13 நிழலின் காதல்

#1
சரவணனுக்கு மனது ஒரு நிலையில் இல்லை... பாப்பா திடீரென தவறான டிராக்கில், பயணம் செய்வது போல தோன்றியது...

'பாப்பா அருளை எவ்ளோ வருஷமா லவ் பண்ணுது, ஆனால் ஏன் இப்படி விட்டுக் கொடுக்குது... மாலினி நடிப்பாள் என்பது தெரியும்னு சொல்லிச்சு... ஆனால் ஏன் அருளை, அவளைப் பார்க்க அனுப்பனும்? மாலினி ஓவர்ஆக்ட் பட்ணி பிரசாந்த்தை பாப்பாகிட்ட இருந்து பிரித்து விட்டால் என்ன செய்வது? ஒன்னும் புரியலை' அலுத்துக் கொண்டான் சரவணன்...

அங்கு மாளவிகா குணா சித்தியின் அருகில் அமர்ந்தாள்... "ஏய் பொண்ணு... அந்த லூசுப்பயலை ரொம்ப லவ் பண்றியா நீ?"

"ம்ம்ம்... இதுக்கு எப்படி அன்ஸர் பண்றது? தெரிலயே சித்தி"

"உனக்கு இந்தக் கல்யாணம் காதல் குடும்பம், இதெல்லாம் கலீஜா தெரியலே மாலு?"

"அம்மா குடும்பத்தைக் கோவிலா நினைப்பாங்க... அவங்க வளர்ப்பு அல்லவா நான்... எனக்கு அப்படித் தோணலை சித்தி"

"ம்ம்ம்... உனக்குத் தெரியுமா? என் பிரெண்ட்ஸ் எல்லாரும், நான் தான் இந்த உலகத்துலே சந்தோஷமான பொண்ணுனு சொல்வாங்க... எந்தக் கவலையும் இல்லாமல் சுதந்திரமா பல நாடுகளுக்குப் போற, இவளைப் போல வாழ்க்கை யாருக்கு கிடைக்கும் சொல்வாங்க... ஏன்னா எனக்கு குடும்பம் இல்லையாம், நான் சந்தோஷமா இருக்கேனாம்... ஆனால் நிஜம் அது அல்ல... ஒவ்வொரு நாளும் தனிமை என்னைக் கொல்லும்... எந்த நாட்டுக்குப் போனாலும் தனிமை துரத்துது... இரவு வந்தாலே ஒரு நடுக்கம், பயம்... உனக்குத் தெரியுமா மாலு, நான் எந்த நாட்டிலாவது செத்துப் போனால் கூட, என்னைத் தேட யாரும் கிடையாது... இந்த உணர்வை உணர்ந்து கொள்ள இத்தனை வருடங்கள் ஆகிற்று..."

"நீங்கள் ஏன் சித்தி திருமணம் செய்யவில்லை?"

"அதில் விருப்பம் இல்லை எனக்கு"

"இது சுத்தப் பொய்... உங்கள் கண்களில் ஏதோ ஒரு இழப்பு தெரிகிறது... உங்களை எதுவோ பாதிக்கிறது! அதற்காகத்தான் இந்த ஓடி ஒளியும் வாழ்க்கை"

"இதுவரை என்கிட்ட யாரும் கேட்காத கேள்வி... சயின்டிஸ்ட் அல்லவா? அதான் ரொம்ப யோசிக்கிறே சின்னப்பொண்ணு"

"சித்தி, உங்க வயது நாற்பது தான்... ரொம்ப எல்லாம் வயது ஆகவில்லை... என்ன பிளாஷ்பேக்?"

"பெரிதாக ஒன்றும் இல்லை... காரணம் விஜய்... என்கூட படித்தவன்... ரொம்ப லவ் பண்ணோம் ரெண்டு பேரும்... ஆனால் அவன் அப்பா என்கிட்ட கையெடுத்து கும்பிட்டுக் கேட்டாங்க... அவங்க மகனைத் திருப்பிக் கொடுத்துட்டேன்... ரெண்டு வருஷத்துல அவன் கையில குழந்தை கூட வொயிஃப்னு குடும்பமா அவனைப் பார்த்ததும் நொறுங்கிப் போயிட்டேன்... இன்னொரு முறை அவனைக் குடும்பமா பார்க்கிற தைரியம் எனக்கு இல்லை... அதான் ஓடி ஓடி ஒளியறேன்"

--------

"என்ன சின்னப்பொண்ணே... என்னைப் பரிதாபமாக பார்க்கிறே?"

