• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

2. Roja poo

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
எத்தனை நேரம் அப்படியே இருந்தாளோ தெரியாது கீழிருந்து அம்மாவின் குரல் கேட்டது.

"வந்து டிஃபன் சாப்பிட்டுட்டு போயி நீ என்ன வேணும்னா செய்யி." என்றாள். அப்போது தான் தான் இன்னமும் குளிக்கவில்லை என்பதை உணர்ந்து அவசரமாகக் குளித்து விட்டு கீழே இறங்கினாள்.

"ஏன் இத்தனை நேரம்" என்ரார் அப்பா.

"வேற என்ன பாட்டி கிட்டப் பேசிக்கிட்டு இருந்திருப்பா! ஹூம்! காவ்யாவைப் பார்க்குறதுக்காக ரெண்டு வருஷம் உங்கமா வீட்டுல இவளை விட்டது தான் நான் செஞ்ச தப்பு. உங்கம்மா என்னென்னவோ சொல்லிக்குடுத்து இவ மனசை மாத்திடாங்க! எல்லாம் என் தலையெழுத்து. வயசு 80 ஆகுது ஆனா இன்னமும் நல்லா இருக்கு" என்றாள் கோபமாக. பாட்டியைப் பற்றிச் சொன்னதும் கோவம் வந்ததும் உதயாவுக்கு.

"ஏம்மா பாட்டியைத் திட்டறீங்க? அவங்க இங்க வந்து உங்களுக்கு தொந்தரவு கொடுத்தாங்களா? அவங்க பாட்டுக்கு கிராமத்துல இருக்காங்க! பணம் கூட எதிர்பார்க்குறதில்ல. அப்புறமும் ஏன் திட்டறீங்க?" என்றாள்.

"கேட்டுக்கிட்டீங்களா? இவ என்ன பேசுறான்னு?" என்றாள் அம்மா சுப்பி ரத்தினத்தின் பக்கம் திரும்பி.

"நான் பேச வேண்டியதை அவ பேசிட்டா! பின்ன? நீ என் எதிர்லயே எங்கம்மாவைப் பேசுறியே? உன் வாய்க்கு பயந்து தான் அவங்க இங்கே வரதே இல்ல. அப்படியும் அவங்களை ஏன் தான் கரிச்சுக்கொட்டுறியோ?" என்றார். முணுமுணுவென ஏதோ சொல்லியபடி வேலை செய்தாள் அம்மா.

"அப்பா உங்க கிட்ட நான் முக்கியமான விஷயம் பேசணும்"

"சொல்லு உதயா"

"நான் சொந்தமா கம்பெனி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்னு சொன்னேன் இல்ல? அதுக்கு கிட்டத்தட்ட 10 கோடி ரூவா தேவைப்படுது. லோன் குடுக்க சில வங்கிங்க கிட்ட பேசுனேன். அவங்க தாராளமா தரேன்னு சொல்லிட்டாங்க! ஆனா குறைஞ்சது என் கையில பத்து லட்சமாவது வேணும். அதை வெச்சு நான் முதல்ல வேலையை ஆரம்பிச்சுட்டேன்னா அப்புறமா அவங்க தருவாங்க"

"அதுக்கு?"

"எனக்குக் கல்யாணம் செய்யணும்னு நீங்க பணம் சேர்த்து வெச்சிருப்பீங்க இல்ல? அதுல இருந்து 5 லட்சம் தாங்க. நான் வேலை பார்த்து சேர்த்து வெச்சதை போட்டுக்கறேன். எப்படியும் ரெண்டு வருசத்துல திருப்பிக் கொடுத்திருவேன். சரியாப்பா?" என்றாள் கெஞ்சலாக.

பாய்ந்து வந்தாள் அம்மா.

"எப்படி எப்படி? சேர்த்து வெச்சிருக்குற பணத்தை உங்கிட்ட குடுக்கணுமா? அதை வெச்சு நீ கம்பெனி ஆரம்பிக்கப் போறியா? ரொம்ப நல்லா இருக்குடி நீ சொல்றது. போட்ட பணம் வரும்னு என்ன நிச்சயம்? அது தான் போகட்டும்னா நீ 10 கோடி கடன் வேற வாங்கப்போறேன்னு சொல்ற? எனக்கு வயத்தைக் கலக்குது. நாளைக்கே பிசினசுல நஷ்டமாச்சுன்னா நீ ஜெயிலுக்குத்தான் போகணும். என்னங்க? அவ பேசறான்னு நீங்களும் கேட்டுக்கிட்டா இருக்கீங்க?" என்றாள் சத்தமான குரலில்.

