• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

💜என்னில் கலந்திடு உயிரே பாகம் 24 💜

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
Hai dears!

Late ah epi poduren Adhuku 1st sorry dears
Enaku support pannura ellarukum romba nanri 💜

IMG_20210710_152114_036.jpg





பியூட்டிஷன் வந்து வாசலில் இருந்து கால் செய்ய மணியோ ஆறு
" சீக்கிரம் ஃப்ரெஷ் அப் ஆகிட்டு வாங்கா " ,

நிர்த்தியும் மதியும் மதியின் வீட்டுக்கு சென்று குளியலை போட்டு வந்தனர். முகிலன் கதிர் சோமு அவர்களுக்கென்ன அலங்காரமா ஆதாலால் ஆறுதலாக தயாரானார்.

பாதி மேகப்பை முடித்த சேமியாவை பார்த்த நிர்த்தி மதியையும் அசந்து போனார்கள்.

"இப்போ தான் புரியுது முகிலன் ஏன் உன் பின்னாடி சுத்தினான்னு " நிர்த்தி,

"சேமியா சீக்கிரம் தயாராக்கிவா போல நீங்களும் சீக்கிரம் புடவையகட்டுங்கடியம்மா " லட்சுமி,

ஒன்றரை மணி நேரத்தின் பின்னர் அனைவரும் தயாராகினர் .

"வண்டி வந்துருச்சி எல்லாம் சீக்கிரம் கிளம்புங்க " சண்முகம் , தனது மகளை பார்த்த பெருமிதம் 'என் வீட்டு இளவரசி' என்று சற்று விழி நீர் வெளியே எட்டி பார்த்து ,

மூகூர்த்ததிற்கு அரை மணி நேரம் உண்டு சேமியாவை வளைத்து வளைத்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. தன் அழகியை பார்க்க தவம் கிடக்கவேண்டி ஆயிற்று. கதிர் ஒரே புலம்பல் "புடவையோட ஒரு முறையாவது ஒழுங்கா பார்க்க முடிஞ்சிதா மின்னல் மாதிரி அங்கயும் இங்கயும் ஓடிக்கிட்டு இருக்கா மதி " ,

"கதிர் உனக்கு கல்யாணம் மாதிரி நீ தைய தக்கனு குதிக்கிற இப்போ ஐயர் சொல்லுவாறு பாரு பொண்ண அழச்சிட்டு வாங்கனு அப்போ மூனு பேரும் வருவாங்க டா " சோமு

ஓமகுண்டத்தின் முன்னாடி புகையை போட்ட படி ஐயர் அதில் கண்களை கசக்கி ஐயர் கூறும் மந்திரங்களை உச்சாடனத்துடன் முகிலன் ,

"நாழி ஆகுது பொண்ண அழச்சிட்டு வாங்க " ஐயர் ,

மூன்று மங்கையர் குழுமியிருக்க நடுநிலையில் தலை குனிந்த படி
சிவப்பு மற்றும் கோல்ட் நிற புடவையில் மின்னும் தங்க சிலையென
வெட்கத்துடன் சிறிய புன்முறுவல் அடி எடுத்து வைக்கும் கொலுசின்
ஓசை என்னவனை காண விரைவாக வருகின்றேன் என்று உணர்த்தியது. அணிந்திருந்த நகை எல்லாம் அவள் வனப்போடு வாதடிக்கொண்டிருந்தது. அவள் அழகை ஒப்பிட நிலவும் போதவில்லையே முகிலனுக்கு வார்த்தைகள் மட்டும் போதுமா என்ன?

முகிலன் அருகில் சேமியா வந்து அமர்ந்தவுடன் அவனும் சற்று நிதானம் தவறியது.

"வாயை மூடிட்டு கழுத்த நேர திருப்பு முகிலா " சோமு

தன்னை சுதாரித்தக்கொண்டு நேரே திருப்பி விட்டான். கதிரோ சைட் அடிக்க வழியில்லாமல் கொஞ்சம் பார்ப்பதும் கீழே குனிவதுமாக இருந்தான்.

