• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

💜என்னில் கலந்திடு உயிரே பாகம் 25 💜

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
நம்ம கதைய ஊக்குவிக்கும் அனைவருக்கும் நன்றி மக்காஸ்
IMG_20210710_151537_843.jpg




" என் வாய் வலிக்குது. அவளிதழில் சிறு காயம் வேறு காலும் வலிக்குது உன் காலால காயத்த அழுத்துற மாமா ஸ்ஸ்ஸ் " இவ்வளவு நேரம் முகிலன் தன்மீது சுமந்து கொண்டிருந்தாள்.


" ஐய்யோ மறந்தே போய்ட்டேன் டி கண்ணு சாரி டி சாரி டி" முகிலன்


முதல்ல நீ கீழே இறங்கு புடவை மாத்திட்டு வாரேன் என்று எழுந்தவள்

புடவையை கழட்டி முகிலன் கழட்டிய பட்டு சட்டையை மாட்டிக்கொண்டாள்.


" மாமா எனக்கு வேற துணி இல்ல நீ பனியன் போட்ருக்கேல " என்றாள் சேமியா ,


" அந்த புடவைல அழகா இருந்தே சரி சரிநேரம் ஆச்சு தூங்கு " என்றான் முகிலன் ,


" நீ தூங்க விட்டா நான் தூங்குவேன் " சேமி ,


ஈஈஈஈஈஈஈ தூங்க விடுவேன் . என்று மீண்டும் அவன் கைவலைவில் கிடத்தி மென்னையாய் அவள் கேசம் கோதி தூங்கவைத்தான்.

அவனும் அவளை பார்த்து ரசித்து கொண்டிருந்தவாறு உறக்கத்தில் ஆழ்ந்தான் .


வானெங்கும் இருள் நிறைந்து மழையுடன் கூடிய காலை பொழுது சூரியனை மறைத்து வைத்த கார்மேகம் ஜன்னல் ஓரமாய் சில்லென்று காற்றடித்தது . குடையை பிடித்துக்கொண்டு சீதா பாட்டி திண்ணைக்கு வந்தவுடன் குடையை மடக்கி விட்டு " சேமியா. …. அம்மாடி சேமியா எழுந்திருமா என்று கதவை தட்ட ,


முதலில் முகிலன் தான் விழித்துக்கொண்டான். " சேமி அப்பத்தா வந்துட்டாங்க போய் கதவ திற " சோம்பல் முறித்துக்கு எழுந்தவள் சரி என்றால் அந்த அழகிழ் சரிந்தவன் அவள் கையை பிடித்து இழுக்க "போ மாமா" என்று அவனை தள்ளிவிட்டு முகத்தை அலச சென்றாள்.


போ மாமா என்கிற சத்தம் வெளியே வரை கேட்டது பாட்டிக்கு சங்கூச்சமாய் இருந்தது. முகத்தை அலசிவிட்டு கதவை திறந்தாள்.

பாட்டியின் கண்களுக்கு குளிர்ச்சியாய் கொடுத்தது அவள் அணிந்திருந்த முகிலனின் சட்டை " ராசாத்தி " என்று நெட்டி முறித்தார் சேமியாவை ,


சீக்கிரம் ரெண்டு பேரும் குளிச்சிட்டு கோவிலுக்கு கிளம்புங்க. நான் காபி போட்டு வைக்கிறேன். இருவரும் குளித்துவிட்டு காபியை குடித்துவிட்டு கோவிலுக்கு கிளம்பினர். பாட்டி சகுனம் பார்த்து கூற "பக்கத்து வீட்டு பாப்பா நிறைகுடம் எடுத்துவர இப்பவே கிளம்புங்க"ஆட்டோவில் கிளம்பினர் .


அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்று வாசலிலே மல்லி பூவை வாங்கி அவள் தலையில் சூட்டினான். அர்ச்சனை செய்து சுவாமியை தரிசனம் முடித்து விட்டு சிறிது நேரம் அங்கே அமர்ந்து கொண்டு பின் பிரகாரத்தை சுற்றிய வாறு வெளியேறினர். அங்கு இருந்த கடையில் வயதன இருவருக்கு உணவு வாங்கி கொடுத்து விட்டு கிளம்பினர்.


