1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.

#45
அருமையான பதிவு
முக்கியமாக இந்த உணவு பழக்கம்
எப்போதாவது ஒரு முறை ஹோட்டலில் இருந்து
வாங்கவே யோசிப்பாங்க இப்ப வீட்டில்
சமைக்க யோசனை
பீட்ஸா பர்க்கர் நூடுல்ஸ் பாக்கெட்டுகளில்
போட்ட உணவுகள் எல்லாம் காலத்தின் கட்டாயம்
 
#46
அருமையான பதிவு
முக்கியமாக இந்த உணவு பழக்கம்
எப்போதாவது ஒரு முறை ஹோட்டலில் இருந்து
வாங்கவே யோசிப்பாங்க இப்ப வீட்டில்
சமைக்க யோசனை
பீட்ஸா பர்க்கர் நூடுல்ஸ் பாக்கெட்டுகளில்
போட்ட உணவுகள் எல்லாம் காலத்தின் கட்டாயம்
Crt dear, kaalathin katayam yaru uruvakkunanga naama dhane , naam manam vaithal mudiyathathu yethvum ellai dear:love:
 
#47
1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!

1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.

♥1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…

♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.

♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.

♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…

♥ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…

♥பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…

♥விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…

♥மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…

♥உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…

♥மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…

♥வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…

♥அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…

♥ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…

♥அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…

♥ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…

♥ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…

♥ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…

♥உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…

♥தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…

♥ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது… அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்…

♥பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…

♥10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…

♥யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…

♥நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…

♥பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…

♥10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…

♥போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…

♥வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…

♥வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…

♥ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…

♥10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…

♥10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…

♥பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…
♥கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…

♥பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…

♥தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…

♥12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…

♥இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…

♥உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…

படித்ததில் பிடித்தது
😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌
 
#49
அருமையான பதிவு
முக்கியமாக இந்த உணவு பழக்கம்
எப்போதாவது ஒரு முறை ஹோட்டலில் இருந்து
வாங்கவே யோசிப்பாங்க இப்ப வீட்டில்
சமைக்க யோசனை
பீட்ஸா பர்க்கர் நூடுல்ஸ் பாக்கெட்டுகளில்
போட்ட உணவுகள் எல்லாம் காலத்தின் கட்டாயம்
ஆமாப்பா நான் எல்லாம் எனக்கு எப்போது ஜுரம் வரும் என்று ஏங்கி இருக்கிறேன், ஜுரம் வந்தால் தான் ஹோட்டலில் இருந்து இட்லி சாம்பார் வாங்கி கொடுப்பார்கள் என்று காத்து இருக்கிறேன், அந்த ஹோட்டல் இட்லி சாம்பார் சூப்பரா இருக்கும் அம்மாவிடம் கூட ஏம்மா சாம்பார் அந்த மாதிரி ருசியாக இல்லை கேட்டு இருக்கிறேன், கடலை மாவை கரைத்து செய்ற சாம்பார் உனக்கு நல்லா இருக்கா என்று திட்டும் வாங்கி இருக்கிறேன் ம் அதெல்லாம் ஒரு காலம் வசந்த்&கோ காலம் மாதிரி
 
#50
நியாபகம் வருதே தான். அருமை அருமை. தரையில் இருந்து சாப்பிடுவது, கோயில் திருவிழாக்கள், எல்லா வீடுகளிலும் டீவி இருக்காது. டீவி இருக்கிறவங்க வீட்டில போய் படங்கள் பார்ப்பது, அல்லது டீவி, டெக்(வீ சீ ஆர்) வாடகக்கு எடுத்து அக்கம் பக்கம் சேர்ந்து பார்ப்பது. அம்மாக்கள் வீட்டு வாசலில் விளக்கு வைக்கும் வரைக்கும் அரட்டை அடிப்பது. அப்பாக்கள் கோயிலிலோ கோயில் மடத்திலோ கூடி அரசியல் விவாதங்கள் செய்வினம். ஊருக்குப் போயிட்டு வாற அப்பாவோ, மாமாவோ கொண்டுவாற சாக்லேட், பிஸ்கட்டுக்களுக்கு எதிர்பார்ப்பு, அடிபாடு. கோயிலுக்கு வெயிலில் வெறும் காலில் போகும் போது நிழல் வராதா வந்தால் அந்த நிழலில் கால் வைச்சுப் போறதுக்கு நீ நானு போட்டி வேற. இன்னும் பல. அப்போ அன்பு பாசம் ஜாஸ்தி. போலி இல்லை. இப்போ வசதி வாய்ப்பிருக்கு எல்லாமே போலி வேசம் என்று போகுது.
1553305951904.png
 

Find SM Tamil Novels on mobile

Latest Episodes

New comments

Mobile app for XenForo 2 by Appify
Top