Anbenum Idhazhgal Malarattume! 20

#35
விடிந்த பிறகும்...

"ஹீரோ கூடத்தான் பிரஷ் பண்ணுவேன்!"

"ஹீரோ தான் குளிக்க வைக்கணும்!"

"ஹீரோ கூடத்தான் பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவேன்!" என ஜீவன் ஒவ்வொன்றிற்கும் ஈஸ்வரையே தேட, அதுவரை பார்த்தே இராத அந்த மாமனின்மேல் அவன் கொண்ட அன்பு, வீட்டில் அனைவரையுமே அதிசயிக்க வைத்தது, ஈஸ்வரையும் சேர்த்து.

**************************

மலருடன் ஜீவனையும் அழைத்துக்கொண்டு, சுசீலா மாமி வீட்டிற்கு வந்திருந்தான் ஈஸ்வர்.

தங்கைக்காக அவர்கள் செய்த உதவிகளுக்கு, மாமா, மாமி இருவரிடமும் மனதிலிருந்து நன்றியைச் சொன்னான் அவன்.

"நாங்க என்னப்பா பண்ணோம்? மலர்தான் மொத்தமா பக்கத்துல இருந்து... அந்த பொண்ணையும், இந்தக் குழந்தையையும் கவனிச்சிண்டா!"

"நாங்க சும்மா அவளுக்கு துணையா இருந்தோம்... அவ்வளவுதான்" என்றார் மாமி பெருந்தன்மையுடன்.

"மாமி! நீங்க மட்டும் எனக்கு சப்போர்ட் பண்ணலைனா என்னால ஒண்ணுமே செஞ்சிருக்க முடியாது" என்றாள் மலர் நன்றியுடன்.

பிறகு அங்கே மலர் குடும்பத்தினருக்கு சொந்தமான பிளாட்டில் இருக்கும் சுபானுவின் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு, அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை நோக்கி அவர்கள் வரவும், அங்கே இருந்த நடை மேடையில் படுத்திருந்த, அந்த மனநலம் பாதிக்கப்பட்டவர், கண்களைச் சுருக்கி ஈஸ்வரை கேள்வியாகப் பார்க்க, அவரிடம் நெருங்கி, "ஹாப்பி மேன்! இவர்தான் என்னோட ஹீரோ! ஹாண்ட்சம்மா இருக்கார் இல்ல?" என்று ஜீவன் அவரிடம் கேட்கவும், கண்கள் மின்ன ஆமாம் என்பதுபோல் தலையை ஆட்டினார் அவர்.

"பைத்தியம்னு சொல்ல கூடாதுன்னு... இவனுக்கு மாமா ஹாப்பி மேன்னு சொல்லிகொடுத்திருக்கார்" என்று அதற்கு விளக்கம் கொடுத்தார், அவர்களை வழி அனுப்ப வந்த சுசீலா மாமி.

அவர் அதைச் சொன்னதும்தான், அந்த மனநலம் பாதிக்கப்பட்ட மனிதரைப் பற்றி அன்று ஒருநாள், தமிழ் சொல்லிக்கொண்டிருந்தது ஈஸ்வருக்கு நினைவில் வந்தது.

ஜீவன், அவனுக்காகக் கோபாலன் மாமா கொடுத்த ஆப்பிள்களில் ஒன்றை அந்த மனிதனிடம் கொடுக்க, கண்கள் மின்ன அதை வாங்கிக்கொண்டான் அவன்.

அப்பொழுது விசாரணைக்காக அங்கே வந்த ஜெய், மாமியிடம், 'அங்கே யார் யாரெல்லாம் குடியிருக்கிறார்கள்?' என்று தொடங்கி, சில சம்பிரதாய கேள்விகளைக் கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டான்.

அங்கே கண்காணிப்பு கேமரா ஏதும் இல்லை என்று மாமி மூலம் தெரித்துக்கொண்டான் அவன்.

"நான் உள்ளே போய், கொஞ்சம் என்கொய்றி பண்ணனும்... நீங்க கிளம்புங்கண்ணா... நான் முடிந்தால் மதியம் வீட்டுக்கு வரேன்..." என்று ஜெய் ஈஸ்வரிடம் சொல்ல, அவர்கள் காரில் கிளம்பிச் சென்றார்கள்...

