• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

anjali's Endrum Enthunai Neeyaethaan 2.2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sameera anjali

மண்டலாதிபதி
Joined
Feb 3, 2020
Messages
291
Reaction score
622
Location
theni
eiWZK3X1667.jpg




“உங்க அப்பனுக்கு வேலை இல்லையா.. போயும் போயும் அந்த ஹரி நாய எனக்கு மாப்பிள்ளை பார்த்து, நிச்சியம் செய்திருக்கான். அவனும், அவன் பேச்சும்.. அப்படியே கம்பிளி பூச்சி ஊருனது போல இருக்கு.”

“ஆனா நீ சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்தியே ஷாலு” ஷாலின் அவள் பார்த்ததை வைத்து கேட்க


“ஆமா, அவன் என் அழகை பத்தி பேசுனதுக்கு, பச்சை பச்சையா சிரிச்சுகிட்டே அவன்கிட்ட பதில் பேசிட்டு இருந்தேன். அவன் முகம் போன போக்கை நீ பார்க்கலையே.” தங்கைக்கு பதில் கூறினாள்


”ஓ.. அதை நான் கவனிக்கலை ஷாலு..”

“எதை தான் கவனிச்சுயிருக்க.. உதவி கேட்டா கூட நீயும், உன் ஆளும் செய்ய மாட்டீறீங்க..”


“ஹேய்.. நானும், அவனும் எவ்வளவு தூரம் போனோம் உனக்கு தெரியும். ஆனா கடைசில இப்படி முடியாதுனு அவங்க சொன்ன நாங்க என்ன பண்ண முடியும்.” ஷாலினி தெளிவாக சொல்ல


“சரி.. இப்போ என்ன சொல்லுறான் உன் ஆளு.. கல்யாணத்தையாச்சு நிறுத்த வருவானா இல்லை அதுக்கு முடியாதுனு சொல்லுவானா.”


“முயற்சி செய்யிரேனு சொல்லிருக்கான் ஷாலு.. கண்டிப்பா ஹரியோட உனக்கு கல்யாணம் நடக்காது.”


“சரி.. நம்புறேன்.. எனக்கு இந்த சேலையை கழட்ட உதவி பண்ணு, எரிச்சலா இருக்கு, உடம்பு புல்லா போர்வைய வச்சு மூடுன மாதிரி இருக்கு.” தங்கையின் உதவியால் சேலை கழட்டி முடித்தவள், அவளுக்கு பிடித்த உடையான ஷாட்ஸூம், ஸீலிவ்லெஸூம் அணிந்துகொண்டாள்.


”விரு.. விரு..” என அழைத்துகொண்டே வந்த அன்னையிடம்.


“என்ன... எதுக்கு இப்படி ஏலம் போடுறீங்க.”


“எதுக்கு டி இப்படி எரிஞ்சு விழுற..”


“ம்ம் வேண்டுதல்..”


“ஏன் டி.. நிச்சியம் முடிஞ்சிருச்சு.. இந்த மாதிரி ட்ரெஸ் போடாத டி இனிமே.”


“அப்படி தான் போடுவேன்.. என்ன பண்ணுவீங்க..”


“சொன்னா கேளு விரு.. உன்னை கல்யாணம் செய்ய போறது அப்பாவோட பிஸ்னஸ் பார்ட்னரோட பையன். அதுக்கு கேத்த மாதிரி நீ நடந்துக்கனும்.” பொறுமையாக மகளிடம் பேச


“அதுக்கு நான் தான் விலையா..” என அவள் கேட்க, பளாரென அவளை கன்னத்தில் அறைந்தார் ஜோதி.


“அம்மா..” ஷாலினி பதற


“என்ன வாய் நீளுது.. பொண்ணாடி நீ.. ஆம்பிள்ளை கணக்கா ட்ரெஸ் பண்ணுறது.. திமிரா இருக்குறது.. யார் பேச்சும் கேட்க்காம உன் இஷ்டத்துக்கு செய்யிறது. நானும் பொறுத்து போனா ரொம்ப பேசுற நீ.”


“அப்படி தான் பேசுவேன்.. என் விருப்பம் இல்லாம அவனுக்கு என்னை எப்படி கல்யாணம் பண்ணி வைக்குறீங்கனு பார்க்குறேன்.”


“நீ தலைகீழா நின்னாலும் உன் கல்யாணம் நடக்கும்.” எதற்கோ வந்தவர், இப்படி விருவிடம் கோவம்கொண்டு அடித்துவிட்டு கீழே சென்றார்.


அன்னை சென்றதும், முடியை தூக்கி கொண்டை போட்டுகொண்டு தன் அறையில் இருந்த சின்ன பிரிட்ஜில் குளிர்பானத்தை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள். அக்காவின் செயலை பார்த்துகொண்டிருந்த ஷாலினி வாயை பிளந்து நின்றாள். அடியை தூசி போல் தட்டி விட்டு சென்றாள்..
சிறு வயது முதல் அன்னையிடம் அடி வாங்கத ஒருவர் என்றால் ஷாலினி மட்டுமே. மணிக்கொரு முறை அன்னையிடமும், தந்தையிடமும் அடி வாங்கிகொண்டே இருப்பவள் விருஷாலி மட்டுமே. அடியின் வலியை கூட அவள் சாதாரணமாக எடுத்துகொண்டு அவள் வேலையை பார்ப்பது பழையது என்றாலும், அக்காவின் பேச்சு புதிது தான். அதுவும் அவளையே தரம் குறைத்து பேசுவது ஷாலினிக்கே பிடிக்கவில்லை அதனால் தான் இப்படி பார்க்கிறாள்.



