10 - எப்போது விலகுவாய் அன்பே??

#1
ராம் தன் வீட்டில் இருப்பவளைப் பார்க்க முடியாத ஏக்கத்தில், யோசித்துக் கொண்டே தூங்கியவன் , காலை எழும்பும் போது நல்ல பொங்கல் வடை வாசனையில் விழித்தவன், வேகமாக தனது கிட்சேனுக்குள் சென்றான்... வழக்கம் போலவே ராமுக்கு ஏமாற்றமே மிஞ்சியது… அங்கே தனது கிச்சேனில், நல்ல வடை சாம்பார் மற்றும் பொங்கல் ரெடியாக இருக்க, அங்கு இருந்த ஒரு பாக்ஸ்ல் ஒரு கேமரா வைத்து இருந்தவன், வேகமாக அந்த பாக்ஸ்ல் இருந்த காமெராவை எடுத்துக் கொண்டு சென்று, தனது லேப்டப்ல் கனெக்ட் செய்து பார்த்தான்...


சரியாக 3 மணிக்கு எழுந்து வந்த ஒரு பெண், தலையில் ஷால் கட்டி பர்த்தா போல் போட்டு இருந்து, அமைதியாக சமைப்பதைப் பார்த்தவன் நொந்து போனான்... ஆனால் ஒன்று மட்டும் அவனுக்குத் தெளிவாக தெரிந்தது... தனது வீட்டில் இருப்பது ஒரு பெண் என்றும், அவளது வயது ஒரு 28 இருக்கலாம் என்றும், அவள் எந்த காரணத்திற்காகவும் தனது முகத்தை ராமிடம் காட்ட மாட்டாள் என்பதும் தெளிவாக புரிந்தது...


பசி வேறு வயிற்றை கிள்ளியதால், சென்று குளித்தவன் வந்து சாப்பிட்டுப் பார்த்து, அதன் சுவையில் தன்னை மறந்தவன் மனமோ, அந்த பெண் யாராக இருந்தாலும் பரவாயில்லை.... என்னுடனேயே காலம் முழுவதும் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணினான்... பின் தன் நினைவை எண்ணி சிரித்துக் கொண்டவன், ‘என்னவோ தெரிலடி... நீ யாருன்னே தெரில... பட் நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்னு தோணுதுடி... நீ என்கூடவே இருந்துருடி... அது போதும் எனக்கு’ என பிதற்றிக் கொண்டு இருந்தான்...

“ஜெனி... ஜெனிம்மா நான் ஹாஸ்பிடல் போனும் இன்னைக்கு...”

“ம்ம்ம்ம்…”

“போயிட்டு இரண்டு மணிக்கு தான் வருவேன்…”

“ம்ம்ம்ம்”

“நீ சமைச்சு சாப்பிட்டுடு”

“ம்ம்மம்”

“என்னை மிஸ் பண்ணுவியா??”

“ம்ம்ம்ம்”

“என்னை மிஸ் பண்ண மாட்டியா??”

“ம்ம்ம்ம்…”

“சும்மா எல்லாத்துக்கும் ம்ம்ம்ம் ம்ம்ம் னு சொன்னா எப்படி?? ஏதாச்சும் பேசுடி…”

“ம்ம்ம்ம்”

“ச்சீ... புடிக்கலன்னா போயிட்டே இருடி. கூட இருந்து கஷ்டப்படுத்தாதே. என்னை உசிரோட கொல்றதுக்காகவே என்கூட வாழ வந்தியா?? என்னை சொல்லனும். ‘என் ஜெனி, நான் இல்லாம எப்படி வாழ்வா’னு நினைச்சு என் குடும்பத்தையே தூக்கிப்போட்டு வந்தேன்டி. ஒரே பையனை இழந்து என் அம்மா தவிச்சுட்டு இருப்பாங்க. உனக்குள்ள மறைச்சி வைச்சிருக்கிற ரகசியத்தை விட, நான் இழந்தது ரொம்ப பெருசுடி. எல்லாத்தையும் இழந்து நீ தான் முக்கியம்னு வந்தா, ஓவரா பண்றே. போடி. நீ இல்லாமலும் எனக்கு வாழத் தெரியும். நான் திரும்பி வரச்சுல ஒன்னு பழைய ஜெனியா இரு. இல்லைனா இந்த வீட்டை விட்டு போயிட்டே இரு. நீ செத்தாக் கூட நான் அழமாட்டேன்டி. போடீ” என்று கூறி விட்டு, மதி ஹாஸ்பிடல் சென்று விட்டான் ராமுடன்…

அங்கு ஹாஸ்பிடலில், அவர்கள் நுழையவும், ஒரு எமர்ஜென்சி கேஸ் என்று இருவருமே ஓடிச்சென்று பார்க்க, காதலன் நீ செத்தா கூட வரமாட்டேன் என்று சண்டையில் கூறியதால், மனமுடைந்து தற்கொலை முயற்சி செய்த காதலியைப் பார்த்ததும், ஜெனி நியாபகம் வந்து தாக்க, என்ன செய்வது என தெரியாமல் மதி குழம்பி நிற்க, ஒரு நம்பரில் இருந்து போன் வந்தது...

“ஹலோ” என மதி கூறவும், மறுமுனையில்,

“நான் ஜெனி”

“அம்மூ... சாரி அம்மு. தெரியாம பேசிட்டேன். கோபத்துல பேசிட்டேன். நீ இல்லாமல் வாழ எனக்கு தெரியாதும்மா. ப்ளீஸ் தப்பா எதுவும் பண்ணிக்காதே. ப்ளீஸ் டி. மதியம் வந்ததும், எவ்ளோ அடின்னாலும் அடிச்சுக்கோ. ப்ளீஸ்…”

“ஏன் இப்போ இவ்ளோ சீன்? நான் மொபைல் நம்பர் கொடுக்க கால் பண்ணேன். சம்மந்தமே இல்லாம ஏன் இப்படி பேசறே? நானா உன்னை விட்டு அவ்ளோ சீக்கிரம் போக மாட்டேன். போதுமா??”

