• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

12 மாய அன்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shamina Sarah

இணை அமைச்சர்
Joined
Jun 19, 2019
Messages
771
Reaction score
1,634
Location
chennai
வர்ஷாவும் வினோத்தும் கனத்த இதயத்துடன், ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தனர்... எவ்வளவு முயன்றாலும், ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்பது நன்றாக புரிந்தது... வாட்ச்மேன் ஓடி வந்தார்...

"சார் மாயா பற்றி விசாரிக்க வந்தீங்களா?" அவன் மாயாவை பேரிட்டு சொல்வதை வினோத் விரும்பவில்லை... எனினும் எதுவும் செய்ய முடியாத எரிச்சலில், "ஆம்" என்க,

"என் பொண்ணைப் பற்றி என்கிட்ட எதுவுமே கேக்காம போறியே சாமி"

"உங்க பொண்ணா?" வினோத் எரிச்சலாகவும், வர்ஷா ஆச்சரியமாகவும் கேட்டனர்...

"என் வயிற்றில் பிறக்காத பொண்ணு... அதுக்கு ஒரு விடிவுகாலம் வராதானு ஏங்கின என் ஏக்கம் முடிவுக்கு வந்துச்சு"

"என்ன சொல்றீங்க?"

"மாயா இங்கே வரும்போதெல்லாம், எனக்கு ஒரு போன்கால் வரும்... பிரைவேட் நம்பர்னு வரும்... மாயா பேசும் அந்த போன்ல... நானும் தெரிஞ்சவங்கள வைத்து அந்த நம்பரை டிரேஸ் பண்ண முடியுமானு விசாரித்தேன்... எவ்வளவு முயன்றாலும் முடியாதுனு சொல்லிட்டாங்க... அதுக்கு அப்புறம் அவங்க பேசறதை நோட் செய்ய ஆரம்பித்தேன்... 'என் குழந்தையைப் பற்றிய உண்மையை அவன்கிட்ட சொல்லாதே... நான் தான் நீ சொன்ன வாழ்க்கையைத் தானே வாழ்ந்துட்டு இருக்கேன்... இதுக்கு மேல பழிவாங்க நினைக்காதே...' ஒவ்வொரு முறையும் இப்படித்தான் கெஞ்சும்... இந்தக் குழந்தை விசியத்துல தான், எங்கேயோ மாட்டிகிச்சுனு நினைப்பேன்... ஒவ்வொரு முறையும் கை நிறைய பணம் கொடுக்கும்... 'புள்ளைங்கள படிக்க வைங்கப்பானு'... நான் மறுத்தா, 'இந்த உடம்பு தான் கெட்டுப்போச்சு மனசு இல்லை'னு சொல்லிடும்... அதை வருத்தப் படுத்தக் கூடாதுனே வாங்கிப்பேன்..."

வாட்ச்மேன் கூறிய விஷயங்களை அசை போட்டப்படியே, இருவரும் இளநீர் அருந்த ரோட்டோரக் கடையில் நின்றனர்...
ஏனோ திடீரென வர்ஷாவுக்கு, 'வினோத்துடன் ஒரே இளநீரை இரண்டு ஸ்ட்ரா வைத்து உறிஞ்சி குடித்தால் நன்றாக இருக்குமே' என்ற எண்ணம் தோன்ற நிமிர்ந்து பார்த்தாள் வர்ஷா...
அவனது சிந்தனையோ வேறு உலகத்தில் இருந்தது...

'இவனையெல்லாம் கட்டிக்கிட்டு உன்னால வாழ முடியாது வரு பேபி... எப்போ பாரு மாயா... எதுலயும் மாயா தான்... அவன் மனசுக்கு பிடித்த பொண்ணு தானே நானும்... பக்கத்துலயே இருக்கேன்... பிசாசு... அரைமென்டல்... என்னைக் கொஞ்சம் கூட கன்ஸிடர் பண்ணுதா பாரு' திட்டிக்கொண்டே எதிரே பார்க்க,

ஏதோ சிந்தனையில் ஆளில்லா சாலையில், வினோத் ரோட்டின் மேல் நிற்பதும், எதிரே வருகிற லாரி அவனை இடிக்க வருவது போலவும் தோன்றியது வர்ஷாவுக்கு...

