• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Alagiyin kaathal thavam - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 17

ரமணன் மிகுந்த எரிச்சலில் இருந்தான், இப்பொழுது. அவன் அவ்வளவு தூரம் எடுத்து சொல்லி இருந்தான், ஆதியிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு. இப்பொழுது அவன் எங்கு இருக்கிறான், என்ன செய்கிறான் என்று எதுவும் தெரியவில்லை.

“சார்! நாங்க ட்ராக் பண்ணிக்கிட்டு தான் சார் இருக்கோம், பட் சரியான லொகேஷன் இன்னும் ஐடெண்டிபை பண்ண முடியல. அடுத்து என்ன சார் பண்ணலாம்?” என்று அவனின் கீழ் வேலை பார்க்கும் பாண்டியன் கேட்டான்.

“ம்ம்.. எல்லாத்தையும் என் கிட்டயே கேளு, போடா போய் முதல லாஸ்ட் லொகேஷன் ஏரியா ட்ரேஸ் பண்ணி சர்ச் பண்ணு அந்த ஏரியாவை” என்று அவனிடம் சிடுசிடுத்துவிட்டு, ஆபிசில் இருந்து வெளியேறினான்.

அப்பொழுது அவனுக்கு ப்ரீத்தியிடம் இருந்து கால் வந்தது, அவன் செல்பேசிக்கு.

“டார்லிங்! நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன், எதுனாலும் வீட்டுக்கு வந்த உடனே பேசிக்கலாம் டா” என்று அவன் அவசர கதியில் பேசிவிட்டு போனை வைக்கவும், மீண்டும் அது ஒலித்தது.

எரிச்சலுடன், அதை எடுத்து பார்த்தவன் மனைவியிடம் இருந்து வரவும், ஆதியின் மேல் உள்ள கோபத்தை அவள் மேல் காட்ட தொடங்கினான்.

“அடியே! அறிவு இருக்கா? உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா?” என்று எரிந்து விழுந்தான்.

“கிரசென்ட் காலேஜ், வண்டலூர் போங்க, ஆதியும், மதியும் அங்கே தான் இருக்காங்க” என்று கூறிவிட்டு போனை வைத்து இருந்தாள்.

“அடேய் ரமணா! உனக்கு நேரமே சரியில்லை டா! சரி முதல, வண்டலூர் போவோம், அப்புறம் பேபியை வீட்டில் போய் சமாதானம் பண்ணிக்குவோம்” என்று எண்ணிவிட்டு, அவனின் போலீஸ் படையை வண்டலூர் நோக்கி செல்ல கட்டளையிட்டான்.

அவன் தனியாக அவனின் suv வண்டியில், வண்டலூர் நோக்கி பறந்தான். மனதில் ஆதியை திட்டி, தீர்த்துக் கொண்டு இருந்தான்.

“டேய் பாவி ஆதி! உனக்கு நான் என்னடா பாவம் பண்ணேன்? இப்படி என் பேபி கிட்ட வசவு வாங்க பிளான் போட்டுட்டு போயிட்டியே டா. மவனே! நீ மட்டும் என் கைல கிடைச்ச உன்னை முதல, தங்கச்சி கிட்ட சொல்லி மொத்த வைக்கிறேன்” என்று கருவிக் கொண்டே, வண்டியை அங்கு செலுத்தினான் வேகமாக.

ஆதி! ஆதித்ய வர்மா அவனின் எதிரி சபாஹ் பாசில் முன் அந்த காட்டு பகுதியில் இருக்கும் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் நின்று கொண்டு இருந்தான்.

ரமணனிடம், இந்த இடத்தை பற்றி அவன் சொல்லாத ஒரே காரணம், எந்த ஒரு காயமுமின்றி அவன் மதியை மீட்டு கொண்டு வர தான். அவனுக்கு அவனின் எதிரியின் பலமும், பலவீனமும் தெரிந்ததால் அவன் இதை செய்ததே.

அங்கே, மதி மயக்கத்தின் பிடியில் ஒரு ஓரத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், படுக்க வைக்கப்பட்டு இருந்தாள். தன்னவளை, அப்படி ஒரு நிலையில் பார்த்த ஆதிக்கு, கோபத்தின் அளவு கூடி கொண்டு இருந்தது.

