• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priya kumar

SM Exclusive
Joined
Mar 6, 2019
Messages
350
Reaction score
2,215
Location
Madurai
பயனுள்ள பதிவு...சூப்பர் சிஸ்
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
எனக்கு ரெண்டு ஸ்மைலி மட்டுந்தான் தெரியுது... மேட்டர் எங்க?!! ப்ளீஸ் ஹெல்ப்... o_Oo_O
 
Aarthi

முதலமைச்சர்
Joined
Dec 4, 2018
Messages
11,352
Reaction score
28,967
Location
Tamizhnadu
எனக்கு ரெண்டு ஸ்மைலி மட்டுந்தான் தெரியுது... மேட்டர் எங்க?!! ப்ளீஸ் ஹெல்ப்... o_Oo_O
?????????????

ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுப்பது எப்படி?

??அத்தியாவசிய தேவையாகிவிட்டது ஸ்மார்ட்போன். டிஜிட்டல், உலகமயமாக்கலுக்குப் பிறகு ஸ்மார்ட்போன் என்பது கைக்குள் உலகம் என்றாகிவிட்டது. அதை தேர்ந்தெடுப்பது என்பது கிட்டத்தட்ட சுயம்வரம் போலத்தான். அதற்கான சில துணுக்குகள் தான் பின்வரும் விசயங்கள்.

?1. முதல்ல உங்க பட்ஜெட் என்னன்னு முடிவு பண்ணுங்க. காரணம், இங்கே பட்ஜெட்ட பொறுத்துதான் போனுடைய மொத்தமும் அடங்கும். அந்த பட்ஜெட்டுக்குள்ள நீங்க நினைக்கிற, எதிர்பார்க்குற வசதியுள்ள ஸ்மார்ட்போன்கள் இருக்கானு பார்த்திட்டு தான் முடிவெடுக்கணும்.

?2. ஸ்மார்ட்போன் எடுக்கும்போது எப்பவுமே புதுசா வந்திருக்க OS இருக்கிறதா எடுப்பதுதான் சரியாக இருக்கும். போன வருசம் ரிலீசான போன். இப்ப விலை குறைஞ்சிருச்சு அதான் எடுக்குறேன்னு வாங்குனீங்கனா, அடுத்த ஒரு வருசத்துல நீங்களே மாறியாகணும். இது நான் சொல்லல, மார்க்கெட் நிலவரப்படி இதுதான் நடக்கும். இனி வரப்போற விசயங்கள் தான் உங்களோட தேவைகள் எதிர்பார்ப்புகள் சார்ந்தது.

?3. ஸ்மார்ட்போனின் Processor மற்றும் RAM தான் முக்கியமானது. ஏன்னா இவைதான் நீங்க எதிர்பார்க்குற வேகம், அப்ளிகேசன்களை செயல்படுத்தும் விதம் என மொத்தமாக முடிவு செய்வது. இதுல எது கொஞ்சம் குறைஞ்சு கூடினாலும் நீங்க எதிர்பார்க்கிற மாதிரி உங்க ஸ்மார்ட்போன் உங்க கைக்கு கிடைக்காது. Snapdragon, MediaTek சிப்செட்கள் பொதுவாக எல்லா ஸ்மார்ட்போன்கள்லயும் வரும், சாம்சங் தங்களுக்காகவே தனியா Exynos சிப்செட்டுகளை வைத்திருக்கிறார்கள். ஆப்பிளும் அதுபோலவே அவர்களுடைய சொந்த பிராசசரை வைத்திருக்கிறார்கள். ஆன்லைன் கேம் விளையாட 2GB RAM வைத்துக்கொண்டு, வராத ஸ்பீட வா வானா எப்படி வரும். 3GB RAM கண்டிப்பாக வேண்டும்.

?4. செக்யூரிட்டி. டிஜிட்டல் மயமான பின்பு, ஸ்மார்ட்போன் மூலம் பண பரிவர்த்தனை செய்வது, ரீசார்ஜ் செய்வதெல்லாம் தொடங்கிய பின், நம் பணத்தை, தகவல்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளும் வசதி இருக்கவேண்டும். இது ரொம்ப பெரிய சப்ஜெக்ட் என்பதால் இதுகுறித்து தனியாக விரைவில் கட்டுரை வரும்.

?5. ஸ்மார்ட்போனின் தரம், உறுதி. இதற்குள்ளேயே ஸ்க்ரீன், அது கொண்டிருக்கும் சிறப்பம்சம் எல்லாம் தெரிஞ்சுடும். முக்கியமாக Scratch Proof, Gorilla Glass coating இருக்கவேண்டும். இல்லனா எட்டுப்புள்ளி கோலம் போட்ட மாதிரிதான் இருக்கும் ஸ்க்ரீன். என்னதான் ஸ்க்ரீனுக்கு மேல் screen guard ஒட்டினாலும் எதிர்பாராமல் கீழே விழுந்தால் தெறிதான். குறிப்பா சில ஸ்மார்ட்போன்களில் பலருக்கும் புரியாதது splash proof screen, water resistance screen. இதில் splash proof screen என்பது தண்ணீர் ஸ்க்ரீன் மேலே தெளிக்கலாம். ஒரு கோட்டிங் கொண்டு அது ஸ்க்ரீனை பாதிக்காதது போல் வடிவமைத்து இருப்பார்கள். ஆனால் அதே தண்ணீர் சார்ஜர் போர்ட், ஹெட்போன் போர்ட் வழியே போனால் அவ்வளவுதான். அதெல்லாம் அனுமதித்தால் water resistance screen. அதுக்காக முங்கு நீச்சல் போடும் போதெல்லாம் எடுத்துச்செல்ல முடியாது. குறைந்தது அரை மணி நேரம் தண்ணீரின் அழுத்தத்தை தாங்கும். அதுவும் ஒன்றரை மீட்டர் ஆழம் மட்டுமே. அதையும் தாண்டினால் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துப் போகவேண்டியதுதான். அதேபோல ஸ்க்ரீன் LED ஆக இருந்தால் பேட்டரியை அதிகமாக உறியாது பார்த்துக்கொள்ளும்.

