• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

anjali's Endrum Enthunai Neeyaethaan 4.1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sameera anjali

மண்டலாதிபதி
Joined
Feb 3, 2020
Messages
291
Reaction score
622
Location
theni
eiBISDF35113.jpg


என்றும் என்துணை நீயேதான் 4


வைஷாலியின் குடும்பம் கிளம்பியதும் வீரபத்திரனும், லட்சுமியும் மகிழ்ச்சியில் இருந்தனர் தன் குடும்பத்தில் நடக்கும் முதல் விசேஷம்... இல்லை.. இல்லை முதல் விழா. அதை நன்றாக எடுத்து ஊர் கூட, மக்கள் வியக்கும் படி மகனின் திருமணத்தை நடத்த வேண்டும். வீரபத்திரனின் வீட்டு திருமணம் என்றால் ஊரே திருவிழா போல் காட்சியளிக்க வேண்டும். என்று பெற்றவர்கள் நினைக்க, அவர்கள் நினைத்தால் போதுமா, கடவுளின் துணை இருந்தால் அல்லவா ஒரு காரியாத்தை நல்ல முறையில செய்து முடிக்க வேண்டும். ஆனால் விதி கர்ணனின் வாழ்க்கையை மட்டுமில்லாமல் வைஷாலியின் வாழ்க்கையையும் சேர்த்தல்லவா மாற்ற போகிறது.


கர்ணனுக்கு வைஷாலி என்றாலே பிடிக்கும்.. அவளின் கொலுசொலியிலே அவள் எங்கு இருக்கிறாள் என அவன் கண்டறிந்துவிடுவான். அவன் மனதில் யாரும் இவள் தான் உன் வருங்கால மனைவி என்றும், அவள் மனதில் இவன் தான் வருங்கால கணவன் என்றும் கூறவில்லை. ஆனால் இரு மனங்களுக்கும் அவர்களின் ரசனைகள் பிடித்து போனது. அதனால் அவர்கள் பிடித்தம் பெரியவர்கள் வரை தெரியாமல் பார்த்துகொண்டனர். அதற்க்கொன்றும் அவர்கள் இருவரும் காதலிக்கவில்லை, ஜோடியாக வெளியே சுற்றியதில்லை.. பருவ வயதினருக்கே தோன்றும் உணர்ச்சிகள் தான்... பார்த்தவுடன் பிடித்துவிட்டது கர்ணனுக்கு. அவனின் ஆண்மை மட்டும் போதுமே என்னை வாழ் நாள் முழுவதும் காப்பத்தற்க்கு என அவளும் நினைத்துகொண்டு தான் ஆசைகளை வளர்த்துகொண்டனர்.
இதோ இன்னும் சில தினங்களின் வைஷாலியின் வீட்டுக்கு சென்று பரிசமும் போட்டுவிட்டு வருவார்கள். அடுத்து திருமணம்.. என்றானதும். கர்ணனுக்கு மகிழ்ச்சி தான், தூரத்தில் இருந்து ரசித்ததவளை பக்கத்தில் வைத்து இனி வாழ் நாள் முழுவது ரசிக்க போகிறோம் என்று அவன் நினைத்தான்.



”சொல்லு ஷாலினி.. இந்த நேரத்துக்கு கால் பண்ணிருக்க. என்னாச்சு..” அவன் பதற்றத்துடன் கேட்க


“கல்யாண வேலை எல்லாம் ரொம்ப வேகமா நடக்குது. என்னாச்சு அவங்ககிட்ட பேசினியா.. என்ன சொன்னாங்க.” ஷாலினி நடப்பதை சொல்ல

“இங்க என் அண்ணனுக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ண போறாங்க.. என் சொந்த தாய்மாமா பொண்ணை.. இதுல எங்க நான் போய் பேச முடியும். உன் அக்கா என்ன பண்ணுறாங்க, சோகமா இருக்காங்களா என்ன?”


“நீ வேற அவ சோகமா இருப்பாளா.. நல்லா ஜாலியா இருக்கா. நான் தான் அவகிட்ட நீ உதவி பண்ணுவேனு சொல்லியிருக்கேன்ல அந்த தைரியம் தான் அவளுக்கு.”


“உன் அக்காவையும் யோசிக்க சொல்லு, கல்யாணத்தை நிறுத்துற மாதிரி..”


“அவளா... யோசிப்பா.. நம்ம காதலை பிரிக்கிற மாதிரி. என் அக்கா என்கிட்ட கேட்ட முதல் உதவி இது.. இல்லைனா நான் எதுக்கு உன்கிட்ட என் அக்காவுக்காக உதவி கேட்க போறேன். சீக்கிரம் அவங்ககிட்ட பேசுப்பா..”