“சபாஹ்! உன்னை கொல்ல தான் வந்து இருக்கிறேன், ஆனால் அதற்க்கு முன் நீ ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். நீயோ, கால சக்கரத்தின் வழியாக தான் இங்கு வந்து இருக்கிறாய். ஆனால், நான் மீண்டும் மறு ஜென்மம் எடுத்து வந்து இருக்கிறேன்”.

“இந்த முறை, நீ என் கையால் உயிரை விட போகிறாய். உன் மாமன் அலிகான், எவ்வாறு இறந்தார் என்று தெரியுமா உமக்கு? எல்லோரின் முன்பும், மதியின் தந்தை அரசர் இளங்கோவன் ஆணைப்படி, இளமாறன், மதியின் தமையனால் அவரின் தலை துண்டிக்கப்பட்டது அவனின் வாளால்” என்று கூறிய அடுத்த நொடி, பாசில் ஆதி மீது பாய்ந்து இருந்தான்.

“என்ன டா உளறுகிறாய்? இந்நேரம் அவர் தஞ்சை கோட்டையோடு, மிடார நாட்டையும் கைப்பற்றி இருப்பார். என் கோபத்தை கிளற, நீ இவ்வாறு கூறுகிறாயா கரும்புள்ளி” என்று அவன் சட்டையை பிடித்துக் கொண்டு கேட்டான் பாசில்.

ஆதியோ, அவனின் கரும்புள்ளியில் சினம் கொண்டு அவனை தன்னிடம் இருந்து பிரித்து எடுத்து அவனை தள்ளிவிட்டான். அதில் நிலை தடுமாறி, கீழே விழ இருந்த பாசில் சுதாரித்து நின்று கொண்டான்.

“ஹ்ம்ம்.. பொய் சொல்ல எனக்கு எந்த அவசியமும் இல்லை, வரலாறை தெரிந்து கொண்டு இருக்க வேண்டும் நீ. இன்னொரு முறை நீ என்னை கரும்புள்ளி என்று அழைத்தால், விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும்”.

“நீ என்னை இங்கு வர வைக்கவில்லை, நான் தான் உன்னை என் வலையில் விழ வைக்க எல்லா ஏற்பாடையும் செய்து இருக்கிறேன், தெரிந்து கொள்ளடா சபாஹ்” என்று ஆதி கூறவும், பாசில் சிரித்தான்.

“உன் வலையில், என்னை சிக்க வைத்து இருக்கிறாயா? நல்ல வேடிக்கை! நீ இவ்விடத்தில் இருப்பது, எந்த கொம்பனுக்கும் தெரிய வாய்ப்பில்லை? ஏனெனில், நீ இப்பொழுது நின்று கொண்டு இருப்பது, காட்டின் பின் பகுதியில் உள்ள மலையில்.”

“அவ்வளவு எளிதில், யாராலும் இவ்விடத்தை கண்டு பிடிக்க முடியாது? உன் கணக்கை இன்றே என் கையால் தீர்த்து விடுகிறேன் ” என்று கூறிக் கொண்டே அவன் மீது, கத்தியை இறக்க போகும் சமயம், ஆதி விலகினான்.

“உன் புத்திக் கூர்மை, குறைந்து கொண்டு வருகிறது போல் தெரிகிறதே. உன்னால் என்னை கொல்ல முடியாதடா, இன்று நீயா? நானா? என்று பார்த்து விட வேண்டும்” என்று ஆதி அவனை சீண்டி விட்டு, அவனோடு யுத்தம் செய்ய தொடங்கினான்.

இவர்களின் யுத்த சத்தத்தில், கண் விழித்த மதி அவர்கள் பேசிக் கொண்ட விஷயம் கேட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றாள். அதன் பின் ஆதியின் அலறல் சத்தத்தில், அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்தவள், அங்கே ஆதி காயத்துடன் அவனிடம் போராடிக் கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ந்தாள்.

அவனை காப்பாற்ற துடித்தவள், கைகட்டை அவிழ்க்க போராடிக் கொண்டு இருந்தாள். கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், அவள் ஒரு பக்கம் போராடிக் கொண்டு இருக்க, மறுப்பக்கம் பாசில் எழ முடியாதபடி அடி கொடுத்து இருந்தான் ஆதி இப்பொழுது.