அதிரடியாக அவனது கரத்தைப் பிடித்து இழுத்த வர்ஷா, அவனை அணைத்துக் கொண்டு அவனுள் புதைந்தாள்...

இருவருமே லாரியை எட்டிப்பார்க்க, டிரைவர் சீட்டின் அருகில் அமர்ந்து இருந்தவனது கைகள், வெளியே லாரியின் கதவில் குத்தியது... அதைப் பார்க்கவும் 'யாரோ வினோவைக் கொலை செய்ய முயற்சி பண்றாங்க' என்ற எண்ணம் தோன்றியது வர்ஷாவுக்கு...
மீண்டும் அவனுள் புதைந்தாள் வர்ஷா... அவனுமே அந்த நேரத்தில் அவளின் அணைப்பில் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தான்... பின்னர் அவளின் குழந்தைத்தனமான முகத்தை ஒரு கையால் நிமிர்த்தியவன், இரு விழிகளிலும் முத்தமிட்டான்...
கண்மூடி ரசித்து வாங்கிக்கொண்டு இருப்பவளைப் பார்த்ததும் வினோத்தின் குறும்பு வெளிப்பட்டது...

இரு கைகளாலும் அவளை அணைத்தவாறே, குறும்புச் சிரிப்புடன் வர்ஷாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான் வினோத்... மனதில் உண்டான குறுகுறுப்பில், கண்களைத் திறந்தவள், அவனது குறும்புச் சிரிப்பில் முகம் சிவந்தாள்...

"என்ன மேடம் நின்னுகிட்டே தூங்கறீங்க போல?"
அவனது கேள்வியில் நாணம் கொண்டவளுக்கு, அப்போது தான் அவனது அணைப்பில் அவள் இருப்பதும், சற்று முன் நடைபெற இருந்த விபரீதமும் நினைவுக்கு வந்தது...

அனைத்து உணர்வுகளையும் புறம்பே தள்ளிவிட்டு, தன்னவனை பார்வையால் அளந்தாள் வர்ஷா...

"நான் அப்படியே தான் இருக்கேன்... ஒன்னும் ஆகலை... நீ நிக்கிறதைப் பார்த்தா, உனக்குத்தான் ஏதோ தடுமாற்றமோ, மாற்றமோ வந்தது போல இருக்கு" பதில் கூறினான் வினோத்...
அதற்குள் தன்னை மீட்டெடுத்துக் கொண்ட வர்ஷா,

"ஏய் கையை எடு... நடுரோட்டில வைச்சு..."

"அப்போ வீட்டிலனா ஓகேவா பேபி?"

"கையை எடு மிஸ்டர்... இப்படி பப்ளிக்கா கட்டிப்பிடிக்க அசிங்கமா இல்லை"

"என்னையெல்லாம் பப்ளிக்கா பொண்ணைத் தூக்கிட்டுப் போறவன்னு நியூஸே போட்டாங்க... இதெல்லாம் எனக்கு பெரிய விஷயமே இல்லை பேபி"

"ஏய் பேபி கீபினு சொன்ன பல்லை உடைச்சிடுவேன்"

"இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான், யாரோ ஒருத்தர் என் கையைப் பிடித்து இழுத்து, கட்டிப் பிடிச்சாங்க"

"முட்டாள்... அது உன்னைக் காப்பாற்ற"

"அப்படியே வைத்துக் கொள்ளலாம்... நான் அவங்க முகத்தை இப்படியே தூக்கி இப்படி ரெண்டு கண்லயும் கிஸ் பண்ணேன்" என மீண்டும் முத்தமிட்டான் வினோத்...

