• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

??தமிழ் வருடப் பிறப்பு??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
தமிழ் வருடப் பிறப்பு
சித்திரை 1

இந்த வருடம் கலி பிறந்து 5120 வது வருடமாகும்.

தமிழ் நாட்காட்டி இராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேஷத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கொண்டாடப்படுகிறது.

பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய அகத்தியர் பன்னீராயிரம், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி முதலான நூல்களே தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன

தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது

தமிழ் நாட்டைப் பொறுத்தமட்டும், சித்திரை தொடங்கியே வருடம் கணக்கிடப்பட்டு வந்துள்ளது.

இதற்கு சித்தர்கள் எழுதியுள்ள நாடி ஜோதிடக் குறிப்புகளே சாட்சி. நாடி ஜோதிடத்தில் நாள், நட்சத்திரம், மாதப் பெயர்களை மறைவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

அப்படிப்பட்ட குறிப்புகளில் சித்திரையை ‘முதல் மாதம்’ என்றும், பங்குனியைக் ‘கடை மாதம்’ என்றும் சொல்லியிருக்கிறார்கள்

தமிழ் புத்தாண்டை பற்றி சங்க இலக்கிய நூல்களிலும் கூறப்பட்டுள்ளன.

நெடுநல்வாடையில் நக்கீரர், சூரியன் ஒவ்வொரு வருடமும் மேஷ ராசி சித்திரை மாதத்தில் ஆரம்பித்து மற்ற 11 ராசிகளையும் சுற்றி வருகிறார் என எழுதியுள்ளார்.

புறநானூறு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களிலும் தமிழ் புத்தாண்டு பற்றி எழுதப்பட்டுள்ளன

உயிரினம் வளர்வதற்குக் காரணமான பல முக்கிய அவதாரங்களும் சித்திரையில்தான் நடந்தன என்பது சித்திரையின் சிறப்பை மேலும் உறுதி செய்கிறது.

ப்ரம்மா சித்திரை ஒன்று அன்றே ப்ரபஞ்சத்தைப் படைத்தார்.

ஸத்ய யுகம் ஆரம்பித்த தினம். மூன்றரை முஹூர்த்தங்களில் ஒரு சுப முஹூர்த்தம் யமிழ் புத்தாண்டு தினம் ஆகும்.

சித்திரையின் வளர்பிறை

துவிதியையில் கிருத யுகம் பிறந்தது.
சித்திரையின் வளர்பிறைப் பஞ்சமியில் கூர்ம கல்பம் பிறந்தது.

சித்திரையின் வளர்பிறை சப்தமியில் கங்கை நதி பிறந்தது.

சித்திரையின் வளர்பிறை திரயோதசியில் மத்ஸ்ய அவதாரம் நடந்தது.

சித்திரையின் தேய்பிறைப் பஞ்சமியில் வராஹ அவதாரம் நடந்தது.

சித்திரையில் வரும் மேஷ ராசி தொடங்கி கால புருஷன்இயங்குகிறான்.

மக்கள் வாழ்க்கை, பிறப்பு, இறப்பு என எல்லாவற்றையும் இயக்குகிறவன் இந்தக் கால புருஷன் ஆவான்.

மக்களை ஆள்வதால் வருடத்துக்கு “ஆண்டு” என்று பெயர்.

12 மாதங்களும் அந்த கால புருஷனின் உடல் உறுப்புகளாகச் சித்தரிக்கப்படுகின்றன.

மனிதனைப் பீடிக்கும் நோய் நொடி போன்றவை எல்லாம் அந்தந்த மாதத்தில் அந்தந்த உறுப்புகளில் ஏற்படுகிறது. வெயில் அதிகமான சித்திரையில் அவனது தலை இருக்கிறது.

வெயில் காரணமாக வரும் தலை வலி, மயக்கம் போன்றவை பீடிக்கும் மாதம் அது.

தை மாதம் என்பது கால புருஷனது கால் முட்டியாகும். தை மாதக் குளிரில் மூட்டு நோய், முட்டி வலி போன்றவை அதிகரிக்கும்.