"நீங்கள் வாழ்க்கையை வாழவே இல்லைனு வருத்தப் படுறீங்களா சித்தி?"

"வெறும் தாம்பத்யம் தான் வாழ்க்கைனு நினைக்கிறீயா மாலு பொண்ணே... காதல்... அன்பு... நேசம்... பாசம்னு நீ கொடுத்துட்டு இருக்கியே அருளுக்கு, அதுதான்... அது உனக்கு அருள்கிட்ட இருந்து திரும்பக் கிடைத்தா, வாழ்க்கையோட பெரிய சந்தோஷம் எதுனு புரியும்... விஜயைப் பிரிந்து பல வருடங்கள் ஆனாலும், அவன் எனக்குக் கொடுத்த அன்பு, அதுதான் என்னை வாழ வைக்கிறது"

"ஆனால் அவங்களுக்கு வேற ஃபேமிலி இருக்குதே சித்தி"

"நம்மள நேசிக்க ஒருத்தங்க இருக்காங்க... இதுதான் ஒரு மனுஷனுக்கு பெரிய சந்தோஷம்... நான் அவனை விட்டு பிரிந்தாலும், இன்னும் நான் நல்லா இருக்கனும்னு நினைச்சிட்டு இருப்பான் அவன்... எங்க கதையை விடு... உன் அருளை எவ்வளவு புடிக்கும் உனக்கு?"

"தெரிலயே... இவர் இல்லைனா ஒன்னுமே இல்லைனு தான் நினைச்சேன்... அதான் நாட்டை விட்டே ஓடிப்போனேன்"

"இதுவரை கரெக்டா தான், உன் டிராக் போயிட்டு இருந்தது... அருள் ஒரு அவசர புத்திக்காரன்... மத்தப்படி நல்லவன்... அதான் உன்கிட்ட இறங்கி வந்தான்... நீ அந்த வாய்ப்பை தவற விட்டுட்டே மாலு.. அதான் கொஞ்சம் நெருடலா இருக்குது"

"நான் அப்படி நினைக்கலை சித்தி... எப்போ இருந்தாலும் மாலினி ஏதாச்சும் டிராமா பண்ணத்தான் போறா... அதான், பர்ஸ்ட் அவளோட ப்ராப்ளம் சால்வ் பண்ணட்டும்னு தான் நினைத்தேன்"

"அவளை ஒரேயடியாக அவன் வாழ்க்கைல இருந்து அழிச்சுட்டு நீ என்ட்ரி கொடுக்க நினைக்கிறே... சரியா?"

"ம்ம்ம்ம்"

"என்னைப் பொறுத்தவரை இது முட்டாள்தனமாக இருக்கிறது... யாரா இருந்தாலும் முதல்காதலை மறக்க முடியாது"

"அப்படினா?"

"அவகூட இருந்த சந்தோஷமான தருணங்கள், அல்லனா அவ மேல இருக்கிற வெறுப்பு, கடைசி வரை அவன்கூடவே இருக்கும் மாலு"

---------

"ஆம்பிளைங்க இறங்கி வர மாட்டாங்க... உன்னை நேசிக்கிற புருஷனா அவன் மாறனும்னு நினைச்சிக்கோ... நிச்சயமாக இனி உன்னை மட்டும் தான் நேசிப்பான்... ஆனால் மாலினியை மறந்த புருஷனா வேணும்னு நினைத்தால், தேவையில்லாத சந்தேகங்களும் பிரச்சனைகளும் தான் வரும்"

"இப்போ நான் என்ன பண்றது?"

