• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aadhi tea saappidunga (short story)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

charu

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
100
Reaction score
224
Location
Coimbatore
ஆதீ... டீ சாப்பிடுங்க ...​

சிறுகதை...

என்னதான் வீட்டுல மனைவி ஆறுமணிக்கே மணக்கமணக்க காஃபி போட்டு கொடுத்தாலும்... மெயின் ரோட்டை பார்த்தபடி கையில் நியூஸ் பேப்பரை வைத்து மேய்ந்துகொண்டு , டீ கடையில் அமர்ந்து டீ சாப்பிடும் அந்த உணர்வே ஒரு அலாதியான விஷயம் ...

அந்த குறிப்பிட நேரத்தில் வாடிக்கையாய் வரும் அனைவரும் நண்பர்களாகி இருப்பார்கள்..

புதிதாக அன்று அந்த கடைக்கு வந்திருப்பவர்கள் அன்றிலிருந்து தினம் வர முடிவெடுத்துவிடுவார்கள்.

கல கலவென பேசி சிரித்தபடி முந்தைய நாளைய தோல்விகளையும் இன்றைய நாளைய முயற்சிகளையும் சற்று நேரம் தள்ளிவைத்து .. மகிழ்ச்சியை மட்டுமே சுவைத்துக்கொண்டு இருப்பார்கள்..

அவ்வப்போது டீ டம்ளர்களை நீரில் அலசும் சத்தம் ... கண்ணாடிகள் உரசுவதால் எழும் கிணிங் சத்தம் ... உயரே இருந்து இன்னொரு கோப்பைக்குள் கொட்டும் டீ ஆற்றும் சத்தம் ... சூடான எண்ணையில் வடைமாவை இடும்முன் தெளிக்கப்பட்ட நீரின் பட பட சத்தம் ... இவை டீ கடையின் உயிர்நாடிகள் ..

ஆளுக்கு ஒரு செய்தியை பேசுவார்கள் ... அலசுவார்கள்... “ அரசியல் வேண்டாம் “ என்ற எச்சரிக்கையை பொருட்படுத்தாது உணர்ச்சிவசப்பட்டு பேசப்படும் தலைப்பு செய்திகளின் தர்க்கங்கள் அனைவரையும் காதுகொடுத்து கேக்க செய்யும் ...

கணேஷ் எனது பெயர்... நான் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளாக இங்கே வந்துகொண்டு இருக்கிறேன் .. ஆதி எனது டீக்கடை நண்பர் ..

தினமும் சுவாரஷ்யமாக எதையாவது பேசுவோம் ... ஏழுமணிக்கு வந்தால் எட்டு முப்பது வரை அங்கேதான் இருப்போம் ... நேரம் போவதே தெரியாது.

வீட்டிலிருந்து மனைவி செல்போனில் அழைப்பாள்.. என் மகன் ஸ்கூல் செல்லும் நேரம் வந்திருக்கும்...

அல்லது ஆதிக்கு வீட்டில் இருந்து அழைப்பு வரும்... இப்படியாக ஏதாவது குறுக்கீடல்கள் வந்தாலே ஒழிய யாரும் களைந்து செல்லதோன்றாது..

ஆதிக்கு நகைச்சுவையாக பேசும் கலை கைவந்தது ...

ஒரு நாள் , டீக்கடைக்கு அப்போதுதான் வந்தார் ... டீக்கடைக்காரர் ஒரு நாய்க்குட்டியை வளர்த்து வந்தார் ... எழும்பும் தோலுமாக ... அது அவர் எப்போதும் அமரும் இருக்கைக்கு அருகே படுத்து ஓய்வெடுத்துகொன்டிருந்தது.

“ மாஸ்டர் ... நாய்குட்டிக்கு டீ ஏதும் கொடுத்தீங்களா ?” என்றார் ...

மாஸ்டர் இல்லையே என்பது போல தலையை அசைத்தார் ...

“ பின்ன ஏன் மயக்கம் போட்டு கெடக்குது ? “ கேட்டுவிட்டு அப்பாவித்தனமாக “ எனக்கு ஒரு “டீ” என்றார்..

மாஸ்டர் உட்பட டீ கடையில் இருந்த அனைவருக்கும் வாய்கொள்ளா சிரிப்பு வந்துவிட்டது ....

கலகலப்பான மனிதர் ...

பழக மிக இனிமையானவர் ... ஆனால் ஒரே ஒரு விஷயம்தான் அவருக்கும் எனக்கும் ஒத்துபோகாது..

மனுஷன் ஜொள்ளுபேர்வழி..

சாலையில் போகும் யாரையும் விடமாட்டார் ... கண்களாலேயே எல்லாவற்றையும் செய்துவிடுவார் ...

பூ விற்கும் பெண் முதல் பள்ளி செல்லும் பெண்கள் வரை அனைவரையும் கிண்டல் செய்வார் ...

நானும் எத்தனயோ முறை சொல்லிவிட்டேன் ..