நிர்த்திக்கா கதிர் அருகில் வந்து " ரெண்டு பேரும் ஒரே மாதிரி புடவ கட்டி இருக்கோம். எதாவது பண்ணும் போது கொஞ்சம் முகத்தையும் பாரு "
கதிர் அசடுவழிந்தான் .

மேளதாளங்கள் முழங்க மாங்கல்யம் தந்துனானேனா என்று ஐயரின் உச்சாடனத்துடன் தங்க தாலியை தங்க கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் முகிலன் ,

அளவில்லா ஆனந்தத்தில் அனைவரும் அட்சதை தூவி ஆசிர்வதித்தனர். சேமியாவின் கண்களில் குளம் நிரம்பியது. ' நடந்தது எல்லாம் கனவாய் தெரிந்தது'.

அடுத்து நடக்கவிருக்கும் சம்பிரதாயங்கள் அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், மெட்டியிடுதல் அது இது என்று ஏராளம் , அவற்றை எல்லாம் முடித்து விட்டு அடக்கடாவென்று அமருவதற்கு நேரம் கிடைக்கவில்லை. பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர். அவர்களுக்கான தனிமை கிடைப்பதாக இல்லை.


அடுத்த உடையை மாற்றலாம் என்று நிர்த்தி சேமியாவை அழைத்து வந்துவிட்டாள். முகிலன் உடை மாற்ற சென்றிருந்தான்.

உடை மாற்ற அதிக நேரம் எடுக்கவில்லை சீக்கிரமாக வந்துவிட்டனர்.
முகிலன் கோர்ட் சூட்டில் வந்து அமர்ந்து விட்டான். லட்சுமியின் கண்களுக்கு முகிலன் கொள்ளையழகாய் தெரிந்தான். ஒரு குட்டி பொம்மைக்கு ஃப்ராக் அணிவித்தால் எப்படி இருக்கும் அவ்வளவு அழகாய் இருந்தாள்.

குட்டி பொம்மையை கட்டி அணைக்கனும் போலிருந்தது முகிலனுக்கு
அவள் அணிந்திருந்த உடை ஆயிரம் கதைகள் சொன்னது. கைகள் நெட் மட்டிரியல் கழுத்தளவிலிருந்து சற்று கீழே கற்களின் வடிவமைப்பு இடையை ஒட்டியே உடையின் வளைவு இடையை தாண்டி குடையை விரித்தது அமைந்திருந்த ஆப்வயிட் நிற ஃப்ராக் கையில் சிவப்பு வர்ண அழகிய மலர் செண்டு ஆபரணங்கள் எல்லாம் ஆடைக்கு ஏற்றாற்போல் எளிமையாய்.

வருகை தந்தவர்களின் வாயில் கொசு நுழைந்து வெளியே சென்றிருக்கும் கிழவிகளின் வாயில் " கிரமத்துக்கே இது புதுசா இருக்கு சினிமா படத்துல வர்ற மாதிரி இருக்காங்க ரெண்டு பேரும்
இப்டி எல்லாம் இல்லாம நாங்களும் பண்ணினோமே கல்யாணம்னு ஒன்னு இந்த நாகரீகம் எல்லாம் எங்க காலத்துல இல்லாம போயிருச்சே இதுக்கு அப்புறம் எங்க பசங்களுக்கு இந்த ராஜா ராணி மாதிரி துணிமணி எடுக்கனும் அருமையான ஜோடி பொருத்தம் வேற "

அதில் ஒரு கிழவி " நமக்கு பவுடர எடுத்து சுவத்துக்கு வெள்ள அடிக்கிற மாதிரி முகத்து அடிப்பாங்க கண்ணுக்கு மை இழுப்பாங்க இப்போ ஏதேதோ வந்துடுச்சாமே உதட்டுக்கு லிப்பிடிஸ் கண்ணுக்கு காஞ்சலோ காச்சலோ இப்டி என்னனமோ சொல்லுங்க சேமியா எம்மா மேகப்பு போட்டுருக்கா அழகு தேவதை! " ,

இவற்றை கேட்டுக்கொண்டிருந்த சீதா பாட்டி ' வீட்டுக்கு சென்று முதல் வேலை பசங்களுக்கு சுத்தி போடனும் ' கையால் நெட்டி முறித்து "கொள்ளிகண்ணு கொள்ளிகண்ணு " என்று நொடிந்துக்கொண்டார்.


