19 என் முதல் காதல்

#1
சைதன்யாவால் நம்ப முடியவில்லை... 'ஒரு பிரச்சனை தனக்கு வந்து, அதனால் பாதிக்கப்பட்டு, இனி என்ன செய்வது என குழம்பி, எல்லாப் பிரச்சனையும் முடிந்தது என்று நிமிர்ந்தால், கிஷோர் ஆட்டிப் படைத்தான்... இப்போது கிஷோர் நல்ல தோழன் என்ற எண்ணம் கொண்டு, வாழ்க்கை சீராகி விட்டது என நினைக்கும் போது மீண்டும் சாகிரா? என்னால் சாகிரை என்ன செய்ய முடியும்? ஆனால் சாகிர் ஏன் கிஷோரின் திருமணத்தை நிறுத்த வேண்டும்? கிஷோருக்கும் சாகிருக்கும் என்ன பிரச்சினை?' பலவேறாக யோசித்த சைதன்யா கிஷோருக்கு சேகரின் எண்ணிலிருந்தே அழைப்பு விடுத்தாள்...

"சேகர் உங்கள் போன் எங்கே?" கேட்ட கிஷோரிடம், "வீட்டில் சார்ஜ் போட்டு வந்தேன்" என சேகர் கூற, "உன் எண்ணிலிருந்து போன்" சொன்ன கிஷோரிடம் "எடுத்துப் பேசுமாறு" கூறினான் சேகர்...

"கிஷோர்... நான் சைதன்யா"

"சொல்லு தன்யா"

"நீ அனுப்பிய மெசேஜ் எல்லாம் பார்த்தேன்... எனக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது"

"சொல்லு தன்யா"

"சாகிர் ஏன் உங்கள் திருமணத்தை நிறுத்த முயல்கிறான் என்பது எனக்கு புரியவில்லை!"

"விடு தன்யா... அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்"

"இல்லை கிஷோர்... அவனுக்கு உங்கள் மேல் என்ன கோபம்?"

"ஓகே... சொல்கிறேன்... அன்று அந்த சம்பவம் நடந்த பிறகு, என் சகோதரி இறந்த பிறகு, ரோஷ்னியின் டைரியை ஒருநாள் படிக்க நேர்ந்தது... ரோஷ்னி கர்ப்பமாக இருப்பதை அறிந்த சாகிர் உண்மையாகவே அவளைத் திருமணம் செய்ய விரும்பவில்லை... ஒவ்வொரு நாளும் என் தங்கையிடம், இந்த கர்ப்பம் என்னால் தானா என்று சந்தேகமாக உள்ளது என்று வார்த்தையால் அவளை சாகடிக்க ஆரம்பித்தான்... அந்த நிலையில் தான், உனது கம்பெனி பெரிய அளவில் அச்சீவ் ஆக ஆரம்பித்தது... இதைத் தெரிந்து கொண்ட சாகிர், சைதன்யாவிற்குத் தனியாக கம்பெனி ஆரம்பித்து உதவியது போல, உனக்கும் ஒரு கம்பெனி ஆரம்பித்துக் கொடுக்க உன் தந்தையிடம் கேள்... அவளைப் போல உனக்கும் ஒரு அடையாளம் வந்தால், உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி உள்ளான்... அவனது தந்தையின் பிஸினஸ் அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக நஷ்டமடைய ஆரம்பித்து இருந்தது... என் தங்கையைத் திருமணம் செய்து, அவள் மூலம் தங்கள் பிஸினஸை பெருக்கிக் கொள்ள நினைத்து தான் சாகிரின் வீட்டில் இருந்து பெண் கேட்டு வந்தார்கள்... எல்லாம் சுமூகமாக சென்று கொண்டு இருக்கும் போது தான், சாகிரின் பார்வையில் மீண்டும் நீ பட்டாய்... உனது மிடுக்கானத் தோற்றமும் உனது வளர்ச்சியும், எனது தங்கையின் முன் ஒன்றுமேயில்லை என்பதை அறிந்தவன், அவளை மிரட்டி உன்னை அழைத்திருக்கிறான்... ஆனால் சுதாரித்துக் கொண்ட என் தங்கை என்னிடம் கூற, நான் உன்னை அழைத்து வந்து விட்டேன்... அதன்பின் என் தந்தையின் உத்தரவில் உன்னைத் திருமணமும் செய்தேன்... அதற்குள் என் தந்தை சாகிர் தந்தையின் பிஸினஸை மிகுந்த பணம் செலவழித்து ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டார்... அந்த இழப்பின் வீரியம் தாங்காமல் சாகிரின் அப்பா இறந்து விட, சிறிது நாட்களிலேயே அவனது அம்மாவும் தவறினார்... மீண்டும் என்னைத் தேடி வந்த சாகிர், 'நான் தவறிழைத்து விட்டேன்... இனி திருந்தி வாழ்கிறேன்... சந்தர்ப்பம் கொடு' என எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் நான் மறுத்து விட்டேன்... அதன்பின் அவன் பிஸினஸ் ஆரம்பிக்க எடுத்த அனைத்து முயற்சிகளையும் தோற்கடித்தேன்... மீண்டும் மீண்டும் என்னிடம் தோற்ற சாகிர் எனக்கேத் தெரியாமல் என்னுடைய கம்பெனியில் வேலை பார்த்துள்ளான்... அவனுக்கு பல முறை தோல்வியை மட்டுமே கொடுத்து உள்ளேன்... அதனால் தான் பதுங்கியவன், இப்போது பாய்கிறான்... விடு தன்யா... நான் பார்த்துக் கொள்கிறேன்..."

