• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

aasai mugam - review!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
ஆசை முகம்

கூட பிறந்தவர்கள் எல்லாம் குடும்பம் , குழந்தை என குடும்ப சாகரத்தில் முத்துகுளிக்க, நம் ஹீரோ எழில் வேந்தன் பிசினஸ் என்ற கடலுக்குள் மூழ்கி, தன்னையும் அதில் மறந்து இருந்தான். தன் கல்லூரி காலத்தில் பார்த்த பெண்ணின் முகத்தை மட்டுமே நினைப்பில் வைத்து இருக்க, கல்யாணத்தை அவள் முகத்தை நினைத்தே மறந்து, மறுத்து திரிகிறான்.அன்னைக்கு நல்ல மகனாக, நண்பர்களுக்கு உதவும் நல்ல தோழனாக, பெண்களை மயக்கும் ஆணழகனாக எழிலுக்கே எழில் கொடுத்து வேந்தன் இருக்கிறான்.

சிறுவயது முதலே தாயையும் தந்தையும் இறந்துபோய் இருக்க, தனிமையையே துணையாய் கொண்டு, சிரித்து பேசிய போதும், எல்லாரிடமும் ஒதுங்கியே இருக்கிறாள் எழில் வாணி. மாமனது துணையில் வளர்ந்தாலும் அவருக்கு தன்னால் இம்சை வரக்கூடாது என்ற பிடிவாதத்தில் மிளிர்கிறாள் பெண்.

பெண்களை மயக்கும் எழில், பெண்ணது எழிலில் தன் வசம் இழந்த போதும், அவளது ஆசை முகத்தை காண தவம் கிடந்த போதும், பெண்ணின் அருகில் நெருங்காது விலகி இருந்து தன்னை அடக்கி கொண்டதில் வேந்தன், ஆணின் காதலுக்கு புதிய இலக்கணம் வடிக்கிறான். ஆணின் கரிசனலில் தன்குணத்தில் இருந்து வேறுபட்டு அவனிடம் மட்டும் மடை திறந்த வெள்ளமாய் பழகி, அவனது தயக்கத்தை எல்லாம் உடைத்து பேசிய போதும், அவனுக்கு தொந்தரவ இருக்க கூடாது என்று முடிவெடுத்து, அவனது வீட்டில் இருந்தே அவனை தவிர்த்து சென்றது, பெண்ணின் மனமுதிர்ச்சியை அழகாய் காட்டுகிறது!

சுகுணாவும் அவளது குடும்பமும் மண்ணில் பிறந்த மக்களின் மனதில் இருக்கும் குப்பையை தெளிவாய் காட்டுகிறது. முதலில் பாசத்தில் மிளிர்ந்தாலும், பெண்ணிற்கு பணவரவை ஏற்படுத்தி கொடுத்தாலும், மாமன் கடைசியில் கோபகனலில் கக்கியது சுயநல மனதின் சாட்சியாய் இருக்கிறது. மாமனது பெரியவனும் சிரியவனும் பெண்ணை காதல் கொண்ட போதும், சிரியவனின் முதிர்ச்சி பெரியவனுக்கு இல்லாது, காதலித்த பெண்ணிற்கே துன்பம் ஏற்பட்ட போதும் அமைதியாக இருந்தது, இப்படியும் ஒரு ஜீவனா என்று இளாவின் மீது முகம் சுளிக்க வைக்கிறது .

அபிக்கு நடந்த கொடுமைகள் ஆண் என்ற உருவத்திற்குள் உறங்கும் மிருகத்தை வெளிக்கொணர்வதாய்... வேந்தனது தாய் இவனுக்கு குடும்பம் வராதா என்று உருகியதும், வாணிக்கு அன்பு காட்டி வந்த பாங்கு எல்லாம் நம் வீட்டு தாயை நியாபக படுத்துவதாய்! மீராவும் சித்திக்கும் நட்பின் இலக்கணத்தை கடைபிடிப்பதாய்!! வேந்ததனை மறுத்ததாக மித்ராக்கான பதில், கல்யாணம் என்றால் என்ன முதிர்ச்சி பலருக்கு இருக்கிறதா என்ற எண்ணத்தை மனதில் தோற்றுவிற்பதாய்...

கதையின் கடைசியில் மிளிரும் கவிதைகள் ஆசிரியரின் கவிதைப்புலனை காட்டுவதாய்... இடை இடையே முளைத்த பாடல்வரிகள் கதையோடு பொறுந்திபோவதாய்!

மொத்தத்தில், காதல் எதனை பெரிய பிசினஸ் மக்னெட் என்றாலும், ஜவாளமுகியாக வளம் வந்த பெண் என்றாலும் , குழப்பி தயங்க வைத்து எளிமையாய் முடிக்க வேண்டிய விஷயங்களை மேலும் சிக்கலாகி என பலமாற்றம் கொண்டு வரும் என்பதை உணர்வதாய் கதை நகர்கிறது...

ஆசிரியருக்கு:
  • கதை அருமையாக இருந்த போதும் படிக்கும் பொழுது ஒரே போன்டில் இருந்தால் தொடர்ந்து படிக்கச் தோதுவாக இருந்து இருக்கும்.
  • அபிக்கு ஆதரவாய் கடைசியில் தன தவறை உணர்ந்த வேணி, வாணியை வளர்ப்பதை ஏற்றுக்கொண்டதாக சூளுரைத்து பின் கல்யாணம் நடந்தது என்ற ஒரே காரத்திற்காக பெண்ணை அம்போ என்று விட்டது மனதில் சுணுக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • வசனம் மிகவும் குறைந்து நரஷனில் நீண்டும், அதுவும் வேந்தனது வயது வித்தியாசம் என்று வரிகள் சார்ந்த நரஷனில் மீண்டும் மீண்டும் படித்தது, இது என்ன டா என்ற எண்ணம் வரவைப்பது என்னவோ உண்மையே.
  • எழில்கள் இருவருக்கும் இடையே இன்னும் டயலாக் வந்து இருக்கலாமோ என்ற எண்ணமும் தோன்றியது!
  • பெண் தூங்கும் போது அவளை ரசிப்பதும் விழித்ததும் அவளை விலகுவதும் என்ற வேந்தனது கண்ணாமூச்சி ஆட்டம் அவனது குணத்தில் இருந்து மாறுபட்டதாய்.

கவிதையும் பாடல்களும் ஜெனெடிக்ஸ் பற்றிய விளக்கங்களும் கதையின் முக்கியப்புள்ளியே!
ஆசை முகம் என்றும் மறக்காது ஆசிரியரின் வெற்றியை கூறும் !!
வாழ்த்துக்கள் சரோமா
 
Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
அழகான விமர்சனம் அபி ... வாழ்த்துக்கள் எழுத்தாளரே
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM

நிறை, குறைகளை எடுத்துக்கூறி அருமையான விமர்சனம் நல்கிய எழுத்தாளர் அபிராமிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top