அமருவதற்கு கூட நேரம் இல்லை வருகைதந்தவர்களுடன் படப்பிடிப்பில் நேரம் செலவாகி கொண்டிருந்தது. கொடுக்கும் பரிசில்களை நிர்த்தியும் மதியும் வாங்கி வைத்துவிட்டனர்.

மதியின் தாய் வீல்சேரில் வந்து சேர்ந்தார். சேமியாவின் முகம் வாடியது மதியின் தாயை பார்த்து. சாரும் வருகை தந்திருந்தார் .
முகிலனுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.அனைவரும் வந்தோய்ந்தனர் இறுதியாக நெருங்கிய உறவினர் ஒன்றாக அமர்ந்து உண்பது வழக்கம் சாரும் நிர்த்தியும் நெருங்கியவுறவாகிட்டனர்.

இளசுகள் அமரும் எதிர் திசையில் பெருசுகள் முதுகை காட்டியவாறு அமர்ந்துவிட்டனர். அவர்களுக்கும் இங்கிதம் சங்கீதம் எல்லாம் தெரியாமல் இருக்குமா என்ன? ,

" சேமியா முகிலனுக்கு ஒரு வாய் குடு " நிர்த்தி ,

"மாட்டேன் " என்று தலைகுனிந்து கொண்டாள் . நிர்த்தி கூறியதை தப்பாக புரிந்துக்கொண்டாள். சேமியா,

முகிலனுக்கு சரியாகதான் புரிந்தது. அவன் " சேமி இங்க பாரு "
அவள் பார்ப்பதாக இல்லை.

கதிர் அந்த இடைவெளியை பயன்படுத்திக்கொண்டான். " அட என்ன சேமியா இதுக்கு போய் இவ்ளோ வெக்கபடுற மதி ஆஆஆ காமி "

மதியும் ஆஆ என்று காட்ட அவன் இலையிலிருந்த பூரியை குருமாவில் நனைத்து ஊட்டி விட்டான். மதியோ ' என்ன இவர் இப்டி பண்ணிடாரு ' என்று நினைத்தாலும் அனைவரின் முன்னால் விளையாட்டை எடுத்துக்கொண்டாள். சோமுவோ ' இதெல்லாம் பாக்குறதுக்கு தான் கண்ண குடுத்தியா ' ,

முகிலன் " யாரோ அடிக்கடி சொல்லாங்க சந்தடி சாக்குல சிந்து பாடுறேன்னு ! "

"ஆமா டா இதுக்கெல்லாம் நீ தான் குரு முகிலா , இப்போ பாரு மதி எனக்கு ஊட்டுவா! " என்றான் கதிர்,

மதி வேறுவழியின்றி கை நீட்ட சேமியாவின் குரல் தடுத்தது. " நான் மாமாக்கு ஊட்டி விடுறேன். " , கதிர் பல்பு வாங்கிக்கொண்டான்.

"சீக்கிரம் சாப்பிடுங்க டா போடோ சூட்டிங் இருக்கு அவங்க ரெண்டு பேருக்கும் " நிர்த்தி ,

கடகடவென்று உணவருந்திக்கொண்டனர். பெருசுகள் எல்லாம் உணவருந்தி முடித்து விட்டு இளசுகளுக்கு காத்திருந்தனர்.

