• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aadhirai - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Gnanaguru

நாட்டாமை
Joined
Mar 15, 2018
Messages
34
Reaction score
112
Location
Madurai
பெரும்பற்று


எங்கள் அன்பின் சக்தி எனக்குத் தெரியும் அதனால்தான் தைரியம் அதிகமாக இருக்கிறது.

சித்தப்பா என் அருகில் வந்ததும் "இங்க எதுக்கு நிக்குற இந்த புள்ள எதுக்கு இங்க நிக்குது?" என்று கொஞ்சம் கோபமாக கேட்டார்.

'நான் காலேஜ்க்கு வந்தேன் இந்தப்புள்ள அவங்க தாத்தாவோட வந்துச்சு... அவர் அந்தக் கடைக்குப் போயிருக்காரு ' என்று சரளமான பொய்களோடு சமாளித்தேன்.....

"எதுல வந்த?" என்றார்

"மாகாவோட பைக்ல"

கோபமாக முறைத்துக் கொண்டே "சீக்கிரம் கிளம்பு" என்றார்.

அவர் சிரித்து நான் பார்த்ததேயில்லை.

ஆதிரை .. "ஏன் அத்தான்.இவர் இவ்லோ கோபமா பேசுராரு ?"

"அது பிறவிக்குணம் ஆதிரை"

வேறு எங்கும் சுற்றுவதற்கு மனம் இல்லை உடனே புறப்பட்டோம்.

ஆதிரை பின்புறம் அமர்ந்திருந்தாள்...

ஜென்மத் தொடர்புதான் என் ஆதிரை... எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து என்னிடம் வந்து சேர்ந்துவிட்டாள்.

"நிறைய பிரச்சினை வருமோ?" அப்பாவியாக கேட்கிறாள் ஆதிரை.

'வரட்டும் ஆதிரை... வரட்டும் ஒவ்வொரு மனுசனும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை சந்திக்கிறான்... சேகுவாராவும் ஹோசிமன்னும் நாட்டுக்காக போராடுனாங்க... எத்தனையோ ஆண்கள் தங்களோட வீட்டுக்காக போராடுறாங்க நான் என் ஆதிரைக்காக போராடப் போறேன்' என்றேன்.

"வேண்டாம் அத்தான் போராட்டம் போராட்டம் நு சின்ன வயசுல இருந்து நிறைய பார்த்துட்டேன் நிம்மதியா வாழ ஒரு வழி பாருங்க அத்தான்"

அவளது ஏக்கம் அர்த்தமுள்ளது.

அவளது அழகான வலது கை, என் தோளின் மீது ஒரு குழந்தையைப் போலக் கிடந்தது.

யார் கண்ணிலும் பட்டுவிடாமல் ஒருவழியாக ஊர்வந்து சேர்ந்தோம்.

தாமதம் என்பது காதலில் தவிர்க்க முடியாதது, என்பதை அன்றுதான் முதன்முதலில் புரிந்து கொண்டேன்.

ஆதிரையை இறக்கிவிட்டேன்.

சாத்தனார் அய்யா ஏன் தாமதம் என்று கேட்டுக்கொண்டிருந்தார்... அதற்கு அவள் ஏதோ ஒரு பொய்யைச் சொல்லத் துவங்கும் போது நான் கிளம்பிவிட்டேன்.

அம்மாவிடமும் ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு அந்த நாளைச் சமாளித்தேன்.

உறங்குவதற்காக படுத்தால்... அது கனவுக்களமாக மாறுகிறது. என் தலையனை இன்னொரு தலை கேட்கிறது..... அது முத்தங்களின் சுமைதாங்கியாய்.....ச்சீ காதல் எவ்வளவு கொடுமையானது?

இரவின் நீளம் நீண்டுகொண்டே போகிறது... அதிகாலை நான்கு மணியிருக்கும் அம்மாவை நான் எழுப்பினேன். நேற்றுவரை அம்மாதான் என்னை எழுப்பினாள்...

அவளுக்கு ஆச்சர்யம்...

மார்கழி மாதம் என்பதால் வீரமாகாளியம்மன் கோவிலில் பாட்டு பாடிக் கொண்டிருந்தது.

