• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

?கிருஷ்ணர் எனும் பழம்?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
படித்ததில் பிடித்தது ???

ஒன்பது வகையான பக்தியில் உத்தமமானது, ச்ரவணம் எனும் கேட்டல். அதனால்தான் ஆண்டாள் தன் திருப்பாவையில் கேசவனைப்பாடு என்றும் கேட்டே கிட என்றும் பாடியுள்ளாள்.

நமக்குப் பார்க்கப் பிடிக்காத விஷயங்களை கண்ணை மூடிண்டு தவிர்க்கலாம். பேச பிடிக்கவில்லை என்றால் வாயை மூடிக்கொள்ளலாம். ஆனால், நல்ல விஷயங்களை எப்போதுமே கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் காது திறந்தே இருக்கிறது.

நடந்துகொண்டே இருந்தால் கால் வலிக்கும். பார்த்துண்டே இருந்தால் கண் வலிக்கும். எழுதிக்கொண்டே இருந்தால் கை வலிக்கும். ஆனால், கேட்டுக்கொண்டே இருந்தால் காது வலிக்காது. அதனால் எப்பவும் நல்ல விஷயங்களை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

சுகப்பிரம்மம், பரீட்சித்து மகாராஜாவிடம் 7 நாள் பாகவதம் சொன்ன என்னைவிட, அதைக் கேட்ட உனக்கே புண்ணியம் அதிகம் என்று சொன்னாராம்.

கருவிலேயே நாரதர் மூலம் நாராயணன் பெருமையைக் கேட்ட பிரகலாதன் கூப்பிட்டவுடனே நரசிம்மர் வந்தாரே, அது ச்ரவண பக்திக்கு மிகச் சிறந்த உதாரணம்.

ருக்மிணி கிருஷ்ணனை மணக்க விரும்பிய போது அவள் சகோதரர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மாடு மேய்ப்பவனுக்கா தங்கையை மணமுடிப்பது என்று அசூயைப்பட்ட அவர்கள், சிசுபாலனுக்கு அவளை மணமுடிக்க ஏற்பாடுகள் செய்தனர். அப்போது ருக்மிணி, தனக்கு தினமும் கிருஷ்ணர் கதை கூறிவரும் உஞ்சவிருத்தி அந்தணரிடம் 7 ஸ்லோகங்களால் ஆன காதல் கடிதமொன்றை எழுதி துவாரகையிலுள்ள கண்ணனிடம் தரும்படி கேட்டுக்கொண்டாள்.

ருக்மிணியின் கடிதத்தைப் பெற்ற அந்த நிமிடமே அந்த உஞ்சவிருத்தி சொம்பு கீழே விழுந்துவிட்டதாம். சாட்சாத் திருமகளாகிய ருக்மிணி பிராட்டியின் கடைக்கண்பார்வை பெற்ற பின் உஞ்சவிருத்தி செய்து பிழைக்க வேண்டுமா, என்ன? என்பதே அதன் உட்பொருள்.

அந்த ஏழு ஸ்லோகங்களிலும் கண்ணன் என்ற நாமத்தைத் தவிர கதாக்ரஜா, நாரசிம்மா, அச்சுதா, புவனசுந்தரா என்று மற்ற நாமங்களை எழுதிய ருக்மிணி, இந்தக் கடிதத்தை ‘நரசிம்மர், துவாரகை’ என்ற முகவரியில் சேர்ப்பிக்குமாறும், அப்படி எழுதினால் கிருஷ்ணனுக்குப் புரியும் என்றும் சொன்னாளாம்.

‘ஏன், கோபாலன் என்று எழுதக்கூடாதா?’ என்று அந்தணர் கேட்க, இந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு, ரதத்தை ஓட்டிச் சென்று சிசுபாலனைப் போரிட்டு வெல்வதற்கு பதிலாக, கோபிகைகளைப் பார்க்க கிருஷ்ணன் போய்விட்டால், என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய முகூர்த்த நேரம் தப்பிப் போய்விடுமே!’ என்று வருத்தப்பட்டாளாம் ருக்மிணி! அன்றொரு நாள் நரசிம்ம அவதாரம் எடுத்த நீயே இன்று யாதவ சிம்மமாக வந்து தன்னை அவன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று உளமாற வேண்டிக்கொண்டாளாம்.

சாதாரணமாக, திருமணத்தில் தாலி கட்டும் போது, ‘மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேதுனா’ என்றுதான் மந்திரம் சொல்வது வழக்கம். ஆனால், ருக்மிணி- கிருஷ்ணன் கல்யாணத்தில் ‘ஜக ஜீவன ஹேதுனா’ என்று சொல்லப்பட்டது. அதாவது, இந்த உலகம் முழுவதும் மங்களமாயிருக்கட்டும் என்று அர்த்தம்!

