிள்ளை போல் அழுதாள். வின்னு வின்னு இழுத்து பத்மா வைத்த ஒவ்வொரு சூடுகளும் ,

இவள் புலம்பல் தாங்க முடியாமல் சேமியாவின் முடியை பிடித்து தரதரவென இழுத்து அறை ஒன்றில் இட்டு பூட்டி வைத்தாள் பத்மா ,

சேமியாவால் ஒரு கட்டத்தில் இயலவில்லை. அறையிலுள்ள மின்விசிறியில் தூக்கில் இடுவோமோ என்று எண்ணம் அவசர புத்தியில் தாவணியை கழட்டி மின்விசிறியில் மாட்டிக்கொண்டாள்.
கழுத்திலும் போட்டுக்கொண்டாள். மூளையின் ஒரு ஓரம் ' ஏய் குண்டச்சி மாமன் வரும் வரைக்கும் கொஞ்சம் பொறுக்க மாட்டியா? ' என்று முகிலன் கூறுவது போல் அவள் எண்ணம் தோன்ற கட்டிய முடிச்சுக்களை எல்லாம் அவிழ்த்து விட்டு கட்டிலில் பொத்தேன்று விழுந்து அழ ஆரம்பித்தாள். இவள் படும் பாட்டை பார்த்து நித்ராதேவி சேமியாவை ஆட்கொண்டாள் .





மதி தனது அம்மாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு தானும் முதலுதவிகளை பெற்றுக் கொண்டாள்.

பின் ரிசப்ஷனிற்கு சென்று "நான் ஒரு போன் பண்ணிக்கிலாமா "
"பண்ணிக்கோமா " என்றாள் ரிசப்ஷன்லிஸ்ட்


அடிக்கடி நிர்த்திக்காவிற்கு போன் போட்டு பழக்கம் என்பதால் இலக்கங்கள் நினைவில் இருந்தது. உடனே கால் செய்தால் ,முதல் காலை நிர்த்திக்கா எடுக்கவில்லை. மீண்டும் முயற்சித்தாள் . மதி ,

காலை ஆன்சர் செய்து "ஹலோ "

"அக்கா...அக்கா" என்று அழுதால் மதி

நிர்த்திகோ பயம் யார் என்று குரல் அடையாளம் விளங்கவில்லை மதி அழுதுகொண்டு பேசியதால் " யார்மா நீ ",

"அக்கா நான் மதி பேசுறேன் " மதி ,

"மதியா…! அதும் இன்நேரம் ( மணி ஒன்பது இரவு ) மதி ஏன் அழுற ? என்னாச்சி? நிர்த்திக்கா பதற்றத்துடன் ' யாரும் இறந்துவிட்டார்கள் என்று எண்ணிக்கொண்டாள் .

"சேமியாக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க நாளைக்கு கல்யாணமாம் சண்முகம் மாமாக்கும் தெரியாது அவங்க ஊர்ல இல்லை அவங்க போன் நம்பர் சரியா தெரியாது கா " மதி ,

"மதி நீ சொல்லுறதெல்லாம் உண்மையா " நிர்த்தி ,

"ஆமா கா ஏதோ பெரியேடத்து மாப்பிள்ளையாம் இரண்டரை லட்சம் ரொக்கமாக கிடைக்குமாம் அதுக்காக அப்டி பண்ணுறாங்க போல சேமியா முகில் அண்ணாவை தான் கட்டிகிடுவேனு ஊலரிட்டா பத்மா அத்தை சேமியா அடிச்சிட்டாங்க அத கேக்குறத்துக்கு நானும் அம்மாவும் வீட்டுக்குள்ள போனோம். எங்களையும் அடிச்சி விரட்டிடாங்க. வீட்ல இருந்த ஒரு போனையும் உடைச்சிட்டாங்க. " மதி ,

"என்ன .. என்ன? சொல்ற மதி அம்மா எப்டி இருக்காங்க நீ எப்டி இருக்காங்க ?" நிர்த்திக்கா ,

"எனக்கு தலைல மட்டும் தான் கட்டு அம்மாக்கு கைலயும் கால்லையும் கட்டு போட்டுருக்கலாம் கா இந்த தகவல எப்டி யாவது அண்ணா கிட்ட சொல்லிருங்க முகில் அண்ணா இல்லைன்னா சேமியா செத்துருவா கா " மதி ,

"அப்டியா எல்லாம் பேசாதே மதி முதல் முகிலனுக்கு தகவல் சொல்லுற வழிய பார்ப்போம். நீயும் அம்மாவும் பத்திரமா இருங்க அது போது "





உறக்கம் களைந்த சேமியா அறையினுள் உணவை கண்டவள் . பத்மா அறையில் உணவை வைத்துவிட்டு மீண்டும் கதவை மூடியிருந்ததை அறிந்து கொண்டாள்.

