• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 11: Agathiyar kaalam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 11:

தனது மாணவர்களின் ஆர்வத்தையும் திறமையௌம் கண்டு பெருமை கொண்டார் ஆசான் அகத்தியர். மருத்துவ மாணவர்கள் மட்டுமில்லாமல் மற்ற துறையைச் சேர்ந்த மாணவர்களும் நோயாளிகளின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறுவது அவர் மனதுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்தது. செய்ய வேலைகளில் ஈடுபட்டார் அம்முனிவர்.

வேப்பிலைச் சாற்றினைக் கொண்டும் நொச்சி இலைச் சாற்றினைக் கொண்டும் கைகளைக் கழுவி விட்டு வந்தார் ஆசான். மாணாவர்களும் அப்படியே செய்தனர். நோயாளியின் இதயப்பகுதியில் மெல்லிய துளை செய்தார் அகத்தியர். ஒரு சொட்டுக் கூட குருதி வெளி வாராதபடி மெல்லிய மூங்கில் கத்தியினைக் கொண்டு அதனைச் செய்தார். இது வரை இது போன்ற ஒன்றை மாணவர்கள் கண்டதில்லை என்பதால் ஆர்வத்தோடு கவனித்தனர். அறுவை சிகிச்சையின் போது வாயே திறக்கக்கூடாது என்பது தான் அவர்கள் கற்றுக் கொண்ட முதல் பாடம் என்பதால் ஒருவரும் வாயைத் திறக்காமல் அவதானித்தனர்.

ஒரு மின் கலத்தை செப்பு இழைகளால் இணைத்து அவனது இதயப்பகுதியில் இருந்த துளையில் செலுத்தி மின்சக்தியைப் பாய்ச்சினார். அடுத்த கணம் அவனது உடல் தூக்கிப் போட்டது. இரு நிமிடங்கள் கழித்து அவனது நாடியைப் பார்க்கச் சொல்லி சைகை செய்தார் ஆசான். பார்த்த போது நல்ல முன்னேற்றம் தெரிந்தது. ஆச்சரியம் மிகுந்த கண்களோடு ஆசானை ஏறிட்டனர் மாணவர்கள். பல விதமான பச்சிலைகளை அரைத்துச் சாறெடுத்துத் தயாரித்த குளிகைகளை அவனது வாயில் செலுத்தினார். அவனது தலை துவண்டது. திடுக்கிட்டு நிமிர்ந்த மாணவர்களை கண்கலாயே பதற வேண்டாம் என்றார் ஆசான். இப்போது தங்கத்தால் ஆன மிகக் கூர்மையான கத்தியைக் கொண்டு மெல்லிய கோட்டினைக் கிழித்து மூளை சற்றே வெளியில் தெரியும்படி செய்தார். தயங்கித்தயங்கித் துடித்துக்கொண்டிருந்தது அது.

மெல்லிய மூங்கிலாலான பகுப்புக்கத்தியை எடுத்து துவாரத்தை சற்றே அகலப்படுத்தினார். இப்போது மூளையில் அந்த எலும்புத்துண்டு குத்தி நின்றது நன்றாகத் தெரிந்தது. அவ்வப்போது நாடியைக் கவனித்து வந்த மல்லிகை பயத்தோடு நிமிர்ந்தாள். காரணம் அவனது நாடி இப்போது துடிக்கவே இல்லை. பதற வேண்டாம் என சைகை காட்டிய முனிவர் நெஞ்சகப்பகுதியில் பார்க்குமாறு சைகையால் சொன்னார். இதயம் துடிப்பது தெரிந்தது. நிம்மதிப் பெருமூச்சுடன் மீண்டும் கவனித்தாள் மல்லிகை. மெல்லிய வெள்ளியால் செய்யப்பட்ட ஒரு சிறு கம்பியைக் கொண்டு அந்த எலும்பை அப்படியே தூக்கினர். அந்த வெள்ளிக்கம்பியோடு வந்து விட்டது அந்த எலும்பு. இப்போது மூளை வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. அதிலிருந்து பெருகிய குருதி பருத்தித்துணியை நனைத்தது.