நேராக கதிர் வீட்டிற்குள் நுழைந்தனர் . அங்கிருந்த யாவரின் முகமும் சரியில்லை. கௌரி அவர்களை வரவேற்றார். சுவாமி அறையில் இருந்து குங்குமத்தை எடுத்து சாமியின் நெற்றியில் இட்டு மனமார வாழ்த்தினார்.


"காலைல இருந்து யாருமே வீட்டு பக்கமே வரல " முகிலன், அப்பவும் கதிரின் முகம் வாடியிருந்தது.


" கவிக்கு வீட்ல ரொம்ப செல்லம் கொடுத்துட்டோம் டா அவ விருப்பத்துக்கு போய்ட்டா முகிலா பதினெட்டு வயசு கூட முழுசா இல்ல டா " என்று நிலை தடுமாறியது கதிரின் குரல் கௌரி மீண்டும் அழகைகுள் மூழ்கினார்.


" என்னாடா சொல்லுற ஒன்னுமே புரியல " முகிலன் , கவி எழுதி வைத்திருந்த கடிதத்தை காண்பித்தான்.


பள்ளிக்கூடம் போகும் போதே தினேஷ பழக்கம் ஒரு மாசமா
நான் முழுகாம இருக்கேன் எனக்கு பிடிச்சவர் கூட போறேன் வீட்டல எல்லாம் என்னை மன்னிச்சிடுங்க. தயவு செஞ்சு பிரிச்சிராதிங்க .ஒரு வாரத்துல கடிதம் போடுறேன். இவ்வளவு தான் கடிதத்தில் இருந்தது.


" போலிஸ்க்கு போகலாமா முகிலா " என்றான் கதிர்,



" வேண்டாம் கதிரு குடும்ப மானத்தை விட ஒரு பொண்ணு வாழ்கைய டா அதுவும் நம்ம வீட்டு பொண்ணுடா ஒரு வாரம் பார்ப்போம் அதுக்கு அப்புறம் முடிவு பண்ணலாம் " என்றான் முகிலன் ,


" இதே தான் நிர்த்தியும் சொன்ன டா " கதிர்,


நிர்த்தியும் கிளம்ப வேண்டிய சூழ்நிலை " இப்டி ஒரு நிலைல கிளம்புறேனு தப்பா நினைக்காத கதிர் " நிர்த்தி ,


" இல்லை நிர்த்தி நான் ஒன்னும் நினைக்கல நீ கிளம்பு " கதிர்

நிர்த்தியும் மனமின்றி விடைபெற்றாள்.


" கதிர் வா நம்ம வீட்டுக்கு போய் சாப்பிட்டு வரலாம். " கதிர் கையைபிடித்து இழுத்து சென்றான் முகிலன் , மதி அவள் தாயை பார்க்க கிளம்பிவிட்டாள்.




கவியை பற்றி யார் கேட்டாலும் வீட்டுக்குள்ளே இருக்க பள்ளிக்கூடம் போன இப்படியே சொல்லி சமாளித்தனர் .நாட்கள் இப்டியே வெகுவாய் சென்றது. ஒருவாரம் கடந்த நிலையில் கவியிடம் இருந்து கடிதம் கிடைத்தது.


நான் நல்லா இருக்கேன் மா நகை எல்லாம் வாங்கிகொடுத்தாங்க கண்ணும் கருத்துமா பார்த்துகிறாங்க என்னை மன்னிச்சிடுங்க மா கண்டிப்பா நானும் அவங்களும் வீட்டுக்கு வருவோம் என்று இருந்தது.


கதிர் வீட்டினருக்கு இப்போது தான் நிம்மதி எங்கோ ஓர் இடத்தில் பொண்ணு நிம்மதியாய் இருந்தால் போதும்.


கதிர் முகிலனிடம் இதை வந்து கூற முகிலன் சேமியா இருவருக்கும் சந்தோஷம் சேமியா காபி போட சென்றாள்.


