• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

5 மாய அன்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shamina Sarah

இணை அமைச்சர்
Joined
Jun 19, 2019
Messages
771
Reaction score
1,634
Location
chennai
வினோத் மீண்டும் மருத்துவ மனைக்கு வந்தபோது, சாப்பாடு வாங்கிக் கொடுத்து, வினோத்அம்மாவை சாப்பிட வைத்துக்கொண்டு இருந்தாள் வர்ஷா...

'அய்யோ... இந்த டென்ஷன்ல அம்மாவை மறந்துட்டேனே' என வருத்தப்பட்டவன்,

"அம்மா சாரி அம்மா..." என ஆரம்பிக்கவும், நாகரிகம் கருதி எழுந்து வெளியே சென்றாள் வர்ஷா...

வர்ஷாவின் கையைப் பிடித்து இழுத்தவன், "நீ எங்கே போறே?" எனக் கேட்க

"இல்லை வினோத்... நீங்க ஏதாவது பெர்சனாலா பேசுவீங்க... நான் நடுவுல ஏன்னு தான்" என தயக்கமாக பதில் கூறினாள் வர்ஷா...

"பெர்சனலா பேச இவங்க என் வொயிஃப் இல்லை... என்னோட அம்மா... ஓகேவா? தென் உனக்கு மாயா பற்றி எல்லாம் தெரியும்... நீ எங்கேயும் போக வேண்டாம்" என்றவனைப் புரியாத பார்வை பார்த்தவள், மீண்டும் வினோத்அம்மாவின் அருகில் அமர்ந்தாள்...

"அம்மா... இது நான் எதிர் பார்க்காத சிச்சுவேஷன்... சோ நான் உங்களை நினைக்கலை அம்மா... அது என்னோட தப்பு தான்... மாயாவே நினைவு திரும்பினா, 'வினோத், ஏன் அம்மாக்கு சாப்பாடு வாங்கித் தரலை'னு தான் திட்டுவா... சாரி அம்மா"

"அம்மாவுக்கு பசங்களைத் தெரியாதா வினோத்... உன் டென்ஷன் உனக்கு... அம்மா எதுவும் நினைக்க மாட்டேன்... நீ இதையும் மண்டைக்குள்ள ஏத்தி குழப்பிக்காதே"

"பார்வதின்னா சும்மாவா... அம்மானா அம்மா தான்" என்றபடி தன் தாயின் கன்னத்தில் முத்தமிட்டான் வினோத்... தாய் மகன் பாசத்தைப் பார்த்த வர்ஷாவுக்கு, தனக்கு தாய் இல்லையே என்ற ஏக்கம் வந்தது...

"ஓய்... என்ன என்னையே பாக்கறே? எனக்கு சாப்பாடு இல்லையா?" உரிமையோடு கேட்டவனுக்கு சாப்பாடு எடுத்துக் கொடுத்தவளுக்கு, மனதினுள் ஆயிரம் கேள்விகள்...

'இவன் என் கையைப் பிடித்து உட்கார வைக்கிறான்... தாயிடம் பேசும்போது என்னையும் அருகில் வைக்கிறான்... சாப்பாடு எடுத்து வை என மனைவியிடம் கேட்பது போல கேட்கிறான்... என்ன உரிமையில் கேட்கிறான்! ஒருவேளை நான் தான் தவறாக புரிந்து கொள்கிறேனோ? அவனுக்கு மாயா அக்கா இருக்கிறாங்க... அது எனக்குத் தெரியும் என்று அவன் இப்படி கேசுவலாக பேசுகிறானோ?' குழப்பிக் கொண்டாள் வர்ஷா... ஆனால் அதே குழப்பம் பார்வதி அம்மாவுக்கும் இருக்கிறது என்பதை யாரும் அறியவில்லை...

சாப்பிட்டு முடித்தவன், வர்ஷாவை அழைத்துக்கொண்டு தனியாக சென்றான்... "மிஸ்.வர்ஷா.... நீங்கள் என்னைத் தவறாக எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை... உங்களிடம் சில விஷயங்களைக் கூற விரும்புகிறேன்... ஏனென்றால் உங்களிடம் பேசினால் ஏதோ ஒரு தீர்வு கிடைப்பதாக நம்புகிறேன்... நாம் நண்பர்கள் கூட அல்ல என்பது எனக்குப் புரிகிறது... ஆனால் தெரியாத ஊரில், மனபாரங்களை இறக்கி வைக்க, எனக்கொரு தோள் தேவைப்படுகிறது... பிரெண்ட்ஸ்?" என்றபடி கை நீட்ட

'லூசா இவன்... பிரெண்ட்ஷிப் லாம் அதுவா வரனும்... இவன் நம்மள உசுப்பேத்தி விடுவானாம்... அப்றோம் இவனே பிரெண்டுனு கை கொடுப்பானாம்... என்ன பண்றது? பிரச்சனைல இருக்கான்... கை கொடுத்து தொலைப்போம்' என்று எண்ணியபடியே, குழம்பிய முகத்துடன் கைகொடுத்தாள் வர்ஷா...

