20 நிழலின் காதல்

#1
காலையில் எழுந்து வந்த பாப்பாவுக்குத் தலை சுற்றியது போல் இருந்தது... நேற்று இரவு சாப்பிடவில்லை என்பதே இப்போது தான் நினைவுக்கு வந்தது... தான் சரவணன் வீட்டில் இருக்கிறோம் என்று நினைவு கூர்ந்தவள், மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தாள்...
சாப்பிடாமல் இருந்த மயக்கமும், ஜெட்லாக் (jet lag- அதாவது தூக்க நேரம் மாறுபடுவது, பகல் இரவு அமெரிக்காவிலும் இந்தியாவிலும் மாறி மாறி இருப்பதால் வரும் ஸ்லீப்பிங் டிஸ்ஆர்டர்)யும் சேர்ந்து அவளைத் தள்ள, கீழே விழப் போனவளை பின்னிருந்து தாங்கிப் பிடித்தான் அருள்...

"ஏய் லவி... பார்த்து... வயிற்றில் பாப்பா இருக்கும் போது இப்படி செய்யலாமா? நீ ஏன் எழுந்து வந்தாய்? என்ன வேண்டுமானாலும் என்னைக் கேள்" உரிமையாகக் கடிந்து கொண்டான் அருள்...

"அருள்... அது திடீரென தலைசுற்றியது... அவ்வளவு தான்"

"என்ன இவ்வளவு அசால்ட்டாக சொல்றே? இன்னைக்கு மார்னிங் டாக்டர் கிட்ட போலாமா? இரு அப்பாயின்ட்மென்ட் ஃபிக்ஸ் பண்றேன்"

"தேவையில்லை அருள்... டேவிட் டாக்டர் தான்... அப்றமா கால் பண்ணி வரச் சொல்கிறேன்"

"ஆர் யூ ஓகே?"

"ம்ம்ம்... எஸ்"

"சரி வா... பால் கொண்டு வருகிறேன்... உனக்கு சத்தாக எப்படி சமைக்க வேண்டும் என்று எனக்குத் தெரியாது... ஆனால் நானே ஏதாவது செய்து தருகிறேன்... கடையில் எல்லாம் வேணாம்... ஓகே வா? அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டுக்கோ" என்று பேசியபடியே, அவளது தோளில் கைபோட்டு, தன்னோடு ஒட்ட நிற்க வைத்தவன் இயல்பாக அவளுடன் நடக்க, பாப்பாவுக்குத் தான் அது புரியாத உணர்வாக இருந்தது...
பாப்பாவின் சங்கடத்தைத் தவிர்ப்பதற்காகவே வந்தது போல அங்கு வந்தார் இந்திராணி...

"என்னடா பிரசாந்த்? நாங்க எல்லாம் இல்லையோ? எங்க மருமகளை நாங்க பார்த்துக்க மாட்டோமோ?"

"அத்தை..."

"அட நீ சும்மா இரும்மா... லூசுப் பையன்... பிள்ளைதாய்ச்சிப் புள்ளைய இழுத்துட்டு இங்கே வந்துட்டான்... நீ வா... நம்ம வீட்டுக்குப் போலாம்... நான் கவனிச்சுக்குறேன் உன்னை"

"அது... அது வந்து... அத்தை... குழந்தை"

"நீ பிரசாந்த்தோட பொண்டாட்டி தானே... என் புள்ளை அவன் பொண்டாட்டி கிட்ட யாரும் எதுவும் கேட்கக்கூடாது சொல்லி இருக்கான்... யாரும் கேட்க மாட்டோம்... வாம்மா"
அதற்கு மேல் மறுக்க முடியாமல், அருளை நோக்கிப் பார்த்தாள்... அருளோ, நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல நிற்க, பாப்பா ஒத்துக் கொண்டாள்...