"என்ன தம்பி என்னாச்சு?" அம்மா கேட்டாள் அக்கறையோடு...

"டீ போட்டு கொடும்மா" என்று கேட்டேன்.

அம்மா புரிந்து கொண்டவளாய் "இந்த நேரத்துல என்ன டீ? கண்டது கழுதைய மனசுல போட்டு நினச்சுகிட்டு திரியாத தம்பி.... காலம் கெடக்கு இன்னும்.... நிதானமா வாழனும்"

நான் எதுவும் பேசவில்லை.

வீரமாகாளியம்மன் கோவிலில் பாட்டுச் சத்தம் நின்றுவிட்டது.

'அம்மா பாட்டு நின்னிருச்சு' என்றேன்.

"கரண்ட் போயிருக்கும்டா" என்றாள் அம்மா.

'நம்ம வீட்ல இருக்கும்மா' என்று நான் சொன்னதும் அம்மா ஒரு நிமிடம் அதிர்ந்து போய் அமர்ந்துவிட்டாள்

மார்கழி மாதம் கோவிலில் பாட்டு நின்றுவிட்டால் ஏதோ மரணம் நிகழ்ந்திருக்கும் என்று அர்த்தம்.

"என்ன நடந்துச்சோ?" அம்மாவின் கண்களில் அச்சமும் சோகமும் அப்பிக் கொண்டிருக்கும் வேளையில்...

வெள்ளத்தரசு ஓடி வந்து.....

"ஆத்தா...உன் கொழுந்தன் பாப்பான்குலம் வீரணசாமிய வெட்டிக்கொன்னுட்டாரு....." என்றான்.

அம்மா...அலறிக்கொண்டே தலையை அள்ளிக்கட்டிக் கொண்டு ஓடினாள்....

சதுரகிரி சித்தப்பாவுக்கு இது நான்காவது கொலை.

விடிந்து கொண்டிருந்தது... ஊரின் அமைதி கூடிக்கொண்டே இருந்தது..

ஆங்காங்கே மக்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டார்கள்.

வீரணசாமி, சித்தப்பாவைப் பார்த்து சாதி பெயரைச் சொல்லி திட்டியிருக்கிறார்.......

சித்தப்பா, கோபத்தில் வீரணசாமியை கொன்றுவிட்டார்.

போலீஸ் வந்துவிட்டது.

வழக்கம் போல சித்தப்பா விலங்கு பூட்டப்பட்டார்...

ஊரில் உள்ளவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டனர்...

சூனா பானா பெரியப்பா மட்டும் நம்பிக்கையாகக் கூறினார்.

"சதுரகிரி அடுத்த பஸ்ல வந்துருவான்ப்பா"

ஏனென்றால் சித்தப்பா சாட்சிகளே இல்லாமல் வழக்கில் ஜெயிப்பதில் கில்லாடி.

அம்மாதான் அழுதுகொண்டே இருந்தாள்... "இந்தப் பாவத்தையெல்லாம் எங்க போய் தீர்க்குறது ?" என்று புலம்பினாள்.

வீரணசாமி குடும்பம் கத்துவதும் கதறுவதும் என் காதுக்குள் விழுகிறது.

என்ன செய்ய................... இரக்கம் இல்லாத சித்தப்பாவை......

என் இறைவன் இப்படி படைத்திருக்கிறான்.

ஆதிரையைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவள் வீட்டிற்குப் போயிருந்தேன் சாத்தனார் அய்யா... சோகத்தோடு இருந்தார்..

'என்னங்கையா ஆச்சு?' என்றேன்.

"வாங்க தம்பி...எங்க நாட்டுல நடக்குற பிரச்சினைக்கு பயந்துதான் இங்க வந்தோம்... இங்க வேற மாதிரி பிரச்சினை நடக்குது.." என்றார்,.

அய்யாவிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை அமைதியாக இருந்தேன்.

ஆதிரை தேநீர் எடுத்துவந்தாள்.

"இன்னைக்கு நடந்த சம்பவம்..?" அய்யா கேட்பதைப் புரிந்து கொண்டு நானே சொல்லிவிட்டேன்' என் சித்தப்பா தான் ." என்று.

