• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

8, 8, 16, 32

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
படித்ததில் பிடித்தது .

8, 8, 16, 32

1599479745424.png

வாழ்க்கைக்கு வளம் ஊட்டும், தவிர்க்கக் கூடாதவை இவை.

வீட்டில் பெரியவர்கள் இருந்தால் பெரும்பாலும் அறிவுரை வழங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கூறும் அறிவுரைபடியே அவர்களும் வாழ்ந்தார்கள். அவர்கள் கூறுவது குழந்தைகளின் நன்மைக்குத்தான் என்பது அப்போது புரியாது.

சரியானபடி எடுத்துக் கொண்டால் வாழ்க்கை சுகமே…

சரஸ்வதி பாடசாலை கலையரங்கில் நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அப்போது அந்த உரைகளில் இருந்து சில வார்த்தைகள் மனதில் படிந்துவிடும். அப்படி மனதில் இருப்பதுதான் சில சித்தர் வாக்கியங்கள்.

அப்படி ஒன்று:

நல்லவர் தம்மைத் தள்ளாதே – அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித் தள்ளாதே
பொல்லாங்கில் ஒன்றுங் கொள்ளாதே – கெட்ட
பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்லாதே.


நல்லவரிடம் இருந்து ஒதுங்கக் கூடாது. அவர்களை எந்த செயல்பாடுகளில் இருந்தும் ஒதுக்கக் கூடாது. 32 அறங்களை செய்யாமல் இருக்கக் கூடாது. தவறான செயல்களுக்கோ கருத்துகளுக்கோ உடன்படக் கூடாது. வீண் வம்பில் காலத்தைக் கழிக்கக் கூடாது. புறம் பேசுவதும் கூடாது என்று கடுவெளி சித்தர் கூறியதாக ஒரு உபன்யாசத்தில் கேட்டேன்.
அப்புறம் அதில் 8, 8, 16, 32 என்றார்.

அப்புறம் இதென்ன என்று யோசித்தேன்.

அதாவது 8 மங்கலப் சின்னங்கள், 8 ஐஸ்வர்யங்கள், 16 பேறுகள், 32 அறச் செயல்களைத்தான் அவர் அப்படி கூறியிருக்கிறார்.

கவரி (எருமை, தேர்), பூர்ணகும்பம், அங்குசம், கண்ணாடி, விளக்கு (தீபம்), இசைக் கருவிகள் (பறை, முரசு), கொடி, இரட்டை மீன் ஆகியன 8 மங்கலச் சின்னங்களாக கூறப்படுகின்றன.
8 ஐஸ்வர்யங்களாக நல்ல சுற்றத்தார், அரசு, ஆடை, உதவியாளர்கள், தானியங்கள், வாகனம், குழந்தைகள், தங்கம் கூறப்படுகின்றன.

16 பேறுகளாக, அழகு, வலிமை, இளமை, நன்மக்கள், நல்ல உடல்நலம், ஆயுள், நிலபுலன்கள், பெண், தங்கம், நல்லறிவு, உற்சாக மனப்பான்மை, கல்வி, வெற்றி, புகழ், மரியாதை, உணவு பொருட்கள் (தானியங்கள்) கூறப்படுகின்றன. (இதை மனதில் வைத்துதான் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியவர்கள் வாழ்த்துவார்கள்.)

அதென்ன 32 அறங்கள் – ஏழை எளியோருக்கு சாலை போட்டு தருதல் / வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தருதல், கல்வி பயிலும் மாணவர்களுக்கு உணவு, 6 சமயத்தவருக்கு உணவு, பசுவுக்கு உணவு, சிறைக் கைதிகளுக்கு உணவு, வளியவருக்கு ஈதல், விழாவில் சிற்றுண்டி / தின்பண்டங்கள் அளித்தல், ஊர் முழுவதும் அன்னதானம், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு பால் அளித்தல், ஆதரவற்றோருக்கு ஈமச்சடங்கு, இசை வாத்தியங்கள் அளித்தல், வாசனைப் பொடி / சந்தனம் அளித்தல், நோயால் அவதிப்படுபவருக்கு மருந்து அளித்தல், வண்ணானுக்கு உதவி, நாவிதருக்கு உதவி, காதணிகள் அளித்தல், கண் குறைபாடு உடையவருக்கு மருந்து அளித்தல், முகம் பார்க்கும் கண்ணாடி அளித்தல், எண்ணெய் அளித்தல், பிறர்துயர் நீக்குதல், தண்ணீர் பந்தல் வைத்தல், பெண் குழந்தைகள் பாதுகாத்தல், மடம் / கல்விக் கூடம் அமைத்தல், குளம் வெட்டுதல், பூங்கா அமைத்தல், விலங்கினங்களுக்கு நீர் வைத்தல், விலங்குகளுக்கு உணவு, பசு வம்ச விருத்திக்கு உதவுதல், செலவு செய்தாவது உயிர்களை காத்தல், கன்னிகாதானம்.

இவைதான் அந்த 8,8,16,32 ஆகும்.

வாழ்க வளமுடன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top