• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

💜என்னில் கலந்திடு உயிரே ( Epilogue) 💜

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
Hai dears


கதைIMG_20210710_152114_036.jpgக்குள்ள போலாமா !


குந்தையோட அப்பா யாரு சோமுவின் கையில் குழந்தையை கொடுத்து வாழ்த்துக்கள் ஆண் குழந்த பிறந்திருக்கு என்று நர்ஸ் வாட்டிற்க்குள் சென்றார் . பயத்தில் குழந்தையை சுமதியின் கையில் கொடுத்தான் சோமு , கதிருக்கு ஒரே குஷி மருமகன் பிறந்துவிட்டான் .


சுமதியையும் கவிக்கு உதவி செய்வதற்கு உள்ளே அழைத்தனர்.

அதனால் சுமதி சேமியாவின் கையில் குழந்தையை கொடுத்துவிட்டு கவியை பார்க்க சென்றார் .


குழந்தையை வாங்கிக்கொண்டவள் . ஏதோ இனம் புரியாத உவகை அவள் மனதில் , கதிரையில் அமர்ந்துக்கொண்டாள் .

" குட்டி கண்ணா அத்தைய பாருங்க என் செல்லம் " சேமியா, குழந்தையின் காலை அவள் மூக்கால் உரசினால் குழந்தையும் சிரிக்க அளவில்லா ஆனந்தம் அவ்வேளை சேமிக்கு குழந்தையின் ஸ்பரிசம் மிகவும் பிடித்திருந்தது .

குழந்தையின் கன்னம் இரண்டிலும் ரோஸ் வர்ணம் உதடு ஸ்டாபெரி கலரில் கொளு கொளுவென்று பாற்கட்டி போலிருந்தது .



" மதி குழந்தைய தூக்குறியா" என்று சேமியா கேட்க மதிக்கு பயம் தவிர்த்துக்கொண்டாள் .


"அடி போடி நாளைக்கு உனக்கு குழந்தை பிறந்த என்ன பண்ணுவ " சேமியா,


"பஞ்சு மாதிரி இருக்கு டி நான் ஏதும் அழுத்திடுவேனோனு பயமா இருக்கு, அப்டியே சோமு அண்ணாவே தான் உரிச்சி பிறந்திருக்கான் யே முயல்குட்டி " மதி




குழந்தை அழ சேமியா வாட்டினுள் சென்று கொடுத்து விட்டு வந்தாள் .


"சேமி கவி எப்டி இருக்க ?" சோமு


"இன்னும் மயக்கம் தெளியல அண்ணா " சேமியா ,

தாய்மாமன் கையால் இனிப்பு வழங்கப்பட்டது.


"வேறும் பால்கோவாவை குடுத்து
ஏமாத்தாதீங்க கதிர்ண்ணா சீக்கிரம் கல்யாண விருத்து போடுங்க " சேமியா, போடுட்டா போச்சி என்று மதியை ஒரு லுக்கு விட்டான் .கதிர் ,


சிறிது நேரத்தின் பின் சோமு சென்று கவியை பார்க்க சற்று மயக்கம் தெளிந்திருந்தாள் .


" நன்றி நீங்க மட்டும் இல்லேனா " கவி , சோமு அவள் வாயை கைகளால் மூடி " இப்போ எதுவும் பேச வேணாம் அப்டியே தூங்கு " என்று கவியின் நெற்றியில் முத்திரை ஒன்றை பதித்தான் .ஆறுதலாய் , கவியும் மறுக்காமல்
வாங்கிக்கொண்டாள். குழந்தையின் படத்தை நிர்த்திக்கு அனுப்பி வைத்தான் .



வீட்டிற்கு வந்த பிறகு முகிலன் லட்சுமியிடம் மூன்று லட்சம் ரூபாவை கையில் கொடுத்தான்.

"வீட்டு பத்திரத்தை மீட்டுருங்க அம்மா " முகிலன்


"கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ராசா
வீட்ட மீட்டுறலாம் " என்றாள் லட்சுமி


இரண்டு நாட்களுக்கு பிறகு கவி குழந்தையுடன் வீடு திரும்பினாள் .

