19 நிழலின் காதல்

#1
சென்னை மீனம்பாக்கம் விமானநிலையம்... அருள் மற்றும் பாப்பாவின் குடும்பத்தினர் காத்திருந்தனர்... இரவு சரியாக 11மணிக்கு வெளியே வந்தனர் மாளவிகா, டேவிட் மற்றுமொரு பெண்...
கூட்டங்கள் அனைவரும் மாளவிகாவைச் சூழ்ந்து, "எப்படி இருக்கிறாய்? குழந்தை scan எடுத்தாயா? இளைத்து விட்டாய்... கொஞ்சம் பூசினாப்போல இருக்கிறாய்" என பேசிக்கொள்ள, அவர்களிடம் பேசினாலும் கண்கள் ஏனோ அருளிடமே இருந்தது...

அருள் விலகி நின்று கொண்டு இருக்க, மெதுவாக அவனருகே வந்தாள் மாளவிகா...

"எப்படி இருக்கீங்க அருள்?"

"நீ என்னை எப்படி விட்டுட்டு போனியோ அப்படியே இருந்து, உனக்காக காத்திருக்கிறேன் பாப்ஸ்"

"சில காத்திருப்பு தேவையற்றது அருள்"

"ஏன் அப்படிச் சொல்கிறாய்?"

"என் வயிற்றில் இந்தக் குழந்தை வேறு இருக்கிறது... இனி உங்கள் காத்திருப்பு வீண் தான்"

"உன்னைக் காணும்வரையில் ஒருவேளை என் குழந்தையோ? என்ற சந்தேகம் இருந்தது"

"இப்போது தெரிந்து விட்டதல்லவா இது டேவிட்டின் குழந்தை என"

"ஆம்... மிகச்சரியாகப் புரிந்து கொண்டேன்... இது நம் குழந்தையும் அல்ல, உன் குழந்தையும் அல்ல..."

"நீங்கள் உளறிக்கொண்டு இருக்கிறீர்கள்"

"என்னால் உன் கண்களில் காதலை உணர முடிகின்றது... நாம் சேர்ந்து விடமாட்டோமா. என்ற ஏக்கம் என்னை விட அதிகமாக உன் கண்களில் தெரிகிறது... இந்தக் குழந்தையை நீ சுமக்கிறாய்... அது ஏன் எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை... பெற்றெடுத்துக் கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்து முடித்து விட்டு வா... காலம் முழுவதும் காத்திருப்பேன் உனக்காக"

"நீங்கள் பேசுவது சுத்த பைத்தியக்காரத்தனமாக உள்ளது"
அதற்குள் மற்றவர்களும் பிரசாந்த்தை திட்ட ஆரம்பித்தனர்...
உரிமையாக அவளது உடைக்குள் மறைத்து வைத்திருந்த அவனது தாலியை வெளியே எடுத்து காண்பித்தவன்,

"இப்போது புரிகிறதா? இவள் என் மனைவி... நீங்கள் யாரும் அவளிடம் ஒரு வார்த்தை கேட்கக்கூடாது... அவளாக ஒருநாள் கூறுவாள்" என்றவன், அவளை இழுத்து முன்நெற்றியில் இதழ் பதித்து சென்று விட்டான்...

சிறிது நேரம் அவர்களது உரையாடலை "ஆ"வென பார்த்திருந்த டேவிட்,

"உண்மையிலே உனக்கேற்றவர் தான் மாளவிகா... நீ உருகி உருகி காதலிக்க அவரிடம் என்ன இருக்கிறது என்று நினைத்தேன்! இப்போது புரிந்து கொண்டேன்" என்றவாறு காருக்கு சென்றான்...

இரு குடும்பமும் ஸ்தம்பித்து நிற்க, மாளவிகா அனைவர் முன்பும் தலைகுனிந்து நின்றாள்... டேவிட்டும் உடன்வந்தப் பெண்ணும் சென்றுவிட, மாளவிகா அனைவரையும் சுற்றிப் பார்த்து விட்டு அவசரமாக அருளின் காரில் ஏறினாள்... எந்த உரையாடலும் இல்லாமல், கார் மௌனமாக பயணித்தது...

குடும்பத்தாரின் இதயங்கள் பாரமேறிக் காணப்பட்டது... பாப்பாவாது நன்றாகவே வாழ்கிறாள் என எண்ணியவர்களுக்கு, அருளின் பேச்சும் டேவிட்டின் பேச்சும் குழப்பத்தைக் கொடுத்தது... கனத்த இதயத்துடன் சென்றனர் அவரவர் வீட்டுக்கு...

அருளின் கார் சரவணனின் வீட்டுக்குள் நுழைந்தது... இதுவரை அந்த வீட்டைப் பார்த்ததில்லை என்பதால், யோசனையோடே அருளின் பின் நடந்தாள் பாப்பா...

அங்கு சரவணனைக் கண்டதும் முகம் பிரகாசமாகியது...
"சரவணா அண்ணா... நீங்கள் ஏன் என்னை அழைக்க வரவில்லை?" உரிமையுடன் கேட்டாள் பாப்பா

"நான் அழைக்க வருவதற்கு நீ என்ன என் நண்பனின் மனைவியா பாப்பா?"