வர்ஷாவிடம், வனஜாவைப் பற்றிப் பேசியவன், வனஜா கூறிய அனைத்தையும் கூறினான்...

"என் மாயா இப்போனு இல்லை... முதல்ல இருந்தே இப்படித்தான் இருந்து இருக்கிறாள்... 'நான் செல்வி... நான் பிராஸ்ட்டிடுயூட்'னு அப்போவே சொல்லிகிட்டே இருப்பாளாம்...

வர்ஷா, எனக்கு இதுதான் புரியலை... அவளைத் தப்பிக்க வைக்க நிறைய தடவை ஹெல்ப் பண்ணி இருக்காங்க வனஜா... ஆனால் அவள் ஏன் தப்பிக்க முயற்சிக்கவில்லை?

தன்னோட பெயரைக் கூடச் சொன்னது இல்லையாம்... அந்த சின்னப் பொண்ணை, எப்படி அப்படிலாம் மனசு வந்துச்சு?

வயிற்றில் குழந்தை இருக்கும் போது, கணவனையே தள்ளி வைக்கும் பெண்கள் மத்தியில், என் மாயா மட்டும் ஏன் எதுவுமே பண்ணலை? ஏன் போராடலை? குழந்தை வேணாம்னு நினைத்து இருந்தால், வனஜா கொடுக்கும் போதே டிரக்ஸ் யூஸ் பண்ணி இருப்பாளே!

குழந்தையை யாரிடம் கொடுத்து இருப்பாள்? ஏன் இந்த வாழ்க்கையில் இருந்து விட்டாள்? என்னால நினைக்கவே முடியலை... யோசித்து யோசித்து பைத்தியம் பிடிப்பது போல உள்ளது...

ஏன் வர்ஷா?! என் மாயா பாவம் தானே... அவளுக்கு ஒருநாள் கூடவா என் ஞாபகம் வந்து இருக்காது? அவளுக்கு என்ன நடந்து இருக்கும்? புரியவே இல்லையே"
சிறுகுழந்தையைப் போல பேசியவன் கண்களில் கண்ணீர் நிறைந்து நின்றது...

"சாரி வினோத்... கவலைப்படாதீங்க... எல்லாம் சரி ஆகிடும்... கொஞ்ச நாள் தான்... மாயா அக்கா, உங்க கூடவே வந்துடுவாங்க"
விரக்தியான சிரிப்பு சிரித்தவனிடம், "உங்க கிட்ட ஒன்று சொல்லலாமா?" எனக் கேட்டாள் வர்ஷா

புருவங்கள் முடிச்சிட "என்ன?" என்றவனிடம்,

"உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா எங்க டேடி கிட்ட சொல்லலாமா? தப்பான நோக்கத்தில் சொல்லலை... அப்படி நினைத்தால் நானே சொல்லி இருப்பேன்... நிறைய நியூஸ் கலெக்ட் பண்ண சீக்ரெட் ரிப்போர்டர்ஸ் நிறைய பேர் இருக்காங்க, எங்க ஆபிஸ்ல... அப்பா நினைத்தால் நமக்கு உதவ முடியும்..." சிந்தனையுடன் தயங்கி தயங்கி கூறியவளை மெச்சுதலாகப் பார்த்தான் வினோத்...

"தேங்க்யூ சோ மச் வர்ஷா... நீ எப்படியும் என் பிராப்ளம்க்கு சொல்யூஷன் கொடுத்துடுவே" உண்மையில் சிரித்தான் வினோத்... அவன் சிரிப்பின் அழகு வர்ஷாவின் இதயத்திலும் ஊடுருவியது...

'ச்சே... இது என்ன? இவனைப் போய் ரசிக்கிறேன்... இவன் மாயா அக்கா பிராபெர்டி' தனக்குத் தானே பலமுறை சொல்லிக் கொண்டாள் வர்ஷா...

வினோத்தின் அலைபேசியில் அழைத்த பார்வதி அம்மா, உடனடியாக மாயாவின் அறைக்கு வரச் சொன்னார் வினோத்தை... இங்கும் நாகரிகம் கருதி வெளியே நின்ற வர்ஷா, உள்ளே நடப்பதைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்...

