• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews Aanandha jothi review

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,334
Location
Earth
"அகிலா கண்ணன் "சகோதரி எழுதிய
*குறும்பு பார்வையிலே*
தொடர்கதை தற்சமயம் 31 அத்தியாயங்களுடன் மிக
அழகாக முடிவடைந்தது.

ஆகாஷ் :

சராசரி ஆண்களைவிடஉயரமானவன்.மாநிறம் கலையான முகம். அவனுடைய கண்டுபிடிப்பான ரோபோட் நாய் விமான நிலையங்களில் பாதுகாப்புக்காகவும் ,வெடிமருந்து, போதை பொருள் இருக்கும் இடங்களை கண்டு கொள்வதற்கும், பயணிகளை அதன் கண் லென்ஸ் வழியாக சோதனை செய்யும் படியும் கண்டுபிடித்துள்ளார்.
நாயகியும் அவரும் சந்திக்கும் காட்சிகள் கோபமும் ஊடலுமாகவே சென்றாலும் அதையும் மீறி மனதில்? நுழைபவர் ,திருமண ப்ரீசூட்டிங்காக வெளி நாட்டிற்கு செல்பவர்கள் சந்தர்ப சூழ்நிலைகளால் இணைய பிறகு அவனது சில குறும்பு பேச்சுக்களால் காரணமற்று பிரிந்து போகின்றனர்.
**என் டாலி என்னை விட்டு போகமாட்டாள் நான் இல்லாவிட்டால் செத்து போய்விடுவா அவ எங்கே போய்ருக்கா சொல்லு கார்த்திக்**என கலங்கி?? கண்ணீர் வடிப்பதும் ** நான் குறும்பு பேசுவது அவளுக்கு தெரியாதா ....இதற்காக பிரிந்து போய்விடுவாளா...என் டாலி நிச்சயம் என்னை தேடி வருவா ** என்ற காத்திருப்பு வருடங்களாக அவனே செல்கிறான். மனை ,மகனுடன் திரும்பிய வாழ்வில் கோபங்களும் ஏக்கங்களும் தீராமலே பயணிக்கின்றன.
**ஏன் என்னை விட்டு போனாய் நான் என்ன செய்தேன் என்று போனாய் ** ...**என்னை விட்டு முன்பே போனவள் தானே இப்போ போ நாளை போ ...போய்விடு **என கலங்கும் போது படிக்கும் நமக்கே பாவமாகிவிடுகிது.....அவளது பரிசை திறந்து பார்த்து அதிர்வது அவள்மீதான காதலை உணர்ந்து வருந்துவது என இயல்பான நடிப்பால் மனதை தொடுகிறார்.???..மகனுக்கு நல்ல தந்தையாகவும், கீதாவுக்கு நல்ல அண்ணனாகவும், டாலிக்கு ஏற்ற குறும்பா வாகவும் ,தாய் தந்தைக்கு நல்ல மகனாகவும் அருமையான கதாபாத்திரம்......

ஸ்ருதி :

தன்னம்பிக்கை, கோபம், சுயகௌரவம் கொண்ட கண்ணியமான பெண் காதலனின் செல்லசீண்டல்களையும் குறும்பு பேச்சுகளிலும் குறும்பு பார்வைகளையும் ரசித்து *குறும்பா* என்பவள். காதலனின் சீண்டலால் பிரிந்து போய்விடுகிறார்.
** உனக்காகத்தான் வந்தேன் ஆனால் உனக்காக மட்டும் இல்லை **என்ற பேச்சில் வருந்துவதும் மகனை அவனுடன் அனுப்ப சொல்வதும் அழகு** என்னை விட ஆகாஷ் நன்றாக பார்த்துக் கொள்வார்** எனும் போது அவன் மீதான காதலை சில சமயங்களில் வெளிப்படுத்திவிடுகிறார்.???
**குறும்பு பேச்சு எப்போதும் ரசிக்காது ஆகாஷ் தன்மானத்தை சீண்டும் விதமாக பேசும் குறும்பை எப்படி ரசிக்க முடியும்** என கோபங் கொள்வதும்** ஏன் என்னை தேடிவரலை உங்களுக்காக எத்தனை நாள் தேடினேன் காத்திருந்தேன்** எனும் போது மிகவும் பாவமாகிவிடுகிறது.....
மழலை விஷயத்தை மறைத்தது அவனுக்கு மகிழ்வை கொடுக்காமல் இருந்துவிட்டோமே என கண்ணீர்விடுவதென ஸ்ருதி அம்சமான காதாபாத்திரம் என்பதை பல சமயங்களில் நிரூபிக்கிறார்........