"ராஸ்கல்... விடுடா... இடியட்"

"ஆனா அப்போ அவங்க அதை கண்மூடி ரசித்தாங்க பேபி... நான் தான் இதுக்கு மேல வேணாம்னு கன்ட்ரோல் பண்ணிகிட்டேன்"

"இங்கே என்கிட்ட ரொமன்ஸ் பண்ற நேரத்தில், அந்த வண்டியை ஃபாலோ பண்ணி இருக்கலாம்... அட்லீஸ்ட் வண்டி நம்பரையாவது நோட் பண்ணியா? நீயெல்லாம் என்ன ஹீரோவோ? டம்மி பீஸ்"

சிரித்தபடியே அவளை விடுவித்தவன், "TN69, A0808... வண்டி நம்பரெல்லாம் நாங்க அப்போவே நோட் பண்ணியாச்சு"

"ஏன் லேட் பண்றீங்க வினோத்? ஆர்டிஓ ஆபிஸ்ல விசாரிங்க"

"ஃபேக் நம்பர்டி"

"அது எப்படி ஃபேக்னு சொல்றீங்க"

"எங்க ஆபிஸ் கார் நம்பர்டி இது... நீ என்னை இழுக்கும்போது கூட, ரோட்ல போற வண்டியைப் பார்த்து பயந்து விட்டாய் என்று தான் நினைத்தேன்... நம்பரைப் பார்ததும் தான் தெரிந்தது, மேடம் என் உயிரைக் காப்பாற்றி இருக்கிறீர்கள் என்று"
வினோத் கூறவும்
மீண்டும் அவனை அணைத்தாள் வர்ஷா... "என்னடி, திரும்பவும் முதல்ல இருந்தா?" என கண்ணடித்தவாறே வினோத் கேட்க,

"ஏன் உன்னைக் கொலை செய்ய டிரை பண்றாங்க... என்ன ப்ராப்ளம்? உனக்கு ஏதாவது ஆச்சுனா??!" என்றவள், அதிர்ந்து நின்றாள்...

'இதுஎன்ன உணர்வு? இவனுக்கு என்ன ஆனால் எனக்கு என்ன? நான் ஏன் இவனிடம் ஆறுதல் தேடுகிறேன்? இவனை ஏன் நடுரோட்டில் வைத்து கட்டிப் பிடிக்கிறேன்?' பலவாறு யோசித்துக் கொண்டு இருந்தாள் வர்ஷா...

அவளது தலையை ஆறுதலாக தடவியவன், "வீட்ல போய் யோசி பேபிமா... விடை கிடைக்கும்" என்று கூறி தனது இருசக்கர வாகனத்தைக் கிளப்பினான்...
வரும்போது இயல்பாக அவனது பின்னே இருபக்கம் கால் போட்டு அவனது தோளில் கைகளை வைத்து வந்த வர்ஷாவால், இப்போது தயக்கமாக இருந்தது... இருபக்கமும் கால் போட்டு அமர்ந்தவள், அவனைப் பிடிக்காமல், யோசனையோடே அமர்ந்திருப்பதைப் பார்த்தவன், சிரித்தவாறே மெதுவாக அவளது வீட்டின் முன் இறக்கி விட்டான்...

இம்முறையும் ஒரு நன்றியோ, திரும்பி ஒரு பார்வையோ, வர்ஷாவிடம் இருந்து கிடைக்கவில்லை... 'இவளது குணமே இதுதான் போலும்' நினைத்துக் கொண்டான் வினோத்...

..........