மாமி உள்ளே செல்லவும், அந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை, ஆராய்ச்சியுடன் பார்த்துக்கொண்டே, அந்தக் குடியிருப்பின் உள்ளே சென்றான் ஜெய்.

அவனை உணர்ச்சியற்ற ஒரு பார்வை பார்த்துவைத்தான் அந்த மனிதன்.

***************************

மதியம், சாப்பிட்டு முடித்து, பாட்டியின் அறையில், ஒரு துப்பட்டவை பிடித்தவாறு, வாயில் விரலை போட்டுகொண்டு, ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தான் ஜீவன்.

செங்கமலம் பாட்டி அவனுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு, அவனது கைகள், கால்கள் என வருடிக்கொண்டிருந்தார்.

"எல்லாமே முறைப்படி நடந்திருந்தா... நம்ம ஜீவிக்கு செய்யற மாதிரி பார்த்து... பார்த்து... செஞ்சிருப்போம்... இப்படி ஆகிப்போச்சே..." என்று சன்னமான குரலில்... அவர் புலம்பவும்...

"ராஜமாதா! இப்ப இதெல்லாம் பேசாதீங்க... அண்ணி எதிர்பார்த்த மாதிரி... அவங்களுக்கு எதுவுமே அமையல... இந்த மட்டுமாவது அவங்க மீண்டு வந்திருக்காங்களேன்னு நாம சந்தோஷம்தான் படனும்... ஸோ... முடிஞ்சு போனதை பேசவே வேண்டாமே... ப்ளீஸ்!" என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள், சுபானுவிற்கு மருந்துகளைப் பார்த்து... கொடுத்துக்கொண்டிருந்த மலர்...

அங்கே வந்த மதி... மகளின் கையை பற்றி... தன் கன்னத்தில் அழுத்திக்கொண்டு... "ஐயோ! இவ்வளவு மருந்தையா இவ சாப்பிடணும்?" என்று வருத்தத்துடன் கேட்க...

"என்ன பண்றது மாமி! வேறு வழி இல்லை... இது சித்த மருந்து என்பதால்... கொஞ்சம் சேஃப்... பயப்படாதீங்க?" என்றாள் மலர்...

அப்பொழுது கதவை தட்டிவிட்டு... உள்ளே வந்தான் ஜெய்...

அனைவரையும் நலம் விசாரித்து... சில நிமிடங்கள் அவர்களுடன் பேசிவிட்டு, "மலர் நீ ஃப்ரீயா இருந்தால்... கேஸ் பற்றி... உன்னிடம் கொஞ்ச நேரம் பேசணுமே..." என்று அவன் சொல்லவும்... பாட்டியிடம் சொல்லிவிட்டு... அங்கிருந்து அவனுடன் வெளியில் வந்தாள் மலர்...

"அவர்... மாடியில ரூம்லதான் இருக்கார்... அங்கேயே பேசலாம்!" என்று சொல்லிவிட்டு... உள்ளே சென்று மூன்றுபேருக்கும் பழரசம் எடுத்துக்கொண்டு வந்தாள் மலர்...

பின்பு அவள் ஜெய்யுடன்... அவர்களுடைய அறைக்கு வரவும்... "வா ஜெய்! போலீஸா வந்திருக்கியா... இல்ல என்னோட தம்பியா வந்திருக்கியா?" என்று ஈஸ்வர் அவனை வார...

"தெய்வமே! போலீஸெல்லாம் இல்ல... உங்க அப்பாவி தம்பியாத்தான் வந்திருக்கேன்! " என்று அழுதுவிடுபவன் போன்று... அவனுக்குப் பதில் சொன்ன ஜெய்...

"இந்தக் கடத்தல் கேஸ்... கொலை கேஸ்... இதெல்லாம் கூட ஈஸியா கண்டுபிடிச்சிடுவேன் போல இருக்கு..."

"ஆனால்... இந்த மலர் எப்படி சுபா அக்காவை மீட் பண்ணா... என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்காம... எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு..."

"தயவு செஞ்சு... உங்க ஹீரோயினை... சொல்லிட சொல்லுங்க..."

"ஏற்கனவே ஆட்டமா ஆடுவா... இப்ப உங்க சப்போர்ட் வேற சேர்ந்தால்... சுத்தம்" என்று அலுத்துக்கொண்டான் அவன்...

