• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Aathiye anthamai - 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இயற்கை சீற்றம்


விடியற் காலையில் சூரியனின் வரவிற்கு முன்னரே தொடங்கப் போகும் குடமுழக்கு விழாவை காண மக்கள் ஆதித்தபுரத்தில் அலைஅலையாய் குவிய ஆரம்பித்தனர்.

ஆதிபரமேஸ்வரி ஆலயம். தீபங்களின் அணிவகுப்புகளில் வானின் நட்சத்திரங்களோடு போட்டி போட்டு மின்னிக் கொண்டிருக்க,

பக்தர்கள் காற்றுக் கூட நுழைய முடியாதளவுக்கு பிராகரத்தை சூழ்ந்து கொண்டிருந்தனர்.

அன்று ஆதிபரமேஸ்வரியின் ரூபத்தை பார்க்க கண்கள் கோடிதான் வேண்டும். அத்தனை பிரமிப்புக்குரிய ஆலங்காரத்தோடு அவள் தென்பட்டாள் என்றே சொல்ல வேண்டும்.

கோவிலை சுற்றிலும் கூத்து, கச்சேரி, மற்றும் சொற்பொழிவுகள் நிகழ்ந்து கொண்டிருக்க மக்களின் ஆதரவு எல்லா நிகழ்வுகளுக்கும் குவிந்த வண்ணம் இருந்தது.

ஒற்றை கோபுரம் கொண்ட அந்த ஆலயத்தில் தலைதூக்கி பார்த்தோமேயானால் அந்த ஐம்பொன் கலசம் கம்பீரமாய் பிரகாசித்து கொண்டிருந்தது.

அங்கேயும் தமிழன் தன் அறிவியல் அறிவை நிமிர்ந்து நிற்க செய்திருக்கிறான் என்றே சொல்ல வேண்டும். ஆனால் நம்முடைய எல்லா கேள்விகளுக்கான விடையும் அத்தனை சுலபத்தில் கிடைத்து விடுமேயானால் நம் தேடல் முடிந்துவிடுமே!

அந்த தேடலைத்தான் நிறுத்தாமல் மேற்கொண்டிருந்தான் மனோகரன். இம்முறை வெள்ளையப்பனோடு அவன் பிரகாரத்தை சுற்றி வந்து கொண்டிருக்க, அவர்களை பார்த்த சிவசங்கரனின் மனதில் ஓர் சந்தேகத்துளி வீழ்ந்தது.

சிவசங்கரனும் செல்வியும் கோவிலுக்கு வந்திருக்க, அவர்களுடன் மனோரஞ்சிதத்தின் மகன் சரவணனும் உடன் வந்திருந்தான்.

செல்வியையும் சரவணனையும் சொற்பொழிவு அரங்கில் அமர வைத்துவிட்டு சிவசங்கரன் சீக்கரம் வந்துவிடுவதாக சொல்லி புறப்பட்டு செல்ல,

செல்வி ஆர்வமே இல்லாமல்தான் அங்கே அமர்ந்திருந்தாள். ஏனோ இந்த குடமுழக்கு விழா சில காரணங்களால் தடைப்பட போவதை அவள் மனம் அறிவுறுத்தியது.

நடைபெறப் போகும் எதையும் தடுத்து நிறுத்தும் சக்தி அவளிடம் இல்லாத பட்சத்தில் இந்த எண்ணங்களும் அறிகுறிகளும் அவளை பாடாய் படுத்தின.

அந்த சமயம் சொற்பொழிவு அரங்கில் முகத்தில் முதர்ச்சியும் பேச்சிலும் செயலிலும் இளமை கலந்த உற்சாகத்தையும் வெளிபடுத்தி கொண்டிருந்த ஒருவர் தன் பேச்சு வல்லமையால் அங்கே அமர்ந்திருந்த எல்லோரையும் ஈர்த்திருந்தார்.

அங்கே சூழ்நிலையின் காரணமாக அமர்ந்திருந்த செல்வியினையும் அவருடைய பிரசங்கம் வெகுவாய் ஈர்த்தது.

"இராமயணத்தை பத்தி தெரியாதவ யாராச்சும் இருக்க முடியுமோ?... அதிலும் இராமயணத்தில இராவணனை பத்தி தெரியாதவ இருப்பாளோ... ஆனா உங்களுக்கு இராவணை பத்தி என்ன தெரியும் ?