'தான் ஏன் உணவை விடுத்து இருக்க வேண்டும் மாமா வரும் போது தெம்பாய் இருக்க வேண்டும் உணவை உண்போம் ' என்று எண்ணிக்கொண்டாள்.

அவளால் கீழே இறங்க முடியவில்லை அடித்த இடமெல்லாம் தடித்து
சூடிட்ட இடமெங்கும் கொப்பளித்திருந்தது. உடல் பலவீனம் ஆகி அவளை வாட்டியது. தட்டி தவழ்ந்து சென்று முடிந்தவரை உணவை உண்டாள். நீரை அருந்திவிட்டு அழ ஆரம்பித்தவள். ஐந்து நிமிடத்தில்
தன்னை யாரோ சுற்றுவது போல் இருந்தது. பத்மா உணவில் மயக்க மாத்திரைகளை கலந்து இருந்தால் அதை சேமியா அறியாது உண்டிருந்தாள். அவ்வளவு தான் மயங்கி விட்டாள்.




நிர்த்திக்கா இங்கே அவள் தாத்தாவிற்கு போன் செய்ய போன் ஸ்வீச் ஆப் என்று வந்தது.

வேறு வழியில்லாமல் வீட்டில் சொன்னால் விடமாட்டார்கள். நான் தாத்தா வீட்டுக்கு போறேன் என்னை தேட வேண்டாம் .என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு கிளம்பிவிட்டாள். அப்போது மணி பத்து , சிட்டாய் ஸ்கூட்டரில் பறந்தாள்.

இடையில் ஒருத்தன் குறுக்கே வர " டேய் சாவுக்கிறக்கி பார்த்து போடா"

அரை மணிநேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை பதினைந்து நிமிடத்தில் கடந்துவிட்டாள் .

ஸ்கூட்டரில் ஸ்டான்டை கூட போடால் வண்டியை கீழே தள்ளிவிட்டு ஸ்கூட்டரிம்" சாரி செல்லக்குட்டி " என கூறிவிட்டு , வீட்டின் கதவை தட்ட ஆரம்பித்தாள். இரண்டு நிமிடம் கழித்து தான் கதவை திறந்தார் தாத்தா ,

"என்னம்மா இன்நேரம் யார் கூட வந்த சரி சரி உள்ள வா " தாத்தா ,

" தனியா தான் வந்தேன் தாத்தா முகிலன பார்க்க முடியுமா தாத்தா " நிர்த்தி ,

" சாப்டியா டா களைப்பா இருக்கியா காபி போடவா? " தாத்தா,

"முக்கியமான விஷயம் அவசரமா முகிலன் கூட பேசனும் நீங்க வேற வம்பு பண்ணாதீங்க " நிர்த்திக்கா ,

" என்ன காதல் விஷயமா ? " என்று ஒரு மாதிரி வினவினார் நிர்த்தியிடம் ,

"தாத்தா நீங்க செம்ம ஸ்மார்ட் அதே தான் ! " சிரித்துக்கொண்டே நிர்த்திக்கா ,

" என் சர்வீஸ்ல இந்த மாதிரி எத்தனை பார்த்து இருப்பான் ! " தாத்தாவின் எண்ணம் நிர்த்திக்கும் முகிலனுக்கு தான் காதல் ,


"தாத்தா ப்ளீஸ் " என்று கெஞ்சினாள் நிர்த்திக்கா ,

முகிலனை எழுப்ப மூவருமாக கண்ணை கசக்கிக்கொண்டு அரை தூக்கத்துடன் வந்தனர். கொட்டாவி விட்டு படி " என்ன நிர்த்தி " என்றான் முகிலன் ,

"உன் பொண்டாட்டி க்கு நாளைக்கு கல்யாணமாம் " நிர்த்திக்கா

கண்களை நன்கு விழித்த படி " நிர்த்தி விளையாடதே மணி பத்தை தாண்டிட்டு நாளைக்கு எக்ஸாம் வேற " முகிலன் ,

"நிர்த்திக்கா உண்மையா தான் சொல்லுறியா " ? கதிர்

" ஆமா கதிர் உன் ஆளு ஹாஸ்பிடல்ல இருந்து கால் பண்ண எனக்கு " நிர்த்தி

" அச்சோஓஓ மதி …….! " என்றான் கதிர்

மதிக்கு என்னவாயிற்று ? என்று சோமுவும் முகிலனும் பதறினார்.