மேலும், தலையிலிருந்துதான் வருடம் ஆரம்பிக்க வேண்டும். தை மாதத்தில் வருடப் பிறப்பென்றால், முட்டியிலிருந்து ஆரம்பிக்கும். அது சரியல்ல.

கிரக அவஸ்தைகள் என்று ஜோதிடத்தில் உண்டு.

ஒரு ராசியில் இருக்கும் 30 பாகைகளை 5 பாகங்களாகப் பகுப்பார்கள்.

ஒரு ராசியின் 0 பாகம் ஆரம்பித்து பாலன், குமாரன், இளைஞன், முதியவன், மரணம் என்று ராசியைச் சமமாகப் பகுப்பார்கள்.

ஒரு கிரகம் அவற்றுள் எங்கு இருக்கிறதோ அதைப் பொறுத்து அந்தக் கிரகம் பலனைக் கொடுக்கும். முதியவன், மரணம் போன்ற பாகைகளில் அது நல்ல பலனைக் கொடுக்காது. இந்த முறை ஆண் ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் முதலிய ராசிகளுக்குப் பொருந்தும்.

மீதி ராசிகளான பெண் ராசிகளில் தலைகீழாகப் பலன்கள் தரும்.. அதாவது மரணம் தொடங்கி, பாலன் வரை பலன்கள் தரும்.

சித்திரை மாதம் ஆண் ராசியில் வருகிறது. அதன் 0 பாகையில் சூரியன் நுழையும் போது பாலன் என்றாகி மேலும் மேலும் வளர்ச்சியைக் கொடுக்கும்.

ஆனால் தை மாதம் பெண் ராசியான மகர ராசியாகும். அங்கு சூரியன் நுழையும் போது மரணகண்டத்தில் ஆரம்பிக்கும்.

மேலும் தையின் முதல் மூன்று நாட்கள் ‘கரி நாட்களக’ இருப்பதாலும், தையில் வருடப் பிறப்பு ஆரம்பிப்பது உசிதமல்ல.
·
தை மாதம் துவங்கும் மகர ராசியில், சூரியன் நுழையும்போது இருக்கும் கரணம், ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. “கரணாத் காரிய சித்தி” என்பார்கள். அப்பொழுது இருக்கும் கரணத்தின் அடிப்படையில், எடுத்த காரியம் நடக்குமா என்று மட்டுமே கணிக்க முடியும்.

ஆனால் சித்திரை மாதம் மேஷ ராசியில் சூரியன் நுழையும் நேரம் ‘ஜக லக்னம்’ எனப்படுகிறது. உலகத்தின் லக்னம் என்பது பொருள். உலக நடப்புகளை அதைக் கொண்டுதான் சொல்ல முடியும்.

சாதாரண மக்களுக்குப் பிறந்த லக்னமும், சந்திர லக்னமும் முக்கியம். அது போல உலகத்துக்குச் சூரிய லக்னம் முக்கியம். அதைக் கொண்டு ஒரு நாட்டுக்குப் பலன் சொல்ல முடியும்.

‘நவ நாயகர்கள்’ என்று ஒரு ‘மந்திரி சபையே’ சித்திரை வருஷப் பிறப்பின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. அதனால் பஞ்சாங்கம் படிப்பது வருஷப்பிறப்பின் முக்கிய அம்சமாகும்.

சித்திரை வருஷப் பிறப்பில் பஞ்சாங்கம் படிக்காமல், தை மாதப் பிறப்பின் போது எப்படிப் பஞ்சாங்கம் படிக்க முடியும்?

சித்திரை வருஷப் பிறப்பைப் பொறுத்தே, நாடு, மக்கள், பிற உயிரினங்கள், விலை வாசி, விவசாயம், செல்வப் பெருக்கு என்று எல்லாவற்றையும் கணிக்க முடியும்.

முற்காலத்தில் ராஜாக்கள் சித்திரை வருஷப் பிறப்பின் போது பயபக்தியுடன் கடவுளை வழிபட்டு, பஞ்சாங்கப் பலனைக் கேட்டார்கள். அந்தப் பலன்களின் அடிப்படையில், நாடு நலம் பெற என்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்.

சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம்’ என்னும் வசந்த காலம் தொடங்குகிறது.

வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும்.

அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது.

மருத்து நீர்

மருத்து நீர் வைத்தல் என்பது முக்கிய விடயமாக புதுவருட தினத்தில் கருதப்படுகிறது.

இம்மருத்து நீர் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சி எடுக்கப்பெறும் ஒரு கஷாயமாகும்.

மருத்து நீர் வைத்து நீராடினால் புத்தாண்டின் நல்ல பலன்களை பெறலாம் என்பது நம்பிக்கை ஆகும்.

இவற்றுள் பூவகை கிடைக்காவிடின் அவைகளின் இலை, பட்டை, வேர், கிழங்கு ஏதாவது உபயோகிக்கலாம்.

விஷ_ புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்பபூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் வேண்டும்.

தலையில் கொன்றை இலையும், காலில் புங்கமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக பார்த்து நின்று தேய்ப்பித்து அதன் பின்னர் குளிக்க வேண்டும்

இலங்கையில் இரு இனங்களுக்கும் பொதுவான தமிழ், சிங்கள புத்ததாண்டாக கொண்டாடப்படுகின்றது.

சைவ சமயத்தவர்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் பிள்ளையாரை வணங்கி (பூசைசெய்து) ஆரம்பிப்பது வழக்கம்.

சித்திரை முதல் நாளன்று வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும்.

வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும்.

வாயிற்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி, சாணத்தால் மெழுகி, அழகிய மாக்கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும்.

அத்தோடு மஞ்சள், குங்குமம் ஆகியவை நோய்க்கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும். புதுவருட தினத்தில் நம் நலம் காக்கவே இந்நடைமுறை வழக்கத்துக்கு வந்தது.

சித்திரை புதுவருடமன்று நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி அதற்கு சந்தனம், குங்குமம் ஆகியன இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும்.

அறுசுவை உணவு

சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்ண வேண்டும்.

மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம்பெறுதல் அவசியம்.

விருந்தினர் வருகையும் விருந்தோம்பலும் நம் பாரம்பரியமாக மாறியது.

தமிழ்ப் புத்தாண்டு நாளான சித்திரை முதல் நாள் கனிகாணல் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி முதலிய இடங்களில் மரபு. கோவில்களிலும் வீடுகளிலும் கனிகளை அலங்கரித்து வைப்பர். வீடுகளில் பூஜையறையில் வாழை, கொய்யா, மாதுளை முதலிய கனிகளையும் காய்கறிகளையும் வாழையிலையில் வைத்து அதிகாலையில் எழுந்ததும் பூஜையறைக்குச் சென்று அவற்றின் மேல் கண்விழிப்பர். கோயில்களிலும் கனிகாணுதல் நிகழ்ச்சியும் கைநீட்டமும் நடைபெறும்.

சிறியவர்கள் பெரியவர்களிடம் ஆசி பெற்றுப் பரிசு பெறுவார்கள். (பெரும்பாலும் நாணயங்கள்.) இதனைக் கைநீட்டம் என்று சொல்வர்.

பாம்பு பஞ்சாங்கம் பற்றி

இந்த அற்புத படைப்பான பாம்பு பஞ்சாங்கத்தை கம்ஸபுரம் என்கிற கஞ்சனூரில் (சுக்ரன் ஸ்தலம் உள்ள ஊர்) உருவாக்கப்பட்டதை நினைக்கும் போது மிகப் பெருமையாக உள்ளது.

துல்லியமான நாழிகளை ஆய்ந்தறிந்து, வானியல் நிபனத்துவம் பெற்ற இன்றைய விஞ்ஞாநிகளால் கூட நிர்மாணிக்கமுடியாத மாபெரும் படைப்பு .

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.???
 
Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா????
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் :)
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ???
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
???? இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ???????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top