கதிரின் வீட்டில் வைத்திருந்து பதினாறு முடித்தவுடன் அனுப்புவதாக கூறினார். சோமுவின் வீடும் கதிரின் வீடும் என்ன அவ்வளவு தூரமா அக்கம் பக்கம் தான் ஒரு எட்டு வைத்தால் சோமுவின் வீடு அவ்வளவு தான் ! பொழுதுக்கும் கதிரின் வீடு கலைகட்டும் , கௌரியும் சுமதியும் சென்று குழந்தைக்கு நேரம் குறித்து வந்தனர் . மேஷ ராசி பரணி நட்சத்திரம் லி , லே ,லோ என்ற எழுத்துக்கள் பெயர் வைப்பதற்காக வழங்கப்பட்டிருந்தது.


கவி குழந்தைக்கு பால் கொடுப்பதை தவிர வேற வேலை எதுவும் இல்லை . இரவு நேரம் தான் குழந்தை அதிகமா விழித்துகொள்ளும் அவ்வேளை சோமு குழந்தையை பார்ப்பது
கவி நன்கு உறங்கிக்கொள்வாள் .

இப்படி ஒரு கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமே ! ,


குழந்தையை சேமியா அக்கரையுடன் கவனித்துக்கொள்ளுவாள் . அப்டியே துணிமாற்றவும் கற்றுக்கொண்டாள். அவற்றை எல்லாம் முகிலன் கவனித்துக்கொண்டு தான் இருந்தான் . அவள் பார்க்கும் வேளை பார்க்கதது போல் நடிப்பான்.


"ஏய் குட்டி உன்மேல ச்சூஊஊ விட்டுட்டான்." மதி கிண்டலடிக்க ,


"அப்போ மதிக்கு விசயம் தெரியாது போல குழந்தைங்க நம்ம மேல ச்சூ விட்ட நம்ம மேல பாசம் அதிகமா குழந்தைக்கு " முகிலன் ,


" அப்டியா மாமா " சேமியா ,


ஆமாம் என்று கண்ணடித்தான் முகிலன் , திடுக்கிட்ட சேமியா மறுபுறம் ' ஆளுங்க முன்னாடி விவஸ்தயே இல்ல கருவாயா ' ,

"குட்டி செல்லம் என் மேல ரொம்ப பாசம் ஏஏஏ " ஒரு வித களிப்பு சேமிக்கு ,


கதிருக்கும் மதிக்கும் திருமணம் இன்று காலை , மதி விடியற்காலை எழுந்து கொண்டாள் . அவளுக்கும் அலங்கார வேலை நடந்து கொண்டிருந்தது. சேமியா மதியின் வீட்டு வாசலில் கோலம் மிட்டாள் .

பின் தானும் தயார் ஆகி மதிக்கு உதவி செய்யலாம் என்று சென்றாள். அங்கோ பியூட்டிஸ்யன்
அனைத்து அலங்காரத்தை முடித்து இருந்தார் .


கதிர் இங்கு கேமராவுக்கு போஸ் கொடுத்தது கொண்டிருந்தான்.

முகிலுன் சோமுவும் கதிரை கலாய்த்து கொண்டிருந்தனர் .

பின்பு மதிக்கு படபிடிப்பு அழகாய் இருந்தால் மதி பச்சை வர்ண புடவையில் பாடர் சிவப்பு நிறம்
பளிங்கு சிலையாய் காட்சி அளித்தால் ,


கவியும் தனது குட்டி பையனுடன் அழகாய் தயாராகியிருந்தாள். சோமுவுக்கும் இப்போது ஓர் அழகிய குட்டி குடும்பம் என்றாகியது . அழகு குட்டி செல்லத்திற்கு அன்றே பெயர் சூட்டினர் . எம்பெருமான் துணை கொண்டு லித்திக்ஸ்வரன் என்ற அழகிய திருநாமம் , வீட்டிற்கு லித்திக்ஸ் என்றாகியது .