"கேமராமேன் சொல்லுர மாதிரி செய் முகிலா" நிர்த்தி ,


"போ நிர்த்தி அம்மா மாமா எல்லாம் இருக்காங்க வேணாம். " முகிலன்

"ஏய் உன் பொண்டாட்டிய நீ கட்டிப்பிடிச்ச ஒரு போஸ் குடுக்க முடியாத ? " நிர்த்தி


"எப்டி நிர்த்தி பெரியவங்க முன்னாடி சேமியாக்கும் கூச்சமா இருக்கும் தானே !" முகிலன் ,

"இரு எதும் பண்ணலாம் " நிர்த்தி
லட்சுமிமா வீட்டுக்கு போயி ஆர்த்தி எடுக்க பால் பழம் குடுக்குற வேலைக்கான ஏற்பாடு பண்ணுங்க
"நீங்க எல்லாரையும் அழச்சிட்டு வீட்டுக்கு கிளம்புங்க அம்மா "

முகிலன் சேமியாவுக்கு துணையாக நிர்த்தியும் சோமுவும் இருந்தனர்.
மதி கிளம்பியாதல் வாலை பிடித்துக்கொண்டு கதிரும் .
கிளம்பிவிட்டான்.

அவர்கள் கிளம்பியவுடன் கட்டிபிடித்து கொண்டு , சேமியாவை தூக்கியவாறு , கைகள் கோர்த்து என்று பற்பல அட்டகாசமான போஸ்களில் படப்பிடிப்பு நடைபெற்றது .கிராமத்து திருமணத்தை போல் அல்லாமல் நகரத்தில் நடைபெற்றது திருமணம் போலிருந்தது.

வீடுக்கு வருகிறோம் என்று தகவலை தெரிவித்து கொண்டாள் நிர்த்தி பட்டாசு எல்லாம் பலமாய் இளம் தம்பதியினரை வரவேற்றது. மூன்று சுமங்கலி பெண்கள் அவர்களை ஆரத்தி எடுத்தனர். வீட்டில் விளக்கேற்றி பூஜை எல்லாம் செய்து கிழக்கே அமர வைத்தனர் .
பாலும் பழமும் உண்ணும் சடங்கை நிறைவேற்றினர்.


சண்முகத்திற்கு பெரும் நிம்மதி பத்மாவின் இடையூறு இன்றி இனிதே நிறைவுற்றது. சேர்ந்திருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் களைந்திருந்தது. மிச்சமாய் சண்முகம் , சீதா பாட்டி , லட்சுமி, தம்பதியர், கதிர் , மதி , நிர்த்தி சோமு இவர்களை தவிர வீட்டில் யாரும் இல்லை .

" அம்மா உங்களும் அத்தைக்கு ம் என்னம்மா பிரச்சினை நம்ம குடும்பம் ஏன் மா ரெண்டா இருக்கு ? " என்று முகிலன் பேச்சை ஆரம்பித்தான்.

"நல்ல நாள் பொழுதுமா இதெல்லாம் எதுக்கு முகிலா அடுத்து உங்களுக்கு சடங்கு இருக்கு அதுக்கு தயார் ஆகுங்க " என்று லட்சுமி ,

"அப்பா நீங்களாவது சொல்லுங்க இல்லேன்னா இதுக்கு அப்புறம் நடக்குற சடங்கு எதுவும் வேணாம் எங்களுக்கு! " என்றாள் சேமியா ,

இதற்கு மேல் மறைப்பது சரியில்லை என்று மறைத்த உண்மைகளின் திரையை திறந்தார் சண்முகம் " சொல்லுறேன் மா முகிலன் அப்பா இராமகிருஷ்ணன் என்னவிட வயசுல சின்னவன் தான் ஆனா புத்தில பெரியவன் , நானும் பத்மாவும் கல்யாணம் பண்ணி ஐந்து வருசத்துக்கு அப்புறம் லட்சுமியும் முகிலன் அப்பாவும் கல்யாணம் பண்ணிவிட்டார் . பத்மாவோட சொந்ததுல ஒரு பையனுக்கு லட்சுமிய கேட்டாங்க நாங்க குடுக்கல அதுல ஆரம்பிச்ச வன்மம் எங்களுக்கு ஐந்து வருசமா குழந்தை பாக்கியம் இல்ல " என்று சண்முகத்தின் முகம் வாடியது .