மாயா எழுந்து அமர்ந்து இருந்தாள்... கண்கள் இலக்கின்றி வெறித்துக் கொண்டு இருந்தன... எதுவும் பேசவில்லை, கத்திக் கூச்சலிடவுமில்லை...

"மாயா... மாயா..." வினோத் அழைக்க, மாயா திரும்பவே இல்லை... மனது வலிக்க, மெதுவாக "செல்வி" என்றழைத்து விட்டு 'திரும்பிடக்கூடாது, திரும்பிடக்கூடாது' என கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருந்தான்... ஆனால் மாயாவோ திரும்பி அவனைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்...

இருவரின் விழிகளும் சந்திக்க, மாயாவோ எந்த சலனமுமின்றி, "இப்போலாம் ஹாஸ்பிடல்க்கே ஆள் அனுப்பறாங்க போல... நீ புதுசா? அறிவில்லை... படிக்கிற பையன் மாதிரி இருக்கிறே" தெளிவாகத் திட்டினாள் மாயா

"மாயா" மெதுவாக அவளது தோளில் கைவைத்தான் வினோத்... கையைத் தட்டியவள், ஆங்காரமாகக் கத்தினாள் "என் கிட்ட வராதே... எனக்கு வலிக்குது... வேண்டாம்... போ... போய் டேபிளட் வாங்கி வா... ப்ளீஸ்... மாத்திரை வேணும்... வாங்கி வா" சத்தம் குறைந்து குறைந்து கெஞ்சிக் கொண்டு இருந்தாள் மாயா...
இரத்தக்கண்ணீர் வடித்தான் வினோத்...

"மாயா நீ செல்வி இல்லை... நீ மாயா... இனி உன்னை யாரும் தவறா பார்க்கக் கூட மாட்டாங்க... நீ நல்ல பொண்ணு... என் குடும்பத்து பொண்ணு... என் மாயா நீ... என்னைப் பாரு" கூறியவன், அவனது இரு கரங்களால், மாயாவின் முகத்தை ஏந்தி, கண்ணோடு கண் பார்த்து பேசினான்...

"மாயா... மாயா... என்னை நல்லாப் பாரு மாயா... உன் வினோத் வந்துருக்கேன் மாயா... உன்னோட வினோத்... உனக்கு மட்டுமே உரிமையான வினோத்... பாரு மாயா" வினோத் பேச பேச, வினோத்தின் முகம் மங்கலாகத் தெரிய ஆரம்பித்தது மாயாவுக்கு... கண்கள் சொருக, மயங்கி சரிந்தாள் மாயா...

அந்த அறை எங்கும் வினோத்தின் பிதற்றலே கேட்டுக்கொண்டு இருந்தது...
அதன்பின் மாயா மயக்கத்தில் உளற ஆரம்பித்தாள்... "சாரி வினோத்... நான் உன்கிட்ட சொல்லி இருக்கனும்... சாரி வினோத்"

மருத்துவர் பாராட்டினார்... "நல்ல முயற்சி... நான் செல்வி நான் செல்வினு புலம்பினவங்களை, சாரி வினோத்னு புலம்ப வைத்து இருக்கீங்க... குட் இம்ப்ரூவ்மென்ட்" என்றார்...

வர்ஷா, வினோத் புலம்பியதைப் பார்த்துக் கொண்டு இருந்தவள், "இவனுக்கு மாயா மேல எவ்ளோ பாசம்... இப்படி ஒரு லவ்வர் கிடைக்க மாயா அக்கா புண்ணியம் பண்ணி இருக்கனும்" என நினைத்துக் கொண்டாள்...

அங்கு சதீஷின் தீவிர அலசலில், மாயாவை அந்தத் தொழிலுக்கு அழைத்து வந்தவன் மாட்டினான்... அவனது கூற்றுப்படி, "நான்கு பணக்கார வாலிபர்கள் மாயாவை அவனிடம் விற்றதாகவும், மாயாவையும் கொடுத்து 5 லட்சம் பணமும் கொடுத்தார்கள் எனவும் மாயா கர்ப்பமாயிருந்ததைப் பற்றி அவர்கள் கூறவில்லை" என்றும் கூறினான்... சதீஷுடன் வினோத்தும் இணைய, வேட்டைக்குத் தயாராகினர் இருவரும்... அவர்களுக்கு உதவ முன்வந்தார் செல்வின், வர்ஷாவின் தந்தை...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top