”சரி ஷாலினி.. பேசிட்டு உனக்கு போன் பண்ணுறேன். நாளைக்கு காலேஜ் வருவியா.. ஷாப்பிங்கா?”

“நான் எதுக்கு ஷாப்பிங்க போகனும்.. கல்யாணம் என்ன எனக்கா? நாளைக்கு காலேஜ் வருவேன்.. எப்போவும் மீட் பண்ணுற இடத்துல வெயிட் பண்ணு.”


“சரி.. பாய்.” அவன் போனை வைத்துவிட்டு எப்படி பேச அவன்கிட்ட, நான் போய் வழிய பேசுனா தேவைக்கு தான் பேச வந்திருக்கேனு கண்டிப்பிடிச்சுடுவான்.. என்ன செய்யலாம். நகுலன் யோசிக்க அவனின் யோசனையை அவன் அறையை கடந்து செல்லும் கர்ணன் ஒரு பார்வையாக பார்த்துவிட்டு சென்றான்.


”லெட்ஸ் கோ அதர் சேப்ட்டர் இன்..” அந்த வகுப்பே அமைதியின் பிடியில் இருக்க, விருஷாலியின் குரல் மட்டும் ஓங்கி அந்த அறையில் நான்கு திசையில் கணீரென ஒலித்தது. அவளின் வகுப்பில் அவள் பாடம் எடுக்கும் போது அவளது கண்களையும், பாடத்தின் பொருளையும் விளக்கும் விதமும் அருமையாக இருந்தது. அதை கண்னெடுக்காமல், கை நோட்டில் அவள் சொல்லும் குறிப்புகளையும் எழுதிகொண்டிருக்க, மாணவர்களின் கண் அவள் நடத்தும் பாடத்தில் இருந்தது.


விருஷாலியின் பாடவேளை என்றால் அனைத்து மாணவர்களும் தவறாமல் கலந்துகொள்வார்கள். சின்ன தவறு என்றாலும், மாணவனை தண்டிக்க பயப்படமாட்டாள். வெளியே என்னதான் மார்டன் உடை அணிந்து சென்றாலும், வேலை என்று வந்தால் அவள் உடலில் மெல்லிய காட்டன் புடவை அழகாக நின்றுகொள்ளும். அந்த அளவுக்கு அவளின் புடவை செலக்‌ஷன் இருக்கும். பிரபலமான மருத்துவகல்லூரியில் அவள் விரைவுரையாளராக இருக்கிறாள், அவள் மட்டுமில்லை அவளது தோழிகள் அனைவரும் அதே கல்லூரியில் வேறு வேறு துறையில் வேலை செய்கின்றனர்.


“மேம் ஒன் டவுட்..” ஒரு மாணவன் கை தூக்க

“யா.. டெல் மேன்..”


”மனநிலை பாதிச்சவங்க ஏன் மேம் அவங்களோட பழைய நியாபங்களை மறந்திடுறாங்க. அப்போ அவங்களுக்கு அந்த பழைய நியாபகமே வராதா? இல்லை வருமா? அவங்க மனம் எதை பற்றி ஆழமா சிந்திக்கும்.”

“குட்.. யூ சிட்.. மனநிலை பாதித்தவர்கள் எத்தனையோ பேர் பழையை நியாபங்கள் திரும்பி வாழ்ந்துட்டு தான் இருக்காங்க. அப்படியே அவங்களுக்கு வராம இருந்தா அதை கடந்து வாழ பழகிக்கனும். வருமா? வராதானு நாம ஒவ்வொரு மனித குணங்களை அவங்களோட ஆழ் மனசுல இருந்து தான் கண்டுபிடிக்க முடியும். நாளைக்கே நீங்க ஒரு மனநிலை மருத்தவாரானாளும் நீங்க தான் அவங்களோட கடவுள், அப்போ உங்க மனசை திடாம வைக்கனும், அவங்களோட நண்பர்களா பழகி அவங்களுக்கு என்ன பிரச்சனைனு கண்டுபிடிங்க.”


