• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

💞என்னில் கலந்திடு உயிரே பாகம் 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
என் இனிய நண்பர்களுக்கு சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் 💙💜💙

சந்தோஷமாக தூங்கியவன். விடிந்ததும் தெரியவில்லை ! லட்சுமி முகிலனை எழுப்பி அம்மத்தா கிளம்பிவிட்டார். நீயும் சீக்கிரம் அம்மத்தாவுடன் கிளம்பு என்றவுடன். வேகமாக குளித்து விட்டு மரூண் கலர் வேட்டியும் இளநீல சார்ட் அணிந்து அரும்பு மீசையை சற்று முறுக்கி விட்டது போலும் மோதிர விரலால் திருநீற்றை நெற்றியில் ஒரு கீறு இட்டு உதட்டில் வெண் பற்கள் தெரிய ஒரு கள்ள சிரிப்பு கைகளில் செப்புக் காப்பு வலது பாதத்தை முட்டி வரை தூக்கி வேட்டியை அரைவாசியை மடித்து கட்டி கம்பீரமாக மார்பை உயர்த்தி நடக்கும் அழகில் மயங்காத மங்கையர் இல்லை.


அம்மத்தாவின் காதில் " பை பை மறந்திட்டியா" என்று நினைவு படுத்தினான். நல்ல வேளை லட்சுமி குளிக்க சென்றிருந்தால்.

பையை எடுத்து விட்டு கிளம்பி விட்டனர் . அம்மத்தா நடக்கும் நடையை பார்த்து ஆட்டோ பிடித்து மாமன் வீட்டை வந்து அடைந்தான்.


சண்முகம் இருவரையும் வரவேற்றார். லட்சுமி வரவில்லையா என்று கேட்க இல்லை தாமதமாக வருவாள் என்று அம்மத்தா கூறினார்.

" சரி முகிலா நல்ல நேரம் முடியும் முன்னரே குடிசை கட்டிவிடு " என்றார் சண்முகம் , ஓலையை கடகடவென்று பின்ன ஆரம்பித்தான். வீட்டின் வெளிபக்க சுவற்றை ஒட்டியவாறு குடிசை கட்டினான். பின்பு சடங்குகள் நிறைவேற சேமியாவை வெளியே அழைத்து வந்தனர்.


இன்று முகத்தை மூடாமல் அவள் அழகை பார்த்து வெண்ணெய் போல உறைந்து போய் நின்றான் முகிலன். உள்ளே சென்று சேமியாவை அமரவைத்தனர். பேரழகியை ஒரு நிமிடம் கூட காண கிடைக்கவில்லையே! அறுவாலை உள்ளே வைத்து விட்டேன் என்று குடிசைக்குள் வந்தான். அவள் கண்களை பார்த்து " மை விழி பார்வை மயக்குதே கண்ணம்மா "👌 என்றான். அப்படி பார்க்காதே மாமா. …🙈🙈 என்று நொடிந்து கொண்டு தன் இரு கைகளால் முகத்தை முடிக்கொண்டாள்.

ரொம்ப நேரம் இருக்க முடியாது என்று வெளியே வந்துவிட்டான். அவள் வெட்கத்தில் சொக்கி போனவன். அம்மாத்தா பைய குடுத்திரு என்று சைகை காமித்தான்.


குடிசைக்குள் சென்ற அம்மத்தா " சேமியா கண்ணு" இந்த பையை எடுத்து வை உன் மாமன் உனக்காக வாங்கிருக்கான்.உண்மையாகவா அப்பத்தா என்று ஆசையாக வாங்கிக்கொண்டாள். யே ராசாத்தி எம்புட்டு அழகாக இருக்க இன்னைக்கு இரவு சுத்தி போடனும் என்றாள் அப்பத்தா


" அப்பத்தா பையை பிரிச்சு பார்க்கட்டுமா? பிரிச்சு பாரு கண்ணு

ஆர்வமாய் பிரித்தவள் ஒரு அழகிய சுடிதார் தைப்பதற்கு துணி சந்தனம் சிவப்பும் கலந்திருந்த துணி கற்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது. குட்டி ஜிமிக்கி மயில் தோகை அலங்காரத்தில் சிவப்பு வர்ணத்தில் நகப்பூச்சு கடைசியாக ஸ்டிக்கர் பொட்டு "அப்பத்தா நிஜமாகவே மாமா வாங்கினாரா? "ஆமாடி கண்ணு என்றார் அப்பத்தா


"எனக்கு எல்லாமுமே ரொம்ப பிடிச்சிருக்கு இப்பவே நகத்துக்கு பாலிஷ் போட போறேன்" என்று ஒவ்வொரு விரல்களுக்கும் அழகாக போட்டுக்கொண்டாள். அப்பத்தா அழகா இருக்கின்றனவா என் கைகள் ? ரொம்ப அழகா இருக்கு கண்ணு என்று வர்ணித்தார் அப்பத்தா . மாமாவிடம் எனக்கு இதெல்லாம் ரொம்ப புடிச்சிருக்குனு சொல்லாவிடுங்கள் என்றாள் கொஞ்சலாக 😊