"அம்மா! அவளுக்கு அப்பா 5 லட்சம் கொடுத்தாருன்னா எனக்கும் தரணும் சொல்லிட்டேன்" என்றாள் அக்கா காவ்யா.

"ஏங்க்கா போட்டிக்குன்னே கேக்குற? அஞ்சு லட்சத்தை வெச்சு நீ என்ன பண்ணப் போற?"

"ஏன் நீ மட்டும் தான் பிசினஸ் செய்யலாமா? நான் செய்யக் கூடாதா? சொந்தமா நான் ஏதாவது செய்வேன். உனக்கென்ன?" என்றாள்.

"நீ என்ன செய்யப் போறேன்னு உனக்கே தெரியாது. இப்ப வேணும்னே எனக்குப் பணம் கிடைக்கக் கூடாதுன்னே பேசுறியா? உனக்கு ஏன் இப்படி ஒரு புத்தி?" என்றாள் உதயா கோபமாக. அம்மாவுக்கு கோபம் வந்து விட்டது.

"நானும் காலையில் இருந்து பார்த்துக்கிட்டே இருக்கேன் நீ இவ கிட்டயே வம்புக்கு வர! காவியா வெறுமே ஹோம் சயின்ச் தான் படிச்ச்சா. ஆனா உனக்கு எஞ்சினியரிங்குன்னு பணத்தை கொட்டினோம். இப்ப அவ ரூவா கேட்டா போட்டின்னு நீ சொல்ற? உனக்கு பத்து காசு கூடத் தர முடியாது. உன்னால என்னடி செய்ய முடியும்?" என்றாள் அம்மா ஆங்காரமாக.

"அப்பா நீங்க என்ன சொல்றீங்க?"

"அவரு என்னடி சொல்றது? நான் சொல்றேன். உனக்குக் கல்யாணம் இப்ப வேண்டாம்னா போ! நாங்க கட்டாயப்படுத்தல்ல. ஆனா கல்யாணத்துக்குன்னு சேர்த்து வெச்சிருக்குற பணத்தை உனக்குக் கொடுக்க முடியாது. ஏங்க சொல்லுங்களேன்" என்றாள் அம்மா.

"ஆமா உதயா! அம்மா சொல்றது சரின்னு தான் படுது. நீ உன் எண்ணத்தை மாத்திக்கோ" என்று சொல்லி விட்டு கை கழுவ எழுந்து சென்று விட்டார்.

மௌனம் நிவவியது அங்கு. எதுவும் பேசாமல் சாப்பிட்டாள் உதயா. அவளுக்கு பாட்டி கல்யாணியின் நினைவு கிளர்ந்தது. அந்தக் காலத்து மனுஷியாக இருந்தாலும் மிகவும் முற்போக்கான சிந்தனை உடையவர் அவர், பாட்டியைப் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. போய் வந்தால் என்ன? என்று நினைத்தாள். கல்யாணிப்பாட்டியின் அன்பான கனிவான முகம் வந்து ஆடியது. பாட்டி வீட்டுக்குப் போவது எனத் தீர்மானம் செய்து கொண்டு எழுந்தாள் உதயா.

"அப்பா நான் பாட்டி வீட்டுக்குப் போய் ரெண்டு நாள் இருந்துட்டு வரேன். நாளைக்கே கிளம்புறேன்." என்றாள். அவரை ஏறிட்டுப்பார்த்தார் அப்பா. தலையசைத்து சம்மதம் சொன்னார்.

