• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

💞💞நான் உனை நீங்க மாட்டேன்💞💞

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha Nani

புதிய முகம்
Joined
Nov 2, 2021
Messages
2
Reaction score
3
Location
Sri lanka
அந்தி மாலை பொழுதினில் சூரியன் தன் கடமையினை கன கச்சிதமாக நிறைவேற்றி கொண்டிருந்ததனை தன் வீட்டு அறை ஜன்னலினூடாக சோகமாக இரு கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன.


லாவண்யா என்ற அலறல் சத்தம் கேட்டு , கனவுலகில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்தாள் லாவண்யா.

தன் அன்னையான செண்பகத்தை தேடி சமையலறை பக்கமாக சென்றாள் . நம் கதையின் நாயகி

"இந்தா இந்த காச வச்சிக்க யுனிவசிடிக்கு போகனும் இல்ல என்று சொல்லி தரும் பணத்தினை , அப்பா தந்த ஐந்தாயிரம் தாளினை கையினுள் பத்திரப்படுத்திகொண்டாள் லாவண்யா

தன் அறைக்கு சென்று தன் துணிகளினை பையினுள் அடுக்கி வைத்துக்கொண்டாள்.

இன்று இரவு எட்டு மணிக்கு பஸ் வரும் இல்ல என்று எண்ணி பெரு மூச்சு விட்டாள் எதையோ எண்ணி ,

அவள் எண்ணங்களின் நாயகனோ எதையுமே அறியாதவனாக, தன் புரொஜக்ட் இற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன கச்சிதமாக முடித்து கொண்டிருந்தான்.

கண்ணா மூச்சு ரே!! ரே!!
என்ற அழைப்பினை ஏந்தியவளாக சொல்லுடி யாழினி என்றால், லாவண்யா

அடி நீ ரெடியா? லாவண்யா .....
பஸ் கிளம்பி அரை மணித்தியாலயம் ஆகப்போகுது .
நீ அந்த பேங்க் கிட்ட தானே இருக்குறாய்?

ஆமாடி ..
நான் இப்பதான் இங்க வந்தேன் . பஸ் வந்ததும் ஏறுறன் என்றால் லாவண்யா .

யாழினியும் , லாவண்யாவும் யுனிவசிடி நண்பிகள் .அவர்கள் இருவரும் சென்னை யுனிவசிடியில் முதலாம் வருடம் படிக்கின்ற மாணவிகள் . அதுவும் திருச்சியில் இருந்து
யுனிவசிடிக்கு தினமும் பஸ்ஸில் செல்வது சிரமம் என்றபடியால், பெற்றோர்களினால் ஹொஸ்டலில் தங்கி படிக்கின்றனர்.

இது தான் இவர்கள் பற்றிய அறிமுகம்.

லாவண்யா இங்க, என்று தன்னுடைய இருக்கை ஜன்னல் வழியாக அழைத்து அவளினை தன் அருகில் வந்து அமருமாறு அழைக்க ,

லாவண்யாவும் அவளை கண்டு தலை அசைத்து , பஸ்ஸில் ஏறிஅவளின் இருக்கைக்கு அடுத்து உள்ள இருக்கையில் அமர்ந்தாள்.

லாவண்யாவின் என்றுமே இல்லாத அமைதியை கண்டதும்,

என்ன ஆகிடிச்சி ?
யுனிவசிடிக்கு வந்த முதல் நாளே கல கலப்பாக இருந்தவள் . இன்றைக்கு என்று அப்சட்டா இருக்காளே...

நான் எண்ணமோ நினைச்சிட்டு வந்தேன்
இவள் பஸ்ல எனைய தூங்கவிடாது என்று நினைச்சி அநியாயமாக பகல்ல தூங்கிட்டு வந்தேனே ,
அநியாயமா போச்சு .....

என்ன செய்யலாம் , சரி
இவளுக்கு அப்படி என்னதான் ஆகிடிச்சு?

லாவண்யா!! லா லா!!!!
லா லா!!!!
என்று பத்து தடவை கூப்பிட வேண்டியதாயிடிச்சு யாழினிக்கு ,

என்னடி இப்படி கத்துற என்று லாவண்யா யாழினியிடம் கேட்க,

யாழினியோ ,
எனக்கு இது தேவதான் ......
அடியேய் .... எனக்கு தூக்கமே இல்ல,
நீ அப்படி என்னத்த யோசிச்சு கொண்டு வாராய்?

வந்தில இருந்து நானும் பார்க்குறன். இவ எப்படா என்னோட பேசுவாள் என்று,
இன்றைக்கு என்ன உன்னுடைய திருவாய் எல்லாம் அப்படியே மூடி இருக்கு.

ஒன்றும் இல்லடி ,
சும்மா அந்த குழந்தைய வேடிக்கை பார்த்துடு வந்தேன் என்று முன் வரிசையில் அமர்ந்துள்ள குழந்தையை காட்ட ,

இத நீ எனக்கு நம்ப சொல்லுறியா லாவண்யா ?

என்னடி நான் பொய் சொல்லுறேன் என்று நினைக்குறாடி நீ? என்று லாவண்யா குதர்க்கமா பேச

ஆமாடி நீ நடந்து கொள்ளுற விதத்தினை பார்த்தா நம்ப முடியாது, என்ன நடந்த என்று சொல்லு? என்று ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றாள் யாழினி.

ஒன்னுமே நடக்கல்லடி ,
எனைய நம்பு யாழு........
என்று கூறி தன் வழமையான குறும்புகளுடன் நீண்ட பயணத்தினை குறுகியதாக மாற்றினாள் நம் லாவண்யா.


அடி கும்பகர்ணி!!!!!!!!!
எழுந்துடுடி ......
யுனி என்டரன்ஸ் வந்தாச்சி என்று அதிகாலை 3.30 மணியளவில் நூறு தடவையாவது கத்தி இருப்பாள் யாழினி.

கொஞ்ச நேரம் தூங்க விடேன்டி !!!!!!!!!!!!!
தூக்கம் தூக்கமா வருது என்று தூக்க கலக்கத்தில் பேசி மீண்டும் தூங்கி விட்டாள் லாவண்யா

பஸ் கண்டக்டர் வந்து கத்தியதன் பின்பு தான் லாவண்யாவிற்கு பொறி தட்டியது தான் இருப்பது தன்னுடைய ஹொஸ்டலில் அல்ல பஸ்ஸில் என்று,

பஸ் கண்டக்டரிடம் பல்லை இழித்து விட்டு
ஒரு வழியாக சமாளித்து இருவரும் என்டரன்ஸில் இறங்கி அந்த அதிகாலை வேளையில் ஆட்டோ இல்லாததனால், தனது சூட்கேசுடன் மல்லுக்கட்டி நடந்தனர்.

இவர்களது யுனிவசிடி இவர்களின் ஊரில் இருந்து மிகவும் தொலைவில் உள்ளது.


சிறு வயது ஆசைகளில் ஒன்றான தான் விரும்பிய யுனிவசிடியிலே பெற்றோர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் வந்து சேர்ந்தாள் லாவண்யா .


தன் வாழ்வில் ஏற்படும் இன்னல்களை அறியாமல் என்று சொல்ல வேண்டும்....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top