அவன் ஒரு அசுரன்... இரமனோட மனைவி சீதையை தூக்கிட்டு வந்த கிராதகன்... அரக்கன். இதெல்லாம்தானே

ஆனா இலங்காபுரியை ஆட்சி செஞ்ச இரவாணன் எப்பேர்பட்டவன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமோ?...

பொன் கொழிக்கும் நகரமா இருந்ததாம் அவன் ஆட்சி செஞ்ச இலங்காபுரி... அதுவும் அவனை மாதிரி திறமையான ஆட்சியாளனை பார்க்கவே முடியாதுங்கிறான் கம்பன்... தீவர சிவபக்தன்... திறமையான இசை வல்லுனன்... இதெல்லாம் ஒருபுறம் இருக்க அந்த காலத்தில புஷ்பகவிமானத்தை வைச்சிருந்த அதிமேதாவி... அவன் அரசவையில் புத்திசாலிகளுக்கும், வீரர்களுக்கும் பஞ்சமே இல்லையாம்...

அப்பேர்பட்டவனின் அழிவுக்கு யார் காரணம்னு உங்க யாருக்காவது தெரியுமோ?" என்று கேள்வி எழுப்பிவிட்டு மக்களின் பதிலுக்காக அவர் அமைதியாக காத்திருக்க,

எல்லோருக்கும் இந்த கேள்விக்கான விடைதான் தெரியுமே..

இராமன்,சீதை என அங்கு குழுமியிருந்தவர் மாறிமாறி சொல் அவர் தெய்வாம்சமாய் ஒரு புன்னகையை உதிர்த்தார்.

அவர்களை நோக்கியவர்,

"என்னதான்... இராமன் தெய்வாம்சம் பொருந்தியவருன்னே வைச்சுக்கிட்டாலும்... அதுவும் மனித ரூபம்தானே...

அதுக்குன்னு சில கட்டுபாடுகள் இருக்கோ இல்லையோ.... அத்தனை சிறப்பான ஆட்சி நடத்திட்டிருந்த அரசனை அவன் நகரத்துக்கே வந்து அழிக்கிறது சாத்தியமோ? சொல்லுங்கோ" என்றவர் சூட்சமமாய் கேட்டு அங்கிருந்த எல்லோரையும் கொஞ்சம் குழப்பிவிட்டார்.

எல்லோருமே புரியாத பார்வையோடு ஒருவரை ஒருவர் பார்த்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்று கூர்ந்து கவனிக்க அவர் மேலும்,

"இராவணனும் இராமனுக்கு நிகரான வீரனா இருக்கு போது அதெப்படி சாத்தியம்... நீங்ககெல்லாம் அதை யோசிச்சு பாத்தேலோ?!" என்றவர் அடுத்த கேள்வியை கேட்க மக்கள் மொத்தமாய் குழம்பி அவர்களுக்குள்ளேயே சலசலத்து கொள்ள அவர் மெல்லிய புன்னகையோடு தன் பிரசங்கத்தை மேலே தொடர்ந்தார்.

"உண்மையிலேயே இராவணனை யாரும் அழிக்கல... அவனோட கெட்ட எண்ணம்தான் அவனோட அழிவுக்கு காரணம்... அதை நாம முதல்ல புரிஞ்சிக்கனும்... நமக்கு நடக்கிற தீங்குக்கெல்லாம் நாம அடுத்தாவா மேல பழி போட்டின்ருக்கோம்... உண்மையிலேயே பாத்தா நமக்கு நடக்கிற கெட்டதையும் நல்லதையும் நாமதான் தீர்மானிக்கிறோம்... நம்மோட எண்ணம்தான் தீர்மானிக்குது... அது புரியாம நாம சாமியை நிந்திச்சிட்டிருக்கோம்... முதல்ல எல்லோரும் புரிஞ்சிக்க வேண்டியது என்னன்னா... நம்ம எண்ணம்ங்கிறது தீஜ்வாலை மாதிரி... அது தீபமாய் பிரகாசிச்சு வெளிச்சத்தையும் கொடுக்கும்... காட்டுத்தீயாய் பரவி பெரிய சேதத்தையும் ஏற்படுத்தும்" என்று அந்த பேச்சாளர் பேசிக் கொண்டிருக்க எல்லோருமே அந்த ஆழமான கருத்தை கேட்டு ஆச்சர்யமுற்றனர்.