அவன் எழுவதற்குள், மதியை விடுவிக்க அவன் அவளருகில் நெருங்கி அவளின் கட்டை அவிழ்த்தான். மதியோ, அவனின் காயத்தை ஆராய்ந்து கொண்டு இருந்தாள், தன்னால் அவன் படும் வேதனையை அவளால் தாங்க முடியவில்லை.

“தாங்கள் கஷ்டப்படுவதை பார்க்க, என்னால் முடியவில்லை வர்மா. நாம் இங்கு இருந்து உடனே செல்லலாம், வாருங்கள்” என்று அவள் கையோடு அழைத்து செல்ல நினைக்கையில், அவன் தடுத்தான்.

“நீ மட்டும் செல் அழகி, இன்னும் அவன் உயிருடன் தான் இருக்கிறான். அவனை விட்டு வைத்தால், இன்னும் அவன் என்ன செய்வான் என்று நமக்கு தெரியாது”.

“நான் உன்னோடு, நீண்ட நாள் வாழ ஆசை கொள்கிறேன். உன்னோடு, வாழ்நாள் முழுவதும் பயணம் செய்ய விரும்புகிறேன். புரிந்து கொள் அழகி! நீ மட்டும் செல் இப்பொழுது, நான் வருகிறேன்” என்று கூறி அவளை அனுப்ப முயன்றான்.

அதற்குள், முயன்று எழுந்த பாசில் ஆதியும் மதியும் கவனிக்கும் முன் அவன் ஆதியை கொல்ல கத்தியோடு நெருங்கும் வேளையில், மதி அதனை கவனித்து அவன் முன் பாய்ந்தாள். கத்தி, அவள் கையை பதம் பார்த்த நேரத்தில், பாசிலின் இதயத்தில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து இருந்தது.

துப்பாக்கி தோட்டா சத்தத்தை, இப்பொழுது தான் முதன் முதலில் கேட்கிறாள் மதி. அதில் அதிர்ந்தவள், அந்த தோட்டா கண் முன்னே பாசிலின் இதயத்தில் பாய்ந்து ரத்தம் சிதறவும், அதை பார்த்த அதிர்ச்சியிலும், அவள் கையில் ரத்தம் நிற்காமல் வலிந்து கொண்டு இருந்த காரணத்தாலும் அவள் மயங்கி ஆதியின் மேல் சரிந்தாள்.

“அழகி! அழகி!” என்று அவள் கன்னம் தட்டி எழுப்ப முயன்றான் ஆதி. ரமணன் ஏற்பாடு செய்து இருந்த 108 ஆம்புலன்ஸ் வண்டியில், மதியும், ஆதியும் விரைந்தனர் மருத்துவமனைக்கு.

ஆம்புலன்சில் இருந்த மருத்துவர் ஒருவர், மதிக்கு முதலுதவி செய்து கொண்டு இருந்தார். பக்கத்தில் ஆதி, அவளை பார்த்துக் கொண்டே, மனதிற்குள் அவளோடு பேசிக் கொண்டு இருந்தான்.

“அழகி! அழகி! நீ எனக்காக காத்துகிட்டு இருந்ததது, இப்படி என் கண் முன்னால நீ உயிருக்கு போராடுறதை, நான் பார்க்க தானா? என்னால முடியல அழகி, எனக்கு நீ வேணும், உன்னோடு நான் நீண்ட நெடிய தூரம் போகணும், என் கிட்ட வந்திடு அழகி” என்று புலம்பிக் கொண்டே வந்தான்.

மருத்துவமனை வரவும், மதியை தீவீர சிகிச்சை பகுதிக்கு அழைத்து சென்றனர். ஸ்ட்ரெச்சரில் ரத்தம் வழிய, அவளை உள்ளே அழைத்து செல்லும் காட்சியை பார்த்தவனுக்கு, கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஓடியது.

இப்பொழுது வரை, ரமணன் எப்படி அங்கே வந்தான்? வீட்டினர் யார் மூலம் அறிந்து மருத்துவமனை வந்து சேர்ந்தனர்? என்று எதுவுமே அவனுக்கு தெரியவில்லை. அவன் மனம் முழுவதும், உள்ளே சிகிச்சையில் இருந்த மதி பிழைத்து வர வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது.