" சரி கண்ணு லட்சுமி உனக்கு விருந்து போடுறேன்னு சொல்லிருக்கா

போய் அழைச்சிட்டு வந்துடுறேன் . அப்படியா அப்பத்தா அத்தை கையால சாப்பிட்டு எவ்வளவு நாள் தெரியுமா? சீக்கிரம் கொண்டு வா அப்பத்தா. அப்பத்தா கிளம்பி விட்டார் முகிலனையும் அழைத்துக்கொண்டு , பத்மா குடிசைக்குள் வந்து சேமியா அப்பத்தா என்ன குடுத்தார் . பையில் இருந்ததை காமிக்க " உனக்கு தான் சுடிதார் பிடிக்காதே. என்றாள் பத்மா,அது அப்போ இப்ப சுடிதார் பிடிக்கும் வீம்பாக சேமியா


என்னவோ பண்ணு "சாதம் கொண்டு வாரேன் " எனக்கு இப்ப பசியில்லை அம்மா வேணாம். என்றாள் சேமியா ( இப்ப சாப்பிட்ட அத்தை கொண்டு வர சாப்பாட்டை சாப்பிட முடியாது )

எனக்கு நிறைய வேலை இருக்கு வந்தவர்களை பார்க்கனும் நான் வீட்டுகுள்ளே போறேன். என்று பத்மா வெளியே வந்துவிட்டாள்.


வெளியே வந்தவள் லட்சுமி முகத்தில் முழித்தாள். சேமியாவுக்கு விருந்து வைப்பதற்கு வந்து இருக்கிறார்கள். என்று புரிந்து விட்டது.

"என் பெண்ணுக்கு இப்ப பசியில்ல" என்ற சத்தம் கேட்க குடிசை ஓரமாய் இருந்த சேமியா கொஞ்சம் முன்னால் வந்த அம்மா எனக்கு பசிக்கிறது . என்றாள் சேம சேமியா, லட்சுமி சிரித்துக்கொண்டே குடிசைக்குள் சென்றால் ,


குட்டி பொண்ணா இருந்து அத்தை அத்தைனு அண்ணா கூட ஓடிட்டு வருவ இப்போ பெரிய பொண்ணு ஆகிட்ட எனறார் . லட்சுமி , இப்பவும் அத்தை வீட்டுக்கு வருவேனே ! என்றாள் செல்லமாக லட்சுமி ஆசையாக கட்டிக்கொண்டால் சரி சேமிமா உட்காரு சாப்பிடலாம் .முகிலா நீ போய்ட்டு மாமாவையும் அத்தனையையும் கூட்டிட்டு வா



சண்முகம் கொஞ்சம் வேலையாக இருப்பதால் வரவில்லை , பத்மா பற்றி சொல்லாவா வேண்டும் . அப்பத்தா வாழையிலை கொண்டு வந்தார். இலை முழுவதும் அவளுக்கு பிடித்த உணவுகள் தான் . மீன் வறுவலை தவிர , ரசகுல்லா, மாங்காய் தொக்கு, முட்டை மசால் , வஞ்சிர மீன் வறுவல், நாட்டுக்கோழி குழம்பு , கிடாரங்காய் ஊறுகாய்,ஆட்டுக்கால் பாயா இவை அனைத்தையும் பரிமாற துவங்கினாள் லட்சுமி , ஒவ்வொன்றாக சுவைக்க நாவின் உமிழ் நீர் சுரப்பிகள் நாட்டியம் ஆட சேமியாவின் கைக்கும் வாய்க்கும் வேலை தான் .


எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு மீன் வறுவல் மாத்திரம் சாப்பிடவில்லை. முகிலன் அவளை விடவில்லை எங்க அம்மா வறுவல் செய்றதில்ல ஸ்பெஷல் நல்லா இருக்கும் சாப்பிட்டு தான் பாரேன். எனக்கு மீன் மணமே பிடிக்காது என முகத்தை சுளித்தாள் . மீன் ஒரு துண்டை எடுத்து சேமியா வாயில் தினித்தான் முகிலன் அறுவெறுப்பின் காரணமாக துப்பிவிட்டு லட்சுமி உடனே தண்ணீர் கொடுத்தார். வேண்டாம் முகிலா இப்படி எல்லாம் செய்வது தவறு என்று கண்டித்தாள் லட்சுமி , சேமியாவுக்கு மாமா முதல்தடவையாக ஊட்டி விட்டு அதை துப்பிவிட்டமோ என்று வருத்தம் தான் " இந்த பாயசம் மட்டும் குடி மா " என்றாள் லட்சுமி சேமியாவுக்கே பாயசாமா என்று கூறிக்கொண்ட பாயசத்தை பருகினாள். லட்சுமி அண்ணுக்கும் அன்னிக்கும் சேர்த்து கொண்டு வந்த உணவுகளை வீட்டில் வைக்க சென்று விட்டாள் .