"நான் உங்களுக்குத் தங்கை என்பது மறந்துவிட்டதா அண்ணா?"

"அந்தத் தங்கை என்னும் உறவு, என் நண்பனின் மனைவி என்ற உரிமையில் வந்தது கூட ஞாபகம் உள்ளது பாப்பா"
அவர்களின் உரையாடலைக் காதில் வாங்காமல் அமைதியாக அமர்ந்து இருந்தான் அருள்...

அருளைத் திரும்பி முறைத்தவள், மீண்டும் சரவணனிடம் திரும்பி
"உங்களுக்கு என்ன வேண்டும்? ஏன் மனதைக் காயப்படுத்துகிறீர்கள் அண்ணா?"

"எனக்கு உண்மை வேண்டும்... என்றுமே நிழலாக இருக்க விரும்பும் தங்கை எனக்கு வேண்டாம்... நிஜம் வேண்டும்"

"எனக்கு நீங்கள் கூறுவது எதுவும் புரியவில்லை"

"சரி பாப்பா... இதுவரை நீ எனக்கு எவ்வளவோ விஷயங்களைக் கற்றுக் கொடுத்தாய் அல்லவா?! இன்று நான் உனக்கு சில விஷயங்கள் சொல்லிக் கொடுக்கவா?"

"இன்ட்ரெஸ்ட்டிங்... கூறுங்கள் அண்ணா"

"அதாவது குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இல்லாத பெண்ணுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் வாடகைத்தாய்... ஆனால் சிலபேர் வியாபார நோக்கத்துக்காக வாடகைத்தாய் முறையை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்... அதற்காகத்தான் இப்போது ஒரு மசோதா உருவாக்கி இருக்காங்க... அதுல நிறைய benefitsயும் இருக்குது...
அதாவது, வாடகைத்தாயா இருக்கிறவங்களுக்கு பதினாறு மாதம் insurance அப்படி இப்படினு ஏகப்பட்ட நல்லதுகளும் இருக்குது... ஆனால் வாடகைத்தாயா இருக்கிறவங்களுக்கு கன்டிஷன்ஸ் போட்டு இருக்காங்க...

திருமணமாகி குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த இந்தியத் தம்பதிகள், வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம். குழந்தை பெற்றுத்தரும் வாடகைத் தாய், குழந்தை பெற விரும்பும் தம்பதியின் உறவினராக இருக்க வேண்டும். வாடகைத் தாயாக இருப்பவர், திருமணமாகி குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும்; ஒருமுறை மட்டுமே, வாடகைத் தாய் முறையில் அவர் குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தை தேவைப்படும் தம்பதியரில் பெண்ணுக்கு 23 - 50 வயதுக்குள்ளும் ஆணுக்கு 26 - 55 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்...

ஒரு பெண், ஒரேயொரு முறை மட்டுமே வாடகைத் தாயாக இருக்க வேண்டும். அவ்வாறு வாடகைத் தாயாக இருக்கும் பெண், உறவினராக இருக்க வேண்டும்; திருமணமானவராக இருக்க வேண்டும்; அவருக்கு ஏற்கெனவே குழந்தை இருக்க வேண்டும். அவர் 25-35 வயதுடையவராக இருக்க வேண்டும். அவருக்கு உடல் மற்றும் மனநலம் தொடர்பான பிரச்னை இருக்கக் கூடாது. இவை அனைத்துத் தகுதிகள் இருந்தாலும் அவர் வாடகைத் தாயாக இருக்கச் சம்மதிக்க வேண்டும். இத்தனையும் ஒருவருக்கு அமையுமா என்பது கேள்விக்குறியே!"

அருள் மாளவிகாவை அழுத்தமாகப் பார்த்தான்... மாளவிகா குற்ற உணர்வில் தலைகுனிந்தாள்... பின் மெதுவாக,
"இப்போ எதுக்கு சரவணா அண்ணா இதெல்லாம் சொல்றீங்க?" எனக் கேட்க
பாப்பாவை முறைத்தவன்,

"ஒன்னும் இல்லை தங்கச்சி... இப்போ புது டிரெண்ட் வந்துருக்கு போல... சிலபேருக்கு வாடகைத்தாயா யாருமே கிடைக்கலைனு வைச்சுக்கோ, சும்மா டம்மி கல்யாணம் பண்ணி, ஆனா அவங்க குழந்தையைப் பெற்றுக்கொடுத்து, டிவோர்ஸ் வாங்குற மாதிரி வாங்கிட்டு வந்துடுறாங்க"

"ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க? யார் சொன்னது உங்ககிட்ட?"

"எதை?"