சதீஷிடம் நடந்ததைக் கூறினான் வினோத்... "எனக்கு யாரை நம்புவது என்றே தெரியவில்லை சதீஷ்... இந்தக் கேஸ் தான் பர்ஸ்ட் எனக்குக் கொடுத்திருக்காங்க... வீட்ல எனக்கு நெருக்கமானவங்களா? இல்லை நம்ம டிபார்ட்மென்ட் ஆளுங்க மூலமா போச்சுதா? ஏன் என்னைக் கொல்ல வந்தாங்க? மாயா பற்றித் தானே விசாரிக்கிறேன்... அப்போ மாயாவுக்காகவா?" யோசித்துக் கொண்டு இருக்கும் போதே போன் வர, போனை எடுத்துப் பேசிய சதீஷின் முகம் மாறியது...

"சார்... ஆக்ஸிடென்ட் ஸார்... ஸ்பாட் அவுட்... அன்னை தெரசா குழந்தைகள் நலக் காப்பகம் வாட்ச்மேன் சார்" எனக் கூறவும் கண்கள் கலங்கியது வினோத்க்கு...

"கையில் கிடைத்த எவிடென்ஸை விட்டு விட்டேனே" வாய்விட்டு புலம்பினான் வினோத்...

"சார் மொபைல் மட்டும் மிஸ்ஸிங் சார்" சதீஷ் கூறவும், அந்த வாட்ச்மேன் கூறியது நினைவுக்கு வந்தது...

"அவன் நம்பருக்கு பிரைவேட் நம்பர்னு கால் வரும்னு சொன்னான் சதீஷ்... நான் தான் பெருசா கண்டுக்காம வந்துட்டேன்... கிடைக்க இருந்த எவிடென்ஸை நானே மண் அள்ளிப் போட்டுட்டேன்" தலையில் கைவைத்து அமர்ந்தான் வினோத்...

செய்தியைக் கேட்டதும், மீண்டும் மாலை வேளையில் ஓடி வந்தாள் வர்ஷா...

"நல்ல வேளை... காட்ஸ் கிரேஸ்... உனக்கு ஒன்னும் ஆகலை"

"நான் தான் வர்ஷா லூசு... அவன் போனை வாங்கி செக் பண்ணி இருக்கனும்... அட்லீஸ்ட், அவன்கிட்ட இன்னும் கொஞ்சம் விஷயமாச்சும் வாங்கி இருக்கனும்"

"நானும் நினைத்தேன் வினோத்... ஏன் நீ அவனை விசாரிக்கலை? அவன் போனைக் கூட வாங்கலை?"

"எனக்கு அவன் மாயாவை, 'மாயா'னு உரிமையா சொன்னது, 'அவனோட மகள்'னு சொன்னதுலாம் பிடிக்கலை வர்ஷா... அவ என்னோட மாயா... எனக்கு மட்டும் உரிமையான மாயா... என் மாயா அவள்" தான் பேசுவது தன் மனங்கவர்ந்தவளிடம் என்பதை மறந்து பிதற்றினான் வினோத்...

"இது அநியாயம் வினோத்... அவங்க பொண்ணுனு தானே சொன்னாங்க... அப்பா ஸ்தானத்தில் தான் சொன்னாரு"

"நோ... மாயாவுக்கு நான் மட்டும் தான் பர்ஸ்ட்... பெஸ்ட்"
அவனையே பார்த்துக் கொண்டு இருந்த வர்ஷாவின் கண்கள் கலங்கியது...

'நீ நல்லவன் தான்டா... 'மாயாவோட வினோத்' எனக்கு வேணாம்டா... 'வர்ஷாவோட வினோத்'னு கூட நான் ஆசைப்படலை... 'வினோத்'தா மட்டும் வாடா... அது போதும்... அதுவரை காத்திருக்கேன்...' மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டாள் வர்ஷா...

அமைதியாக அவனை அழைத்துச் சென்று சாப்பிட வைத்தவள், மருத்துவ மனை நோக்கிச் சென்றாள் வர்ஷா, தன் காதலனின் தாயை சாப்பிட வைப்பதற்காக...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top