கிருஷ் :

அவனது மழலை பேச்சில் விழுந்தது தந்தை மட்டுமின்றி நாமும் தான் **மை மாம் இஸ் மை வேல்ட்**
**கம் பிரம் இந்தியா ,ஐஸ்கிரீம் சாப்பிடாட்டி பாடி காட் ஆகி பீவர் வந்து விடும் **என குறும்பு பேசி அப்பாவின் பிள்ளை என்பதை பல சமயங்களில் நிரூபிக்கிறார் .
*மை டாடி ஸ் குட் சீக்கிரம் வருவாங்க என்னைப்பார்க்க*ஹாஹா யாருணு தெரியாமலே சொல்றான் குட்டி குறும்பா??????


கார்த்திக் :

ஸ்ருதி நண்பன் சில காட்சிகளிலே வந்தாலும் மனதில் பதிகிறார் கீதாவிடம் **எப்போது விழுந்தாலும் பிடித்துக் கொண்டிருக்கமாட்டேன் **என்பதும்
** உன் அண்ணனை போல காத்திருக்க என்னால் முடியாது திருமணம் செய்து கொள்வோமா** என்பதும் அழகு......ஸ்ருதியின் நிலைகண்டு வருந்தும் நல்ல தோழனாக, கிருஷ்ஷிடம் பாசம் கொண்டவனாக ,அன்பான கணவாக நல்ல கதாபாத்திரம்.....

கீதா :.

அண்ணனிடம் வம்பு பேசுவதிலும், வல்லினம், மெல்லினம் ,இடையினம் என அண்ணனுக்கே காதலின் படிகளை கற்றுக்கொடுக்கும் ஆசானாகவும் மாறிவிடுகிறார்.?????
**இத்தனை வருடங்கள் வரவே இல்லையே என் நியாபகம் உங்களுக்கு இல்லையா** எனும் போதும் அவளது பேச்சால் வசீகரம் செய்துவிடுகிறார்.குறும்புக்காரியின் பேச்சும் இயல்பும் ரசனையானது.???

சங்கரன், சுமதி ,ஆவுடைபாட்டி ,பார்வதி என அழகான கதாபாத்திரங்கள்.இன்றைய தலைமுறைகளின் மாற்றமான ப்ரீசூட்டிங் அதற்கான வெளிநாடு அலைச்சல், அதன் பிறகான ஊடல்களையும், கூடலையும் மிக அழகாக தன்னுடைய இயல்பான பாணியில் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.

**குறும்பு பேச்சு எப்போதுமே ரசிக்காது
குறும்பு பேசாத வாழ்வே ருசிக்காது**

வாழ்த்துக்கள் அகிலா கண்ணன் ??????
நன்றி தோழமைகளே???

https://forum.smtamilnovels.com/index.php?forums/குறும்புப்-பார்வையிலே.904/

இத்துடன் லிங் கொடுத்துள்ளேன் விருப்பப்பட்டவர்கள் படிக்ககலாம் நண்பர்ளே???.......
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அருமையான படிக்கத் தூண்டும் விமர்சனம் டியர்... வாழ்த்துகள் அகிலா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top