"அதுக்கு அப்புறம் என்னாச்சு மாமா ? " என்றான் முகிலன் ,

" எனக்கு குழந்தை இல்லேன்னா லட்சுமியும் குழந்தைய தள்ளி போட்டுகிட்டா ! எல்லாரோட வற்புறுத்தல்ல முகிலன் பிறந்தான்.
முகிலனுக்கு ரெண்டு வயசு இருக்கும். அவன் அப்பா பைக்ல போகும் போது லாரி காரன் அடிச்சிட்டு போய்ட்டான். உயிருக்கு போரடுர நிலையில லட்சுமி எல்லா நகைநட்டையும் வித்துட்டா அந்நேரம் இருந்தது ஒரு வயல் தான் அதையும் வித்தோம். காசு பத்தல வீடு லட்சுமி பேர்ல தான் எங்க அப்பா எழுதி வைச்சிருந்தாரு நிறைய இடத்துல கேட்டாம் குறைஞ்ச விலைக்கு தான் கேட்டாங்க , பத்மாவோட நகைகள கேட்டோம் மறுத்துட்டா அதுக்கு பதிலா வீட்டு பத்தரத்த கேட்டா பத்மா , லட்சுமியும் வேறு வழியின்றி ஒத்துகிட்டு பணத்தை கட்டி ஆப்பரேஷன் பண்ணியும் முகிலன் அப்பா பிழைக்கல கடவுள் கைவிட்டுடாரு எங்கள! " என்று கூறி லட்சுமியின் கண்களில் அணை கடந்த வெள்ளம் பெருக்கெடுத்தது . காதல் கணவனோடு கண்ட கனவெல்லாம் இரண்டு வருடங்களுக்கு மேல் பலிக்கவில்லை.

சேமியா தனது அத்தைய ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள். அதற்கு மேல் சண்முகத்திற்கும் பேச்சே வரவில்லை. சீதா பாட்டி மீதியை தொடர்த்தார்.

"நகைய மீட்க முடியல முழ்கிட்டு பணமா லட்சுமி கொஞ்சம் கொஞ்சமா தாரேனே சொன்ன இதுக்கு பத்மா ஒத்துகல அப்பவே ரொக்கமாக மூன்று லட்சம் கேட்க இல்ல வீட்ட விட்டு போக சொல்லிட்டா லட்சுமியும் முகிலன தூக்கிட்டு வெளிய வந்துட்டா நானும் அவகூடவே வந்துட்டேன் . "

இது முகிலன் அப்பா வாங்கவச்ச இடம் அதுலயே அப்போ குடிசை வீடு இப்போ ஓட்டு வீடு , லட்சுமி வெளிய வந்துட்டானு சண்முகத்துக்கும் பத்மாக்கும் நிறைய சண்டைகள் வரும் அப்போ எல்லாம் இங்க ஓடி வந்துருவான் சண்முகம் லட்சுமி தான் எனக்கு வாழ்த்து குடுத்து வைக்கல நீயாவது சந்தோசமா இருங்க அண்ணாணு அமிச்சி வைப்பா அதுக்கு அப்புறம் முகிலனுக்கு மூனு வயசு இருக்கும் பத்மா உண்டாகி இருந்தா ஆசையா பார்க்கப்படுகிறது லட்சுமிய அவமானபடுத்தி அனுப்பிட்டா லட்சுமி இருந்த வரைக்கும் தான் உண்டாகல நீ இல்லாம உண்டாகிருக்கேன். அதுவும் உனக்கு புடிக்கலயானும் ரொம்ப பேசிட்டா சீதா பாட்டிக்கும் அதிகமாக பேச முடியவில்லை தன் மகள் பட்ட பாட்டை எண்ணி குரல் அடைத்துக்கொண்டது .