அவனவனின் செயலும் எண்ணமுமே அவனவனின் நல்லது கெட்டதுக்கு காரணம் என்பதை அவர் விளக்கமாய் விவரித்துவிட அங்கிருந்து எத்தனை பேருக்கு அந்த கருத்தின் ஆழம் புரிந்தது என்பது கேள்விகுறிதான்.

செல்வியும் அவர் சொன்ன கருத்தை குறித்து தீவிரமாய் சிந்திக்க அப்போது சிவசங்கரன் அவள் தோளை தொட்டு, "போலாமா செல்வி" என்றழைத்தான்.

அவள் மடி மீது உறங்கிய சரவணனை சிவசங்கரன் தோள் மீது போட்டு கொண்டுவிட இருவரும் வீட்டை நோக்கி நடந்தனர்.

இருவரும் ஒரே திசையில் பயணித்தாலும் அவர்களின் சிந்தனை வெவ்வேறு திசையில் பயணித்தது. செல்வி அந்த பிரசங்கத்தை பற்றியே யோசித்து கொண்டு வந்தாள்.

நம்முடைய எண்ணமே நம்முடைய நலனுக்கும் தீங்குக்கும் காரணேம் என்பது எத்தனை பெரிய உண்மை என்று அவள் மனம் ஆமோதிக்க, மாணிக்கத்தின் மரணம்தான் அவள் கண்முன்னே நிழலாடியது.

அதுவும் அந்த குடும்பத்தில் நடக்கும் ஓவ்வொரு தீமையும் அவர்களுக்கு அவர்களே விதைத்து கொண்டது என்று எண்ணியவளுக்கு தானும் அதே குடும்பத்தில்தானே வாழ்கிறோம் என்ற எண்ணம் உதித்து அவளை அச்சுறுத்தியது.

அதுவும் பரமுவின் மரணத்திற்கு பிறகு ஏற்பட்ட மரணம் எல்லாம் அவளை சுற்றியே நடைபெற்றது. தெரிந்தோ தெரியாமலோ எல்லா இறப்புகளுக்கும் தானும் காரணியாக இருந்திருக்கிறோமோ என்ற எண்ணமும் எழுந்தது.

ஏனெனில் அந்த குடும்பம் அழிந்துவிட வேண்டும் என்று பலமுறை மனதளவில் திண்ணமாய் அவள் எண்ணிக் கொண்டிருக்கிறாள்.

திருமணத்திற்கு பிறகும் கூட அவள் எண்ணம் மாறுபடவில்லை. அந்த எண்ணம்தான் வரிசையாய் தொடரும் இன்னல்களுக்கு காரணமோ என்றவள் யோசித்தபடி நடந்து வர,

அப்போது சிவசங்கரனோ பாதையை பார்த்து நடவாமல் வானத்தையே உற்று பார்த்து கொண்டிருந்தான். நட்சத்திரங்கள் இல்லாத வானம் வரப் போகும் ஆபத்தை முன்னமே அவனுக்கு தெரியப்படுத்தி கொண்டிருந்தது.

குடமுழக்கு விழா ஏற்பாடுகள் சீராக முடிவடைந்துவிட்ட நிலையில் நாளை வரப்போகும் ஆபத்தை பற்றிய யூகம் அவனை கவலை கொள்ளச் செய்தது. அப்படி எதுவும் நிகழ்ந்துவிட கூடாதென்று அவன் மனதளவில் எண்ணி கொள்ள, விதியின் தீர்மானத்தை யார் எண்ணினாலும் தடுத்துவிட முடியாது.

விடிவதற்கு முன்பே தொடங்கிய காற்றும் மழையும் அந்த குடமுழக்கு விழாவிற்காக எதிர்பார்த்திருந்த எல்லோருக்கும் பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

புயல், மழை என்பதை கடந்து அது இயற்கை சீற்றமாய் உருவெடுத்து கொண்டிருக்க சண்முகவேலனோ மனதளவில் உடைந்து போனார்.

ஊரே வெள்ளக்காடாய் போனது. கூரைகள் பெயர்ந்து விழுந்தன. வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தன.