"ஏன் அம்மா உங்களுக்கு இப்படி ஒரு எண்ணம்? சரி, நம்ம தங்கச்சி நம்ம வீட்டுக்கு வந்து இருக்கு... கொஞ்சம் நல்ல சாப்பாடு சாப்பிடலாம்னு கனவுல இருந்தேன்... அதுக்குள்ள ஏன்மா வந்தீங்க? அடப் போங்கம்மா" என அலுத்துக் கொண்டான் சரவணன்

மீண்டும் அனைவரும் கிளம்பி அருளின் இல்லத்திற்குச் செல்ல, அருளோ பாப்பா நடக்கும் போது அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டு தான் நடந்தான்... பாப்பாவுக்கு தான் அருளின் அருகாமை, எல்லா உணர்வுகளும் கலந்த ஒரு உணர்வைக் கொடுத்தது...
இந்திராணி ஒரு வகையில் மருமகளைத் தாங்குவதோடு, ஒருநாள் விட்டு ஒருநாள் கஷாயம் செய்து கொடுத்து, குழந்தையையும் கவனித்தார் வயிற்றில் இருக்கும் போதே...

அருளோ, பாப்பாவை விட்டு விலகாமல் பாப்பாவுடனேயே இருந்தான்... இரவு தூங்கும் போது கூட அருளின் பிடி பாப்பாவை விட்டு விலகவே இல்லை...

அடிக்கடி இயற்கை உபாதையைக் கழிக்க பாப்பா எழுந்தால், அவள் திரும்பி வரும் வரை அவளுக்காக காத்திருந்தான் பிரசாந்த்... அருள் பிரசாந்த்தின் நடவடிக்கையில் பாப்பாவுக்கு அருளின் மீதான காதல் பலமடங்கு அதிகமானது...

இருவருமே நடந்து முடிந்ததைப் பற்றிப் பேசவேயில்லை...
பிரசாந்த் இப்போது எல்லாம் ஆபிஸ்க்கு செல்வதே இல்லை... ஆபிஸில் மாலினிக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது... மாலினியே ஆபிஸ் வேலைகளை முடித்து விடுவாள்...

டேவிட் ஒருநாள் விட்டு ஒருநாள், அருளின் வீட்டுக்கு வந்து, பாப்பாவை செக் செய்வான்... ஆனால் அருளின் வீட்டில் அனைவருமே டேவிட்டிடம் நல்ல முறையில் நடந்து கொண்டனர்...

இங்கு தனியாக விசாரித்துக் கொண்டு இருந்தான் சரவணன்... இதற்கு முன் டேவிட் எப்போதெல்லாம் இந்தியா வந்தான்? எனவும், டேவிட்டின் மனைவிக்கு சென்னை எனவும் அறிந்து கொண்டான்...
ஆனால் எவ்வளவு முயன்றும் பாப்பா ஏன் குழந்தை பெறப் போகிறாள்? என்பதைக் கண்டறிய முடியவில்லை...

ஒரு அவசர வேலையாக அருள் வெளியே சென்றிருக்க, பாப்பா ஒவ்வொரு குர்தாவையும் வயிற்றில் வைத்துப் பார்த்து, 'பத்தாது போலவே... இன்னும் இந்த வயிறு எவ்வளவு பெருசு ஆகுமோ? நான் ரொம்ப குண்டாகி விட்டேனோ?' என கண்ணாடியில் முன்னும் பின்னும் பார்த்து கூறிக்கொண்டு இருக்க, அங்கு அமைதியாக சோபாவில் அமர்ந்து அவளை ரசித்துக் கொண்டே இருந்தான் பிரசாந்த்...

உள்ளுணர்வு தோன்றவே திரும்பிப் பார்த்தவள், அருளைக் கண்டதும், நாக்கை வெளியே நீட்டியவாறே_
"வந்துட்டீங்களா?" என்க

"நீ என்னையும் பாரு... என் அழகையும் பாருன்னு ரசித்துக் கொண்டு இருக்கும் போதே வந்துட்டேன்"

அழகாக முகம் சிவந்தவள், "வந்ததும் சத்தம் கொடுத்து இருக்கலாமே" என்றாள் தரையைப் பார்த்தபடி,

"சத்தம் கொடுத்து இருந்தால் உன்னை ரசித்திருக்க முடியாதே... இந்த உன் வெட்கத்தையும் பார்த்திருக்க முடியாதே லவி"

"போச்சுடா... நீங்க ரொம்ப பேசறீங்க?"