லட்சுமி " ஒரு விதவையா சமூகத்தில் முகம் கொடுக்குறது ரொம்ப கஷ்டம் காசுக்காக என்கூட வானு நிறைய பேர் இரண்டாம் திருணம்னு இன்னும் கொஞ்சப்பேர் காலைல வேலைக்கு கிளம்புனா போயும் போயும் உன் முகத்துல முழிச்சிட்டேனு சொல்லுவாங்க செத்துடலாம்னு தோனும் விசம் குடிக்கலாம்னு போன அம்மா எனக்கு குடுனு முகிலன் கேட்டான். நீ என்ன சாப்பிட்டாலும் எனக்கு தானே குடுப்பேனு கேட்டான் அதோட முகிலனுக்காக மட்டும் வாழ ஆரம்பிச்சேன். "

அண்ணாக்கு பெண்குழந்தை பிறந்துன்னு சொன்னதும் அவ்வளவு ஆசையா இருந்துச்சு பார்க்க போகமுடியல ரெண்டு மாசத்துக்கு அப்புறம் அண்ணா கூட்டிட்டு வாந்தாங்க அது தெரிஞ்சதும் பால் குடிக்கிற குழத்தனு கூட பார்க்காம உன் குழந்தைய நீயே பார்த்துக்கொனு அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டாங்க சேமியா பசில அழ ஆரம்பிச்சிட்டா அண்ணா காலுல வீடுக்கு கூட்டிட்டு வந்தாங்க அதுக்கு அப்புறம் சேமியா பால்குடிய மறக்கும் வரைக்கும் பார்க்கல அண்ணாவையும் பார்க்கல மூனு வருசம் கழிச்சு தான் பார்த்தேன்.

இவ்வனைத்து கேட்டுக்கொண்டிருந்த அனைவருக்கும் விழியின் ஓரம் நீர் கசிவு தான் முகிலன் மண்டியிட்டு லட்சுமியை கட்டிக்கொண்டு அழுது விட்டான்." இவ்வளவு கஷ்டப்பட்டு என்னை வளத்திங்களா "

முகிலன் எழுப்பி அவனது கைகளை பற்றி " சீக்கிரமாக உங்க அப்பாவ என் கைல குடுத்திரு எனக்கு வேறு எதும் வேண்டாம் பா " லட்சுமி

"எங்க... லட்சுமி சீக்கிரம் குழந்தை பிறக்கனும் ஆசை மட்டும் இருந்தா போதுமா பேசியே இன்னைக்கு நல்ல நேரம் முடிஞ்சிடுவீங்க போல " சீதா பாட்டியின் கேலிக்கையான பேச்சில் அனைவரும் புன்னகைந்தனர். அப்போது தான் லட்சுமிக்கு சாந்தி முகூர்த்த ஏற்பாடுகள் பற்றி நினைவிற்கு வந்தது.

"முகிலா நீ போய்ட்டு குளிச்சிட்டு வாப்பா " லட்சுமி , முகிலன் குளித்து விட்டு வெளியே வந்தவுடன் சேமியா குளியலறைக்குள் புகுந்துக்கொண்டாள் . இதற்கு மேல் சண்முகம் அவ்விடத்திலிருந்தால் நன்றல்ல அவரும் கிளம்பிவிட்டார். கதிரின் அவனை அவசரமாக அழைக்க முகிலனுக்கும் ஒன்றும் புரியவில்லை.

"இருடா நானும் வாரேன் " என்று முகிலன் கூற கதிரின் தாய் கௌரி லட்சுமி அப்பத்தா யாவருமே " கல்யாணம் ஆன பையன் இன்னைக்கு வெளிய போகும் கூடாது" என்று அவனை முடக்கி விட்டனர்.

"நாங்க போறோம் டா நீ இரு " என்றான் சோமு
அத்தோடு கதிர் ,மதி ,நிர்த்தி, சோமு இந்த பட்டாளமே கதிர் வீட்டை நோக்கியது.

சேமியா குளித்து விட்டு புடவையை கேட்க , அது நெட் மட்டிரியலில் நெய்யப்பட்ட புடவை அரச நீல வண்ணம் அதில் மயில் டிசைனில் எம்பிராய்டரி வேலை பாடு அங்காங்கே சில கற்ற லட்சுமியும் புடவையை நீட்ட "எனக்கு புடவை கட்ட தெரியாது "சேமியா ,

"இரு சேமியா அம்மத்தாவ அனுப்புறேன் " என்று லட்சுமி கூறி நகர சீதா பாட்டி புடவையுன் வந்து குளியலறைக்குள் சென்றார்.

