• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

anjali's Endrum Enthunai Neeyaethaan 2 .1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sameera anjali

மண்டலாதிபதி
Joined
Feb 3, 2020
Messages
291
Reaction score
622
Location
theni
eiWZK3X1667.jpg




என்றும் என்துணை நீயேதான் 2


தோப்பில் இருந்து கிளம்பியவன் வீட்டிற்க்கு செல்லும் வழியில் வயலில் நடவு வேலை எவ்வளவு தூரம் நடக்கிறது என ஒரு பார்வை பார்த்துவிட்டு போகலாம் என எண்ணியவன் வயல் பக்கம் தன் வண்டியைவிட்டான்.
வயலில் மும்பரமாக குமரி முதல் கிழவி வரை நெல் நடவில் கவனம் வைத்துகொண்டே அவர்களுக்குள் பேசிகொண்டிருந்தனர். வீரபத்திரனின் மகன் வருவதை கண்டு,


”என்ன ராசா நல்லாயிருக்கியளா..” வயதில் மூத்த பெண்மனி கர்ணனை நலம் விசாரிக்க.


“நல்லா இருக்கேன் பாட்டி.. தர்மே காபி, கொண்டுவந்து கொடுத்தானா.. நீங்க எல்லாம் வாங்கி சாப்பிட்டியளா.” மொத்த பெண்மணிகளையும் அவன் விசாரிக்க


“அதெல்லாம் ஆச்சு தம்பி... நீங்க சாப்பிட்டியாளா..”


“இனி தான் பாட்டி.. வேலையை முடிச்சுட்டு பொழுது சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்திருங்க பாட்டி.. தர்மே சொல்லிருப்பானே அம்மா சொன்னதா?”


“அதெல்லாம் காதுக்கு வந்திருச்சு தம்பி நீங்க போய் சாப்பிடுங்க. இளந்தாரி பையன் இவ்வளவு நேரம் சாப்பிடாம இருக்காலாமா? போங்க தம்பி..” அவன் நலனில் அக்கரை கொண்டவராக அவனை போகச்சொன்னார்.


“சரிங்க பாட்டி...” அவர்களின் அன்பில் அப்படி என்ன தான் இருக்கிறதோ அவனை கண்டால் மட்டும் தன் வீட்டு பிள்ளை போல் பாவிக்க தோன்றுகிறது.


மூத்த மகனின் வண்டி சத்தம் கேட்க, அதே நேரத்தில் இளைய மகனின் வருகையையும் சரியாக இருந்தது. மூத்தவனை விட இளையவன் மூன்று வருடத்துக்கு பிந்தி பிறந்தவன். இருவருக்குள் ஒற்றுமை இருக்கா, இல்லையா என்பதை நாம் ஆராய்ச்சியாளாரை வைத்து தான் கணிக்க வேண்டும். ஏன்னொன்றால் அப்படி ஒரு வித்தியாசம் இருவருக்குள்ளும்.
மூத்தவன் நேர்மையாக எதை செய்தாலும் அதில் நன்மை இருக்க வேண்டும் என நினைப்பவன். இளையவன் நேர்மையாக செய்தாலும் அவனுக்கு பலன் இருக்கா என்பதை தெரிந்துகொண்டு செய்வான். அதற்கென்று அவன் கெட்டவனும், இல்லை சுயநலவாதியும் இல்லை.




“வாய்யா.. கருக்காலை போன இப்போ தான் வர்ர.. குளிச்சிட்டு சாப்பிட வாய்யா.”


“சரி ம்மா..”


“ம்மா.. வந்து எனக்கு சாப்பாடு போடு.. பசிக்குது.” தட்டை எடுத்துகொண்டு மேஜையில் அமர்ந்தவன் அன்னையை அழைத்தான்.


“போய் அவனுக்கு சாப்பாடு போடுங்க ம்மா..”


“ஏய்யா நகுலா, அண்ணகூட சேர்ந்து சாப்பிட வேண்டியது தானே.. நீ மட்டும் தனியா சாப்பிட்டா நல்லா இருக்குமா.”


“இல்லை ம்மா.. இன்னைக்கு சைவம் ஏன் பண்ணுன. அசைவம் பண்ணலையா?” தாய் கேட்ட கேள்விக்கு அவன் வேறு பதில் சொல்வதை பார்த்ததும் அவருக்கு இப்படி அண்ணனோடு ஏன் தான் ஒட்டாமல் இருக்கிறானோ என தேன்றியது.


“இன்னைக்கு நெல் நடவு அசைவம் சமைக்க கூடாது ய்யா. அம்மா நாளைக்கு செஞ்சு தரேன்..” அவன் மேல் கோவம் கொள்ளாமல் அவனுக்கு பதிலளித்தார்.


