• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

??? மதுரையில் கள்ளழகர் ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
*பச்சை பட்டு சாத்தி, தங்க குதிரை வாகனத்தில் வந்து வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்*

_கோவிந்தா...கோவிந்தா...கோஷம் விண்ணை பிளக்க, அழகர் மீது தண்ணீர் பீச்சி அடித்து பக்தர்கள் பரவசம்_

____________________________________

உலக பிரசித்திப்பெற்ற விழாக்களில் ஒன்றான, தென் தமிழகமான மதுரையில் கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்குதல் விழா இன்று (19.4.2019) காலை மதுரை வைகை ஆற்றங்கரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கோவிந்தா...கோவிந்தா...கோஷம் விண்ணை பிளக்க, அழகர் மீது தண்ணீர் பீச்சி அடித்து பக்தர்கள் பரவசம் பொங்க ,பச்சை பட்டு சாத்தி, தங்க குதிரை வாகனத்தில் வந்து வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்.

ஸ்ரீ அழகர் ஆற்றுக்குச் செல்லும் பொழுது முதலில் வெட்டி வேர் சப்பரத்திலும் , பிறகு மைசூர் மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்து அருள்வார். ஆற்றில் எழுந்தருளியருளும் மதுரை ஸ்ரீ வீர ராகவப் பெருமாள் அவரை எதிர் கொண்டு அழைக்கிறா
ர் . இந்த வைபவமே அழகர் ஆற்றில் இறங்குதல் ஆகும்.

மதுரை சித்திரை திருவிழாவானது கடந்த ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 17-ந் தேதி (புதன்கிழமை) காலை நடைபெற்றது.

ஏப்ரல் 18-ந் தேதி காலை தேரோட்டம் நடந்தது. ஏப்ரல் 19-ந் தேதி தீர்த்தவாரி, தேவேந்திர பூஜையுடன் இரவு அம்மன், சுவாமி ரி‌ஷப வாகனத்தில்புறப்பாடு செய்வதுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித் திரை திருவிழா நிறைவு பெற்றது.

ஏப்ரல் 17-ந் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து எழுந்தருளும் கள்ள ழகர் அங்கிருந்து மாலை 6 மணிக்கு மதுரைக்கு புறப் பட்டு, ஏப்ரல் 18-ந் தேதி காலை மதுரை மூன்றுமாவடி பகுதியில் பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடந்தது. அன்று இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் திருமஞ்சணமானார்.

தொடர்ந்து ஏப்ரல் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தல்லாகுளம் கோவிலில் இருந்து அதிகாலையில் புறப்படும் கள்ளழகர், அதிகாலை 5.45 மணியில் இருந்து 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளினார்.

இதையடுத்து ஏப்ரல் 20-ந் தேதி ராமராயர் மண்டகப்படியில் இரவு முழுவதும் தசாவதார நிகழ்ச்சியும், 21-ந் தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சணமாகும் கள்ளழகர் 22-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு பூப்பல்லக்கில் புறப்பட்டு ஏப்ரல் 23-ந் தேதி காலை 10.30 மணிக்கு அழகர் கோவிலை சென்றடைகிறார்.

ஏப்ரல் 24-ந் தேதி உற்சவ சாந்தியுடன் கள்ளழகர் திருவிழா நிறைவடைகிறது.

_________________________________

*_புராண கதைகள்_*

தன் தங்கை ஸ்ரீமீனாட்சிக்கும் ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் கல்யாணம் நடக்கும் போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீஅழகர், கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபவத்தைப் பார்க்க அழகர் மலையில் இருந்து இறங்கி சகல கோலாகலகங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார். வரும் வழி எங்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால் தங்கையின் திருமணத்தை காணமுடியாமல் போய்விடுகிறது. அந்த சோகத்துடன் வைகையில் எழுந்தருகிறார் என்கிறது புராண கதை.

அது ஓரு புறம் இருக்க, சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு.சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் கூறுகின்றன.

_எது எப்படியோ நமக்கு விழா வந்தது, இதனால் இப்போது மக்கள் மனங்கள் மகிழ்ந்து மதுரை குலுங்குகிறது அவ்வளவுதான்_

நன்றி!
View attachment 11175
View attachment 11176View attachment 11177
enga al epoluthumea alagu cheater darling ? super ma
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top