அவ்வளவு பெரிய குளியலறை ஒன்றுமில்லை. ஒருவர் உடை மாற்றுவதே கடினம் இதில் இருவர் , " அம்மத்தா மீன் பிடிக்கிற வலை நீங்க புடவைய எடுத்துட்டு வாங்க " சேமி

"இல்ல இது தான் புடவை லட்சுமி பார்த்து பார்த்து வாங்குன " என்று அம்மத்தா கூற, ' வேணாம் சொன்னால் அத்தை மனது நோகுமே சரி இதையே உடுத்துவோம். ' சேமியா


அம்மத்தா கூற கூற அதற்கு ஏற்றாற்போல் புடவையை சுற்றிக்கொண்டாள். "அம்மாத்தா தோள் பக்கம் சுருக்கு எடுப்பாங்கல "

" அதெல்லாம் இப்போ வேண்டாம் சும்மா இப்டி தோள்ள போட்டுக்கோ ஊசி எல்லாம் குத்த வேண்டாம் " அப்பத்தா,

"என்ன அப்பத்தா இப்டி சொல்லிபுட்டா முந்தானைய கைதாக்குல நேரம் ஏந்திக்கிட்டு வராது அதுவும் உள்ள போட்ட ஜாக்கெட் வெளிய தெரியுது இதுக்கு இந்த முந்தானை தான் கேடு " என்று கடிந்துக்கொண்டாள் .

" அதுதானே….. புடவை வேணாம் ஜாக்கெட் பாவாடை போதும் புடவைய அவுத்துடு " அப்பத்தா

"அப்பத்தாஆஆஆஆ" சேமியா

" சரி சரி நல்ல நேரம் ஆரம்பிச்சுட்டு மாமே மனசு கோணாம பார்த்துக" அந்த காலத்து பாட்டிகள் கூறுவது வழக்கம் தானே ! ,

மௌனமாய் ம்ம்ம்ம் என்றாள், நானும் அம்மாவும் அண்ணனுக்கு துணையா போறோம் பால் காய்ச்சி செம்புல வைச்சிருக்கேன் சேமியா கதவ தாழ்ப்பாள் போட்டுக்கோ என்று கிளம்பினர் லட்சுமியும் சீதா பாட்டியும் ,

தாழிட சென்றவள் ஒரு குதி எட்டவில்லை தொப்பென்று கீழே விழுந்து "ஆஆஆ " என்று கத்தினாள். வாசலை விட்டு நகர்ந்தவர்களும் திரும்பி பார்க்க " சின்னஞ்சிறுசுங்க அப்டிதான்! லட்சுமி வா நம்ம கிளம்பலாம் என்று சீதா பாட்டி நமுட்டு சிரிப்புடன் லட்சுமியும் சிரித்துவிட்டு நடையைகட்டினாள்.

" ஏய் ஏன்டி! கையை பிடித்து நிமிர்த்தி விட்டு நான் தாழ்ப்பாள் போட மாட்டேனா இந்த பக்கம் வா " முகிலன் ,

தாழிட்டு பின்புறம் திரும்பியவன். சேமியாவும் புறம் திரும்பி காலை தேய்த்து கொண்டிருந்தாள்.

"சேமி அடி பட்டுரிச்சா எங்க காமி " என்றான் முகிலன் பதற்றமாய் ,

"அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா " என்று சமாளித்துக்கொண்டாள்.