" டேய் சொல்ல மறந்துட்டேன் சார் உனக்குநேஏஏ கல்யாண பரிசு கொடுத்தார் சரி எனக்கும் சோமுவுக்கும் சேர்த்து கொடுத்தார் டா " கதிர் ,


சோமுவும் வந்து இணைந்து கொண்டான் . "ஆமா டா நடக்க போற கல்யாணத்துக்கு பரிசுனு சொன்னாரு "


" அப்போ மூனு பேருக்கும் ஒரே பரிசு தான்டா நம்ம டிகிரி படிச்சுக்கிட்டே வேலை பாக்குற மாதிரி ஒரு காலேஜ் சென்னைல இருக்கு அந்த காலேஜோட அப்ளிகேஷன் டா " என்றான் முகிலன்,


" நல்லது டா " என்றான் சோமுவும் கதிரும்,


மேல இருந்த கவர மட்டும் தான் பார்த்தேன். கீழ குட்டியா ஒரு பெட்டி இருந்துச்சு அதையும் பார்ப்போம். இருங்கடா எடுத்து வாரேன். என்று பெட்டியை கொணர்ந்தான்.


கதிர் தான் அதை பிரிப்பேன். " டாய் ஸ்மார்ட் போன் சூப்பரு சூப்பரு " அவர்களின் பெட்டியை பிரித்து பார்க்க சென்றுவிட்டனர். அதிலும் அதே தான் மூவரும் முதலில் சிம் இட்டு சார்ஜ் ஏற்றி போனை உயிர்ட்பித்துக்கொண்டனர். சாருக்கு வாட்ஸ்சப்பில் கால் செய்தனர்.


சிறிய நேரம் விளையாட்டாக பேசிக்கொண்டிருந்தனர். இறுதியாக

" நாளைக்கு காலேஜ் இருக்கு மறந்துடீங்களா சீக்கிரம் கிளம்பி வந்துருங்க பசங்களா வீடே வெறுமையா இருக்கு " சார்,


" சார் அது வந்து " முகிலன்


" ஹாஹா நான் மறந்தே போய்ட்டேன் நீங்க படிச்சு முடிச்சத சரி சீக்கிரம் சென்னைக்கு கிளம்புங்க ஃப்ரீ அட்மிஷன் கம்மி சரி பசங்களா எனக்கு கொஞ்சம் வேலை வைக்கிறேன்" . என்று போன் காலை துண்டித்தார்.


சேமியா கொண்டு வந்து வைத்த காபி ஆரி போய்யிருந்தது. சேமியா அடுத்த கட்ட வேலையாக அடுக்களைக்குள் நுழைந்துக்கொண்டாள்.

பாட்டி சமைக்க விடாமல் வெளியே துரத்திவிட்டார்.


லட்சுமியும் சண்முகமும் வருகைக்கு காத்திருந்தான் முகிலன் ,

இருவரும் வந்த பிறகு சென்னைக்கு கிளம்புவதாக கூற ,


" சேமியாவையும் அழச்சிட்டு போப்பா " என்று சண்முகம் கூற


" மாமா நான் ஆஸ்டல்ல தங்கி படிக்கிற போறேன் சேமியா இங்க இருக்கட்டும் " என்றான் முகிலன் ,


" அதெல்லாம் நான் ரெடி பண்ணி தாரேன் கதிரும் சோமுவும் உங்க கூடவே இருக்கட்டும் " என்றார் சண்முகம்,


உடனே சேமியா " சரிப்பா " என்றாள்.



*****




அடுத்த கட்ட வேலையாக சென்னைக்கு பெட்டி படுக்கை எல்லாம் கட்டும்பணி வழியனுப்பி வைக்க ஆயத்தமானார்கள் அனைவரும்


" இன்னைறய நாகரீக வளர்ச்சில மிக பெரிய திருப்பம் சென்னைக்கு ஹனிமூன் போற ஜோடி நீங்க தான் டா " என்றாள் நிர்த்தி ,


" காவலுக்கு ரெண்டு கறுப்பு பூனைய கூட்டி போறேன். நீ வேற நிர்த்தி வயித்தெரிச்சல கிளப்பாத " என்றான் முகிலன் ,


"சரி சரி மூன்னாவது கறுப்பு பூனைய நான் வந்துடுறேன் பின்னாடி , நிர்த்தி

இன்னும் ஆறு மாசத்துல அமெரிக்கா போய்ருவேன் அதுக்கு எக்ஸாம் எழுதனும் சென்னைல தான் !"


"சரி நிர்த்தி " என்று அனைவரிடம் விடைப்பெற்றனர். வேனில் பணயம் ஆரம்பித்தது.


கிட்டதட்ட ஆறு மணி நேர பயணம் சேமியா முகிலன் மடி மீது சாய்ந்து உறங்கிக்கொண்டாள். முகிலன் அவள் மீது உறங்கினான்.