தொடர்ச்சியாய் கொட்டி தீர்த்த மழையால் ஏற்பட்ட சேதங்களோ கணக்கிலடங்கா. வயல்வெளிகள் எல்லாம் நாசமானது. மரங்கள் பல வேரோடு பெயர்ந்து விழுந்தன.

சிவசங்கரனின் வீட்டிலும் பாதிப்புகள் ஏற்பட்டது. கால்நடைகள் பெரிதும் அவதியுற்றன. ஆனால் ஈஸ்வரனை மட்டும் செல்வி கண்ணும் கருத்துமாய் பாதுகாத்தாள்.

உண்மையிலேயே ஆதித்தியவர்மன் ஆட்சியில் ஏற்பட்ட புயல் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று மக்கள் சிந்திக்குமளவுக்காய் அந்த புயலின் தாக்கம் அந்த ஊரையே படாதபாடுபடுத்தியிருந்தது.

ஆனால் அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் ஆதித்தியவர்மன் ஆட்சியின் போது ஏற்பட்ட புயலில் பரமேஸ்வரி கோவில் கோபுரம் சிதைந்து போனதாகவும் அதனை அந்த மன்னன் சீரமைத்து தந்தாக இன்றளவிலும் ஓரு செய்தி வலம் வந்து கொண்டிருக்க,

இம்முறை ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் ஆதிபரமேஸ்வரியையும் ஆதிபரமேஸ்வரி ஆலயத்தையும் அசைத்து கூட பார்க்க முடியவில்லை என்பதுதான் வியப்பின் உச்சம்.

அந்த கோவிலின் கட்டுமானம் அத்தனை பலம் வாய்ந்ததாய் இருந்தது சிறப்புக்குரிய விஷயம்.

ஆனால் இந்த மோசமான சம்பவத்தினால் குடமுழக்கு திருவிழா நடைபெறாமல் நின்று போனது. அதை மீண்டும் எடுத்து நடத்தும் தைரியமும் தெம்பும் சண்முகவேலனுக்கு இப்போதைக்கு இல்லை.

அந்த ஏமாற்றம் அவரை பெரிதும் பாதிப்படைய செய்தது. உடல் நலம் குன்றி போக இனி பொறுப்புகளை மொத்தமாய் வேல்முருகன் இருக்க சிவசங்கரனிடம் கொடுத்தார் சண்முகவேலன்.

சிவசங்கரன் பிடிவாதமாய் மறுப்பு தெரிவிக்க ஊர்மக்கள் அவனையே தலைவனாக வேண்டும் என முடிவும் செய்துவிட்டனர். வேல்முருகனுக்கு அவமானமும் ஏமாற்றமும் அபரிமிதமாய் இருந்தது.

மோசமான இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்பினால் சீரமைக்கும் பணி வேறு குவிந்து கிடக்க, சண்முகவேலனின் உடல்நிலை காரணமாக பொறுப்புகள் எல்லாவற்றையும் சிவசங்கரனே தன்னந்தனியாக செய்ய வேண்டி இருந்தது.

வேல்முருகன் எதையும் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையில் வீட்டில் வேலை புரியும் அன்னம்மாவின் மகன் வெள்ளையப்பனை சிவசங்கரன் அன்று கடுமையாக கண்டித்து கொண்டிருந்தான்.

"வெளியாட்க்கள் யாரையும் தேவையில்லாம ஊருக்குள் கேட்காம அழைச்சிட்டு வராதன்னு சொல்லிருக்கேன் இல்லடா" என்றவன் மிரட்டலாய் கேட்க, அந்த வார்த்தைகள் செல்வியின் காதுகளில் விழுந்தன.

அவனை சிவசங்கரன் வெகுநேரம் நிற்க வைத்து கண்டித்து அனுப்பிய பிறகு செல்வியின் அருகில் வந்தவன்,

"வேலை இருக்கு... வர நேரமாகும்... காத்திட்டிருக்க வேண்டாம்... சாப்பிட்டு படுத்துக்கோ" என்று சொல்ல

"அதெல்லாம் முடியாது... நான் காத்திட்டிருப்பேன்" என்றாள் செல்வி பிடிவாதமாக!

"காத்திட்டிரு... யார் வேண்டாம்னு சொன்னா... அப்புறம் உனக்குதான் சிரமம்" என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட அவளுக்கோ தான் கணவனிடம் எதையோ சொல்ல மறந்துவிட்டோமோ என்று எண்ணம் தோன்றி மறைந்தது.

