• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

8 மாய அன்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shamina Sarah

இணை அமைச்சர்
Joined
Jun 19, 2019
Messages
771
Reaction score
1,634
Location
chennai
இரவு ஏழு மணிக்கு வெளியே சென்ற வினோத், பதினொரு மணி வரைக்கும் வீடு திரும்பவில்லை...
வர்ஷாவுக்கு புதிய இடம் என்பதாலும், மாயாவுக்கு என்ன நடந்து இருக்கும் என்ற குழப்பத்தில் இருந்ததாலும், மனம் ஏனோ திக் திக் என்று அடித்துக் கொண்டது...
'ஏன் இன்னும் வரலை... ஒரு போன் கூட பண்ணலை' என்று நினைத்தவள், வினோத்தின் அறைக்குள் நுழைந்து பார்வையைச் சுழற்றினாள்...

சற்றுமுன் போட்டோவைப் பார்த்த போது எழுந்த பொசெஸ்ஸிவ் இல்லை, ஆனால் மாயாவின் முகத்தைப் பரிதாபமாக பார்த்தாள்...

'எவ்வளவு அழகான முகம் இது... மாசு மருவற்ற முகம் என்றால் அது இதுதான்... குழந்தைத் தனமான இந்த முகத்தை யார் சிதைக்க நினைத்து இருப்பார்கள்?

போட்டோவில் அந்தக் கண்களைப் பார்த்தால், ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறது... ஆனால் தற்போது HIV பாதிக்கப்பட்டவள் அவள்... என்ன செய்வது?

அந்த டைரியை படித்தால், யாரோ ஒருவரிடம் காதல் என்ற பெயரில் ஏமாந்து இருப்பது புரிகிறது... யாரிடம் ஏமாந்து இருப்பார்கள்? ஏன் ஏமாற்றப் பட்டு இருப்பாள்?'

எந்தக் கேள்விக்கும் விடை தெரியாமலேயே, கேள்விகளால் நிறைந்தவள் மணியைப் பார்த்தாள் மணி பதினொன்றரை...

'நான் எங்கே இருக்கிறேன்? எந்த இடத்தில் இருக்கிறேன்? எதுவும் புரியாமல், தனியாக மாட்டிக் கொண்டேனோ? உண்மையிலே வினோத் நல்லவனா? இரவில் என்னை ஏதும் செய்து விடுவானோ? இவனுடன் தனியாக தங்க வேண்டுமா?'

தனிமை தந்த குழப்பத்தில் பயம் வரவும், காலிங்பெல் அடிக்கவும் சரியாக இருந்தது...

பயந்து நடுங்கியவாறே கதவைத் திறந்தவள், ஒரு பெண் நிற்பதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தாள்... "நீங்க...?" என இழுத்தாள்...

"ஹாய் மேம்... நான் ஸ்ருதி... 24*7தமிழ் சேனல் தூத்துக்குடி போல்பேட்டை ஏரியா ரிப்போர்ட்டர்... செல்வின் சார் இரண்டு நாட்கள் இரவில் உங்களுடன் தங்கச் சொல்லி, கேட்டுக் கொண்டதினால் வந்து இருக்கிறேன்... வினோத் சார் காலையிலே கன்ஃபார்ம் பண்ணாங்க என்னை... சார் இல்லையா?" என ஸ்ருதி கேட்கவும், போன உயிர் திரும்ப வந்தது போல இருந்தது வர்ஷாவுக்கு...

"ஹாய் ஸ்ருதி... ஐம் வர்ஷா... வர்ஷா செல்வின்..."

"செல்வின் சார் டாட்டரா நீங்க?"

"எஸ் ஸ்ருதி"

"நான் நினைத்தேன்... ஏன் சார் இவ்ளோ பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்றாங்கனு? சூப்பர் மேம்"

"என்னை வர்ஷானே கூப்பிடு ஸ்ருதி" என்றவள், சிறிது நேரத்திலே தோழிகளாயும் மாறி விட்டனர்...

சரியாக ஒரு மணிக்கு வந்து சேர்ந்தான் வினோத்... "தூங்கலாம் வர்ஷா... மார்னிங் பேசிக்கலாம்" என எழுந்து சென்று விட்டான்...

இரவில் வர்ஷா, ஸ்ருதி இருவருக்குமே தூக்கம் வரவில்லை... ஏற்கனவே மாயா பற்றி எதையும் மறைக்காமல் கூறி விட்டாள் வர்ஷா(பெண்களிடம் ரகசியம் கூறினால் எப்படி வெளியே செல்லாமல் இருக்கும்?!!)