"இதைப்பாரு உதயா! காலம் கெட்டுக்கெடக்கு. நீ தனியாப் போறேன்னு சொல்ற! அதனால டே பஸ்ல தான் போகணும். இல்லைனா டிரெயின்ல போ" என்றாள் கண்டிப்பாக.. அதன் படி தத்காலில் புக் செய்து மறு நாளே கிளம்பினாள். பாட்டியின் கிராமம் நெல்லை மாவட்டத்தின் தென் கோடியில் உள்ள ஆழ்வார்குறிச்சி என்னும் சின்னஞ்சிறிய ஊர். பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அந்த ஊரில் மிதமான காற்று எப்போதும் வீசிக்கொண்டிருக்கும். மொத்தமே 2000 பேர் இருந்தால் அதிகம். ஒருவருக்கொருவர் நன்றாகவே தெரிந்து கொண்டு மாமன் மச்சான் சித்தப்பா சித்தி என்று உறவு முறை சொல்லியழைத்து இன்னமும் பழைய பண்பாட்டிலேயே வாழும் ஒரு கிராமம் அது. தென்காசி வரையில் பொதிகை எக்ஸ்பிரெசில் வந்த அவள் அங்கிருந்து பஸ் பிடித்து ஆழ்வார்குறிச்சி வந்து இறங்கும் போது மணி பதினொன்று ஆகி விட்டது.

பஸ் ஸ்டேண்டில் இறங்கிய உதயாவைப் பார்த்ததும் பாலாஜி ஓடியே வந்தான். ஆழ்வார்குறிச்சியில் உதயாவின் நல்ல நண்பன் அவன். அப்பபோது தான் பதினொன்றாவது படிக்கும் பாலாஜி தான் பாட்டிக்கு எல்லா உதவியும் செய்வான். உதயாவுக்கும் வலக்கரம் அவன் தான்.

"வாங்கக்கா! இப்பத்தான் வரீங்களா? எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க?" என்றான் பையை சுமந்தபடி.

"மறக்காம இதை மட்டும் கேளு! உனக்குப் பிடிச்ச மைசூர்பாகு கேக்கு எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன். ஏண்டா நான் எப்படி இருக்கேன்னு கேக்கல்ல? பாட்டி எப்படி இருக்காங்கன்னு சொல்லல்ல! எதுவுமே கேக்காகம திங்கறதுலேயே இரு" என்றாள் செல்லமாக.

"பாட்டி நல்லா இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியும். நீங்களும் நல்லா இருக்குறதால தானே ஊருக்கு வந்துருக்கீங்க? அப்புறம் எதுக்குக் கேக்கணும்? என்றான் இளித்தபடி. அவன் தலையில் செல்லமாகக் கொட்டி விட்டு நடந்தாள், தெருவுக்குள் நுழையும் போதே "உதயாக்கா வந்திருக்காங்க! உதயாக்கா வந்திருக்காங்க" என்று கத்திக்கொண்டே சென்றான். எப்போதுமே அவன் அப்படித்தான் செய்வான் என்பதால் சிரித்தபடி பாட்டி வீட்டில் நுழைந்தாள். அந்த 80 வயதிலும் கம்பீரம் குறையாமல் ஆரோக்கியமாக வாழும் தன் பாட்டியை அணைத்துக்கொண்டாள் உதயா.

"இந்த வயசுலயும் சூப்பரா இருக்கீங்க பாட்டி! " என்றபடி வாங்கி வந்திருந்த சேலை பழங்களைக் கொடுத்தாள். வாங்கிக்கொண்டாள் பெரியவள்.

"கண்ணு! நேத்துலருந்து எனக்கு உன் நினைப்பாவே தான் இருந்தது. நீ வருவியோயோன்னு தோணிச்சு. அதான் உனக்குப் பிடிச்ச புளிக்குழம்பும் பீர்க்கங்காய்க் கூட்டும் செய்து வெச்சிருக்கேன். குளிச்சிட்டு வா! சேர்ந்து சாப்பிடலாம்" என்றாள். பாட்டி அன்பாக.

"ஏன் பாட்டி மணி 11:30 தானே ஆகுது? அதுக்குள்ளே என்ன சாப்பாடு ? நீங்க சமைச்சு முடிச்சுட்டீங்களா?" என்றாள் பாட்டியின் கைகளைப் பிடித்தபடி.

