• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

anjali's Endrum Enthunai Neeyaethaan 3.2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sameera anjali

மண்டலாதிபதி
Joined
Feb 3, 2020
Messages
291
Reaction score
622
Location
theni
eiSTSOB67336.jpg





அந்த சிறுமியை அழைத்துகொண்டு, பக்கத்தில் இருக்கும் ரெஸ்ட்ராண்ட் சென்று அமர்ந்து அந்த சிறுமிக்கு சாப்பிட வாங்கி கொடுத்தாள். அந்த சிறுமியும் அவள் வாங்கி தந்தை பல நாள் பசி போல நன்றாக உண்டது.


“என்ன விருஷாலி.. இது எப்போ இருந்து நடக்குது.” அந்த ரெஸ்ட்ராண்ட் ஓனர் கேட்க.


“இப்போ இருந்து பழகிட்டேன் தேஜ்.. உனக்கொன்னும் அசிங்கமா தெரியலையே.. இந்த பொண்ணை அழைச்சிட்டு வந்தது.”



“நானே அந்த சின்ன பொண்ணு இடத்துல இருந்து தான் வந்தேன் விருஷாலி.. இதுல என்ன அசிங்கம்..” தேஜ் சொல்லிவிட்டு சென்றான்.


“அக்கா, அதோ அம்மா, அப்பா என்னை தேடுறாங்க போல.” அந்த சிறுமி காட்டியவர்களை பார்த்தவள், சிறுமியை அழைத்துகொண்டு அவளது அம்மா, அப்பாவிடம் சென்றாள்


பளார் என அறைந்தாள் இருவரையும், அவள அடித்ததில் அந்த சிறுமி பயந்து அவள் பின் ஒளிந்துகொண்டாள்.


“இப்படி பிச்சை எடுக்கவிடவ குழந்த பெத்துகிட்டீங்க இரண்டு பேரும்.. அறிவில்லை உங்களுக்கு.. குழந்தைய பிச்சை எடுக்கவிட்டா மனித உரிமை சட்டத்துல உங்க ரெண்டு பேரை அரெஸ்ட் பண்ணுவாங்க. செய்யவா.. அப்படி செஞ்சா உங்கள மாதிரி இருக்குறவங்க திருந்தட்டும்.” அவள் கையில் இருந்த போனில் அழைக்க முற்பட


“அக்கா, எங்க வறுமை அப்படி... அதுக்கு என் அப்பா, அம்மாவ அடிப்பீங்களா..” அந்த சிறுமி தாய், தந்தைக்காக அவளிடம் பேச


“பாருங்க.. உங்க குழந்தை உங்களை அடிச்சதுக்கு எப்படி சண்டை போடுதுனு. ஆனா நீங்க பச்சை குழந்தையை இப்படி பிச்சை எடுக்கவிடுறீங்க. சிலர் பிச்சை போடுவாங்க.. சிலர் உங்க பொண்ணவே பிச்சையா எடுத்துப்பாங்க..” அவள் அவர்களுக்கு புரியும் படி சொல்ல


“தப்பு தான்.. ஆனா அறை வயித்துக்கு கஞ்சி வேணுமே. அதுக்கு என்ன செய்ய.. வேலை கேட்டு போனா நாயவிட கேவலமா விரட்டுறாங்க.”



தன் பையில் இருந்த பர்சில் ஒரு விசிடிங் கார்டை எடுத்து இருவரிடமும் கொடுத்து. “இந்த அட்ரெஸ்க்கு போங்க.. விருஷாலி தான் உங்களை பார்க்க சொன்னாங்கனு சொல்லுங்க. உங்க ரெண்டு பேருக்கும் வேலையும், மூனு வேளை சாப்பாடும் கிடைக்கும். தங்குறதுக்கு அவங்களே இடமும் கொடுப்பாங்க. உங்க குழந்தை மட்டும் நான் விடுற இடத்துல தான் இருப்பா.. வாரம் ஒரு முறை உங்க குழந்தை பார்க்க அனுமதி கொடுப்பாங்க.”


“சரிங்கம்மா... ரொம்ப நன்றி..”


“பாப்பா.. அங்க சமத்தா இருக்கனும், அம்மாவும், அப்பாவும் வாரம் ஒருக்கா உன்னை பார்க்க வரோம் நல்லா சாப்பிடு சரியா.”


“வேண்டாம் ம்மா நான் உங்களோடவே இருக்கேன்..” சிறுமி அழ ஆரம்பிக்க


“நீங்க கிளம்புங்க..” அவர்களை போக சொல்ல, குழந்தையும் அழுக ஆரம்பித்தது.


“வா.. என்கூட.” சிறுமி அழுவதை பொருட்படுத்தாமல் அவளை கையில் தூக்கிகொண்டு அவளது காரில் அமர வைத்து சீட் பெல்ட்டை
போட்டுவிட்டாள்.



“ஷூ.. இப்படி அழுதா எனக்கு பிடிக்காது.. பொண்ண பிறந்திட்டு இப்படி அழுகுற.. நாமா மத்தவங்களை தான் அழ வைக்கனும்.” அந்த சிறுமிக்கு பாடம் எடுக்க ஆரம்பித்தாள்.


ஆலயம் ஆசிரமத்தின் முன் வந்து நிறுத்தினாள்.


