Latest Episode Aparna's Biriyani

Aparna

Author
Author
#1
இதோ வந்தாச்சு என்னோட பிரியாணி/தயிர்சாதம் 😉 @Premalatha akka ungaluku kodutha vaika kapathiten🤗🤗 @Zainab akka, thanks for giving us space to be a part of ur story..
எனக்கு ரொம்ப பெருசாலாம் எழுத தெரியாது.. தெரிந்த வரை எழுதி இருக்கேன்..

கதிரால் நன்றாக பேசாத முடியாத போதும் அவன் முகம் திருப்பாமல் தன்னையும் தாமரையையும் அவன் முதலாளி என்ற‌ முறையிலாவது சுமூகமா நடத்தியதை எண்ணி பெருமூச்சு விட்ட மித்ரனை மெல்ல தீண்டி சென்றது அந்த நிலா...

நிலா!! , ஆம் கவிஞர்களின் கவிபொருளாய், காதலர்களின் கலை பொருளாய் அந்த பூரண நிலா..

இன்று தான் என்னை காண நேரம் வந்ததா என்று ஊடல் கொள்ளும் தலைவி போல கோபத்தை மேகத்தை கொண்டு மறைத்தது...அதை ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தவன் செவிக்கு மூளையின் மூலம் வந்த சேதி படி திரும்பி பார்த்தான்..

என்ன விந்தை இந்த நிலவும் இரட்டையர்களா என ஆச்சர்யபடும்படி.. வானத்தில் அந்நிலா அவன் அருகிலோ பெண்ணிலா...

இமைக்க மறந்த இமைகளுக்கு யார் சொல்லுவார்.. காதல் புகுந்தால் அவைகளுக்கு தான் வேலை பளு என்று..

"அத்தான்!!, இந்தாங்க பால் கொண்டு வந்திருக்கேன் குடிச்சிடுங்க " என்ற தாமரையை நோக்கி..

"என்ன தாமரை , பாலா இதுக்கும் மேலையா, என்னால முடியாதும்மா. நீ செஞ்ச சாப்பாடு நல்லா இருக்குதுன்னு நிறையவே சாப்பிட்டுடேன் . அதுவே கழுத்து வரை இருக்கு.. அது செரிக்கத்தான் நடக்குறேன் ,இதுல பாலா" என்று நகைத்த அவனை ஆவா கொண்டு பார்த்தாள் அவன் மித்ரி...

" சரி , கொஞ்ச நேரம் கழித்து கண்டிப்பா குடிக்கணும்‌ சரியா", என சின்ன மழலையென மொழிந்தவளை மார்போடு சேர்த்து அணைக்க ஆவல் எழுந்தது அவளவனுக்கு...

பாலை வைத்துவிட்டு நகர்ந்தவளை நோக்கி.."தாமரை" என்று வார்த்தைக்கும் வலிக்குமோ என அழைத்தான்.. நிலா காற்றோடு நீந்தி வந்த அந்த ஒலியில் ஒரு சிலிர்ப்பு அவளிடம்..

திரும்பி பார்த்தவளை இங்கு வா என தலை அசைத்து அழைத்தான்...

எதில் கட்டுண்டாளோ, தன்னிலை விளக்கம் கொடுத்து தன்னை சமர்பித்தவன் பின் அவள் மனம் போனதாலே தானே ,அவள் மார்பில் சரசமாடுகிறது அவன் தந்த மாங்கல்யம்...

அருகில் வந்த பூக்குவியலை முகர முகாந்திரம் தேவையில்லை என்ற போதும்.. அவளின் அனுமதியே அவர்கள் வாழ்வின் நிம்மதி என்ற எண்ணம் மேலோங்க..

" கொஞ்ச நேரம் பேசலாம் தாமரை சொல்லு உனக்கு என்னல்லாம் பிடிக்கும்"..