கதிர் மாப்பிளையாய் அமர்த்துக்கொண்டான் . புரோகிதர் மதியை அழைக்க சேமியாவும் கவியும் அழைத்து வந்தனர் . அப்போது தான் முகிலன் சேமியாவை பார்த்தான். பார்த்த மாத்திரத்தில் சொக்கி சொருகி போனான். மரூண் ரோஜா வர்ண புடவையில் கோல்ட் கலர் கரை அவ்வளவு அழகாய் இருந்தால் ,

'அழகிய பொறந்து கொள்ளுறாளே ' முகிலன் ,



மதியும் வந்து அமர்ந்து கொண்டாள் . சுபமூகூர்த்த வேளையில் மதியின் கழுத்தில் மூன்று முடிச்சி இட்டான்.

கதிருக்கும் மதிக்கும் அதன் பிறகு நடக்கவிருக்கும் சம்பிரதாயங்கள் எராளம் அவை எல்லாம் முடித்து விட்டு , கதிரேஷன் கௌரி அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று

அதன் பின் மகேஷ்வரி கணேஷப்பிள்ளை அவர்களிடமும் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர் .

மற்றும் ஏனையோர்களிடமும் பெற்றுக்கொண்டனர் . அதனை தொடர்ந்து விருந்தபசாரத்தில் கலந்து கொண்டனர். அதன் பிறகு தம்பதியர் படபிடிப்பு மதி வெட்கப்பட்டே நேரத்தை ஓட்டினாள். இவை அனைத்தையும் நிர்த்தி வீடியோ காலில் பார்த்துக்கொண்டிருந்தாள் .


அதன் பின் கௌரி கவி சுமதி மூவரும் சேர்ந்து கதிரின் வீட்டில் வாசலில் ஆர்த்தி எடுத்தனர்.

சுவாமிக்கு விளக்கேற்றி பால் பழம் உண்ண வைத்து , நல்ல நேரத்திற்கு காத்திருந்தனர் .







இங்கு முகிலனோ அவசரமாக சென்னைக்கு கிளம்பனும் "சேமியாவையும் கூட அழச்சிட்டு போறேன் மாமா" என்றிழுக்க " சரி பா வண்டி ஏற்பாடு பண்ணுறேன்" . என்றார் சண்முகம் ,


'என்கிட்ட சொல்லவே இல்லை கருவாயா ' சேமியா ,


"என்ன முழிக்கிற சீக்கிரம் கிளம்பு "


"இல்லை அவங்களுக்கு சடங்கு அது தான் " சேமியா ,


"அதெல்லாம் அவங்க பார்த்துபாங்க
நம்ம வேலைய மட்டும் நம்ம பார்க்கனும் " முகிலன் ,


ம்ம் என்று அவளும் கிளம்பினாள் .

" குண்டச்சி பச்சை கலர் புடவைய எடுத்து வை மறக்காம " மெதுவான குரலில் முகிலன் ,


அவள் ஏன் என்று வினவ புருஷன் வார்த்தைக்கு மறு வார்த்தை கிடையாது. இதுவே என் கட்டளை என் கட்டளை சாசனம் என்று உரைத்தான் .


"என்ன பாகுபலி படம் எடுக்கிறதா நினைப்பா ? " என்று முறைத்தாள் அவள் ,


"பட்டு குட்டி சமத்தா பச்சை கலர் பட்டு புடவைய எடுத்து வைப்பியாம் " முகிலன் ,


"ரொம்ப கெஞ்சாத சகிக்கல மாமா " சேமி ,


வண்டி வந்ததும் புறப்பட்டனர் .

சேமியா அமர்ந்திருந்தாள். முகிலன் வேணும் என்றே அவள் தோல்களில் மேலாக கையை போட்டான்.