"அதான் நான் வாடகைத்தாய்னு"

"உன் புருஷன் சொன்னான்... அதாவது உன் ஒரிஜினல் புருஷன்... அருள் சொன்னான்... ஆமா நான் ஏதோ தெரிந்த தகவல்களை சொன்னேன்... நீ ஏதோ, டேவிட்டு உன் பிரெண்டு மாதிரியும், அவன் வொயிஃப்க்கு ஏதோ ப்ராப்ளம் போலவும், அவனுக்காக நீ சும்மா டம்மி கல்யாணம் பண்ணி, அவங்க புள்ளைய பெத்துக் கொடுக்கிறது போலவும் ரியாக்ட் பண்றே... சரிதானே பிரசாந்த்" கிண்டலாக சரவணன் கேட்கவும், முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மாளவிகா...

அமைதியாக எழுந்து ஒரு அறைக்குள் நுழைந்தான் பிரசாந்த்...
'சும்மாவே நம்ப மாட்டான்... இப்போ என்னை ஒன்னுமே சொல்லாம அமைதியா வேற இருக்கான்... என்ன ஆச்சு அருளுக்கு? நான் இப்போ எங்கே போறது? அவன் பின்னாடியே அவன் ரூமுக்கு போகவா? சரவணன் அண்ணா வீடா இது? ஏன் இங்கே வேற யாரும் இல்லை... நான் ஏன் இங்கே இருக்கேன்' அனைத்தும் கேள்விகளாய் இருந்தது பாப்பாவுக்கு...

"ஹலோ எக்ஸ்கியூஸ் மீ மை டியர் சிஸ்டர், சும்மாவே ஆடுவான்... இப்போ கால்ல சலங்கையைக் கட்டி விட்டு இருக்கு... சும்மாவா இருப்பான்னு யோசிக்கிறீயா? அப்படி நினைத்தால் ஃபார் யுவர் கைன்ட் இன்ஃபார்மேஷன், அவன் அவசரப்புத்தி பெண்கள் மீதான தவறான எண்ணம் எல்லாம் போயிடுச்சு... எதையுமே நிதானமாக ஹேண்டில் பண்றான்... இது எல்லாத்துக்கும் காரணம் அவனோட பாப்ஸ் தான்... ஆனால் அவன் சந்தோஷமும் அவனை விட்டு போயிடுச்சு... அதுக்கும் முழு காரணமும் அவனோட பாப்ஸ் தான்..." என சரவணன் கூறவும் கண் கலங்கினாள் பாப்பா...

அதற்குள் அறையில் இருந்து வெளியே வந்தவன்,"டேய் சரவணா, உன் தங்கச்சி புள்ளைத்தாச்சி பொண்ணு... ஏன் கண் கலங்க விடுறே? ஆங்... மாளவிகா... உங்களுக்கு இந்த ரூம் அரேன்ஜ் பண்ணி இருக்கேன்... யூஸ் பண்ணிக்கோங்க... சரவணா வீடு தான் இது... எப்போ உங்க வீட்டுக்கோ அல்லது நம்ம வீட்டுக்கோ போகனும்னு தோணுதோ, அப்ப சொல்லுங்க... கூட்டிட்டு போறேன்... ஃப்ரீயா இருங்க... ரொம்ப நேரம் ஆச்சு... தூங்குங்க... குட்நைட்" தனது உரையை முடித்துக் கொண்டான் பிரசாந்த்...

'ஆளே மாறிட்டான்... இவ்ளோ பொறுமையா பேசறான்... நமக்கு மரியாதை வேற, கோபமா இருக்காராம்... இருக்கட்டும் இருக்கட்டும்' என நினைத்தவள் எதுவுமே கூறாமல் அந்த அறைக்குள் சென்றாள்...

"எப்படிடா அது உன் குழந்தை இல்லைனு சொன்னே? மே பி.. உன்னோடதாவும் இருக்கலாமே"

"இல்லை... நிச்சயமாக அது என் குழந்தை இல்லை... அவ எல்லார்கிட்டவும் பேசிட்டு இருந்தாலும், அவளோட கண்கள் என்னை மட்டும் தான் பார்த்துச்சு... அவ வாயில இருந்து 'என் குழந்தை' அப்படினு கூட வரலை... இந்தக் குழந்தை தான் சொன்னா... அதுவும் போக நாமதான் டேவிட் பற்றி விசாரித்தோமே... அவனோட வொயிஃப்பைத் தவிர எந்தப் பெண்ணுக்கும் அவன் லைஃப்ல இடமில்லை... 'என் லவி' என்னை மட்டுமே காதலித்தவள்... என் நிழல் அவள்... சோ, அவளாக வாயைத் திறந்து சொன்னால்தான் புரியும்... அதுவரைக் காத்திரு சரவணா... அவளை ரொம்ப வருத்தப் படுத்தாதே... நான் என்று அவள் வாழ்வில் நுழைந்தேனோ, அதிலிருந்து பல வருடங்களாக துன்பத்தை மட்டுமே அனுபவிக்கிறவள்"

"நிச்சயமாக பிரசாந்த்... உன்னை வருத்தப்பட வைத்து விட்டாளே என்ற கோபம் தான் எனக்கு... மற்றபடி அவள் எப்போதும் என் தங்கை தான்" தோளில் கை போட்டான் சரவணன்... இருவருக்குமே நிச்சயமாக என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்றாலும், பாப்பா எது செய்தாலும் ஒரு காரணம் இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது...
 
Advt

Advertisements

Top