”காலேஜ்க்கு போயிட்டு வரேன்..” சாப்பிட்டு கை கழுவிகொண்டு இருக்கும் போது கர்ணன் கீழே வந்தான் தலையை துவட்டிகொண்டே.
அண்ணனை ஒரு பார்வை பார்த்துகொண்டே வெளியேறினான் நகுலன்.



”சாப்பிட்டானா ம்மா..”


”ஆச்சு ய்யா.. நீ வா.. உட்க்காரு..” மகனை அமர வைத்து பார்த்து பார்த்து பரிமாறினார்.


மகனின் முகத்தையே பார்த்திருந்தவர், மகனுக்கு ஏத்த பெண் எங்கு பிறந்திருக்கிறாளோ.. அவர் நினைத்துகொண்டே கர்ணனுக்கு பரிமாறினார்.
நிகழும் மங்களகரமான சுபயோக தினத்தில், கண்ணன் – காயத்ரியின் மகனான ஹரிக்கும், ஜெகன் – ஜோதியின் மகளான விருஷாலிக்கும், நிச்சியம் செய்யப்படுகிறது.



”மாப்பிள்ளை வீட்டார், பொண்ணு வீட்டார்கிட்ட தாம்பூலத்தை மாத்திக்கோங்க. பொண்ணு வீட்டார், மாப்பிள்ளை வீட்டார்கிட்ட தாம்பூலத்தை மாத்திக்கோங்க.” ஐயர் சொல்ல இருவீட்டாரும் மகிழ்ச்சியுடன் தாம்பூலத்தை மாத்திகொண்டனர்.


“இப்போ மாப்பிள்ளை பொண்ணுக்கு இந்த நிச்சிய மோதிரத்தை போட்டுவிடுங்கோ.”


ஹரியின் கையில் மோதிரம் கொடுக்க, விருஷாலியின் கையில் அவளது அன்னை மோதிரத்தை கொடுக்க. இருவரும் அருகருகே வந்து நின்று மோதிரம் மாற்றிகொண்டனர்.



அக்காவின் முகத்தையே பார்த்துகொண்டிருந்து ஷாலினி எதுவும் நடக்காதது போல் அவள் ஹரியிடம் பேசிகொண்டிருந்தாள்.


”நேத்து இவ சண்டை போட்டது என்ன.. இப்போ சிரிச்சிட்டு பேசுறது என்ன.. எப்படியெல்லாம் நடிக்கிறா இவ. இது தெரியாம நிச்சியம் பண்ணிட்டாங்களே..” ஷாலினி நினைக்க.


அவளது நினைப்பை பொய்யாக்கவது போல் அடுத்த சண்டை ஆராம்பம் ஆகப்போகிறது என அறியாமல் வந்தவர்களிடம் பேசியபடி இருந்தாள் ஷாலினி. அப்பொழுது அவளது கைப்பேசி அழைக்க, கைப்பேசியை எடுத்துகொண்டு மேல் மாடிக்கு சென்றாள்.


“சொல்லு..”


“என்ன ஷாலி நிச்சியம் முடிஞ்சதா.. உன் அக்கா ஃபீல் பண்ணுறாங்களா..” அவன் கேட்க


“ம்ம் முடிஞ்சது.. இப்போ அதை கேட்க தான் போன் பண்ணுனியா..”


“நானும் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன் அவன் ஒத்துக்க மாட்டீங்கரான் அதுக்கு ஏன் என்மேல கோவம் உனக்கு.”


“உதவினு கேட்டா செய்யாம இருக்கமாட்டேனு வீரவசனம் பேசுனா ஆளா தேடிட்டு இருக்கேன்.”


“இந்த உதவிய மட்டும் தான் என்னால செய்ய முடியலை. வேற நீ கேட்டு நான் செய்யாம இருந்திருக்கேனா சொல்லு”


“ஆமா.. ஆமா இதுக்கொன்னும் குறை இல்லை.. கல்யாணத்தையாச்சு நிறுத்த உதவி வேணும் முடியுமா, முடியாதானு இப்போவே சொல்லிரு.”


“முயற்சி பண்ணுறேன் டி..”


“ஓ.. சார்க்கு கோவம் வந்தா டீ.. இல்லனா ஏம்மா.. வாம்மானு கொஞ்சல்.”


“சாரி ம்மா..”


“என் அக்கா வாழ்க்கைய காப்பத்துனா தான், நாம சேர முடியும்.. நியாபகம் வச்சுக்கோங்க.” அவள் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.


நிச்சியம் முடிந்து, அனைத்தையும் ஒதுங்க வைத்துகொண்டிருந்த அன்னையும், வேலையாட்களையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தந்தை தேடினாள், சரியாக அந்த நேரத்தில் ஜெகன் காரை எடுத்துகொண்டு வெளியே சென்றார்.


அக்காவின் அறைக்கு சென்றவள், ”ஷாலு” என மட்டும் தான் அழைத்தாள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top