புதுமணத்தம்பதி பின்னே அமர்ந்ததால் கதிரும் சோமுவும் பின்னாடி திரும்பி பார்க்கவில்லை. சென்னையை அடைவதற்கு ஒரு மணி நேரம் தான் ஓரமாய் நிறுத்தி ஓட்டலில் உணவருந்திக்கொண்டனர்.

ஓட்டுனருக்கும் உணவு வாங்கிக்கொடுத்தனர்.


உணவை உட்கொண்டு பிறகு பிரயாணம் செய்வது சேமியாவின் தொண்டயிலிருந்து வயிறு வரை ஏதோ பிசைவு ஒர் பழக்கமற்ற உணர்வு , வண்டியை இடையில் நிறுத்தி வாந்தி எடுத்தாள்.


" ஒரு வாரத்துலயேவா யப்ப்பா அப்பா ஆக வாழ்த்துக்கள் முகிலா "

முகிலனின் ஒரு முறையில் கதிரின் வாய்க்கு பூட்டு


' முத்தம் கொடுத்தே முழுகாக ஆகிட்டோமா? இல்லையே எனக்கு நாள் இருக்கே ' சேமியா , எலுமிச்சை சோடவை வாங்கி கொடுத்தான்.பருக செய்து அவன் மடியில் அவளை உறங்க செய்தான்.


அரை மணி நேரத்தில் அண்ணாநகரை அடைந்தனர். அப்பாடா என்பது போல் இருந்தது. அப்பார்ட்மெண்ட் வீடு வாடகை தேவையில்லை சண்முகம் நண்பர் தான் உரிமையாளர் , கட்டிய மூட்டை முடிச்சுகளை லிப்டில் ஏற்றினர். ஒவ்வொன்றாக ஏற்றி களைத்து போயினர் மூவரும் அன்று கடையில் தான் உணவு உண்டனர். வீட்டிற்கு தேவையான தட்டுமுட்டு மளிகை சாமான்கள் வாங்கிக்கொண்டனர்.


பெரிய வீடு ஒன்றும் இல்லை , இரண்டு குளியலறைகளுடன் சேர்ந்த பெரிய அறைகள், ஒரு ஆல், சமையலறை ஒரு பால்கனி இவ்வளவு தான் வீடு , சுவாமியை வணங்க வேண்டும் என்றால் ஆலில் ஒரு சிறிய பெட்டி அதற்குள் சுவாமி படங்களை வைத்து வணங்கலாம்.


உறக்கம் என்றால் அவ்வளவு இஷ்டமாயிற்று அன்றிரவு அவ்வளவு அலுப்பு அசதி களைப்பு ஒரு சேர குடிசை கொண்டது . வேனில் கால் கைகளை நீட்டி உறங்க முடியவில்லை என்பதால் இப்போது நன்றே மல்லாந்து கொண்டார்கள்.


விடியற்காலை மணி ஐந்து அளவில் சேமியா எழுந்து கொண்டாள் .

பால் காய்ச்சி சுவாமிக்கு படைத்து விட்டு காபி கலந்தாள். முகிலனுக்கு கொடுத்து விட்டு மற்ற இரண்டு டம்ளர்களை கதிருக்கும் சேமியாவிற்கு கொடுக்க சொன்னாள்.


மும்மூர்த்திகள் ஒரு குளியலை போட்டு விட்டு அவர்களின் படிப்பையும் பணி சம்பந்தமான அலுவலுக்கு கிளம்பினர்.


" இது புது இடம் யாரும் கதவு தட்டுனா திறக்காத கவனமா இரு நாங்க வந்து கால் பண்ணுறோம் " என்று தனது போனை முகிலன் சேமியாவிடம் கொடுத்து விட்டு , மூவரும் நகர்ந்தனர்.


போன இடத்தில் எல்லாம் சுமூகம் சார் சிபாரிசின் பெயரில் இருந்தமையால் மேற்கொண்டு படிப்பு எல்லாம் ஆன்லைனில் தான் தற்காலிக பணியாக அண்ணாநகர் அரசு பள்ளியில் ஆசான்கள்.


ஆண் பெண் கலவை பள்ளிக்கூடம் சோமுவுக்கு இரண்டாம் வகுப்பு , கதிருக்கு ஐந்தாம் வகுப்பு, முகிலனுக்கு மாத்திரம் பத்தாம் வகுப்பு அவர் அவர் திறமைக்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்க பட்டிருந்தன.