”துரை காலேசு கிளம்பிட்டானா..” வீரபத்திரன், மனைவியிடம் கேட்க


”காலையில ஒன்பது மணிக்கே கிளம்பிட்டான்..”


“பொழுது சாப்பாட்டுக்கு நேரம் ஆகிருச்சு லட்சுமி.. நீ தான் வந்து பரிமாறனும்.”


“இதோ வரேன்ங்க..”


வீட்டின் வரண்டாவில் அனைவரும் அமர்ந்திருக்க.. அவர்களின் முன் தழைவாழை இலை போட்டு, ஒவ்வொருவருக்கும் சிரித்த முகத்துடன் பரிமாறிக்கொண்டிருந்தாள் வைஷாலி...


“நல்லா கேட்டு வாங்கி சாப்பிடுங்க அக்கா.. குறையா சாப்பிடாதீங்க.. போகும் போது உங்க பிள்ளைக்கும் சாப்பாடு வாங்கிட்டு போங்க.. தாத்தா நல்லா சாப்பிடுங்க.” அனைவரிடமும் அன்பு முகத்துடன் பேசிகொண்டே பரிமாறினாள் வீரலெட்சுமியின் அண்ணன் மகள் வைஷாலி.


”அடியாத்தி.. இங்கன கூத்தை பாருங்க” என மேவாயில் கை வைத்தபடி நின்றிருந்தார் லட்சுமி.


“என்ன கூத்து.. என்ன சொல்லுற லட்சுமி..” அவர் வந்து பார்க்க.
அனைவருக்கும் அவள் ஒருவளே பரிமாறிகொண்டிருக்க. அவர்களும், அவளிடம் பேசி சிரித்தபடி உண்டுகொண்டிருந்தனர்.



“பாத்தியளா.. உங்க மருமக என்ன பண்ணுறானு.. எனக்கு முந்தி அவ எல்லாருக்கும் பரிமாறிட்டு இருக்கா..”


“சரி விடு.. இப்போ இருந்தே பழகட்டும்.. பின்னாடி உனக்கு அடுத்து இந்த வீட்டை ஆளா போற மீனாட்சி உன் அண்ணன் மக தான.” தங்கையின் மகளை பெருமையாக பேச.


“எனக்கு அண்ணன் மக, உங்களுக்கு தங்கச்சி மக இல்லையோ.. போங்க போய் அவ மட்டும் தான் வந்திருக்காளா இல்லை என் அண்ணனும், மைதினியும் வந்திருக்காங்களானு பாருங்க..” கணவரை விரட்டினார்.


தாயும், தந்தையும் யாரை பார்த்து இப்படி நின்றிருக்கார்கள். அம்மா ஏன் வேலையாட்களுக்கு உணவு பரிமாறாமல் இப்படி நிற்க்கிறார் என யோசனையுடன் அவர்க இருக்கும் இடத்துக்கு வந்தவன் இனிமையாக அதிர்ந்தான்..


”என் ராசாத்தி அன்னலட்சுமியே நேருல வந்தா இந்த மாதிரி வயிறார சாப்பாட போட்டிருப்பாளானு தெரியலை. ஆனா நீ சிரிச்ச முகத்தோட அன்னமிட்டு எங்க வயிறு மட்டுமில்லாம எங்க மனசும் சேர்ந்து நிறைஞ்சு போச்சு தாயி.. அந்த மீனாட்சிக்கேத்த சொக்கன் மாதிரி, உன் மனசுக்கேத்த மகராசன் அமையனும் தாயி.”


அந்த பெரியவளின் வாயில் வந்த சொல் அனைத்தும் அவளுக்கு மகிழ்ச்சியை தான் உண்டாக்கியது. பின்னே இருக்காதா அவளின் மகராசன் தான் வந்து பத்து நிமிடம் ஆகிவிட்டதே. அவனை ஓரக்கண்ணால் அறிந்து கொண்டாள், அவனின் அதிர்ந்த முகத்தை காணவே அவள் இங்கு வருகை தந்தாள்.


”மருமகளே.. எப்போ வந்த ம்மா.. என் அண்ணே, மதினி எங்க மருமகளே.” லட்சுமி வைஷாலியின் அருகில் வந்து கேட்க.


“இப்போ தான் வந்தேன் அத்தை.. உங்க அண்ணனும் , மதினியும் வர்ரவழியில சீனி தாத்தாகிட்ட பேசிட்டு இருந்தாங்க.. நான் முன்னாடி வந்துட்டேன். எப்படி இருக்கீங்க அத்தை..”


“நல்லா இருக்கேன் மருமகளே... நீ எப்படி கண்ணு இருக்க..” வைஷாலியின் கன்னத்தை தாங்கி பிடித்து கேட்டார்.


“எனக்கென்ன அத்தை நல்லாவே இருக்கேன்..”


“பின்ன சும்மாவா.. வீரலட்சுமியோட மருமகனா இந்த ஜில்லாவே அதிரனும் கண்ணு..”


”இந்த ஜில்லா அதிர வேண்டாம் அத்தை உங்க மனசு குளிர்ந்தா போதும் அத்தை..”


அன்னையும், வைஷாலியும் பேசிகொண்டிருப்பதை பார்த்துகொண்டிருந்த கர்ணன் அவளின் வாய் மட்டுமே பேசிகொண்டிருந்தது விழிகள் அவனை பார்த்துகொண்டே லட்சுமிக்கு பதில் சொல்லியவளை அவனும் பார்த்துகொண்டிருந்தான்.


தொடரும்……………..
 




sameera anjali

மண்டலாதிபதி
Joined
Feb 3, 2020
Messages
291
Reaction score
622
Location
theni
Shalini aalu than nagulana....
Yaruku yar jodi....let's see
haahaa..

yes sameera..

ini vara ud la yaar jodi paarkalaam
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top