“வாங்க வாத்தியாரே.. உங்க கண்ணுல அடுத்த குழந்தையும் பட்டுருச்சா.. போங்க அங்க தான் சார் இருக்காரு.” ஆசிரமத்தின் செயலர் அவள் அழைத்துகொண்டு வந்த குழந்தையை பார்த்து பேசிவிட்டு செல்ல


“இல்லை.. என் தோஸ்த் சேர்க்க வந்திருக்கேன்.. போங்க சார்.”
அவள் நேராக அந்த ஆசிரமத்தின் அறைக்கே சென்று காத்திருந்தாள்.



“நீங்க எல்லாம் கணக்குகளையும் முடிச்சிட்டு வாணியிடம் ஃபைல் கொடுத்திருங்க அவங்க மேலதிகாரிட்ட கொடுத்திருவாங்க.” அந்த ஆசிரமத்தின் உரிமையாளரான ஜோசப் தன் சக பணியாளிடம் பேசிகொண்டே வந்தவர் விழியில் விழுந்தாள் விருஷாலியுடன் வந்திருந்த சிறுமி. நீங்க போகலாம் என அவருடன் வந்தவரை கண்ணால் அனுப்பிட்டு அவர்கள் எதிரில் அமர்ந்தான்.


”மறுபடியும் உன் வேலையை ஆரம்பிச்சிட்டியா.. என்ன டா இரண்டு மாசமா ஆளவே காணோம் தேடிட்டு இருந்தேன். என்ன அடுத்த சின்ன பொண்ணா.. உன் கண்ணுல மட்டும் ஏன் தான் இந்த மாதிரி தான வந்து மாட்டுறாங்களோ.”


“எனக்கு பேசுறதுக்கு நேரம் இல்லை ஜோ... இந்த குழந்தையும் இங்க தான் இருக்கு. இந்த பொண்ணோட எல்லா செலவும் எப்போவும் போல நான் ஏத்துகிறேன். அவங்க அம்மா, அப்பா இவங்க தான்.” போனில் அவர்களை படம்பிடித்ததை காட்டி,


“பார்க்க வந்த அலோவ் பண்ணு...”


“இதோட நீ இங்க வந்து விட்டுட்டு போன குழந்தைங்க அம்பத்தி மூனு.. உன்னால முடியுமா அத்தனை குழந்தைங்க செலவையும் சமாளிக்க.”


“முடியும்.... அப்படி முடியாத போது வந்து சொல்லுறேன் அப்போ உன் ஆசிரமத்துல இருந்து செலவு பண்ணு.”


“அடடே குட்டி பேரென்ன..” அவன் குழந்தையின் பக்கம் கவனத்தை திருப்ப


“அமிர்தா.. உங்க பேரு..”


“அழகான பேரு.. என் பேரு ஜோசப்..”


“ஜோசப், இந்த அக்காகிட்ட சொல்லுங்க என்னை அம்மா, அப்பாகிட்ட விட சொல்லி.” அவனிடம் புகார் வாசிக்க


“அமிர்தா, இங்க இருந்த நிறைய சாக்லெட், ஐஸ்கிரிம் வாங்கி தருவாங்க இந்த அக்கா.. நீ படிக்கலாம், விளையாடலாம்.. இங்க உனக்கு நிறைய ஃப்ர்ண்ட்ஸ் கிடைப்பாங்க. அம்மாவும், அப்பாவும் நல்லா நிலைக்கு வந்தபின்னாடி நானே அவங்ககிட்ட உன்னை கூப்பிட்டு போறேன் சரியா.” குழந்தைக்கு புரிவது போல அவன் சொல்ல. அச்சிறுமியையும் அவன் சொல்வதை கேட்டுகொண்டது.


“மேகலா..” அவன் அழைக்க, வெளியில் இருந்து அவனின் மனைவி வந்தாள்.


“ஹாய் ஷாலு.. எப்படி இருக்க.. பார்க்க முடியலை உன்னை இந்த பக்கம்.”


“லிட்டில் பிஸீயா.. எப்படி இருக்க..”


”உன் ஃப்ரண்ட கல்யாணம் செஞ்சதுக்கு நான் நல்லா வாங்கி கட்டுறேன் குழந்தைங்ககிட்ட. ஆனா அவரு எஸ்கேப் ஆகிடுறாரு.”


“போதும் மேகலா.. இன்னைக்கு வந்த நீயூ ஜாயினி.. எல்லாத்துக்கு கார்டியன் விருஷாலினி பேர் போட்டுறு.” அவளிடம் சிறுமியை அனுப்பி வைத்தான்.


“சரி, ஷாலு ஃப்ரீயா இருந்தா கால் பண்ணு..” அவளிடம் சொல்லிவிட்டு குழந்தையை அழைத்துக்கொண்டு சென்றாள் மேகலா.


”ஒரு குழந்தைங்கிட்டயாவது பாசமா நடந்துருக்கியா.. பாரு உன்னை பத்தி என்கிட்டயே கம்ப்ளைண்ட் பண்ணுது. கொஞ்சம் மாத்திக்கோ ஷாலு வாழ்க்கை கொஞ்சம் மாறலாம் இல்லையா.”


“எப்பவுமே விருஷாலி தனி மனுசி தான்.. அவளுக்குனு பாசம், நேசம் எல்லாம் இருக்காது. அதை நீ புரிஞ்சுக்கோ ஜோ. நான் கிளம்புறேன்.. இந்தா அந்த குழந்தைக்கு ட்ரெஸ், பேக், அண்ட் வேற எதாவது தேவை இருந்தா இதுல இருந்து செலவு பண்ணு. பின் நம்பர் குறிச்சுக்கோ ******” அவளின் ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு சென்றாள் அவனிடம்.


தொடரும்…………..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top