"இன்னைக்கு நீ வருவேன்னு என் மனசு சொல்லிக்கிட்டே இருந்தது உதி! அதான் சீக்கிரமே சமைச்சு வெச்சுட்டு காலை டிஃபன் கூட சாப்பிடாமக் காத்திருக்கேன். சரி சரி போயி குளிச்சுட்டு வா. சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம். என்னடா பாலாஜி! எக்சாம் முடிஞ்சதா?"

"முடிஞ்சது பாட்டி நான் நல்ல மார்க்கு வாங்கிருயிருக்கேன். ஆனா எங்கப்பா தான் திட்டிக்கிட்டே இருக்காரு. கனக்குல கொஞ்சம் குறைஞ்சு போச்சு. அதுக்குப் போயா திட்டுவாங்க?" என்றான் முறையிடும் தொனியில்.

"திட்டுனாங்க சரி! ஆனா நீ ஏன் கணக்குல மார்க்கு குறைஞ்ச? ஏதாவது ட்யூஷன் வெச்சுப் படி. நல்ல மார்க்கு வரும். உங்கம்மா நீ படிச்சு பெரிய ஆளா வருவேன்னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்காடா! அதை நீ காப்பாத்தணும் புரிஞ்சதா?இப்ப ஓடு. நான சாயங்காலமா அக்காவை பலகாரம் எடுத்துத்தரச் சொல்றேன்" என்றாள். ஓடி விட்டான் அவன் . குளித்து விட்டு வந்து சுவையான உணவை முடித்துக்கொண்டு ஓய்வாக அமர்ந்திருந்தார்கள் பாட்டியும் பேத்தியும்.

"என்ன விஷயம்னு சொல்லு உதி! எதுவானாலும் நான் உங்கப்பா கிட்ட பேசுறேன்" என்றாள்.

"நான் ஒரு பிரச்சனையோடத்தான் வந்திருக்கேன்னு உங்களுக்கு எப்படி பாட்டி தெரியும்?" என்றாள் ஆச்சரியத்தோடு. சிரித்தாள் முதியவள்.

"இது கூடத் தெரியாட்டி நான் 80 வருஷம் வாழ்ந்து என்ன பிரயோசனம் சொல்லு? உங்கப்பன் என்ன் செஞ்சான் இல்லை உங்கம்மா ஏதாவது சொன்னாளா?" என்றாள்.

"ரெண்டுமே தான் பாட்டி! என்னைக் கல்யாணம் செஞ்சுக்க சொல்லி வற்புறுத்துறாங்க! ஆனா நான் தொழில்ல சாதிச்சுட்டு தான் செஞ்சுப்பேன்னு சொன்னேன். அதுக்குக் கன்னா பின்னான்னுன்பேசுறாங்க! காவ்யாவும் கூட சேர்ந்துக்கிட்டா!" என்று ஆரம்பித்து சொல்லி முடித்தாள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டாள் கல்யாணிப் பாட்டி.

"உதிக்கண்ணு! நீ அவங்க கிட்ட சொன்னது இருக்கட்டும். நானே கேக்குறேன். நீ உன் மனசுல நெனச்சிருக்குறதை சொல்லும்மா! நான் புரிஞ்சுக்கப் பார்க்கிறேன்." என்றாள் இதமாக.

உதயாவின் மனம் மௌனமாக யோசித்தது. சுப்பு ரத்தினம் எனப்படும் தந்தை இந்த பாட்டி பெற்ற மகனா? இருவருக்கும் தான் எத்தனை வேற்றுமைகள். அன்பே உருவான பாட்டி எங்கே? எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் அவர் எங்கே? அன்பாகப் பேசவே தெரியாதா அவருக்கு என்று யோசித்தாள்.

"என்ன யோசிக்குற கண்ணு?"

"இல்ல பாட்டி எங்கப்பாவை நீங்க தானே பெத்தீங்க? நீங்க எவ்வளவு அன்பாப் பேசுறீங்க? ஆனா அவரு எப்பப் பார்த்தாலும் ஏன் எரிஞ்சு விழுறாரு?" என்றாள் வருத்தத்தோடு. கண்களை மூடிக்கொண்டாள் முதியவள்.