அப்போதுதான் சேமியாவை பார்த்தவன் ' முழு ஆடைல பார்த்தாலே மூழ்கி போய்ருவேன் இதுல பாதி ஆடைல பப்பாளி பழம் மாதிரி பளபளப்பா இருக்காளே! ' என்னை கொள்ளுறியே டி …

பாலை கொணர்ந்து அவன் கையில் கொடுத்து ஆசிர்வாதம் வாங்க காலில் விழ " ஏய் ஏய் எழுந்திரு இதெல்லாம் அம்மத்தா பண்ண சொன்னாங்களா ?" நூறு வருஷம் தீர்க்க சுமங்கலியா இருடி யே பொண்டாட்டி என்று சேமியாவின் நாடியை பிடித்து ஆசையாக ஆட்டினான்.

தலை குனிந்தபடி "ம்ம்ம்ம் " என்றாள் . ஒரு விரலால் முகத்தை உயர்த்தி அவன் ஒற்றை புருவத்தை வில் போல் வலைத்துயற்றி என்ன என்று வினவினான் . ஒரு மார்க்கமாக , இதில் அவள் புடவை வேறு தோளை விட்டு நழுவி நழுவி இருந்தது.

வெட்கத்தில் கண்களை மூடிக்கொண்டாள். காதோரம் சென்று கிசுகிசுத்தான். " நமக்கு கொஞ்ச நாளைக்கு இதெல்லாம் வேணாம்.காயம் எல்லாம் ஆரட்டும் சேமி உனக்கும் மனசலவுல பக்குவம் வரட்டும் நீயும் படிக்கணும் நானும் படிக்கணும்! "

"என்னது நான் படிக்கணுமா? " என்று வாயை திறந்தவள்.

"ஆமா படிக்கணும் படிச்சா தான் குழந்தை பொத்துகிறது அவ்வளவு தான் , அதை விடு கல்யாண பரிசி நிறைய இருக்கு வா பிரிச்சு பார்க்கலாம்." முகிலன் ,

ஒன்று ஒன்றாக பிரித்து பார்க்க வீட்டுக்கு தேவையான தான் அனைத்துமே கடைசியாக ஒரு சிறிய கவர் அதன் கீழ் பெட்டி அது சாரின் பெயரில் இருந்தது. முகிலன் மேற்கொண்டு படித்து கொண்டே வேலை பார்ப்பதற்கான விண்ணப்பம் அதை கண் விழித்து பார்த்தவன் மகிழ்ச்சியில் ஆழ்ந்தான். திக் அற்றவனுக்கு தெய்வம் துணை என்பதை இருந்தது. " நீ வந்த நேரம் டி செல்லம் " என்று சேமியாவை கொஞ்சிக்கொண்டான் .

"சாரோட பரிசு சூப்பர் வேலை பார்த்துகிட்டே படிக்கலாம் சேமி"
முகிலன் , அவளும் புன்னகைந்தாள் .

" சரி நேரம் ஆகிடுச்சு தூங்கலாம் என்று அவன் கை வலையில் கிடத்தி விட்டு அவள் நெற்றியில் ஒர் இதழ் ஒற்று , கெஞ்சுதலான குரலில் "குண்டச்சி ஒரே ஒரு முத்தம் மட்டும் இங்க " என்று அவள் இதழில் ஒற்றை விரலால் வருடிக்கொண்டு கெஞ்சுதலான பார்வை வேறு

அவளுக்கும் வெட்கம் "ஒன்னே ஒன்னு தான் கருவாயா " என்றாள் . அனுமதி கிடைத்த மறுகணம் அவள் இதழை தன் இதழக்கு விருந்தாகினான்.

சிறுவயதில் இளநீர் பருகிய
காலம் சென்று- உன்னிடம் இதழ்நீர் பருகும் காலம் வந்துவிட்டது இன்று
தவித்த வாய்க்கு தண்ணீர்
இதழ்நீரா இருந்ததால் இதமாய்
ஒரு தாகம் தீர்வு இடம்பெற்றதே !


ஒன்று என கூறி இங்கு நான்கைந்து தாண்டியது .



Enna nadanthuchinu Aduththa episodes la meethiya papom Friends marakkama unga kurai niraigala comment pannirukanga
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
Next epi kku waiting da❤❤❤

ஒரு குதிக்கு எட்டவில்லை _ அருமையான தமிழ்❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top