நிர்த்திக்காவும் எல்லாவற்றையும் ஆதியிலிருந்து அந்தம் வரை பாத்திரத்தை விளக்குவது போல் விளக்க மூவருக்கும் கண்களில் சோப்பு நுரை நுரையாய் வந்தது .

"இப்போ மதி அம்மா கால்லையும் கைலயும் கட்டாம் , மதிக்கு தலைல கட்டாம் " நிர்த்தி ,

முகிலன் தொப்பேன் அமர்ந்து விட்டான். தலையில் கையை வைத்தவாறு.

"அட பசங்களா உங்களாள என் பேத்தியை தப்பா நினைச்சுட்டேனே சாரி மா " என்றார் நிர்த்தியை பார்த்து தாத்தா ,

"எனக்கு தெரியும் தாத்தா நீங்க குதர்க்கமா விசாரிக்கும் போதே ! நான் டூஊஊஊ " என்று பொய்யாய் சண்டுயிட்டாள் தாத்தாவிடம் ,

"மூனு வருசமா என்கூடவே இருந்திங்க ஆனா இந்த காதல் விவஹாரம் பத்தி எனக்கு தெரியலயே! , என்ன தான் வயசு காதல் வசப்பட்டாலும் புத்தி படிப்ப விட்டு மாறல எனக்கு பெருமையா இருக்கு உங்கள நினைக்க! " சார்,

"தாத்தா உன் லெட்ச்சர் போதும் இது காலேஜ் இல்லை , டேய் அழு மூஞ்சிங்களா இப்போ என்ன பண்ணுறதுன்னு யோசிக்காம அதைவிட்டுட்டு ச்சிஇஇ ச்சிஇஇ சின்ன புள்ள தனமா " நிர்த்திக்கா ,

"நான் காலைல பஸ்சுக்கு கிளம்புறேன். நீங்க பரீட்சை முடிச்சுட்டு வாங்கடா " என்றான் முகிலன் ,

"நாங்களும் உன்ன கூட வாரோம் தனியா விட முடியாது? எங்களுக்காக நீ எவ்வளவு பண்ணிருப்ப உனக்காக ஒரு பரீட்சை தானே! அடுத்த வருஷம் பண்ணிக்கிலாம் " கதிர் சொல்ல , சோமு அதை வழிமொழிந்தான்.

"என்ன பசங்களா அப்போ உங்க அம்மா அப்பா கஷ்டப்பட்டதெல்லாம் வீணா முகிலா அதுவும் உங்க அம்மா தன் வாழ்கைல எந்த சுகமுமே வேணாம் பிள்ளையே போதும் உனக்காகவே தனி மனிஷியா இருந்து இவ்வளவு தூரம் படிக்க வைச்சதுக்கு நீ செய்ற நன்றி கடன் இதுதானா ? " தாத்தாவாக இல்லாமல் சாராக பேசினார்.

" அப்பா இல்லாம என்னை படாத பாடு பட்டு ஒரு வேளை சோத்துக்கும் யார்கிட்டயும் கை ஏந்தவிடமா வெயில் மழை பார்க்கமா வயல்ல வேலை செஞ்ச என்ன பெத்து வளர்த்த அம்மாவ நினைக்கவா இல்ல நான் கிள்ளினாளே வலி தாங்க மாட்டா இப்போ எனக்காக எல்லா வலியையும் தாங்கிகிட்டு என்ன மட்டும் முழுசா நம்பி என்மேல பைத்தியமா இருக்கா நான் இல்லன உயிரயே விட்டுருவா ! அத நினைக்கவே கடவுளே என்ன இப்டி சூழ்நிலை கைதி ஆக்கிட்டியோ " கதறி கதறி அழ ஆரம்பித்து விட்டான் முகிலன், ( மதி வெளியே வந்த பிறகு அவள் பட்ட வேதனையை அறியாதிருந்தான். )

"தாத்தா ஃப் யூ டோன்ட் மயிண்ட் , வித் யூ பர்மிஷன் ?" நிர்த்திக்கா

"என்னடா " என்றார் தாத்தா ,

"நான் போயி கல்யாணத்தை நிறுத்தட்டுமா " என்று நிர்த்தி கேட்க அனைவரும் வாயை பிளந்தனர்.