அவ்வேளை பார்த்து முகிலன் சேமி நான் வாங்கி கொடுத்தது எல்லாம் உனக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை குத்துமதிப்பாக வாங்கினேன். என்றான் , எனக்கு எல்லாம் பிடித்திருந்தது என்று கூறும் வேளை பின்னாடி லட்சுமி , என்ன பிடித்து இருக்கிறது. என்று லட்சுமி கேட்க சேமியா அது வந்து அத்தை மாமா வா...என்று தொடங்க உடனே முகிலன் " அத்தை கைபக்குவம் எப்டினு கேட்டேன் "

நல்லா இருக்கு பிடிச்சிருக்குனு சேமியா சொன்னா அவ்வளவுதான் .

லட்சுமிக்கு கொஞ்சம் பெருமிதம் தான் "ஐயோ முகிலா இவ்ளோ நேரம் குடிசைக்குள்ள இருக்க கூடாது வெளியே ஓடு!.... என்று குண்டை போட்டால் லட்சுமி, வேறு வழியின்றி இறுகிய முகத்துடன் வெளியே சென்று விட்டான். முகிலன்


சரி சேமியா இப்ப என்ன கொடுத்தாலும் சாப்பிடனும் வேணாம் சொல்ல கூடாது . இல்லைன்னா பின்னாடி ரொம்ப கஷ்டமா போய்டும் என்று லட்சுமி அறிவுரை ஊட்டினால் , " ஆமாங்கண்ணு அத்தை சொல்றது நல்லா கேட்டுக்கோ உடம்ப நல்லா தேத்திக்கணும் . என்று அப்பத்தாவும் எடுத்துரைத்தாள்.சேமியாவும் சரி என்று ஒப்புக்கொண்டால், சரி சேமிமா நாங்க கிளம்புறோம். என்று இருவரும் வெளியே வந்துவிட்டார்கள்.


சண்முகத்தை பார்த்து " அண்ணா சேமிக்கு விழா எப்ப வச்சிருக்கீங்க சொன்ன கொஞ்சம் வேலைகள் இருக்கு முடிச்சிருவேன். இன்னைக்கு சாயந்திரம் வீட்டுக்கு வரேன் லட்சுமி. என்றார் சண்முகம்

சரி அண்ணா நாங்க வீட்டுக்கு கிளம்புறோம். " சரிமா கவனம். என்றார் சண்முகம் முகிலனையும் கூட்டிட்டு போமா பத்மா வீட்டில் இருந்து வருகிறார்களாம். லட்சுமி முகிலனை கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.


மாலை 5 மணி அளவில் சண்முகம் எல்லா வேலைகளையும் செய்து முடித்த பிறகு லட்சுமி வீட்டிற்கு சென்றார். "அண்ணா தேதி குறிச்சிடீங்களா ? இல்லையம்மா கிளம்பு நாள் குறிச்சுட்டு வரலாம்.

" ஐயோ அண்ணா நானா ?

ஆமாம் நீதான் !.


" எனக்கு………நான்….. எனக்கு தான் கணவன் இல்லையே அண்ணா! சேமிக்கு நடக்கும் முதல் விஷேசம் என்னை போய் கூப்பிடுறீங்களே! அன்னிய அழைச்சுட்டுப் போங்க….. ( முகிலனின் மலர்ந்த கண்கள் சேர்ந்து விட்டன. )


"அன்னிய அழைச்சுட்டுப் போக தெரியாம தான் இங்க வந்துருக்கேனா? உன் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லதே நடக்கும் கிளம்புமா இதுதான் என் முடிவு இல்லை என்றால் சேமிக்கு விழா வேண்டாம்!

சரி என்று தயங்கிய படி கிளம்பினாள் . இருவர் செல்ல கூடாது என்பதால் அம்மத்தாவும் கிளம்பிவிட்டார்.


எப்போ? என்ன தேதினு ஒரே ஆர்வம் தான் !முகிலனுக்கு அதோ ஆர்வத்துடன் நாமும் காத்திருப்போம்



Thamil kawshi
உங்களில் ஒருத்தி 💞
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ட் மிகவும் அருமையான பதிவு, தமிழரசன் கௌசல்யா டியர்
 




Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
Same
:D :p :D
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ட் மிகவும் அருமையான பதிவு, தமிழரசன் கௌசல்யா டியர்
Same too you akka and mikka nanri
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top