“ விடுப்பா .... பேச்சில் மட்டும்தானே .. இதெல்லாம் ஒரு ஜாலிப்பா “

தனது வயதையும் மறந்து இப்படி பேசுவார் ...

இதற்கு யார் என்னைக்கு பதில் தர போறாங்களோ என்று நானும் நினைத்ததுண்டு .... இன்றுவரை யார் சொல்லியும் திருந்தவில்லை...

இன்று நானே அதற்க்கு பதில் சொல்லபோகிறேன் என்று கனவிலும் நினைக்கவில்லை ...

“ கண்கள் விரிய சாலையில் பார்த்துகொண்டு இருந்தார் ... எதிரில் இருந்த நான் அவர் கண்களை பார்த்தபோது எனக்கு பின் பக்கம் சாலையில் கண்டிப்பாக ஒரு பெண் சென்றுகொண்டிருக்கலாம் என்று தோன்றியது ...

“ பார்த்தா காலேஜ் பொண்ணுமாதிரி தெரியல... அவ்வளவு போஷாக்கு..”

“ தினம் சாபிடுற பர்கர் பீஸா எல்லாம் என்னமா வேலை செஞ்சிருக்கு “

“ அபார வளர்ச்சி “ இன்னும் சொல்லிகொண்டே போனார் ...

எனக்கு கொஞ்சம் அருவருப்பானது ....

“ அண்ணே வயசுகேத்தமாதிரி பேசுங்க ... “ டீ கடைகாரர் மூஞ்சை காட்டினார்..

“ யோவ் நான் பாட்டுக்கு இங்க பேசிட்டு இருக்கேன் ... நீர் வேலைய பாருமைய்யா ...” நக்கலடித்தார் ...

“ மனசுக்குள்ளயே வச்சிகோங்க ... இப்படியா சத்தமா எல்லாருக்கும் கேக்குறமாதிரி பேசுவீங்க ?” நாலு பேர் வந்து போற இடம் ...

நாய்க்குட்டி அவமான விஷயத்திற்கு பழிவாங்க இதுதான் தருணம் என்று டீக்கடைக்காரர் விடாமல் பேசினார் ...

ஆதி அசரவில்லை...

சிரித்துகொண்டே தனது ஜொள் வேலையை தொடர்ந்தார் ..

நான் என் கண்ணசைவில் டீ கடைகாரரை அமர்த்தினேன்...”நான் பார்த்துகொள்கிறேன்” என்பது போல...

அவரும் அமைதியாகிவிட்டார் ...

“ ஆதி .. என் நண்பர் ஒருவர் வருவார்.. அறிமுகபடுத்தனும் ... நீங்க கொஞ்சம் லேட்டா போனா பரவாயில்லையா ?” என்றேன்

“ஒன்னும் அவசரம் இல்லை ... யார் அவர்?” என்றார்

“ என் நண்பர்தான் .... வரட்டுமே “ என்றேன் ..

சுமார் இருபது நிமிடம் கடந்திருக்கும் ..

“ அண்ணே இன்னொரு டீ” என்றார் ஆதி .. சொல்லிவிட்டு அன்றைய செய்தித்தாளை மேய ஆரம்பித்தார் ...

நான் எதிர்பார்த்த அந்த நபர் சாலையின் அந்த பகுதியில் பேருந்து நிறுத்தம் நோக்கி வந்துகொண்டு இருந்தார் ...

எனக்கு சிறு நடுக்கம் இருந்தது... “ இது சரிதானா ?“ எனக்குள் நான் திருப்பி திருப்பி கேட்டுக்கொண்டேன் ... ” வேறு வழி இல்லை ...” ஒரு முடிவுக்கு வந்தவனாக ...

“ ஆதி நான் சொல்றப்ப பாருங்க ... !! தலைய தூக்காதீங்க பிளீஸ் என்றேன்..

“ இவங்கள பத்தி உங்க கமென்ட் என்னனு சொல்லுங்க ...” என்று சொல்லிவிட்டு அவரை இப்பொழுது பாருங்கள் என்றேன் ..

ஏதோ ஒரு அழகான பெண் வந்திருக்கவேண்டும் என்று எண்ணியவாறு மெதுவாக தலைதூக்கி சாலைக்கு எதிர்புறம் பார்த்தார் ...

கோபத்தில் கண்கள் சிவந்துவிட்டது ... அங்கே அவருடைய பெண் கல்லூரி செல்ல பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுகொண்டிருந்தாள்....

என்னை முறைத்து பார்த்தார் ... நான் குசும்பாக டீ சாப்பிடுங்க ஆதி என்றேன் ,... நக்கல் மிதக்க ...

நீங்க இப்படி பண்ணுவீங்கனு எதிர்பாகல கணேஷ்... வேற ஆளா இருந்தா இந்நேரம் கன்னம் வீங்கி இருக்கும்..

இதை நான் எதிர்பார்த்தேன்...

ஆதி ... ரொம்ப சாரி ஆதி...

“ உங்கள குத்திகாட்டனும்னு இத செய்யல... அவ எனக்கும் மகள் போன்றவள்தான்... மன்னிச்சிடுங்க...”