”மேம் அப்போ காதலால மனநிலை பாதிக்கப்பட்டவங்களா இருந்தா எப்படி அவங்களை ஹேண்டில் பண்ணனும். நம்ம தினேஷ்க்கு காதல் பீவர் வந்திருச்சு மேம் அதான் கேட்டேன்.” குறும்புகார மாணவன் கேட்க


“அப்போ அவனை நம்மளால சரி செய்ய முடியாது. அதுக்கான மருந்து அவனோட காதலிக்கிட்ட கேட்க சொல்லு. ஓகே ஸ்டாப் தி ஜோக்.. நெக்ட்ஸ் சேப்ட்டர் ஈவ்வினிங் கிளாஸ்ல பார்க்கலாம். அசைமெண்ட் ஃபினிஸ் பண்ணிட்டா என் டேபிளுக்கு கலெக்ட் பண்ணி வச்சிரு லோக.” மாணவியிடம் சொல்லிவிட்டு அவள் வகுப்பறையைவிட்டு வெளியேற அவளின் தோழிகள் குழுவாக அவளை சூழ்ந்துகொண்டனர்.


“என்ன மொத்தம சேர்ந்து வந்திருக்கீங்க.. உங்களுக்கு எல்லாம் இப்போ க்ளாஸ் டைம் ஆச்சே.. என்னை பார்க்க வந்திருக்கீங்க என்ன விஷயம்.” தோழிகளின் வருகை எதுவோ உணர்த்த


“விருஷாலி, நம்ம ஹேங்க்ல இன்னொருத்திக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிருக்கு.” ப்ரீத்தி சொல்ல


“யாரு, வந்தனாவுக்கா? இல்லை மோனிகாவுக்கா?”


“மோனிக்கு தான் மாப்பிள்ளை எம்.டி யாம்..” ப்ரீத்தி சொல்ல


“எந்த கம்பெனிக்கு மோனி”.

“ச்சு.. விளையாடாத ஷாலு.. அவரு எம்.டி படிச்சு சொந்த ஹாஸ்பிட்டல் நடத்துறாரு.” வெட்கத்தில் சொல்ல


“பாருடா.. மேட்டர்மோனிக்கு கல்யாணமா.. எப்போ என்கேஜ்மெண்ட் மோனி.” வந்தனா கேட்க


“இப்போ பார்மலா சொந்தத்துக்குள்ள ரிங்க் மாத்திகிறோம், மேரேஜ்க்கு முதல் நாள் என்கேஜ்மெண்ட், வைச்சுருக்கோம்.”


“ஓ.. அப்போ இன்னொருத்தியும் ஃபேச்சிலர் பார்ட்டி வைக்க போறானு சொல்லு.” ஷிவானி சொல்ல


“அதென்ன இன்னொருத்தி.. மோனி மட்டும் தான் பார்ட்டி வைப்பா.. என் கல்யாணத்துக்கெல்லாம் நானே போகமாட்டேன்.” விருஷாலி சொல்ல


தோழிகள் அனைவரும் விருஷாலியின் முகத்தை பார்க்க, அவளோ எரிச்சலில் முகத்தை வைத்துகொண்டாள். “ஜோக்ஸ் அபார்ட், ஷாலு நீ உன் முடிவுல உறுதியா இருக்கியா.”


“பின்ன, அன்னைக்கு க்ளப்ல என்ன போதையில ஒளருனேனு நினைச்சீங்களா.. என்னால ஹரிய கல்யாணம் என்ன அவனை நினைச்சாலே ஆத்திரம் தான் வருது. ப்ளீஸ் யா.. என்னை டென்ஷன் பண்ணாதீங்க, நான் நெக்ஸ்ட் க்ளாஸ்க்கு நோட்ஸ் எடுக்க போகனும் வரேன்.” தோழிகள் கூட்டத்தில் இருந்து அவள் விலகி செல்வதை மற்றவர்கள் பார்த்துகொண்டிருந்தனர்.

”என்ன டி இப்படி சொல்லிட்டு போறா.. இவ அப்பா என்னடான ஊர் முழுக்க பத்திரிக்கை வைக்க ஆராம்பிச்சுட்டாரு, இவ நானே கல்யாணத்துக்கு போகமாட்டேனு சொல்லுறா.” வந்தனா சொல்ல

“அவ உறுதியா தான் இருக்கா, நாம தான் அவ கல்யாணம் செய்ய போறானு நினைச்சுட்டு இருக்கோம். எப்படியோ ஹரி கூட மட்டும் அவளுக்கு கல்யாணம் நடக்காம இருந்த சந்தோஷம் தான்.” மோனிக்கா சொல்ல

“சரி டி இப்போ அவளை சமாதான பண்ண போகனும். இல்லனா நம்மளை வீட்டுக்கு விடமாட்டா.. உன்னை உன் ஆளா பார்க்க விடமாட்டா வாங்கா போகலாம்.” விருஷாலியை சமாதானம் செய்ய தோழிகள் அவளை தேடி சென்றனர்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top