"வர்ஷா... வினோத் சார் ஏதோ பென்டிரைவ் கொண்டு வந்து இருந்தாங்கல... நாம அதைப் போட்டுப் பார்க்கலாமா?" என ஸ்ருதி கேட்கவும்

ஆர்வக்கோளாறில் இருவருமே அமர்ந்தனர் லேப்டாப் முன்பு... "என்ன ஸ்ருதி இது? எல்லாப் பசங்க கூடயும் போட்டோ எடுத்து இருக்காங்க... ஒவ்வொரு கேங்க் கூடயும் ஒவ்வொரு டைம் இருக்காங்க... இதுல எப்படி கண்டு பிடிக்கிறது?"

"பர்ஸ்ட் நமக்கு மாயா அக்கா கேரக்டர் தெரியனும்... அவங்க எப்படிப்பட்டவங்க? பசங்க கூட எப்படி பழகுவாங்கனு தெரிந்தா, நம்மால் ஏதோ ஒன்னு கெஸ் பண்ண முடியும்"

"இல்லை ஸ்ருதி... வினோத் டிரை பண்ணி இருக்கனும்... அவனால முடியலைனு தான் வெக்ஸ் ஆகி போயிட்டான்... அவனுக்கே தெரியலைனா நம்மால எப்படி முடியும்?"

"இல்லை வர்ஷா... வினோத் சார், மாயா அக்கா பற்றி ஏதாவது சொன்னா, நம்ம ஒரு கெஸ்ஸிங் வைக்கலாம்ல... அக்ஷுவலி ஒரு பெண்ணோட மனசு இன்னொரு பெண்ணுக்குத் தானே தெரியும்"

"ரொம்ப ஓவர் ஸ்ருதி... நாளைக்கு காலைல வினோத் கிட்ட கேக்கலாம்... வா படுக்கலாம்" என உறங்கச் சென்றனர் இருவரும்...

தூங்கிக்கொண்டு இருந்த வினோத், போன் சத்தத்தில் முழித்தான்...

"சொல்லுங்க சதீஷ்"

"சார் மாயா யாருக்கும் தெரியாம வெளியே போறதா கான்ஸ்டபிள் சொன்னான் சார்... நான் அவங்களை ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன் சார்... மாயா ஆட்டோல போயிட்டே இருக்காங்க"

"கேர்ஃபுல் சதீஷ்... மாயாவுக்கு எதுவும் ஆகக்கூடாது"

"ஷ்யூர் சார்"
வினோத் மனதில் குழப்பம் சூழ்ந்தது... மாயா ஏன் யாருக்கும் கூறாமல் வெளியே செல்ல வேண்டும்? எங்கே செல்லப் போகிறாள்? ஒருவேளை தவறான முடிவு எடுத்துக் கொள்வாளோ? இல்லை... இவ்வளவு நாட்களில் தோணாததா இப்போது தோணப் போகிறது?"

"சார் லைன்ல இருக்கீங்களா?"

"சொல்லுங்க சதீஷ்"

"மாயா அன்னை தெரசா குழந்தைகள் காப்பகத்துக்கு போயிருக்காங்க சார்... ஆட்டோ வெயிட்டிங்ல இருக்கு... காப்பக வாட்ச்மேன் கூட மாயா கிட்ட ரொம்பத் தெரிந்த மாதிரி பேசுறார்... உள்ளே போகவா? இல்லை வெயிட் பண்ணவா?"

"வேணாம் வேணாம்... அட்ரெஸ் நோட் பண்ணி வைங்க... நான் அங்கே வந்ததும் போயிக்கலாம்... திரும்ப கரெக்டா ஹாஸ்பிடல்க்கு போறாங்களானு மட்டும் செக் பண்ணிடுங்க சதீஷ்"

"ஷ்யூர் சார்"
வினோத்க்கு குழப்பங்கள் அதிகரித்தது... 'மாயா ஏன் யாருக்கும் தெரியாமல் காப்பகத்துக்கு செல்ல வேண்டும்? ஒருவேளை அவளின் குழந்தை அங்கு இருக்குமோ? அதைத்தான் பார்க்கச் சென்று இருப்பாளோ? ஒன்றும் இல்லாமல் இருந்த கேஸ்க்கு, ஒரு பிடிமானம் கிடைத்தது போல இருக்கிறது... பார்க்கலாம்' மனதுக்குள் நினைத்துக் கொண்டான் வினோத்...

சதீஷும் மாயா திரும்ப மருத்துவ மனைக்குள், அதுவும் அவளின் ரூமுக்கே செல்வதைப் பின்தொடர்ந்து கன்ஃபார்ம் செய்து கொண்டான்...

.........

அடுத்த நாள் காலை, வர்ஷா, ஸ்ருதி இருவரும் சேர்ந்து வினோத்தை ஒருவழி பண்ணிக் கொண்டு இருந்தனர்...

