ANIMA epi 1 Teaser

KPN

Author
Author
#1
1544785619643.png 1544785984925.png


செல்லமாக அவருடைய இரு கன்னங்களையும் பிடித்து கிள்ளி... கைகளை உதடுகளில் வைத்து... அழுத்தமாக... "உம்மா!" என்றவள்... "சோ ச்வீட் மாமி! பை!" என்று இருவருக்கும் பொதுவாக கையை ஆட்டி... பைக்கை கிளப்பிக்கொண்டே...

"ராஜி மாமி... எங்க சுசீ மாமிய பத்திரமா பாத்துக்கோங்க... எங்கேயாவது கூட்டத்துல காணாம போயிடப்போறாங்க... அப்பறம் மாமாவுக்கு நீங்கதான் பதில் சொல்லணும்..." என்க...

"அடியேய் பூக்காரி... நாளைக்கு வாடி... உன்னைக் கவனிக்க வேண்டிய விதத்துல நன்னா கவினிக்கறேன்... " என்று சுசீலா மாமி பதில்கொடுக்க... அது அவளது காதுகளை எட்டுவதற்கு முன்பாகவே... சர்ரென அங்கிருந்து பறந்திருந்தாள் மலர்...

"அம்மாடி... புயலே அடிச்சு ஓஞ்ச மாதிரி இருக்கு... மாமி... இவளை எப்படி இவா ஆத்துல சமாளிக்கறாளோ..." என்ற ராஜி மாமி... "அது என்ன... அவளை பூக்காரின்னு கூப்பிடறீங்கோ?" என்று கேட்க...

"அது ஒண்ணுமில்ல ராஜி... நாம... நாள் கிழமைன்னா எப்படி பூக்காரிக்கு வெயிட் பண்ணுவோமோ... அதுமாதிரி இவளுக்காக... நானும் மாமாவும் வெயிட் பண்ணிண்டு இருப்போம்...

பூக்காரி வந்துட்டு போனதுக்கு அப்புரமும்... அங்கே எப்படி பூக்களோட வாசனை சுத்திண்டே இருக்குமோ... அது மாதிரியே... இவ வந்துட்டு போன பிறகும்... ஒரு பிளேசன்ட் பீல் எங்களுக்கு இருந்துண்டே இருக்கும்..."

"நான் பெத்தது... ரெண்டும் அதை இதை சொல்லிண்டு... ஃபாரின்லேந்து இங்க வந்தே நாலு வருஷம் ஆச்சு... ஆனா இவ... மாசத்துக்கு ஒரு தடவையாவது எங்களை வந்து பார்த்துட்டு போய்டுவா...

அடிக்கடி... வாட்ஸ் ஆப் ல எதாவது மெசேஜ் பண்ணிண்டே இருப்பா... அவ... எங்க தனிமையை போக்க வந்த தேவதை...

அதனால... அவ எங்களுக்கு எப்பவுமே... மலர்க்காரிகை தான்..." அவள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டே... கண்களில் ஏக்கத்துடன்... சுசீலா மாமி சொல்லிக்கொண்டிருக்க...

"ஐயோ மாமி! ரொம்ப நாழி ஆயிடுத்து... எல்லாரும் நமக்காகத்தான் வெயிட் பண்ணிண்டிருக்கா... வாங்கோ கிளம்பலாம்..." என்று ராஜி மாமி... அவரது கையை பிடித்து இழுத்துக்கொண்டே பேருந்தை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினார்...

அதே நேரம்... அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கரவானில் இருந்துகொண்டு ஒருவன்... இவர்களையே பார்த்துக்கொண்டிருந்ததையோ... இவர்கள் உரையாடல் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்ததையோ... பெண்கள் மூவருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை...
 
Last edited:

KPN

Author
Author
#2
வணக்கம் மக்களே...
முதல் எபிக்கான ஒரு சிறு முன்னோட்டம்... போட்டுட்டேன்...
பிடிச்சிருக்கா சொல்லுங்க...
வாரத்திரு minimum மூன்று எபி என்று plan பண்ணியிருக்கேன்...
விரைவில்... UD யுடன் சந்திக்கிறேன்...
உங்கள் ஆதரவை எதிர் நோக்கி...
கிருஷ்ணப்ரியா நாராயண் ...
 

Latest updates

Latest Episodes

Top