முகிலன் தான் புலம்பிக்கொண்டிருந்தான் . " இந்த பசங்களுக்காக நான் மறுபடியும் முதல்ல இருந்த படிக்கணும் போல "


" எனக்கு ரொம்ப லேசு டா அம்மா அப்பா அண்ணா இது தான் இந்த வருசம் ஃபுல்லா " சோமு


" ஆமா டா எனக்கு ரெண்டுகேட்டா நிலை " கதிர் ,


" இன்னைக்கு புதன் கிழமை இன்னைக்கு உங்க வகுப்ப பொறுப்பெடுத்துக்கோங்க , பசங்களுக்கு படம் சொல்லி குடுக்குறது அவங்க கூட நடந்துகிற விதம் எல்லாம் உங்களுக்கு பாஸ்ன் விழும் அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க பா " ஸ்கூல் எட்மினிஸ்ட்டர் ,


அப்படியே பள்ளிக்கூடத்துல சுற்றிக்காண்பிக்க இது தான் ரெண்டாம் வகுப்பு கையை காமித்தார் அட்மினிஸ்ட்டர் காச்சி மூச்சினு கத்திக்கொண்டு என்று சிலது மேசையின் மீது ஏறிக்கொண்டு சிலது


'இந்த வாண்டுகளை சமாளிக்கிறதுக்கு நான் வண்டாகிருவேன் போல' புருவங்கள் சுளிந்து நாக்கு தல்லியது சோமுவுக்கு,


கதிருக்கு அதற்கும் மேல் சொல் கேட்காத கூட்டமாய் அமைந்தது.

முகிலனுக்கு அமைதியான மாணவர்கள் ஆனால் அவர் அவர் முழிக்கும் முழி ஒவ்வொரு ரகமாய் இருந்தது.


அவர்களின் வகுப்பில் அறிமுகப்ப படலம் ஆரம்பம் சோமுவின் வகுப்பில் தான் கேலிக்கை ஒரு பொண்ணு அவள் விவரம் எல்லாம் கூறிவிட்டு நான் டாக்டர் ஆக போறேன் என்று கூறிவிட்டு அமர இன்னும் ஒரு பொண்ணு அதே கூற " பார்த்தீங்களா சார் நான் சொன்னதே திருப்பி சொல்ற அடிங்க சார் " இரண்டாம் வகுப்பு மாணவி ,


கதிரின் வகுப்பு அதற்கு மேல் அறிமுகபடலம்தான் . "என் பேரு பவிஷ்கா நான் டீச்சர் ஆக போறேன்". என்று அமர்ந்து கொண்டாள்.


வரிசையாக கூறிக்கொண்டு வர ஒருவன் பவிஷ்கா பின்னர் எழுந்துக்கொண்டான் . ராகுல் " வேணாம் நீ டீச்சர் ஆகாத டார்ச்சர் பண்ணுவ "


"யேன் பா அந்த பொண்ணு டீச்சர் ஆகுறதுல உனக்கு என்ன பிரச்சனை " என்று கதிர் கேட்க,


"சார் நீங்களே சொல்லுங்க நான் ப்ரொப்போஸ் பண்ணி பத்து நாள் ஆச்சி எனக்கு ஒன்னு சொல்லாம டார்ச்சர் பண்ணுறா " ராகுல் ,




" அவன் அப்டித்தான் சார் பைத்திய காரன் " பவிஷ்கா


கதிரிற்கு அவ்வ்வ்வ என்றிருந்தது வாயை பிதுக்கிக் கொண்டான்.' பத்து வயசுல என்ன தைரியம் இருபது வயசு தாண்டியும் எனக்கு வரலயே '


முதல் நாள் கண்டிக்க கூடாது என்று "ஒன்னும் வேணாம் அமைதியா உக்காருங்க பாடத்துக்குள்ள போகலாம் " கதிர் ,


முகிலனுக்கு இப்படி எல்லாம் இல்லை கஷ்டம் , படிக்காத மாணவர்களை கொஞ்சம் ஊக்கப்படுத்த வேண்டும் அவ்வளவு தான் .


பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பினர். சேமியா காபியை கொடுத்து வரவேற்றாள். சேமியாவிடம் நடந்தவைற்றை எல்லாம் கூறி நகைந்து கொண்டனர். " பிகாம் ஆன்லைன்ல படிக்க ஏற்பாடு பண்ணிருக்கேன். அடுத்த மாசத்துல இருந்து தயாராகு குண்டச்சி " என்றான் முகிலன்,


அவள் முகம் தொங்கியது. வேறு வழி வாத்தியார் பொஞ்ஜாதி மாக்காக முடியுமா ? சரி என்று தலையை ஆட்டிக்கொண்டாள் .


இரவுணவை முடித்து விட்டு தத்தமது படுக்கைக்கு சென்றனர்.

"நீ கட்டில்ல படுத்துக்கோ நான் கீழ படுத்துக்கிறேன் . படிப்பு முடியிர வரைக்கும் இப்டி தான்! . " மாற்று கருத்து கிடையாது . தீர்க்கமான முடிவை எடுத்துவிட்டான். முகிலன் ,


" நாள்முழுவதும் வீட்டினுள்ளே வேலையை செய்தவாறு கிடக்கனும்
உன் வேலை எல்லாம் பார்க்கனும் ஆனால் புருசன் பக்கத்துல பொண்டாட்டி உறங்கலாகாது . நகரத்து நியாயம் இது தான் போல 'பட்டனத்துக்கு அழச்சிட்டு வந்து படாபடுத்துறான் கருவாயா ஊருக்கு வா ஊறுகாய் மாதிரி காயப்போடுறேன் ' ஏதோ தன் பாட்டில் முனங்களுடன் சேமியா ,


' லட்ட பக்கத்துல வைச்சிட்டு சாப்பிடவும் முடியல பார்க்காம இருக்கவும் முடியல எல்லாம் நம்ம நல்லதுக்கு தான் என்னாலயும் பிரிஞ்சி இருக்க முடியல வேறு வழி தெரியல மாமன மன்னிச்சிருடி ' அவனும் புழுங்கிக்கொண்டான்.


காலையில் எழுந்து வழக்கம் போல காபி அதன் பின் உணவுகளை பொதி செய்து கொண்டு பின்னர் பள்ளிக்கு கிளம்புவது சேமியா காத்திருப்பது , மாலை பொழுதில் ஆன்லைனில் வகுப்பு இதே சுழற்சி தான் , மாதம் முழுவதும் , மாதத்தின் இறுதி நாள் முதல் சம்பளம் மனத்துக்குள் ஏதோ திருப்தி , இதுவரை சென்னையை சுற்றிப்பார்க்கவில்லை. சேமியாவுக்கு போன் செய்து வெளியே செல்வோம் என்று கூறிவிட்டான். முகிலன் ,


நால்வரும் புறப்பட்டனர். முதல் மாத சம்பளத்தில் தனது மனைவிக்கு ஒரு புடவையும் இரண்டு சுடிதார் எடுத்துக்கொடுத்தான். அம்மா , அம்மத்தா , மாமாவுக்கு துணிமணிகளை எடுத்தான். அதோ போல் கதிர் மற்றும் சோமுவும் துணிகளை எடுத்துக்கொண்டனர்.

சேமியாவிற்கும் மனதின் ஓரம் நெகிழ்ச்சி தான் 'பரவாயில்ல இதையாவது உருப்படியா செஞ்சியே கருவாயா '


அப்படியே உணவகம் சென்று ஆளுக்கு விரும்பிய உணவு மகிழ்வோடு உண்டனர். ரோட்டு கடை பானிப்பூரி என்றால் அவ்வளவு இஷ்டம் சேமியாவிற்கு அதை வாங்கிக்கொடுத்தான். அவள் பின்புறம் திரும்பி பார்த்தவன் ஏதோ தெரிந்த பெண்ணாட்டாம் இருந்துது. முகிலனுக்கு , " கதிர் அங்க பாரு கவி மாதிரி இருக்கா " என்று கூற


" அது கவியே தான் டா ஆனா ஏதோ மாதிரி இருக்கா " சோமு

கதிர் உற்றுப்பார்த்து ஓட ஆரம்பித்தான். அவன் பின் அனைவரும் ஓட…...




நாமும் அவர்கள் பின்னே ஓடுவோம். கவிய பிடிக்க அடுத்த எப்பில புடிச்சிறலாம்.

உங்க குறை நிறைகளை மறக்காம கமெண்ட்
பண்ணுங்க மக்காஸ்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top