"நடந்ததை மறைக்காமல் கூறினால், தங்களால் உதவ முடியும்" என அவர்கள் கூறவும், வினோத்தும் கூற ஆரம்பித்தான் மாயாவைப் பற்றி...

...............

அதேநேரம் மாயா பார்வதி அம்மாவிடம்,

"வினோம்மா, வினோத் எங்கே?"

"டூட்டி போயிருக்கான் மாயா"

"வினோ போலீஸ்னா நம்பவே முடியவில்லை... என் கைக்குள்ளே கிடந்தவன்... நாட்கள் ரொம்ப ரெக்கை கட்டி பறந்துச்சுல வினோம்மா"

"ஆமாம்மா... நீங்க எல்லாம் சின்ன குழந்தையா இப்போ தான் வெளையாடின மாதிரி இருந்தது... எல்லாம் மாறிச்சு" குரலில் வருத்தத்தைக் காட்டாமல் இருக்க முயற்சித்தும், வருத்தம் மேலோங்கியது...

"வினோவைத் தூத்துக்குடியில் இருந்து வரச் சொல்லுங்கள் வினோம்மா... அவனுக்கு அங்கே ஒன்னும் கிடைக்காது... அவனை அவன் வாழ்க்கையைப் பார்க்கச் சொல்லுங்க"

"அவன் தூத்துக்குடி எல்லாம் போகலை மாயா"

"வினோம்மா... இன்னும் நீங்க மாறவே இல்லை... உங்க பையனுக்கே சப்போர்ட் பண்றீங்க நீங்க..." என விளையாட்டாகக் கூறியவள், முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு, "வினோவைப் பற்றி உங்களை விட எனக்கு நல்லாவே தெரியும்... கூப்பிடுங்க அவனை" என்றாள்...

"மாயா"

"வினோம்மா... எப்படி இன்னும் என்னை வெறுக்காம இருக்கீங்க?"

"என்ன மாயா இது... இப்படி பேசறே? நான் ஏன் வெறுக்கனும்? உன் அம்மாவை விட, நான் தானே செல்லம் உன்னை வளர்த்தவள்"

"நான் ஒரு பிராஸ்ட்டிடுயூட்"

"வாயிலே போடுவேன்... எவனோ உன்னை ஏதோ பண்ணிட்டான்... அதுக்காக நீ என் பொண்ணு இல்லையா?"

"நீங்க 'என் பொண்ணு என் பொண்ணு'னு உருகறதும், வினோத் 'என் மாயா என் மாயா'னு உருகறதும் கேக்கவே சந்தோஷமா இருக்கு வினோம்மா... எதுல்லாம் வாழ்க்கையில திரும்பி கிடைக்காதுனு நினைத்தேனோ, எல்லாம் தானா அமையுது"

"ரெஸ்ட் எடு மாயா"

"உங்களுக்கு ஞாபகம் இருக்கா வினோம்மா? வினோ சின்ன வயசுல சண்டை போடும் போது, நான் போலீஸாகி பர்ஸ்ட் உன்னைத்தான் அரெஸ்ட் பண்ணுவேன்னு சொல்வான்... அதுவே நடந்தது ஆச்சரியமா இருக்கு"

"மாயா ரொம்ப யோசிக்காதே... ரெஸ்ட் எடு... அப்றமா பேசலாம்"

"அய்யோ... நாலு வருஷமா, எதையுமே பேசாம, மனசைப் பூட்டி வைச்சிருந்தேன்... இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே"

"பேசலாம்மா... வாழ்நாள் முழுக்க பேசலாம்... இப்போது ரெஸ்ட் எடு மாயா"

"வினோ எப்போ வருவான்?"

"நாளைக்கு காலையில்"

"சரி... நான் வினோ கிட்டவே பேசிக்கிறேன்... நீங்க மாறவே இல்லை" சிறுகுழந்தையைப் போல பேசிவிட்டு திரும்பியவளைப் பார்த்து துக்கம் தாளாமல், விம்மி அழுதார் பார்வதி அம்மா...

"நாளைக்கு வினோ வந்துடுவான்... நாளைக்கு வினோ வந்துடுவான்..." திரும்ப திரும்ப சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டாள் மாயா...
 




Shamina Sarah

இணை அமைச்சர்
Joined
Jun 19, 2019
Messages
771
Reaction score
1,634
Location
chennai
Maya avala pathi unmai ah solluvala????
நிச்சயமாக சொல்வா... எப்போனு தான் எனக்கேத் தெரியலை... சீக்கிரமே சொல்ல வைச்சிடலாம் சகி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஷமினா சாரா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top