“ ஆனா யோசிச்சி பாருங்க ... ஒருவேள உங்களுக்கும் எனக்கும் பழக்கம் இல்லன்னு வச்சிகோங்க ... என் மகளோ , மனைவியோ , என் சொந்தகார அல்லது நண்பனின் உறவினர்களோ இந்த வழியில் அடிக்கடி போகலாம் வரலாம் ... அதே சமயத்தில் நானும் இங்கே டீ சாப்பிட வந்திருக்கலாம்...

“ நீங்களும் வழக்கம்போல எந்த உறுத்தலும் மனசாட்சியும் இல்லாம ... சொல்லபோனா அறிவு இல்லாம அவங்கள கிண்டல் பண்றதயும் வர்ணிப்பதயும் நான் எங்காதுல கேட்க நேர்ந்ததுனா என் நிலைமை எப்படி இருக்கும் ? “

“ இது மிகபெரிய கெட்டப்பழக்கம் ... விட்ட்ருங்கன்னு எத்தனையோ தரம் சொல்லிவிட்டேன் ... நீங்க கேக்கல...”

“ உங்க மகள் இந்த நேரத்திற்கு இந்தவழியே வருவாங்கன்னு எனக்கு தெரியும்.. அதான் உங்களுக்கு புத்தி சொல்லி திருத்த இத வாய்ப்பா பயன் படுத்திகிட்டேன் ..”

சூடாக இருந்த அவருடைய டீயை கீழே வைத்தார் ... தலையை நிமிரக்கூட இல்லை... விறு விறுவென சென்றுவிட்டார் ...

டீக்கடைகாரருக்கு எதோ ஒரு திருப்தி முகத்தில் நிழலாடியது ...

மறுநாள் ...

“ ஹலோ கணேஷ்... இன்னைக்கு காபி சாப்பிடலாம்னு இருக்கேன் ... உங்களுக்கு...?”

எனக்கு ஆச்சரியம் ... ஆதி கோபத்தில் இந்த கடைக்கு வருவதையே நிறுத்தி கொண்டுவிடுவார் என்று எண்ணி இருந்தேன்...

ஆனால் பழையபடி புத்துணர்வுடன் என்னிடம் பேசுகிறாரே ...

“ நீங்க என் நண்பர் ஆதி...ஒரு நல்ல நண்பன் தனது கெட்ட நண்பனை திருத்தவேண்டும்... நல்லவன் நண்பனா கிடைக்கிறது வரம்,,,

விட்டுவிட்டு போனால் நான்தான் மடையன்..”

சொன்னவர் இன்று வித்யாசமாக சாலை பக்கம் முதுகு தெரியும்படி அமர்ந்துகொண்டு காப்பிக்கு ஆர்டர் கொடுத்தார்...”

திருந்திவிட்டார் என்பதை அறிந்ததும் மகிழ்ந்தேன்... அன்றைய தேனீர் தேனாக இனித்தது....

குறிப்பு : இது நிஜத்தில் நடந்தது ... ஒரு ஆட்டோ டிரைவர் டீக்கடையில் மாஸ்டருடன் பேசிக்கொண்டு இருந்தபோது அந்த வழியே சென்ற ஒரு பெண்ணை கிண்டல் செய்து சிரித்தார்... டீ மாஸ்டர் அன்போடு கண்டித்தபோது கொஞ்சம் திமிராக அதை சமாளித்தார் ... அது தவரில்லை என்று வாதாடினார்... அப்போது நான் ஒரு சின்ன அறிவுரை வழங்கினேன்... நீங்கள் கிண்டல் செய்த பெண்ணின் உறவினர் இங்கே இப்போ டீ குடித்துகொண்டே நீங்கள் பேசுவதை கேட்க நேர்ந்தால் எப்படி இருக்கும் என்றேன் ? தலைக்குமேல் ஒரு கும்பிடு போட்டு வரேன் பாஸ் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்...

சபலம் என்பது மனதிற்குள் இருந்தால் அது அவருக்கு மட்டும் கேடு ...

மனதை தாண்டி வார்த்தைகளாக அல்லது செயல் வடிவங்களாக வெளிவரும்போது வக்கிரம் எனும் மிருகமும் வெளிவரும்... அது அனைவருக்கும், இந்த சமூகத்திற்கும் கேடு ...

நன்றி ....
 
Bhagya

புதிய முகம்
Joined
Mar 16, 2018
Messages
4
Reaction score
4
Location
Chennai

Nice story
 
sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
nice story sago
சபலம் என்பது மனதிற்குள் இருந்தால் அது அவருக்கு மட்டும் கேடு ...

மனதை தாண்டி வார்த்தைகளாக அல்லது செயல் வடிவங்களாக வெளிவரும்போது வக்கிரம் எனும் மிருகமும் வெளிவரும்... அது அனைவருக்கும், இந்த சமூகத்திற்கும் கேடு ...
(y)(y)(y)(y)(y)(y)(y)
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top