• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aruna Kathir's Mayanadhi suzhal full link

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
மாயநதி சுழல்!!

பார்க்க மெல்லிய நீரோடை ஆரம்பிச்ச கதை.. அழகான சூழல்ல ஆரம்பிக்கிற இந்த நதி பயணம், நம்மையும் மீறி நம்மள இழுத்துகிட்டு போகுது.. ஆனா அது சுகமான இழுப்பாவே இருக்கு..

ஆடம்பரம் இல்லாத தினசரி வாழ்வுல நாம சந்திக்கிற கதை மாந்தரோட கதை தான்..ஆனா நாம அவங்களையும் கூர்ந்து கவனிக்கணுன்னு சொல்லாம சொல்ற கதை...

கதையோட ஹீரோயின் சுரபி, கடலோர கவிதைகள் ஜெனிபர் டீச்சரோட மார்டன் ஃபார்ம்.. அழகு,அறிவு ,அமைதி.. அவங்க ஒரு பீட்டர்.. அதாங்க ஆங்கில ஆசிரியர்..சிக்க்ஷா இன்டர்நேஷ்னல் பள்ளில ஆசிரியர்..

மதி இவர் தான் நம்ம ஹீரோ.. கடமை தவறாத போலிஸ் அதிகாரி.. சச் ஹ நைஸ் ஜென்டில்மேன்.. பார்டர் ஆஃப் கன்டோரல தாண்டாத கண்ணியவான்.. இந்த கதைக்கு அப்பறம் இவர் மேல் காதல்ல விழாதவங்க ரொம்ப கம்மின்னு தான் சொல்லணும்.. காவலனுக்கே உரிய மிடுக்கு, புத்தி கூர்மைன்னு மிளர்வாரு.. அவர் துப்பறியும் முறையிலேயே வாவ்ன்னு ஒரு இடத்திலாவது சொல்லத்தோணும்..

அமுதா , சுரபி யோட அக்கா மிக முக்கியமான கதாபாத்திரம் நம்மள சுழல்ல. இவங்களும் லாவகமாக இருப்பாங்க.. பெங்களூர்ல தணிக்கையாளரா வேலை. சின்ன கார், வீடு. சகோதரி சுரபி அ சுபி இது தான் அவங்க உலகம்..


இந்த கதையில நிறைய பகுதி இந்த 3 பேர் சுத்தி தான் சுழலும்...

மிதுனான்னு சுரபி வகுப்புல படிக்கிற ஒரு குழந்தை ,டான்ஸ் க்ளாஸ் போய்ட்டு வரும் போது கடத்த படறா.. அந்த கேஸ் ஹான்டில் பண்றவர் தான் நம்ம மதி ACP. இந்த கேஸ் சம்மந்தமா தான் அவர் சுபிய சந்திக்கிற நிலை வருது.. நாம் யூஷ்வலா நினைக்கிற மாதிரி ஹய்யோ போலிஸ் சங்கார்த்தமே வேண்டாம்ன்னு அவ அக்கா சொன்ன மாதிரி , மதி கேட்ட கேள்விக்கு பதிலோட நிறுத்திக்கிறா சுபி.. (ஆமாம் பா நம்ம சுபி அம்மா கோந்து மாதிரி, அக்கா கோந்து..அக்காக்கு சென்னைல இருந்து பெங்களூருக்கு லைவ் கமன்ட்டிரி எப்பவும் பறக்கும்)

மதிக்கு அவ பதில் திருப்தி தரவில்லை .. இது இப்படி இழுத்து அடிச்சுட்டு இருக்கும் போது மிதுனா பாதுகாப்பா வந்துடறா எந்த ஒரு அசம்பாவிதம் இல்லாம.. யார் குழந்தைய கடத்தினார் . எங்க இருந்தா ? எப்படி வந்தா ஒண்ணும் தெரியலை. ஆனா பணம் மட்டும் கைமாறியிருக்கு.. பெரிய குடும்பம் என்பதால் மிதுனா கேஸ, திரிப்பியும் போலிஸ் ஆராய அவ குடும்பம் விரும்பல..
ஆனா நம்ம கடமையே ஷர்ட்டு பான்ட்டா போட்டிருக்கிற மதியால் அது விட முடியுமா??? முடியல.. திரும்பி சுபியை தேடி போறாரு, அவ மூலமாக மிதுனாட்ட பேச முடிஞ்சு, அதுல கிடைக்கும் விவரத்தை வைச்சு மேலும் குழந்தை கடத்தல் தடுக்கலாம் என்பது மதியோட மதி சொன்ன யோசனை.

ஆனா சுபி வாய் தொறந்து கலகலன்னு பேசிட்டாலும்.... அவள பேச வைக்க போலிஸு டி.டி லாம் ஆடுவாறு.. கடைசில பேசி உதவி பண்ண ஒத்துப்பா.. இதுக்கு நடுவில் இவங்க நட்பு காதலாக மாறவா , வேண்டாமான்னு பட்டிமன்றம் வைச்சு காதலா மாறும் அழகான காதல், அற்புதமான காதல், உணர்சிகள் அத்துமீறா காதல்.. ரொம்ப ரொம்ப மனமுதிர்ச்சியான காதல்.. மரத்த சுத்தி, பட்டன் நோன்டி, ஐ லவ் யூ சொல்லி, முத்தம் தந்து இதலாம் இல்லாமல் மனதால் ஒரு காதல்.. ரொம்ப அழகா இருந்தது இப்படி ஒரு காதல படிக்கும் போது....