"ஓ...குடும்பத்தையும் இழந்து, வாழ்வாதாரத்தையும் இழந்தவனுடைய மனநிலை இப்படி நடக்க வைக்கிறது... நீங்கள் சந்தோஷமாக திருமண வேலைகளைத் தொடருங்கள் கிஷோர்... அவனுடைய சூழ்நிலையில் நானும் பல வருடங்கள் இருந்து இருக்கிறேன்... நான் பார்த்துக் கொள்கிறேன் அவனை"

"இல்லை தன்யா... உனக்கு மீண்டும் ஒரு ஆபத்து என்றால்" பேசிய கிஷோரை பேசவிடாமல்

"அவளை விடுங்கள் கிஷோர்... அவளது தெளிவான பேச்சு எனக்கு பழைய தாரணியைக் கண்முன் நிறுத்துகிறது... அவள் பார்த்துக் கொள்வாள்" சேகர் கூறினான்...

"தேங்க்ஸ் சேகர்... நான் என்ன செய்தாலும் நீ சம்பதிப்பாயா?"

"என்னை விட்டு பிரிவதைத் தவிர நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதமே"

"ஸ்மார்ட் சேகர்... ஆனாலும் நான் உன்னை பிரிவேன் என்பதை நீ கனவில் கூட நினைக்கக்கூடாது... நீங்கள் திருமண வேலைகளைத் தொடருங்கள்... நான் பார்த்துக் கொள்கிறேன்"

தாரணியின் பேச்சு தெளிவானதாக இருந்தாலும்,அவளுக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ? என கிஷோர் அஞ்ச, சேகரோ 'தாரணி என்ன முடிவு எடுத்து இருப்பாள்?' என்ற யோசனையில் இருந்தான்...

அங்கே தாரணி வேகமாக செயல்படத் துவங்கினாள்... நேரடியாக வசு மற்றும் பாலுவின் முன் நின்று தனது முடிவினைக் கூறினாள்... அவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதை சைதன்யா அதிசயமாக பார்த்தாள்...

பின் தன் தொழில் வழக்கறிஞரை அழைத்தவள், வேக வேகமாக அனைத்தையும் செய்து முடித்து, சாகிருக்கு அழைப்பு விடுத்தாள் கைபேசியில்...

"ஹலோ"

"ஹலோ சாகிர்? நான் சைதன்யா... கொஞ்சம் உங்களை மீட் செய்ய வேண்டுமே"

"என்னை எதற்கு?"

"பரவாயில்லை... எனது வீட்டுக்கு இன்னும் அரை மணி நேரத்தில் வருகிறீர்களா? எனது கணவர் சேகரோ இல்லை கிஷோரோ கட்டாயமாக இருக்க மாட்டார்கள்... எந்த காவல்துறையின் உதவியையும் நான் நாடவில்லை... தாராளமாக வரலாம் நீங்கள் எந்தவித சந்தேகமும் இல்லாமல்"

"ஓகே... பிஃப்டீன் மினிட்ஸ்ல அங்கே இருப்பேன்"

சைதன்யாவின் முன் சாகிர் அமர்ந்து இருந்தான்... அவனது முகமே அவனது ஏமாற்றங்களை, வாழ்க்கையில் தோல்விகளை மட்டும் சந்தித்ததைக் காட்டிக் கொடுத்தது...

"சொல்லுங்க சாகிர்! நீங்க என்னைத் திருமணம் செய்ய நினைக்கிறீர்களா?"

"இல்லை... இல்லை... அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை"

"சரி... கிஷோரின் திருமணத்தை நிறுத்தி என்ன செய்யப் போகிறீர்கள்?"

"ஏதோ உனக்காக அவன் திருமணத்தை நிறுத்தியது போல பேசுகிறாய்"

"அவர் நிறுத்துவதாகத் தான் இருந்தார்... நான் தான் உங்களிடம் பேசிவிட்டு உங்களுக்குச் சேர வேண்டியதைக் கொடுத்துச் செல்ல வந்திருக்கிறேன்"

"என்ன கொடுக்கப் போகிறாய்?"