அந்த எண்ணத்தின் அர்த்தம் அவளுக்கு அப்போது புரியவில்லை.

அவன் சொல்லிவிட்டு சென்றது போலவே அன்று இரவு வெகு நேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
நடுநிசியும் கடந்து போக செல்விக்கு பயவுணர்வு எச்சரிக்கை உணர்வாக மாறியது. இவை எல்லாம் நம்முடைய கற்பனை என்று எண்ணியபடி அவள் தன் அறையில் இருந்து வாசலை நோக்கி வந்தாள்.

அந்த சமயத்தில் சண்முகவேலன் மூச்சு விடமுடியாமல் தவித்து கொண்டிருப்பதை பார்த்து பதறியவள்,

உடனடியாய் அவரை தண்ணீர் அருந்த செய்து ஆசுவாசப்படுத்தி நெஞ்சை தடவிவிட்டாள்.

சண்முகவேலன் ஓருவாறு தெளிவு பெற்று
செல்வியை பார்த்து குற்றவுணர்வோடு கண்ணீர் வடித்து அவளின் கரத்தை பிடித்து கொண்டார்.

"என்னாச்சு மாமா?" என்றவள் விசாரிக்க அவர் உடனே,

"உன்னை பார்த்ததும் பரமு ஞாபகம் வந்துடுச்சும்மா" என்றார்.

செல்வி நினைவுபடுத்திக் கொள்ள விரும்பாத விஷயங்கள் அவளுக்குள் அந்த நொடி தோன்றி மறைந்தன. சட்டென்று அவள் கரத்தை உருவிக் கொண்டவள் முறைப்பான பார்வையோடு,

"இப்போ அழுது என்னாகப் போகுது... உயிருக்கு துடிச்சிட்டிருந்த புள்ளய கழுத்தை மிதிச்சி கொன்ன போது யோசிச்சிருக்கனும்" என்க, அந்த வார்த்தைகளை கேட்டு அவர் அதிர்ந்து போனார்.

ஒரு நொடி அவருக்கு எதிரே செல்வியின் ரூபத்தில் நிற்பது பரமுவாக காட்சியளிக் அவர் கண்களை தேய்த்து கொண்டு அவளை உற்று பார்த்தார்.

செல்வி மேலும், "நீங்க அன்னைக்கு உங்க மகளுக்கு செஞ்ச பாவம்தான் இந்த குடும்பத்தை சுத்தி சுத்தி அடிக்குது...?" என்று சொல்ல அவளின் அந்த வார்த்தைகளால் அவர் நிலைகுலைந்து போனார்.

அப்போது பெரிய மின்னலுடன் கூடிய இடிமுழக்க சத்தம் கேட்க செல்வி பதறியபடி சண்முகவேலனை கவனிக்காமல் வாசல் கதவருகே ஓடி வந்தாள்.

தன் கணவன் நல்லபடியாக வீடு திரும்பிவிட வேண்டுமே என்று அவள் மனமெல்லாம் கடவுள்களை எல்லாம் மனதிற்குள்ளேயே வேண்டி கொள்ள,

அந்த காத்திருப்பும் வேண்டுதலும் இன்று வரையில் அவளுக்கு நிறைவேறாமலே போனதுதான் பெரும் துரதிஷ்டம்.

ஒருவிதமான பயங்கர வெளிச்சத்துடன் கூடிய புகைமூட்டம் ஆதித்தபுரத்தை சூழ்ந்து கொள்ள,

அப்பொழுது அவள் கேட்ட செய்தி அவளின் சப்தநாடிகளையும் ஒடுங்க செய்தது.

ஆட்களே நுழையாத அந்த அமானுஷ்ய புளியந்தோப்பில் தீடெரன பரவிய தீ அந்த வழியே வந்த சிவசங்கரனையும் பலி வாங்கியதாம்.

கணவனின் உடலை பார்க்க கூட முடியாத துரதிஷ்டசாலியாய் செல்வி அதிர்ச்சியில் நினைவிழந்து போனாள்.

காத்திருக்க வேண்டாம் என்று அவன் சொல்லிவிட்டு போனதன் அர்த்தம் இப்படியா இருக்க வேண்டும்.