பால்கனியின் கம்பிகளை வருடியபடியே, "அத்தான் அந்த நிலவை பார்த்தீங்களா எவ்வளவு அழகு, எனக்கு நிலா பிடிக்கும், அதுவும் இந்த இரவு-நிலவு-இளையராஜா பாடல்கள் என்பது நல்ல கூட்டணி.." அவளோ நிலவை நோக்க, இவனோ நிலவே பெண்ணோ என இவளை வியக்க....

அவன் எண்ணத்தை மெல்ல கலைத்த தென்றலால், தொடர்ந்தான்... "நான் நிறைய மிஸ் பண்ணிட்டேன் தாமரை, அன்பு ,பாசம் எல்லாம் உணர மறந்துட்டேன்..பாட்டி தாத்தாவோட அன்னோன்யத்தை பார்த்து எனக்கு இப்படி வாழ்வு அமையுமான்னு எண்ணிய நாட்களும் உண்டு.."

அவன் குரலின் மாற்றத்தை உணர்ந்த பெண்ணோ, "அட என்ன அத்தான் அன்யோன்யத்துக்கு என்ன குறைச்சல், பாட்டி தாத்தாவையே நாம பொறாமை படும்படிவைக்கலாம். நீங்க உணராத அன்பு, பாசத்தை உங்க பசங்களுக்கு அள்ளி அள்ளி கொடுங்க யார் வேண்டாம்னா ", என தன்னை மறந்து கூற..

அவள் வார்த்தையின் வாத்சல்யத்தில் மனம் கிறங்கிய மித்ரன் அவளை நெருங்கி," என்ன சொன்ன தாமரை?!!" என் அவள் விழி நோக்க..

தன் வார்த்தைகளை உணர்ந்து.. செந்சாந்து பூசிய கன்னங்களோடு அவனை பார்த்தாள்...

சிகப்பு கொடி ரயில் நிறுத்தவே.. ஆனால் இங்கோ அது காமன் வாகனத்தை வாழ்த்தி வரவேற்கும் வண்ண கொடி ஆயிற்றே...

அவள் கன்னம் தந்த வண்ணத்தின் பாஷையில் ..
அவளை சேர்த்தணைத்து அந்த பால்கனியை சிறப்பிக்கும் அந்த ஊஞ்சலில் அவளை மடி தாங்கி அமர்ந்தான்..


அவள் காதுகளுக்குள், காதலனாய் "ஏய் தாமரை இந்த பூனையும் பால்குடிக்குமான்னு இருந்துட்டு இந்த போடு போடறீயே.. அப்போ நான் தான் லேட்டா" என்றான் கிறக்கமாக..

க்ளுக் என்ற அவளின் சிரிப்பொலி ரம்மியமாய் இசைக்க.. " அச்சோ அத்தான், எல்லா பூனையும் பால் குடிக்கும்.. சிலது திருட்டுத்தனமாக பாலை குடித்து சூடு படும்.. சிலது தன் காப்பாளர் தலை தடவி தரும் பாலை குடித்து குதுகலிக்கும்.. ஸோ மில்க் டேஸ்டிங் இஸ் ஆப்வியஸ்" என்றாள் ஒரு கண்ணை மூடி மறு புருவத்தை ஏற்றி..

"தாமரை நீ தானா இது , எங்க இருந்தது இந்த பேச்சு முன்னாடி "என பின்னாடியிருந்து இறுக்கத்தை கூட்டினான்‌...

"இது கணவனுக்கு மட்டுமே ஆன பிரத்தியேக பேச்சு அத்தான், எல்லாரிடமும் பேச முடியாது.. பேசினாலும் புரியாது.. போதை உண்டவனால் மட்டுமே போதையை உணர முடியுமே தவிர சொல்லியோ படித்தோ உணர முடியாது.. இது அந்தரங்கம், அரங்கம் போட்டு சொல்ல அல்ல .. இதில் மேடை அரங்கேற்றம் ஆனால் இருவர் மட்டுமே.. இது உணர்வால் உயிர் கொண்டு எழுதும் கவிதை அத்தான்.. இலக்கண பிழை வந்தாலும் பரவாயில்லை, நம் மரபு பிழைகளை கூடாது" என தோள் சாய்ந்த தோகையவளின்..மணம் கழுத்தடியில் நுகர்ந்தவாரே..