"என் வாழ்க்கை நிச்சயமாக உங்களுக்குத் தெரிந்து இருக்கும்... ரோஷ்னியால் என்னைப் பற்றி பேசாமல் இருக்கவே முடியாது... நான் எந்த நிலையில் இருந்தேனோ அதே நிலையில் இப்போது நீங்கள் இருக்கிறீர்கள்... எனக்கு அது தெரியாது இதுவரை... நான் சொந்த பந்தங்களால் அநாதை ஆனேன், நீங்கள் நீங்கள் செய்த பாவத்தாலும், ரோஷ்னியின் வயிற்றில் இருந்த குழந்தையைக் கூட நினைத்துப் பார்க்காமல் இருந்த உங்கள் மூர்க்கத்தனத்தினாலும் அநாதையாக என் முன்னே நிற்கிறீர்கள்... நான் இப்போது அநாதை அல்ல... என்னை உயிராக நினைக்கும் காதலன், மருமகளை மகளாய் நினைக்கும் மாமியார் மாமனார் என நன்றாகவே இருக்கிறேன்... எல்லாவற்றையும் விட, தான் நேசிக்கும் பெண்ணுடன் உள்ள திருமணத்தையே நிறுத்த யோசிக்கும் அன்பான நண்பன்... ஆம் இவ்வளவு உறவுகள் எனக்கு இருக்கிறது..."

"அந்த உனது நண்பன் தான் என் வாழ்வை சூனியமாக்கி விட்டான்"

"அவனது ஒரே தங்கையை வயிற்றில் கரு கொடுத்து அழித்து விட்டாய் நீ"

"வாலிப வயதில் செய்த பிழை இன்னும் தொடர்கிறது... உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு என்னை வாழ விடுங்கள் என கெஞ்சத் தயாராக இருந்தேன்... ஆனால் உன் அந்த நண்பன் உனக்கு ஒரு வேலியை போட்டு வைத்து உன்னை அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி சந்திக்க விடாமல் செய்து விட்டான்..."

"தங்கையைக் காப்பாற்ற முடியாதவன் அவன் தோழியைக் காக்க நினைப்பது தவறல்ல"

"அவனிடம் எத்தனை முறை கெஞ்சினேன் மன்னிப்பு வேண்டி"

"உங்களை மன்னித்தால் எங்கள் ரோஷ்னி திரும்பக் கிடைப்பாளா?"

"ஏற்கனவே கடும் குற்ற உணர்வில் இருக்கிறேன்... மீண்டும் மீண்டும் அவளைப் பற்றி பேச வேண்டாம்"

"இப்போது மீண்டும் குற்றம் செய்ய ஏன் நினைக்கிறீர்கள்?"

"கடைசி சந்தர்ப்பமாக என்னை வாழ விட கெஞ்சப் போகிறேன்... அதை விடு... நீ ஏன் என்னை சந்திக்க நினைத்தாய்?"

"இதைக் கொடுப்பதற்குத் தான்" என்று தனது கையில் இருந்த ஃபைலை நீட்டினாள் சைதன்யா...

பிரித்துப் பார்த்தவன் அதிர்ந்தான்... அவனது பெயருக்கே சைதன்யா குரூப் ஆஃப் கம்பெனிஸ் மாற்றப்பட்டு இருந்தது...

"என்ன பைத்தியக்காரத்தனம் இது? உன் புகுந்த வீட்டுக்குத் தெரிந்தால்?"

"தெரிந்து தான் வந்தேன்"

"என்ன?"

"ஆம்... எனது பதினைந்து வருட காதலை மட்டுமே தேடினான் சேகர்... தங்கள் மகனின் விருப்பத்திற்காக என்னை யாரென்றே தெரியாமல் ஏற்றுக்கொண்டனர் அவனது பெற்றோர்... அவர்களிடம் கேட்டேன் கம்பெனியைக் கொடுத்து விடவா என்று? தாராளமாக கொடுத்து விட்டு வா மருமகளே... சென்னையில் வேறு கம்பெனி ஆரம்பித்துக் கொள்ளலாம் என்றார் என் மாமனார்... போதும் இந்த அன்பு... அதற்கு முன் இந்தப் பணமெல்லாம் ஒன்றுமே இல்லை... சீக்கிரமே ரிஜிஸ்டரேஷன் வைத்துக் கொள்ளலாம்... நன்றி"
திரும்பியும் பார்க்காமல் தன் வீட்டில் இருந்து சேகரின் வீட்டுக்கு கிளம்பினாள் தாரணி... சாகிர் தான் என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டு இருந்தான்...
 
#5
அருமையான பதிவு
ஆனாலும் தப்பு செய்தவனுக்கு
இந்த சொத்து அதிகம்
ஆமாம் சகோ... ஆனால் தாரணி அப்படி செய்து விட்டாளே... நன்றி சகோ
 

Sponsored

Advertisements

New threads

Top