செல்லம்மா எழுதி கொடுத்த பக்கங்கள் யாவும் அப்போது ஆதியின் கண்ணீரால் நனைந்து போனது.

தைரியத்தின் மறுவுருவமாய் இருந்த ஆதி அந்த வரிகளை படித்த மாத்திரத்தில் உடைந்து அழ ஆரம்பித்தாள்.

அப்பா இல்லை என்ற ஏக்கம் அவளுக்கு இல்லாமல் இல்லை. அதே நேரம் அவள் மனதை பாதிக்கும் விஷயமாக அது என்றுமே இருந்ததில்லை.

ஆனால் இன்று முதன்முதலாய் தன் அப்பாவின் அன்பை பெற முடியாத துர்பாக்கியவதியா தான் என்று எண்ணி உள்ளூர நொறுங்கி போனாள்.

இந்த கதையின் மூலமாக தன் அப்பாவுடன் வாழ்ந்த அந்த சில கணங்கள் அவளுக்குள் பல யுகங்கள் மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவரின் இறப்பு தனக்கு எத்தனை பெரிய பேரிழப்பு என்பதை அவள் எண்ணி எண்ணி விம்ம, அவள் வேதனை துளியளவும் வடிந்தபாடில்லை.

அவள் விசும்பலோடு, 'எங்க இருக்கீங்க ப்பா... ஏன் ப்பா என்னை விட்டுட்டு போனீங்க... அப்படி என்ன நான் பாவம் செஞ்சேன்... இனிமே நான் உங்களை பார்க்கவே முடியாதா.. அப்பான்னு கூப்பிடவே முடியாதா... எதுக்கு நான் இந்த கதையை படிச்சேன்?.. உங்களை பத்தி எதுக்கு நான் தெரிஞ்சிக்கிட்டேன்?ஏன் இப்படி எல்லாம் நடந்துச்சு??" என்றவள் ஆற்றாமையால் அந்த பக்கங்களை எல்லாம் தூக்கிவீசினாள்.

ஆதி என்னதான் அழுது அரற்றினாலும் மாண்டவர் மீண்டு வருவதில்லையே. அப்பா என்ற உறவு அவள் வாழ்வில் எப்பவுமே கானல் நீர்தான்.

அதே நேரம் சிவசங்கரனின் மரணம் அவனின் உடலுக்கு மட்டுமே. அவன் அழியாத நினைவுகளாய் எல்லோர் மனதிலும் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தான் என்பதில் ஐயமில்லை.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
hi friends,
இந்த கதை ஓரே சோகமயமான இருக்குன்னு நினைப்பீங்க. ஆனா அது இல்ல இந்த கதை. இதில் ஓரு ஆழமான தேடலும் ரகசியமும் இருக்கு. அதை நீங்க இந்த Fb la தான் சரியா புரிஞ்சி கண்டுபிடிக்க முடியும். Just focus on it
uttarakhand-forest-fire-750x500.jpg
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
hi friends,
இந்த கதை ஓரே சோகமயமான இருக்குன்னு நினைப்பீங்க. ஆனா அது இல்ல இந்த கதை. இதில் ஓரு ஆழமான தேடலும் ரகசியமும் இருக்கு. அதை நீங்க இந்த Fb la தான் சரியா புரிஞ்சி கண்டுபிடிக்க முடியும். Just focus on it
View attachment 3398
ஐயோ, இந்தப் போட்டோவைப்
பார்த்தால் பயமாக இருக்கே,
மோனிஷா டியர்
ஏற்கனவே இந்த தீ விபத்தைப்
பற்றி அப்டேட்-ல படிச்சு, நான்
கற்பனை செஞ்சதை விட
இது ரொம்பவே பயங்கரமா
இருக்கேப்பா?
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Akkaaa poonga ka.. innum kettathu senja samugalvel vaalthuttu irukaan.. shiva laam saaguratha.. naa nambamaaten... Ennaku manoharan meethu thaan santhegam.. avan thaan engaavathu kadathi vachiruppan.. :unsure:

Appo ithana varusamaava kadathi vaciruppanga... Onnum puriyalayae.. ??

Banuma keka koodaathu nu ninaichen.. but mudiyala.. siva uyirooda irukaana illaya mattum sollirunga banuma.. orange ka.. anybody please.. ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top