"தாமரை நான் உன்னை நிற்பந்திக்கறேனா? உனக்கான நேரத்தை தரலன்னு நீ நினைக்கிறியா? உனக்கு தொந்தரவாய் இருக்கேனா ? உன் அண்ணனை உன்கிட்ட இருந்து பிரிச்சுட்டேன்னா ?"என்று சுருதி குறைந்து கேள்விகளை அடுக்கினான் ..

"அத்தான் அந்த நிலாவை பாருங்க.. இன்னிக்கு முழுசா இருக்கு, போக போக கரையும் பின் மறையும் அப்புறம் வளரும்... உறவுகளுக்குள்ளான சுகம் துக்கங்களும் அப்படித்தான்.. கதிர் அண்ணாகிட்ட சொல்லாமல் நான் திருமணம் முடித்தது தப்புத்தான், ஆனா நான் வாழ்வில தப்பி போகல.. தப்பானவரை கை பிடிக்கல.. என்ன விட அவருக்கு உங்களை பத்தி நல்லா தெரியும்.. அவர் பயப்படுவது உங்க வீட்டில் எப்படி என்ன எடுத்துப்பாங்க,ஏத்துப்பாங்கன்னு தான்.. இந்த நிலா தேய்ந்து வளர நாட்கள் வேணும்ல அது மாதிரி , நான் நல்லாயிருக்கேன்,இருப்பேன்னு அவர் புரிஞ்சு நம்மள தேடி வருவாரு அதுக்கு நாம் நேரம் தரணும் கண்டிப்பா..

அப்புறம் என்ன சொன்னீங்க என்ன நிர்பந்திக்கறேனாவா.. அத்தான் உடலை நிர்பந்திச்சு கிடைக்கற சுகம் என்ன உபயோகம் சொல்லுங்க.. பத்து நிமிஷ சுகமா.. இல்லத்தான்.. ஒரு மனைவி தன் கணவனிடம் நம்பிக்கை இல்லாமல் காதலில் விழ மாட்டாள்.. காமத்தின் பூட்டினை திறக்க உதவமாட்டாள்.. எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு அத்தான்.. அதனால் தான் உங்க தொடுகை எனக்கு சுகமளிக்கிறது.. நம்ம சொந்தம் அந்த வானமும் நட்சத்திரம் போல எப்பவும் ஒண்ணாவே இருப்போம்... நம்பிக்கை, காதல் வந்த பின் இனி‌ எல்லாம் சுகமே.." என இனிமையாய் பாடினாள்..

அவளின் பதிலில் தன்னை தொலைத்த மித்ரன் அவளுள் தன்னை தொலைக்க தொடங்கினான்..
"அச்சோ அத்தான் நிலா பாக்குது...", இவள் கூறியதில் நிலவுக்கும் வெட்கம் வந்ததோ தன் மேகக்காதலனை கருவண்ண போர்வைக்குள் அணைத்து மறைந்து போனாள்...


சில நேரம் நம் வார்த்தைகள் வற்றும்போது கவிஞர்களை நாடலாம்... அவர்கள் நிரப்புவார்கள் அந்த மௌனத்தின் பாஷைதனை. அதோ அவள் விரும்பிய நிலா-இரவு- ராஜாவின் பாடலில் அவளின் தற்போதைய நிலையை விளக்கும் பாடலை ஒலிக்க விட்டிருந்த இரவு காவலாளி.. காற்றில் கலந்து நம் காதுக்குள்ளும் கேட்டகிறதே..

"ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்


ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ

வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்


கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்
வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்


ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய
அனுபவம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே


மன்னவனின் பசியார மாலையிலே பரிமாற

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசியார மாலையிலே பரிமாற

வாழையிலை நீர்தெளித்து போடடி என் கண்ணே
வாழையிலை நீர்தெளித்து போடடி என் கண்ணே


நாதசுரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை
அவசியம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ


சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்


ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ"
 
Last edited:

Advertisements

Top