"கைய எடு மாமா " சேமியா ,


"பீகாம் தான் படிச்சிட்டியே அப்றம் என்னவாம் ? " முகிலன் ,


ஏன் அதற்கு படிப்பு இல்லையா ?படிக்கத்தான் கூடாத ?, இன்னும் நிறைய படிக்க போறேன் . வாத்தியார் பொஞ்ஜாதி மக்காகலாமா ? அது நல்லா இருக்காது . அதற்கு மேல் படிக்க ஆசை " ஆன்லைன்ல கிளாஸ் இருந்த பார்த்து சொல்லு மாமா" படிச்சு முடிக்கும் வரை எதுவும் வேண்டாம் .


முகிலன் கொட்டின வார்த்தைகளை திருப்பிக்கொடுத்தாள். சேமியா ,


அவள் கூறியதை கண்டுகொள்ளாமல் அவள் அழகை கண்களால் பருகிக்கொண்டிருந்தான்.




இங்கே மதியும் கதிரும் ஓரே அறையில் என்ன தான் பேசி பழகி இருந்தாலும் ஒரு வித அச்சம் மனதில் இருவருக்கும் வழக்கம் போல கதிர் பேச்சை ஆரம்பித்தான் .


"நமக்கு கல்யாணமே ஆகிரிச்சு

ஒரு வாட்டி சரி என்னைய பிடிக்கும்னு சொன்னதே இல்லையே !" கதிர் ,


"பிடிக்காம தான் கழுத்த நீட்டினேன! " என்று இளகிய குரலில் மதி


"அப்போ என்ன ரொம்ப பிடிக்குமா "

ம்ம்ம் என்றாள் மதி , நேரத்தை வீணடிக்காமல் அவள் இதழ் அணைத்து வாழ்கை விளக்கை ஏற்றினான் . அவர்களின் வாழ்கையை இனிதே ஆரம்பித்தனர்.


சென்னைக்கு வந்துவிட்டனர் .

சேமியா களைப்பில் உறங்க சென்றாள். முகிலனும் சரி என்று அவளை தொந்தரவு செய்யவில்லை.


காலை முகிலன் எழுந்து வழக்கத்திற்கு மாறாக அவன் கையால் காபி கலந்து சேமியாவை எழுப்பினான் .


கண் மலர்ந்த சேமியாவுக்கு ஓரே அதிசயம் முகிலன் செய்யும் வேலை பார்த்து "சீக்கிரம் குளிச்சிட்டு வா கோவில் போகலாம் பச்சை கலர் புடவைய கட்டிக்கோ " முகிலன் ,


அவளும் தூய்மை ஆகி அவன் கூறியது போல் பச்சை வர்ண புடவையை அணிந்திருந்தாள்.

கோவிலுக்கு கிளம்பினர் .

பெருமாள் கோவிலை அடைந்து
வழக்கம் போல சேமிக்கு பூ வாங்கிக்கொடுத்து கால்களை கழுவி கோவிலுக்குள் நுழைந்தனர்.

பெருமாளை தரிசித்து விட்டு
சிறிது நேரம் அமர்ந்து கொண்டு பிரகாரத்தை சுற்றி வெளியேறினர்.

முகிலன் இன்னும் பூக்களை வாங்கிகொண்டான். சேமியாக்கு ஒன்றும் புரியவில்லை .
வீடு திரும்பினர் . சேமியா புடவை மாற்ற உள்ளே சென்றாள்.


முகிலன் பின்னாடியே சென்று

"எனக்கு பாயசம் வேணும் " ,


"இரு மாமா புடவைய மாத்திட்டு வாரேன் " அவள் கூற , இல்லை இப்போதே இந்த நொடியே வேண்டும் என்று ஒற்றை பிடியில் நின்றான். சேமியாவும் புடவை மாற்றாமல் அடுக்களைக்குள் செல்ல கைபிடித்து நிறுத்தி எனக்கு சேமியா பாயசம் தான் வேண்டும் என்றான் . முகிலன் ,


"சரி செஞ்சி தாரேன்ன்ன் மாமா " சேமியா ,


எனக்கு இந்த சேமியா பாயசம் தான் வேண்டும் என்று சேமியின் பின்னே அணைத்து அவள் காதில் கிசுகிசுத்தான். அவன் பிடியில் வார்த்தை அற்று இருந்தாள் .