சொன்ன பிறகு கொஞ்சம் பயமாக இருந்தது.

'கொலைகாரக் குடும்பம் என்று நினைத்துவிடுவாரோ'

ஆனால் அய்யாவோ என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே "இந்தக் கூட்டத்தில் நீங்க மட்டும் மனுசனா நிக்குறீங்க " என்றார்.

அப்போது ஆதிரை என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

வானத்து தேவதைகள் அவள் கண்களின் வழியே என்னை எட்டிப் பார்த்தார்கள்.

ஆதிரை என் அழகு தேவதை.

அய்யா.. "நீங்க பேசிட்டு இருங்க கடைவரைக்கும் போய்ட்டு வாறேன்" என்றார்.

'நான் கடைக்குப் போய்ட்டு வரவா?' என்றேன்.

"இல்லை தம்பி அவங்க அவங்க வேலைய அவங்க அவங்கதான் பாக்கனும்" என்றார்.

நானும் ஆதிரையும் வாசலில் அமர்ந்திருந்தோம். அது அரசு கட்டிக் கொடுத்த வட்ட வடிவமான வீடு.

"காலேஜ் போகலையா ?" என்றாள்.

'போகனும்' என்றேன்.

பேசிக் கொண்டிருந்தோம்... எங்கள் பேச்செல்லாம் எதிர்காலத்தில் வாழப்போகிற வாழ்க்கை பற்றியதாகவே இருந்தது.

"தோளில் சாய்ந்து கொள்ளவா?"என்றாள்.

'ம்ம்ம்' என்றேன் சாய்ந்து கொண்டாள்.

உலகம் மெதுவாக சுற்றுகிறது.. என்னையும் என் தேவதையையும் சுமந்துகொண்டு..

மகா வந்தான்.

"மாப்ள... உன்னை வத்சலா தேடிக்கிட்டு இருக்காள்டா" என்றான்.

"எதுக்கு ?" என்று ஆதிரை கேட்டாள்.
அப்போது அவள் என் கையை இறுக்கமாகப் பிடித்திருந்தாள்.

அதில் ஆயிரம் அர்த்தம் இருந்தது.

நானும் மெளனமாக இருந்தேன்..அவளும் புரிந்து கொண்டாள்

நான் போய் விடமாட்டேன் என்று.

மூவரும் அமைதியாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்

நான்காவதாக ஒருவர் வருவதைப் பார்த்துவிட்டு......................!














 




Gnanaguru

நாட்டாமை
Joined
Mar 15, 2018
Messages
34
Reaction score
112
Location
Madurai
சாதி மண்

அத்தை வந்திருந்தாள்(வத்சலாவின் அம்மா)

"என்னங்கப்பு மருமவனே.. உங்கள என் மவ வச்சலா ஊரெல்லாம் தேடி அலையுறாள் நீங்க இங்க இருக்கிங்க...." எங்க ஊருக்கே உரித்தான இழுவைத்த தமிழோடு பேசினார்.

"என்ன அத்தை?" என்றேன்.

"நீங்க கட்டிக்கப் போறவளுக்கு பொறந்த நாளு அதுக்கு இனிப்பு கொடுக்க தேடிட்ருக்காள் வாங்க போலாம்" என்றாள்.

'நீங்க போங்க அத்தை வாறேன்' என்றதும் அத்தை போய்விட்டாள்.

பாவம் என் ஆதிரை ஒரு மாதிரி ஆகிவிட்டாள்.

அவளுக்கே அவளுக்கென ஆகிப்போன பின்பும் அவளால், அடுத்த பெண்ணோடு நான் பேசுவதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நேசத்தின் உச்ச கட்டத்தைத் தொட்டவர்களால் மட்டும்தான் இதைப் புரிந்து கொள்ளமுடியும். ஆதிரை நேசத்தின் உச்சத்தைத் தொட்டவள். நேசம் என்பது எந்திரத்தனமாக இருந்துவிட கூடாது என்பதில் நானும் என் தேவதையும் விழிப்புணர்வோடு இருந்தோம்.அதற்காக அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டோம். அதன்பின் தெளிவுபடுத்திக் கொண்டோம்.