அவனை சுற்றி நடப்பது எதுவும், அவன் கருத்தில் பதியவில்லை. இதுவரை தெய்வத்தை வணங்காதவன், முதல் முறையாக தன்னவள் உயிர் பிழைத்து வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருந்தான்.

“சார்! ஹி இஸ் நோ மோர். ஐஜி கேட்டா, என்ன சார் சொல்லுறது?” என்று ரமணனிடம், அவனின் கீழ் இருக்கும் ஒருவன் கேட்டான்.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
“அவருக்கு நான் பதில் சொல்லிக்கிறேன், நீங்க மத்த பார்மாலிடீஸ் எல்லாம் முடிச்சிட்டு ரிப்போர்ட் என் கிட்ட சப்மிட் பண்ணிடுங்க” என்று கூறிவிட்டு அவன் அந்த இடத்தில் இருந்து வெளியே வந்து, அவனின் வண்டியை எடுத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றான்.

அங்கே மருத்துவமனை வாசலில் அவனின் மனைவி ப்ரீத்தி, எட்டு மாத கருவை சுமந்து கொண்டு நின்று இருந்த கோலத்தை பார்த்து அவளை ரசித்துக் கொண்டே, வண்டியை பார்கிங்கில் நிறுத்திவிட்டு அவளை நெருங்கினான்.

“மதி எப்படி இருக்கா? டாக்டர் என்ன சொல்லுறாங்க?” என்று விசாரித்து கொண்டு இருந்தான்.

“தெரியல? இன்னும் டாக்டர் வெளியே வரல, உங்க தம்பி ஆதி யாரையும் நெருங்க விடல அவர் கிட்ட. ரொம்ப மனசொடைஞ்சு சோர்ந்து போய் இருக்கார், நீங்க அவர் கூட இருங்க கொஞ்ச நேரம்”.

“ஹரியை வர சொல்லி இருக்கேன், அவன் கூட நான் கிளம்புறேன்” என்று அவள் கூறிக் கொண்டு இருக்கும் பொழுது, ஹரி அங்கே அவனின் புது ஹுண்டாய் கிரெஸ்டாவில் வந்து சேர்ந்தான்.

அப்பொழுது ரமணன் என்ன நினைத்தானோ, ஹரியை அங்கே மருத்துவமனையில் ஆதியை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, மனைவியுடன் தன் suv வண்டியில் பயணம் செய்தான், தன் வீட்டை நோக்கி.

ப்ரீத்திக்கு, அவன் எதற்கு இப்பொழுது தன்னுடன் வருகிறான் என்று புரிந்தது. அங்கே என்ன நடந்து இருக்கும் என்று தான் புரியவில்லை, அதை பற்றி இப்பொழுது கேட்பதை விட வீட்டிற்கு சென்று கேட்கலாம் என்று நினைத்தாள்.

ஆனால் அவனோ, இப்பொழுதே பகிர வேண்டும் என்று நினைத்தான் போலும், அங்கே நடந்ததை சொல்ல தொடங்கினான். ப்ரீத்தி இடத்தை சொன்னதும், ரமணன் முதலில் அங்கே விரைந்தான்.

அவனும், அங்கு அந்த கல்லூரி முழுவதும், அதன் பின் அருகில் உள்ள விலங்கு பூங்காவிலும் தேடி களைத்து விட்டான். அவனின் டீம் வரவும், அவர்களை விட்டும் தேடிக் கொண்டு இருந்தான்.

பின் பகுதியில், மசூதியில் குரான் வாசிப்பு அவன் காதிற்கு எட்டவும், அவன் கால்கள் அங்கே விரைந்தது. அப்பொழுது தான், அங்கே பின் பகுதியில் இருக்கும் காடு அவன் கண்ணிற்கு புலப்பட்டது.

கால்கள் வேகமாக அங்கே விரைந்தது, சத்தங்கள் காதை பிளந்தது. காதுகளை தீட்டிக் கொண்டு, சத்தம் வந்த திசையை நோக்கி முன்னேறினான். அங்கே இருந்த கட்டிடத்தில் உள்ளே நுழைந்து, ஆதியின் அருகில் சென்று நின்றது வரை மட்டுமே அவன் செய்தது.