?6. பேட்டரி, இப்பொழுதெல்லாம் குறைந்தது 3000mah ஆவது பேட்டரி இருக்கவேண்டியது கட்டாயம். காரணம் உங்கள் ஸ்மார்ட்போனில் எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும் background process and data. உதாரணத்திற்கு பேஸ்புக், வாட்சப்பில் புதிதாக எந்த notification அது உங்களுக்கு உடனே வரவேண்டும் எனில், இந்த background data இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும். அப்படி இயங்கினால் உபயோகிக்காமலே பேட்டரி குறைந்துகொண்டே தான் இருக்கும். அதேபோல ஒவ்வொரு ஆப் உபயோகிக்கும் போது அதற்கு ஏற்றார்போல பேட்டரி குறைந்துகொண்டே இருக்கும். அதேபோல சார்ஜ் செய்ய குறைந்த நேரம் எடுத்துக்கொள்வது போல இருக்கும் திறன் வாய்ந்த ஸ்மார்ட்போன்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். Dash, Fast என 30 நிமிடத்தில் 60 சதவீதம் வரை சார்ஜ் ஆகும் ஸ்மார்ட்போன்களும் உண்டு.

?7. மெமரி. ஸ்மார்ட்போன்களின் ஆரம்ப காலகட்டத்திலிருந்து மிக முக்கியமாக கருதப்படுவது இந்த மெமரி தான். காரணம் எடுக்கும் போட்டோ, வீடியோ, தரவிறக்கப்படும் அப்ளிகேசன் என அத்தனைக்கும் தேவைப்படுகிறது. முன்பெல்லாம் Inbuilt, Extendable Memory என இரண்டு வாய்ப்புகள் இருந்தன. போனுக்கு தேவையானதெல்லாம் Inbuiltடிலும், போட்டோ, வீடியோக்கள் எல்லாம் Extendable Memoryயிலும் இருந்தன. Cloud Storage அறிமுகத்துக்கு பின்னர் வரும் பெரும்பான்மையான ஸ்மார்ட்போன்களெல்லாம் Inbuilt மெமரி மட்டுமே கொண்டு வெளிவருகின்றன. எனவே Inbuilt மெமரி அதிகமாக இருத்தல் நலம்.

?8. கேமரா. சமூக வலைத்தளங்கள் வந்தபின்னர் போட்டோ, செல்பிக்கள் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டு விட்டது. செல்பி எடுக்காதவர்கள் எல்லாம் ஸ்மார்ட்போன் ஜனத்தொகையில் ஒரு சதவீதமாகக் கூட இருக்கலாம். எனவே Main Camera, Selfie Camera மிகவும் அவசியம். Selfie Camera குறைந்தபட்சம் 5MP ஆக இருப்பது நலம். முக்கியமாக Aperture, OIS போன்ற கூடுதல் வசதிகள் இருக்கவேண்டும். உங்களுக்கு சில நேரங்களில் போட்டோக்கள் ஸ்கேன் செய்தோ, சான்றிதழ்கள் ஸ்கேன் செய்தோ அனுப்பப்படும் தேவைகள் இருக்கும்போது, ஜெராக்ஸ் கடையோ, கம்ப்யூட்டர் செண்டர்களையோ தேடி அலையவேண்டியது இல்லை. CamScanner போன்ற அப்ளிகேசன்களும் நல்ல கேமராவும் இருந்தால் போதும்.

??இவையெல்லாம் தான் ஒரு ஸ்மார்ட்போன் யூசர் தேர்ந்தெடுக்கப்படும் போது முக்கியமாக கவனிக்கவேண்டுபவை. சில நேரங்களில் இதற்காக அது, அதற்காக இது என அங்கங்கே கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் வைத்துதான் ஸ்மார்ட்போன் தயாரிப்பார்கள். இதை தவிர்த்து ஸ்மார்ட்போன் ப்ராண்ட்களின் மேலுள்ள காதல் கொண்டும் வாங்கலாம்.

??எது எப்படியோ ஒரு ஸ்மார்ட்போனின் ஆயுள் குறைந்தது இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் தான். அதற்குள் அப்ளிகேசன்களுக்கான OS Support இல்லாத காரணம், சந்தையில் வந்திருக்கும் புதிய ஸ்மார்ட்போன்களில் உள்ள வசதிகள் என காரணங்கள் வைத்து அடுத்த ஸ்மார்ட்போனுக்கு தாவிவிடுவோம். அதுதான் அவர்களின் வியாபார யுக்தியும் கூட.

Idhan bro...??
 
நன்றி... (ஏன் முதல்ல எடுத்துட்டீங்க?!) :):)(y)(y)
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top