" நான் படிக்கனும் சொன்னேன் " சேமியா ,


"என்ன பலிக்கு பலிக்கு வாங்குறியா " முகிலன்


"ஆமா " சேமியா ,


"ஏய் நீ படிக்கிறதெல்லாம் ஒரு விஷயமே இல்ல டி படிச்சாலும் என் பெண்டாட்டி தான் படிக்காட்டியும் என் பொண்டாட்டி தான் " முகிலன் ,


"அப்போ ஏன் இத்தன நாள் உன் கண்ணுக்கு பொண்டாட்டியா தெரியல , குழந்தைய பத்தி யார் கேட்டாலும் நான் தானே மாட்டிப்பேன் நீ இல்லயே " சேமியா ,


"நீ கவி மாதிரி கஷ்ட பட கூடாதுன்னு தான் நான் கீழ படுத்தேன். அது உனக்கும் புரியல குண்டச்சி ஆர்வத்துல நான் எதும் பண்ணி…
அன்னிக்கு கவி வலில துடிக்கும் போது அந்த இடத்துல உன்ன வைச்சி பார்க்க முடியல டி , உனக்கு மனசளவு பக்குவம் வரனும் தான் இத்தன நாள் பொருத்திருந்தேனு டி " கவலையுடன் முகிலன் , சேமியாவுக்கும் கவலையாயிற்று


"சாரி மாமா " ஆயிரம் சாரி கேட்க ஆரம்பித்தாள் .


அச்சச்சோ விட்ட இப்டியே கேட்டு இருப்ப சாரி கேட்கும் இதழ்களை தன் இதழுடன் சிறிது நேரம் பூட்டி வைத்தான். தானே விடுத்து அவளை அலேகாக தூக்கிக்கொண்டான் கட்டில் பக்கம் நதர . மாமா இது காலை இரவல்ல என்றாள் சேமி ,


"இந்த பெருசுகள் பேச்சை எல்லாம் விடு நம்மல மாதிரி தவிக்கற பசங்களுக்கு அடுத்த தலைமுறைக்கும் நம்ம ஒரு முன்னுதாரணமா முதலிரவ விட்டு முதல்காலையா வைச்சிக்கலாம்" முகிலன் ,


இதழ் முத்தங்கள் ஏராளம் .
அதை தாரளாமாய் பகிர்ந்திட
அவள் யாக்கை எங்கும்
இவன் இதழாழ் கதை
எழுதிட - இடம் தீர்ந்ததே
முத்திரை பதிக்க
இறுதியாக வேண்டுகிறேன்
என்னில் கலந்திடு உயிரே என்று உன்னில் என் நகலை பெற ….



பெண் : விண் மார்பில்
படரும் உன் பார்வை
திறவும் இதயம் புதரில்
சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில்
உதிரம் முழுதும் நதிர்வது ஏன்


ஆண் : உருகாதே உயிரே
விலகாதே மனதே உன்
காதல் வேரை காணவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்து


"ஏய் பொண்டாட்டி முத்தம் கொடுத்த குழந்த பிறக்குமா " முகிலன் ,


"ச்சீ போ மாமா "என்று அவன் மார்பில் முகம் புதைந்தாள்.






முற்றும்………






இதுவரைக்கும் நம்ம கதைக்கு சப்போர்ட் பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றிகள் ,

லைக் பண்ணவங்க கமெண்ட்ஸ் பண்ணவங்க readers எல்லாருக்குமே ரொம்ப நன்றி

இது என்னோடு முதல் கதை நீங்க இல்லாம கண்டிப்பா என்னால எழுத முடியாது. கதைய fulla படிச்சி பாருங்க உங்க குறை நிறைகள் கமெண்ட்ஸ் பண்ணுங்க . அது குறையா இருந்தாலும் பரவாயில்லை . என்னோட அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அது கண்டிப்பா உதவும் , என் இனிய தோழாஸ் அடுத்த புது கதையோட உங்கள சந்திக்கிறேன் .


தமிழ் கௌசி
உங்களில் ஒருத்தி
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top