எடுத்து வந்த பழரசத்தை மலர் அவர்களுக்குக் கொடுக்க... அதை வாங்கிப் பருகியவாறு... ஜெய்க்கு ஆதரவாக... "சொல்லிடு ஹனி... பாவம் பையன் பிழைச்சு போகட்டும்..." என்றான் ஈஸ்வர்...

"என்ன ஹனியா!" என்று மற்ற இருவரும் ஒரே குரலில் சொல்ல...

"ஆமாம்... என் மருமகன்தான் எனக்குச் சொல்லி கொடுத்தான்" என்றான் ஈஸ்வர்... உல்லாசமாக...

"ஐய... அவன் ஹனின்னு சொன்னாலே எனக்குப் பிடிக்காது... இதுல நீங்களுமா?" என்று மலர் அலுத்துக்கொள்ள... அதில் கடுப்பான ஜெய்... "போதும்... உங்க ரொமேன்ஸ பிறகு வெச்சுக்கலாம்... நடந்ததைச் சொல்லு மலர்..." என்று கெஞ்சுவது போல் கேட்கவும்...

"பிழைச்சு போ" என்று சொல்லிவிட்டு...

"உனக்கு ஞாபகம் இருக்கா ஜெய்... நான் ஆன்சைட்...காக... டெக்சாஸ் கிளம்பின அன்றைக்கு... நீ என்னை ட்ராப் பண்ண ஏர் போர்ட் வந்திருந்தயே..." என்று அனைத்தையும் சொல்லத் தொடங்கினாள் மலர்...

சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன்பாக... ‘ஆன்சைட் அசைன்மெண்ட்’ காரணமாக... அமெரிக்கா செல்வதற்கு விமான நிலையம் வந்திருந்தாள் மலர்... அவளை வழி அனுப்பவேன... அவளுக்கு துணையாக... அங்கே வந்திருந்தான் ஜெய்...

மலருடைய நண்பர்களுக்காக... அவள் விமான நிலையத்தின் 'செல்கை' (Departure) பகுதியில் போடப்பட்டிருந்த தடுப்பு வேலிக்கு உட்புறமாக நின்றவாறு காத்திருக்க... அதே வேலியின் மறுபுறம், அதில் கையை ஊன்றியவாறு நின்றிருந்தான் ஜெய்...

அப்பொழுது திடீரென்று... "ஏய் மலர்... டக்குனு பார்க்காதே... கேஷுவலா பார்க்குற மாதிரி திரும்பிப்பாரேன்!" என்று ஆர்வத்துடன்... அவளுக்கு பின் புறமாக பார்த்தவாறு... ஜெய் சொல்ல...

'என்ன இவ்வளவு பில்ட் அப்... கொடுக்கறான்' என்று எண்ணியவாறு யதார்த்தமாக திரும்பி பார்த்தாள் மலர்...

தமிழ் பயணப்பொதிகள் அடங்கிய ட்ராலியை தள்ளிக்கொண்டு வர... அவனை பின் தொடர்ந்து... வெளிர் நீல ஜீன்சும்... உடற்பயிற்சி செய்து... உரமேறிய திரண்ட தோள்களை எடுப்பாகக் காட்டும் கருப்பு நிற டீஷர்ட்டும்... அணிந்து... ஏறு போன்ற நிமிர்வன... கம்பீர நடையுடன்... அங்கே வந்துகொண்டிருந்தான் ஜெகதீஸ்வரன்...

அவனுடைய ஆளுமையான தோற்றமும், தெளிவான முகமும்... கூர்மையான கண்களும்... நெட்வேர்க் கிடைத்த நொடி... கைப்பேசியில் குவியும் 'நோட்டிபிகேஷன்' போல மலருடைய மனதில்... அவளுடைய அனுமதியின்றி... நிறைந்துபோனது...

"ப்பா... என்னமா இருக்காரு மனுஷன்... சினிமால இருப்பதை விட நேரில்... நேரில் செம்ம ஹாண்ட்சம்மா இருக்காரு இல்ல!" என ஜெய் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகள்... அவளது மூளையை எட்டவே சில நிமிடங்கள் பிடித்தன...

very nice update
 

Find SM Tamil Novels on mobile

Latest updates

Latest Episodes

Mobile app for XenForo 2 by Appify
Top