சாரிடி..

“பேஷண்ட்ஸ் காத்திருப்பாங்க. போய்ப் பாரு. பர்ஸ்ட் டே... ஆல் த பெஸ்ட்...”

“லவ் யூ ஜெனி…”

“ம்ம்ம்ம்...”

‘இதுல மட்டும் கரெக்டா இரு’ என்று முணங்கியபடியே, போனை வைத்தவன் முகம் தெளிந்தது…

“ராம். அந்த பொண்ணு எப்டி இருக்கா??”

“ஷீ இஸ் நோ மோர் டா... என்ன தான் பொண்ணோ?? அவன் சொன்னானாம். இவ செய்தாளாம். ச்சே, நமக்கு இப்டிலாம் சாட்டைல அடிச்சாலும் தோணாதுடா” என்று ராம் கூறும்போதே மனதினுள், பர்தா போட்ட தேவதையின் நினைவில் குளிர்ந்தான்…

‘அய்யோ!! அவ யாருன்னே தெரில. என்னை இப்படி மாத்தறாளே!! கடவுளே அவ தரிசனத்தை சீக்கிரம் கொடுப்பா’ என மனதிற்குள்ளே பேசிக் கொண்டான் ராம்...

அன்று மதியம் வீட்டுக்கு செல்லும்போது, ராம் மதியிடம் பேசத் தொடங்கினான்…

“டேய்... ஜெசி போன் பண்ணினா...”

“பார்றா. அக்கா புருஷன் என்கிட்டலாம் பேசலை. உன்னைத் தேடறாளா?”

“மச்சி, உங்க விஷயமாத்தான் பேசினா. சிசிடிவி புட்டேஜ் வாங்கி இருக்கா மண்டபத்தில இருந்து. ஜெனி நைட் அவ ரூம்ல இருந்து வெளியே போயிருக்கா. திரும்பி வந்து தூங்கி இருக்கா. அப்றோம் கேமரா வொர்க் பண்ணலை போல”

“நைட் என்னைப் பார்க்கத்தான் வந்தா. நல்லாத்தான் பேசிட்டு போனா...”

“கல்யாண்த்துக்கு முந்தின நாள் தனியா ரொமன்ஸ்… வெளங்கிடும். ஜெசியும் அப்படித்தான் சொன்னா. நைட் ஜெனி ரூமுக்கு வரச்சுல நல்லாத்தான் இருந்து இருக்கா. ‘எனக்கு எவ்ளோ பாத்தாலும் புரில, நீங்க கெஸ் பண்றீங்களா?? நான் ஃபுட்டேஜ் அனுப்பறேன்’னு சொன்னா. ஈவ்னிங் மெயில் பண்ணுவாடா. நீ ஒரு நாலு மணிக்கு வீட்டுக்கு வா. பார்க்கலாம்டா…”

“ம்ம்ம்… ஷ்யூர் டா…”

மதி வீட்டில் நுழையும்போதே ஜெனி, “வாடா நல்லவனே.. போகச்சுல அவ்ளோ கத்திட்டு, அங்கே போய் ஃபீல் பண்றியாக்கும்… இதை என்னை நம்பச் சொல்றே?.”

“நிஜமாடி... என் ஜெனி இல்லைனா இந்த மாமா எப்படி வாழ முடியும் சொல்லு?”


“ஒரு டாக்டரே இப்படி பேசினா, உன்னை நம்பி வர்ற பேஷண்ட்ஸ் பாவம் தான்…”

“அப்படியா!!” என்றவாறே மதி ஜெனியை நெருங்க, ஜெனி அடி மேல் அடி வைத்து பின்னே நகர, ஒரு கட்டத்தில் சுவற்றில் முட்டிய ஜெனி, மதியை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிய, தன் மனதில் உள்ள அத்தனை வேதனைக்கும் மருந்தாக அவள் இதழோடு இதழ் பொருத்தினான் கள்ளன்…

இருவரும் ஒரு கட்டத்தில் மூச்சு வாங்க, விலக மனமில்லாமல் விலகிய இருவருமே தலை குனிந்து கொண்டனர்...

அப்படியே கீழே அமர்ந்த மதி, ஜெனியை தன் மடி மீது அமர்த்தி வைத்து, அவள் கழுத்தில் தன் முகம் புதைத்தவன், “ஜெனி” என அழைக்கவும்,

“என்னங்க...”

“ஹே... பாருடி... மரியாதை எல்லாம் குடுக்கறே… இதுவும் நல்லாத்தான் இருக்கு…”

“போங்க” என கொஞ்சியவாறே முகம் சிவந்த ஜெனியை ரசித்தவாறே,

“நமக்குள்ள இதுவரைக்கும் என்ன நடந்தாலும் ஓகே… இனி என்னை விட்டு போறதைப் பற்றி நீ யோசிக்கவே கூடாது… அதுதான் எனக்கு வேணும்... ப்ளீஸ் ஜெனி...”

“நான் கண்டிப்பாக உன்னை விட்டு போக மாட்டேன் டா. நீ என்னை நம்புடா. நான் என்ன பண்ணி இருந்தாலும் உன் நல்லதுக்கு தான் பண்ணுவேன்னு. அது போதும்டா எனக்கு” என்று கூறிய ஜெனியை, இறுக அணைத்துக் கொண்டான் மதி…
 

Sponsored

Advertisements

Top