"உங்கப்பா எப்பவுமேவா அப்படி இருக்கான்? நல்லா யோசிச்சு சொல்லு?" என்றாள். மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள்.

"இல்லை பாட்டி சொல்வது போல எப்போதும் அப்படி இருப்பதில்லை. பீச்சில் நடைப்பயிற்சிக்குப் போகும் போது கூட அன்பாகத்தானே பேசினார்? அப்புறம் எப்போது மாறினார்? இன்னும் யோசித்துப் பார்த்தால் அப்பா எரிந்து விழவே இல்லை. அம்மா தான் சதா சிடுப்புடன் இருந்தாள். அப்பா வாயே திறக்காமல் தானே இருந்தார்? ஆனால் ஏன் அப்படி இருக்க வேண்டும்? தனது இளைய மகளுக்கு பரிந்து பேசக் கூடதா?" என்று எண்ணிக் கொண்டாள்.

"என்ன உதி? பேசாம இருக்க?"

"நீங்க சொல்றதை யோசிச்சுப் பார்த்தா அப்பா அன்பாத்தான் இருக்காருன்னு தோனுது. ஆனா அம்மா எப்பவுமே ஒரு சிடுசிடுப்போடவே இருக்காங்களே அது ஏன்னு தான் புரியல்ல"

புன்னகைத்து பேத்தியின் கைகளை தனது கைக்குள் எடுத்து வைத்துகொண்டாள் பாட்டி.

"ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க உதி! உங்கம்மா கொஞ்சம் படபடன்னு பேசுவா. கல்யாணமான புதுசுல உங்கப்பாவுக்கும் அவளுக்கும் எப்பப் பார்த்தாலும் சண்டை வரும். உன்னை மாதிரியே தான் அவன் வந்து என்னைக் கேப்பான். கல்யாணம் ஆனா உன்னை புகுந்த வீட்டுக்காரங்க மதிக்க மாட்டாங்க! ஆரம்பத்துல இருந்தே நீ கண்டிப்பா இருன்னு சொல்லி அனுப்பியிருக்காங்க! அதனால உங்கம்மாவுக்கு எல்லாமே தன் விருப்பப்படி நடக்கணும்னு ஆழ்ந்த எண்ணம் வந்துருச்சு. நான் என்ன தான் அவ கிட்ட அன்பா நடந்துக்கிட்டாலும் என்னை சந்தேகத்தோடயே தான் பார்ப்பா. நானும் விட்டுக்கொடுத்துட்டேன். என் மகனும் அமைதியா போயிட்டான். ஆனா அவனுக்கு தன் ரெண்டு பொண்ணுங்க மேலயும் அத்தனை பாசம் உண்டும்மா" என்று அழகாகப் பேசினாள் முதியவள். ஒரு நிமிடம் கண்கள் கலங்க அந்த அன்பு தேவதையின் மடியில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள் உதயா.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க உதி! உங்கம்மா கொஞ்சம் படபடன்னு பேசுவா. கல்யாணமான புதுசுல உங்கப்பாவுக்கும் அவளுக்கும் எப்பப் பார்த்தாலும் சண்டை வரும். உன்னை மாதிரியே தான் அவன் வந்து என்னைக் கேப்பான். கல்யாணம் ஆனா உன்னை புகுந்த வீட்டுக்காரங்க மதிக்க மாட்டாங்க! ஆரம்பத்துல இருந்தே நீ கண்டிப்பா இருன்னு சொல்லி அனுப்பியிருக்காங்க! அதனால உங்கம்மாவுக்கு எல்லாமே தன் விருப்பப்படி நடக்கணும்னு ஆழ்ந்த எண்ணம் வந்துருச்சு. நான் என்ன தான் அவ கிட்ட அன்பா நடந்துக்கிட்டாலும் என்னை சந்தேகத்தோடயே தான் பார்ப்பா. நானும் விட்டுக்கொடுத்துட்டேன். என் மகனும் அமைதியா போயிட்டான். ஆனா அவனுக்கு தன் ரெண்டு பொண்ணுங்க மேலயும் அத்தனை பாசம் உண்டும்மா" என்று அழகாகப்
charactersoda unarvugalai alagagapadam pidithu katti irukireerargal.nice writing(y)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top