காதல் என்பது பற்றோடு இருப்பதல்ல பெரும்பற்றோடு இருப்பது.

நானும் மகாவும் பஸ் ஸ்டாண்ட் அருகில் வந்தோம். வத்சலா நின்று கொண்டிருந்தாள்.

ஒரு பாவக்காய் வெல்லக்கட்டியோடு நின்றுகொண்டிருந்தது.

"எங்க மாமா போனிங்க?" என்று அவள் கேட்டதும்.. மகாவுக்கு சிரிப்புத் தாங்கவில்லை. எனக்கு எரிச்சலாக இருந்தது.

ஒரு வழியாக அவளைச் சமாளித்துவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தோம்.

விதி வலியது.................... அது வத்சலா வடிவில் என்னை விரட்டுகிறது.

நானும் மகாவும்.... நடந்து கொண்டிருக்கிறோம்.

எதிரில் ஆலங்குலம் பெரியசாமி வந்தான்.... அவன் என் கல்லூரி தோழன். என்னைப் பார்த்ததும் பேராசிரியர் என்னைத் தேடுவதாகவும், நான் கல்லூரிக்கு வராமல் இருப்பது நல்லதல்ல என்பதையும் கொஞ்சம் கடினமாக கண்டித்தான் நல்ல நண்பன் சொல்வது நல்லதுக்குதானே?

"அடுத்த மாசம் மூணாறு போறோம் அதுக்காகவாவது வருவியா?" என்று அவன் கேட்டதும்....மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

'யார் யார் போறிங்க?' என்றேன்.

"நம்ம நண்பர்கள் மட்டும்தான்" என்றான்.

மகா சொன்னான் "நானும் வரட்டுமா?"

பெரியசாமி..."கண்டிப்பா" என்றான்.

அதன்பின் பெரியசாமி கேட்டான் "என்ன மாப்ள நீ ஒரு புள்ளகூட சுத்துரியாமே?" என்று.

நான் ஆமாம் என்று தலையாட்டினேன்.

"நல்லா சுத்து மாப்ள...எவன் கண்ணுலையும் மாட்டிக்காத" என்றான்.

மகா...வேகமாக "அதெல்லாம் யாரும் ஒன்னும் செய்ய முடியாது பெரியசாமி நம்ம மாப்ள மேல எவனாவது கைய வச்சா...... அவன் சங்க அறுத்துருவோம்ல" என்றான்.

பெரியசாமி தலையில் அடித்துக் கொண்டான்...பாவம் அவன் கொஞ்சம் பயந்த சுபாவம்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே என் அம்மா தேடுவதாக பொன்ராமு மாமா சொல்லிவிட்டு போனார்.

வீட்டிற்கு போகும் வழியில் வீரணசாமியின் இறுதி ஊர்வலம் போனது. எல்லோரும் சித்தப்பாவைத்திட்டிக்கொண்டே போனார்கள்..அதிலொருவன் என்னைப் பார்த்து முறைத்துக்கொண்டே போனான்.

காலம்காலமாய் கத்தியும் ரத்தமுமாக வாழ்ந்த பூமியில்தான் என் காதலை நான் கறை சேர்க்க வேண்டும். ஆதிரையின் நினைவு ஆட்கொண்டது. என் அழகு தேவதையை நான் எப்படி கறை சேர்க்கப் போகிறேன்?

காலம் பதில் சொல்லும்.

பொன்ராமு மாமா திரும்ப வந்தார். "என்னப்பா நீ இன்னும் வீட்டுக்குப்போகலையா?" என்றார்.

நான் எதுவும் பேசவில்லை...மெதுவாக என்னருகில் வந்து "கேம்ப்ல இருக்குற புள்ளையோட சுத்துரியாமே?" என்றார். அதற்கும் நான் எதுவும் பேசவில்லை.

பிறகு அவரே சொன்னார்...

"நம்ம ஊர் மோசமான பயலுக ஊரு.. இதுல இதெல்லாம் நடக்காதுப்பா பார்த்து நிதானமா நடந்துக்கோ" என்றார்.

காரணம் இருக்கிறது.