"முகிலன் பாவம் தாத்தா எவ்வளவு கஷ்டப்படுறான் , அந்த குட்டி பொண்ணும் பாவம் தாத்தா , நான் கல்யாணத்த மட்டும் நிறுத்திவைக்கிறேன் .இவங்க பரீட்சை முடிச்சுட்டு வரட்டும் அதுக்கு அப்புறம் மீதிய பார்த்துக்கிலாம்" . என்று கொஞ்சுதலான வார்த்தையில் அவள் மனதை மிஞ்சினாள் நிர்த்தி ,

வேறு வழியின்றி இறுகிய முகத்துடன் "சரி " என்றார் .

"அப்போ நீ பரீட்சை எழுத மாட்டியா? நிர்த்திக்கா " சோமு

"நான் எங்க டா எக்ஸாம் எழுதினேன் , டாக்டர் படிக்க வேண்டிய எனக்கு ஆர்ட்ஸ் காலேஜ் எக்ஸாம் எதுக்கு? " நிர்த்தி,

"நான் இத்தன நாளா லேடீஸ் செக்ஷன்ல பரீட்சை எழுதினியோ நினைச்சேன் " சோமு ,

"இல்ல , சரி சரி அத விடு , தாத்தா நான் கிளம்பட்டுமா? " நிர்த்தி

" இப்போ அங்க போய்ட்டு நோ யூஸ் விடிய அஞ்சு மணிக்கு கிளம்பு மா " தாத்தா ,

முகிலனிடம் தன் திட்டத்தை தெளிவாய் எடுத்துரைத்தாள். முகிலனும்
" நீ எதுக்கும் அம்மாவ அழச்சிட்டு போ அம்மாகிட்டயும் எல்லாத்தையும் சொல்லு நிர்த்தி" முகிலன் , எப்படி செல்ல வேண்டும் என்று முகிலன் கூகுளில் காட்டிக்கொடுத்தான்.

"சரி இப்போ போய்ட்டு தூங்குங்க பசங்களா " தாத்தா ,

நிர்த்தி இருக்கும் ஐந்து மணித்தியாலங்களை வீணடிக்காமல் உறங்கி விட்டாள். முகிலனை பற்றி கூறவா வேண்டும் உறக்கமின்றி அவனின் ஆறுதலாய் சோமுவும் கதிரும் உறங்கவில்லை.

காலை மணி ஐந்து தாத்தா காபி போட்டு எழுப்பினார்.
ஏனையவர்களும் காபியை கொடுத்தார். அவர்கள் தான் உறங்கவே இல்லையே!

காபியை அருந்தி விட்டு குட்டி குளியல் போட்டு வேகமாக தயார் ஆனாள் .தனக்கு தேவை படும் என்று இரண்டு செட் ட்ரஸ் எடுத்து வைத்திருந்தாள்.

"சரி நான் கிளம்பறேன் " என்று நிர்த்தி ,

" எதும்ன்னா உடனே சாருக்கு தகவல் சொல்லு" என்றான் முகிலன் சற்று பதற்றமாய் ,

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீங்க எக்ஸாம் முடிச்சுட்டு சீக்கிரம் வந்து சேருங்க " நிர்த்தி ,

"உன்ன தள்ளிவிட்டேனு இடைல மக்கார் பண்ணிறாத சாரி செல்லம் என்றாள். மன்னிப்பு கேட்டுக்கொண்டாள் ஸ்கூட்டரிம் , ஸ்கூட்டரில் பெண் புலி வேகமாய் நிர்த்தி

முகிலன் இறைவனை வேண்டிக்கொண்டான் .
முகிலனை இறைவன் கையை கொடுத்தாரா இல்லையா ?




மறக்காம உங்க commentகளை பதிவு பண்ணிடுங்க மக்களே !
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top