"எனக்குத் தெரிந்து பையன் திரும்ப இறங்கி வர மாட்டான்... வந்தா கப்புனு புடிச்சுக்கோ... இல்லைனாலும், உனக்குப் பிடிக்குதோ இல்லையோ, மாலினி பற்றி தவறா அவன்கிட்ட பேசாதே... அதைப்பற்றி குத்திக் காட்டாதே... உன் அன்பு கொடுத்துக்கிட்டே இரு... எல்லாம் சரி ஆயிடும்"

"அதாவது வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் இருக்கனும்னு சொல்றீங்களா சித்தி"

"ம்ம்ம்ம்... அப்படியும் சொல்லலாம்"

"ஓகே சித்தி" என்றபடி அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பினர்...

சோர்வாக வீட்டுக்கு வந்த அருள், சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்... போன் வந்தது அவனுக்கு...

சரவணன் என்பது அவன் பேசிய தோரணையிலே புரிந்தது... அவன் பேசுவது பாப்பாவின் காதில் நன்றாகவே விழுந்தது...

"மாலினிக்கு கேன்சர்... யூட்ரஸ் கேன்சர்... யூட்ரஸ் ரிமூவ் பண்ணனும்னு டாக்டர் சொல்றாங்க... ஆபரேஷன்க்கு நான் ஹெல்ப் பண்றதா சொன்னேன்... அவ அப்பா ரிடையர்ட்மென்ட் பணம் இருக்குன்னு தான் சொன்னாரு... நான் தான், நானே கொடுக்கிறேன்னு சொல்லிட்டேன்..."

"பிரசாந்த் நீ லூசா? அவ செத்தா சாகட்டும்... உனக்கு என்ன அவமேல கரிசனை?"

"சாகற அளவுக்கு எல்லாம் அவளுக்கு ஒன்றும் இல்லை... நான் பணம் கொடுக்கவில்லை என்றாலும், அவள் அப்பா காப்பாற்றுவார்... நான் பத்து லட்சம் கொடுத்து, ஒரேயடியாக அவளைத் தலைமுழுக நினைக்கிறேன்"

"யோசித்துப் பேசறியா? ஏன் தேவையில்லாமல் அவளுக்கு?"

"அவள் மீது தான் எனக்கு காதல் என்று உன் தங்கை கூறினாளே... அதுதான் ஜீவனாம்சம் கொடுத்து காதலை முழுவதுமாக முறித்து விட்டேன் என்று உன் தங்கைக்குப் புரியவைக்க நினைக்கிறேன்" பல்லைக் கடித்துக்கொண்டு, பாப்பாவை முறைத்தவாறே கூறினான் பிரசாந்த்...

சரவணன் சந்தோஷமாக போனை கட் செய்ய, பாப்பா தான் "ஙே" என முழித்துக் கொண்டு இருந்தாள்... விரும்பியே இப்போது அவள் அழகை ரசித்துக் கொண்டு இருந்தான் கள்ளன்...

"சாரி... நான்..." பாப்பா பேச ஆரம்பிக்கவும்,

"இங்கே பாருங்க மாளவிகா... எனக்கு உங்களிடம் பேச விருப்பம் இல்லை... சிறிது நாள் அவகாசம் தாருங்கள், நீங்கள் என்னை அவமானப் படுத்தியதை மறக்க... அதன்பின் உங்கள் தோழனாகவாது மாற முயல்கிறேன்... ப்ளீஸ்... பேசாதீங்க" பேசியவன் திரும்பி நின்று சிரித்துக் கொண்டான்...

அடுத்த வாரம் வரும் பாப்பாவின் பிறந்த நாள் வரை, அவளிடம் பேசாமல், பிறந்த நாள் அன்று சர்ப்ரைஸ் கொடுக்கப் போவதாக நினைத்து சிரித்துக் கொண்டான்... விதியும் சிரித்தது, 'நீ மோதுவது சாதாரண பெண்ணுடன் அல்ல... அவள் மாலினி' என்று...
 
#6
லூசுப் பயல் பிரசாந்த் மாலினிக்கு எதுக்கு பணம் கொடுக்கிறேன்னு சொல்றான்?
அவள் வாங்காமல் இவனை விட்டுடுவாளா?
 
#7
சுகுணாவின் வார்த்தைகள் உண்மைதான்
மாளவிகா இணங்கி வரும் பொழுது
இந்த அருள் லூசு வேற ஏதோ பிளான் போடுறானோ?
 
Advt

Advertisements

Top