பொன்ராமு ஒரு கதைசொல்லி அவர் கதை சொன்னால் இந்த கிராமமே கைகட்டி நிற்கும்.....

ஒரு ஊருக்கு ஒரு கதை சொல்லி அவசியம். அவரால் மட்டும்தான் கதைகள் வாழ்கின்றன.... நானெல்லாம் இதிகாசங்களை அப்படிதான் அறிந்துகொண்டேன்.

பொன்ராமு மாமா பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருப்பார்...மாறுகண் சாஞ்ச நடை பரட்டைதலை...ஆனால் தோல் மட்டும் வெள்ளையாக இருக்கும்.

கூலி வேலைக்குப் போவார்.கூப்பிட்டால் மாடுகூட மேய்ப்பார்.

அவருக்குத்தேவை ஒரு வேலை சாப்பாடு.

இரவு முழுக்க கதை சொல்வார். யாராவது முறுக்கு மிக்சர் வாங்கித் தந்தால் ஆவலோடு கதை சொல்வார்.

இவருக்கு யாருமே பெண் தரவில்லை.. காரணம் கையில் பணம் இல்லை முகத்தில் அழகும் இல்லை.

நான் ஒரு நாள் 'ஊர்ல உள்ளவன் கதையெல்லாம் சொல்றியே மாமாஉன் கதைய சொல்லு...உனக்கு ஏன் ஒருத்தன்கூட பொண்ணு தரலைனு?' கேட்டேன். அன்றுதான் புரிந்து கொண்டேன்....

இவருக்குள்ளும் ஒரு காதல் இருந்திருக்கிறது...

பள்ளபட்டிக்கு நெல் அறுக்க போன இடத்தில் ஒரு விதவையை சந்திச்சிருக்கிறார் பொன்ராமு மாமா.

மங்கலம் நு நினைக்கிறேன் அவங்க பேரு....

மூன்று மாதம் அந்த ஊரிலேயே இருந்து விட்டு ஊருக்கு அழைத்து வந்திருக்கிறார் மாமா அவரது காதலியை.....

பேருந்தைவிட்டு இறங்கியதுமே விசயம் ஊர்முழுக்க பரவி அந்த அத்தையின் சாதியை விசாரித்து.... வேறு சாதி என்பதால் ஓட ஓட விட்டு வெட்டிக் கொன்றார்களாம் இந்த ஊர்காரர்கள் .....

(இது நான் சிறுவயதாக இருக்கும்போது நடந்ததாக கூறினார்)

அன்று முதல் இவர் அந்தக் காதலைப் புதைத்துவிட்டு நடைபிணமாக கதை சொல்லியாக திரிகிறார்.

இவரைப் போல இன்னும் எத்தனை காதலைக் கொன்றுவிட்டு இந்த கிராமம் தலை நிமிர்ந்து நிற்கிறதோ தெரியவில்லை.

மகாவும் பெரியசாமியும் விலகிச் சென்றார்கள் காரணம் என் வீடு வந்துவிட்டது.

வழக்கம்போல் அம்மா திட்டத் தொடங்கினாள்..

"எங்கதான் போய்த்தொலைவியோ"

நான் எதுமே பேசவில்லை...மெதுவாக வீட்டிற்குள் நுழைகிறேன்...

அங்கு அந்த ஆள் அமர்ந்திருந்தான்.......!


வாசகர்களே!
முந்தைய அத்தியாயத்தில் நீங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
இந்த கதைகளம் மாறுப்பட்ட களமாய் இருக்கும். நீங்கள் எல்லோரும் கருத்தை மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள். Pls dont forget to vote too.

ஞானகுரு
 




Last edited:

N.Pitchai

புதிய முகம்
Joined
Mar 19, 2018
Messages
3
Reaction score
4
Location
Ladanendal
புது புது திசைகளில் மிக எதிர்பார்ப்போடு நகர்கிறது........!அருமை
 




Gnanaguru

நாட்டாமை
Joined
Mar 15, 2018
Messages
34
Reaction score
112
Location
Madurai
புது புது திசைகளில் மிக எதிர்பார்ப்போடு நகர்கிறது........!அருமை
நன்றி பிச்சை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top