ஆண்டாளுக்கு ரோல்மாடல் ருக்மிணிதான். ஆரம்ப காலத்திலிருந்தே ருக்மிணி, பாகவதர்களிடம் கிருஷ்ண லீலைகளையும், கிருஷ்ண சரிதங்களையும் எப்போதும் கேட்பாள். மணந்தால் கண்ணனையே மணப்பது என்று சங்கல்பம் செய்துகொண்டாள். அதேபோன்று பெரியாழ்வாரிடம் கிருஷ்ண சரித்திரத்தைக் கேட்டுக் கேட்டுதான் ஆண்டாளும் கண்ணனையே கரம் பற்றினாள்.

தபஸ் வேண்டாம், யாகம் வேண்டாம், யக்ஞம் வேண் டாம், ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’ எனும் மகா மந்திரம் ஒன் றையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜபம் செய்தால் போதும். ராமன், கிருஷ்ணரின் திருவருள் கிட்டும்.

ஒரே ஒரு துளசி தளத்தை எடுத்து ‘பரமாத்மா, ஸ்ரீமன் நாராயணா’ என்று சொல்லி, கிருஷ்ணர் பாதத்தில் போட்டால் போதும், ஒருவர் செய்த பாவங்கள், ‘நாம இவன் கிட்ட இருக்கக்கூடாது’ என்று கதறிக்கொண்டு ஓடிவிடும். துளசி தளத்தால் கண்ணனை அர்ச்சிப்பவர்களை நெருங்க நினைக்கும் பாவங்கள் தீயிலிட்ட பஞ்சு போலாகும்.

கிருஷ்ணர் ஒரு பழம். அந்த பழம் கீதை எனும் 18000 பழங்களைத் தந்தது. சுகபிரம்மம் எனும் கிளி அந்த பழத்தைக் கொத்திக் கொத்திச் சுவைத்தது. கொய்யா, பலா, நாவல், மாம்பழம் போன்றவை சீசனல் ஃப்ரூட்ஸ். ஆனால் கிருஷ்ணர் எனும் பழம் 365 நாட்களும் 24 மணி நேரமும் கூப்பிட்டவுடனே உள்ளங்கையில் வந்து அமரும் பழம். மத்த பழங்களில் எல்லாம் கொட்டை, நார் போன்றவை இருக்கும். சில புளிக்கும். கொட்டை, நார், புளிப்பு எதுவுமே இல்லாத நிர்மலமான, மதுரமான பழம் கிருஷ்ணன்.

தேவகியின் கர்ப்பத்தில் இருந்தபோதே, வைகுண்டத்திலிருந்து தன் சர்வாலங்கார சாதனங்களையும் சிறைச்சாலைக்கு வரச் சொல்லி தியானம் செய்தானாம் கண்ணன். தான் பிறந்தவுடனேயே கோகுலத்திற்குப் புறப்பட்டுப் போக வேண்டியிருப்பதால், குழந்தைக்கு பீதாம்பரம் போட்டுப் பார்க்க வில்லையே, கொலுசு அணிவிக்கவில்லையே, கிரீடம் சூட்டவில்லையே என்று தாயார் தேவகி ஏங்கிவிடக்கூடாது அல்லவா? அதனால், தான் பிறக்கும்போதே சங்கு, சக்ரம், கதையோடு, பூரண அலங்காரத்தோடு அவளுக்கு தரிசனம் தந்து மகிழ்வித்தான்.

காலையில் ஆதவனைக் கண்டு பூக்க வேண்டிய தாமரைகள் கூட, கண்ணன் பிறந்த அந்த நடுநிசியில், அந்த ஆயிரம்கோடி சூரிய பிரகாசனைக் கண்டு பூத்தனவாம்!

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்.

?????????????
 




Last edited:

Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
பகிர்வுக்கு நன்றி dear,.... Enna nan if யூடி என்ன நெனச்சு வேகமா வந்தnaa கொஞ்சம் பல்பு வாங்கிட்டேன்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
பகிர்வுக்கு நன்றி dear,.... Enna nan if யூடி என்ன நெனச்சு வேகமா வந்தnaa கொஞ்சம் பல்பு வாங்கிட்டேன்
அடப்பாவி டைட்டிலை பார்த்து கூட படிக்க மாட்டியா ?? இதுவும் லவ்லி ud thaan. கிருஷ்ணா & ருக்மணி ட்ராக் தெரிஞ்சுக்கலாம். Good feel?? thanks yasu dear
 




Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
அடப்பாவி டைட்டிலை பார்த்து கூட படிக்க மாட்டியா ?? இதுவும் லவ்லி ud thaan. கிருஷ்ணா & ருக்மணி ட்ராக் தெரிஞ்சுக்கலாம். Good feel?? thanks yasu dear
Link மட்டும் தானே பார்த்தேன்???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஸ்ரீ கிருஷ்ணர் திருவடிகளே சரணம் சரணம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top