மிதுனா மூலமாக எந்த விவரமும் சரியாக தெரிஞ்சுக்க முடியல.. இப்படி இவங்க டீசன்ட் காதல் வளர்ந்து வரும் பொழுது சுபிக்கு விபத்து ஏற்பட்டு ஐ.சி.யூல சேர்க்க படராங்க.. தொலைபேசியிலும், சுபி மூலமாகவே ஒருத்தர ஒருத்தர் தெரிஞ்சுகிட்ட மதியும் அமுதாவும் அப்போ தான் நேரில் சந்திக்கறாங்க.. அமுதா கண்வழியா அவங்க சுபியோட கடந்த காலத்த நாம் பாக்கறோம் மதியோட சேர்ந்து...

உடல் நிலை காரணமாக சுபியும் , அமுதாவும் மதியோட வீட்டில் தங்கராங்க..மதி வீட்டு ஓன்னர் தம்பதியர் தான் இவங்களுக்கு உணவு தந்து உதவராங்க.. அங்க இருந்த 4நாளும் சுபியை மதி கணவனா இருந்தா எப்படி தாங்குவாரோ அப்படி கைல வச்சு தாங்கறாரு அவர் அலுவலக பணியில்லாத நேரத்தில..

அடுத்த குழந்தை காணாமல் போகுது. இந்த முறை பெங்களூர் கமிஷனரோட பேரன். மிதுனா வழக்கு மாதிரி.. யார்,எப்போ, எப்படி,எங்கே ன்னு கேள்விக்கு பதில் இல்லை.. ஆனா கடத்தல் யுக்தி ஒண்ணு தான்.. அதான் ஒரே ஒற்றுமை.. மதியோட நண்பர் மூலமாக இந்த கடத்தல பத்தி அறியும் மதி, திருப்பியும் மிதுனா கடத்தலுக்கு மற்றும் இந்த கடத்தலுக்கும் சம்மந்தம் இருக்குமோன்னு அவரோட போலிஸ் மதியோட யோசிக்கிறாரு...

அதனால் பெங்களூர் போக ப்ளான் பண்ணி சுபி வீட்டுக்கு போறாரு. அவங்க வீடு, அவங்க பொருட்களையெல்லாம் பார்த்து அசந்து போறாரு எப்படி ஒரு சார்டட் அக்கௌன்ட்டுக்கு இவ்வளவு பணம்ன்னு மண்ட குடையுது.. அத அமுதா சுபிட்ட கேட்கவும் செய்யராறு நம்ம போலிஸ்.. அதனால அக்காவும் தங்கையும் கடுப்பாராங்க.. ஆனா சும்மா தான் கேட்டேன் னு சொன்னாலும் மண்டையில் ஒடிகிட்டே இருக்கு..

தாய் தந்தையுன் சுபிய பொண்ணு பாக்க கூட்டிட்டு வராரு மதி.. ஆனா மதி அம்மாக்கு இதில் விருப்பம் இல்ல....இந்த பேச்சு நடக்கும் போது மதிக்கு ஹவுஸ் ஓனர் கிட்ட இருந்து அழைப்பு வருது.. பெங்களூர்ல இருக்குற அவங்க பேரன் கடத்த பட்டுட்டான் அதுவும் மிதுனா மாதிரி ன்னு தெரியுதே.

அதுக்கு அப்புறம் மதி எப்படி கடத்தல்காரன நெருங்குறார். யாரவங்க? எதுக்கு இப்படி குழந்தை கடத்தல்? யார் யார் உடந்தைன்னு ஒவ்வொரு முடிச்சு அவிழும் போது நமக்கு பக்குன்னு இருக்கும்..

சுபி,மதி சேர்ந்தார்களா?, மதி உயிரா நினைக்கும் போலீஸ் வேலை அவருக்கு என்ன தந்தது?, காதல் அவங்க வாழ்க்கையை எப்படி புரட்டி போட்டுச்சு? , கடத்தல்காரன் பிடிபட்டானா? அமுதா மேல் இருக்கும் மதியோட சந்தேகம் தீர்ந்ததான்னு கேள்விகளுக்கு பதில் சொல்லும் இந்த மாயநதி..

அருணா கதிர் வாழ்த்துகள், அட்டகாசமான ,அறிவுபூர்வமான கதையை கொடுத்துக்கு மிக்க நன்றி.. கடத்தல்காரன் யார்? ,ஏன்? , நடந்த விதம் எப்படி? எதற்காக இதுன்னு ரொம்ப இன்டிரஸ்டிங்கா விவரிச்சு இருப்பாங்க,.. கடத்தல்காரன் தரப்பு நியாயம் ரொம்ப நெகிழ்வானதா இருக்கும்..

இவங்களா? , இப்படியா ? டேய் யாரடா நம்பறது.. நாம தினசரி பார்த்து பழகிய மனுஷங்களுக்கு இப்படி ஒரு முகமான்னு ?ஆச்சரிய படுவோம்..

நல்ல ஒரு விறு விறு சஸ்பென்ஸ் நாவல்.. கண்டிப்பா எனக்கு ஏமாற்றம் தரல.. நம்ம கண்ணுக்கு தெரியாமல் ஒரு மாயநதி ஓடிகிட்டே இருக்கு மக்களே அதோட சுழல்ல விழாம இருப்பது நம்ம புத்திசாலித்தனம்???

"அன்பேனும் அமுதசுரபியை அள்ளி பருக உந்திச் செல்லும்
மனமே ,
மதியான காதல் வேண்டி நீயும்
மாய நதி சுழலில் சிக்குண்டாயோ?"
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top