"நீங்க ரொம்ப வெட்கப்படுறீங்களே மாளவிகா"

"எதுக்கு என்னை மாளவிகானு கூப்பிடுறீங்க? ஏதோ மூனாவது மனுஷியைக் கூப்பிட்டது போல இருக்கு"

"வேற எப்படி கூப்பிடுறது சயின்டிஸ்ட் மேடம்?"

"போங்க நீங்க... கிண்டல் பண்றீங்க"

"அப்போ நான் எப்படித்தான் கூப்பிடுறது? லவி சொல்லவா? பாப்பா சொல்லவா?"

"இரண்டுமே எனக்குப் பிடித்து இருக்கு... அஸ் எ ஹியூமன் பீயிங், எங்கே என்னையும் மாலுன்னு கூப்பிட்டு விடுவீங்களோனு பயம்... அதான் பாப்பா சொன்னதும், அதுதான் என் பேருன்னு சொன்னேன்... நீங்க லவின்னு கூப்பிட்டது வேற லெவல்... ரியலி லவ்ட் இட்"

"நான் கூப்பிட்ட பேரு மட்டும் தான் பிடித்திருந்ததா? லவி!"

"சாரி... அது... உங்களை எனக்கு" பாப்பா முடிக்கும் முன்னே அருள் தொடர்ந்தான்...

"தாய்மையில நீ ரொம்ப அழகா இருக்கிற லவி... உன்னோட முகம் ரொம்ப ஷைனிங்ஆ இருக்குது... இப்போ தான் இந்த முழு நிலவு முழுமையடைந்தது போல இருக்கு...
சில நேரங்களில் என்னை அறியாமல் உன் நெற்றியில் விழும் முடிகளை எடுத்து விட, கைகள் தானாக நீள்கிறது...
ஆனால் நீ எனக்குச் சொந்தமானவளா? இல்லையா? என்ற எண்ணம் வந்ததும், நீண்ட கைகள் தானாக கீழிறங்குகிறது...
எப்போதடி இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும்??!!"
கவிதை நயத்தோடு பேசினான் அருள்... கண்களில் இருந்தது மிதமிஞ்சிய காதலா? தாபமா? தெரியவில்லை...

திகைத்துப்போய் அருளையே பார்த்துக் கொண்டு இருந்தாள் பாப்பா... 'இந்தக் கவிதைகள் எல்லாம் பல வருடங்கள் கழித்து உன் வாயால் கேட்க வேண்டும் என்பது என் விதி போல' மனதுள் எண்ணிக் கொண்டாள் பாப்பா

"லவி... என் முழு காதலையும் உனக்கு மட்டும் வைத்திருக்கிறேன்... ஆனால் நான் எப்போது லவி என் காதலை உன்னிடம் கூறுவது? நான் உன்னிடம் நெருங்கும் நாள் நிச்சயமாக வரும்தானே? அதுவே தெரியலை... யோசித்து யோசித்து தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு லவி"

அருளை நெருங்கிய லவி, உரிமையுடன் அவன் மார்பில் சாய்ந்து, "நீங்கள் இவ்வளவு வருத்தப்பட நான் தான் காரணம் அருள்... மன்னிச்சிடுங்க... நாளைக்கே எல்லாம் சொல்லிடுறேன்... சாரி" என்றவள், உடனடியாக தங்கள் அறைக்குச் சென்று போனில் அழைத்தாள் டேவிட்டை...

"டேவிட்... 36 வீக்ஸ் கம்ப்ளீட் ஆனா ஆபரேட் பண்ணிடலாம்னு சொன்னல... டுமாரோ மார்னிங் உன் வொயிஃப் கூட்டிட்டு வா... எல்லாருக்கும் நடந்ததைச் சொல்லிட்டு, ஆபரேஷன் பண்ணிடலாம்"
 
Advt

Advertisements

Top