அதன் பின், அவனின் கையில் இருந்த துப்பாக்கியை எப்பொழுது ஆதி வாங்கி(பிடுங்கி)சுட்டான் என்று இன்னும் தெரியவில்லை. சுட்ட பின், மீண்டும் தன் கையில் எப்பொழுது வைத்தான் என்றும் புரியவில்லை.

“என்னையை இவன் நல்லா வச்சு செய்றான், அது மட்டும் எனக்கு நல்லா தெரியுது” என்று புலம்பியவனை பார்த்து சிரித்தாள் ப்ரீத்தி.

“ஆமா! நீ இந்த மாதிரி நேரத்தில் இங்க வரணுமா பேபி, வீட்டில் ரெஸ்ட் எடுத்து இருக்கலாம் ல” என்று கூறியவனை பார்த்து இப்பொழுது முறைத்தாள்.

“இன்னைக்கு எனக்கு செக் அப் சொன்னேனே, மறந்திடுச்சா?” என்று கேட்டாள்.

“அடி எண்ணிக்கை, வர வர உனக்கு கூடிகிட்டே போகுது டா ரமணா உனக்கு” என்று எண்ணி நொந்து கொண்டான்.

மருத்துவமனையில், அந்த அறைக்கு வெளியே மருத்துவர் வரவும், உடனே எழுந்து அவரிடம் விரைந்தான் ஆதி. அவர் மதி, மயக்கத்தில் இருக்கிறாள், அதிக ரத்த இழப்பு காரணமாக, உயிருக்கு எந்த ஆபத்தும் இனி இல்லை என்று கூறிய பிறகு தான், அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

இன்று முழுவதும் அவளுக்கு நல்ல ஓய்வு தேவை என்பதால், ஒருவரை தவிர வேறு யாரும் இருக்க வேண்டாம் என்று மருத்துவர் வலியுறுத்தினார்.ஆதிக்கும் ஓய்வு தேவைப்பட்டதால், அவனின் அன்னை தான் பார்த்துக் கொள்வதாக கூறிவிட்டு அவனை ஹரியுடன் அனுப்பி வைத்தார்.

ஆதிக்கும், சில விஷயங்கள் யோசிக்க வேண்டி இருந்தது, ஆகையால் தாய் கூறிய அடுத்த நொடி அவன் புறப்பட்டான். ஹரியுடன் வீடு வந்து சேர்ந்தவன், நேராக அவனின் அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

திருமணம் செய்ய வேண்டும், என்று அவர்கள் கோவிலுக்கு சென்ற தினத்தில் தான் முதன் முதலில் அந்த பெயரை உச்சரித்தான். அப்பொழுது அவனுக்கு நினைவில், ஆங்காங்கு சில முகங்கள் பரிச்சயமானதாக வேறு இருந்தது.

அன்றே அவன் புகழ் பெற்ற சைகாட்ரிஸ்ட் ருத்ரன் என்பவரிடம் சென்றான். அங்கே தான், அவரின் சிகிச்சை முறையில் கடந்த காலத்தில், அவன் யார் எவ்வாறு அவனின் பெயரை எவ்வாறு உச்சரித்தான் என்று தெரிய வந்தது.

அதே ஆதித்ய வர்மா, பதினாறு வயதில் ஐநூறு வருடங்களுக்கு முன் எவ்வாறு இருந்தான் என்பதை முதலில் மனகண்ணில் கண்டான்.

தொடரும்...
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
hi friends,
thanks u so much for ur wonderful support.. ur comments make me to write well and to give updates fast.. but here for me it takes lots of time to give a complete ud.. plz sorry for that.. still five more epis to go .. keep supporting,, thank u so much ..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
உமாதீபக்25 டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
உமாதீபக்25 டியர்
 




Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
Nice update
Intha period la villan poittan, but fb la villan oda presence irukum la??bcz villan iruntha thaan hero gethu improve aagum☺☺waiting for the next update
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
வாவ்...சூப்பர்...டேய் ரமணா ஹாஹா...ஆதி உன்னை வச்சு செய்யிறானா???அடுத்து கடந்த காலமா???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top