சுஸ்ருதனுக்கும் சரகனுக்கும் இப்போது என்ன செய்ய வேண்டும் எனது தெரியும் என்பதால் குருதியை உறைய வைக்கும் குளிகை எடுத்து அந்தக் காயத்தில் வைத்தனர். சில நிமிடங்களில் குருதி நின்று விட்டது. ஆனாலும் இன்னமும் நாடி துடிக்கவில்லை. இன்னமும் சிகிச்சை முடியவில்லை என்பதன் அடையாளமாக பக்கத்தில் இருந்த மருந்துப்பெட்டியிலிருந்து சற்றே தடிமனான வெள்ளிக்கம்பியை எடுத்தார். அதனை கபால எலும்பு உடைந்த இடத்தில் சரியாகப் பொருத்தி எலும்பு ஒட்டி எனப்படும் பச்சிலையைத் தடவினார். இன்னும் இரு நாழிகைகளில் அந்த எலும்பு வெள்ளிக்கம்பியின் உதவியால் மீண்டும் ஒட்டிக்கொள்ளும் என்பது மாணவர்களுக்குத் தெரியும்.

இப்போது தான் மிக முக்கியமான பகுதி. கபாலத்தில் துவாரம் செய்து தான் மூளையில் சிகிச்சை செய்தார் ஆசான். எப்படி அதனை மீண்டும் இணைக்கப் போகிறார் என்பதை ஆர்வத்துடன் அவதானித்தனர் மாணவர்கள். வேம்பும் தங்கமும் கலந்து செய்யப்பட்ட ஊசியில் அரக்குப்பூச்சிகளின் இழைகளை எடுத்துக்கொண்டார். மிக மிக நுட்பமாக அந்த மெல்லிய இழைகள் அறுந்து போகாத வண்ணம் அவற்றை இணைத்துத் தைத்தார். அவரது கரங்கள் தேர்ந்த தையற்கலைஞனது நுட்பத்தோடு நிதானமாக தைத்து முடித்தன. அந்த இடத்தில் வேப்பிலைகளை வைத்துக் கட்டுப்போட்டு விட்டு அவனை அப்படியே கிடத்தி விட்டு வந்தார். இரு நாழிககள் கழித்துத்தான் எதுவும் சொல்ல முடியும் என சைகை காண்பித்தார்.

அந்த இரு நாழிகைப் பொழுதும் ஒவ்வொரு யுகங்களாக் கடந்தன மற்றவர்களுக்கு. ஆனால் கவலைப்படாமல் தனது ஓலைச் சுவடிகளில் எதையோ எழுதிக்கொண்டிருந்தார் ஆசான். இரு நாழிகை முடிந்ததும் இதயத்தில் செருகப்பட்ட செப்புக் கம்பிகளை மெல்ல இழுத்தார். அவை வெளி வந்ததும் மூச்சுக்காற்றுக்குத் திணறினான் அந்த இளைஞன். ஆனால் சில நொடிகள் தான். வழக்கம் போல மூக்கால் மூச்சு விட ஆரம்பித்தான் கை கால்களும் மெல்ல அசைந்தன. அது வரையில் இறுக்கமான முகத்தோடு இருந்த மாணவர்கள் மெல்லிய புன்னகை பூத்தார்கள். குடிலை வெட்டு வெளியே வந்தனர் அனைவரும்.

"இனி அவன் பிழைத்து விடுவான்!" என்றார் அகத்தியர் திருப்தியோடு.

மாணவர்கள் மூவரும் சொல்லி வைத்தாற் போல அவரை வணங்கினர்.

"ஆசானே! இது வரையிலும் அவ்வளவு ஏன் இனி வரும் காலத்திலும் கூட யாருமே செய்யத்துணியாத அறுவை சிகிச்சையை நீங்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளீர்கள். உங்களது அறிவின் ஆற்றகைக் கண்டு எங்களால் வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்த அறிவியல் நுட்பத்தை எங்களுக்கு விளக்க வேண்டும்" என்றான் சுஸ்ருதன்.

"முதலில் இந்த இளைஞனை அழைத்து வந்தவர்களிடம் பேசி விட்டு பிறகு நான் சொல்கிறேன்" என்று அவர்களை நோக்கி நடந்தார். அதற்குள் சரகன் அவரது உடலில் ஒட்டியிருந்த குருதிக்கறைகளையும் வேப்பிலைகைச்சாற்றையும் துடைத்து சுத்தம் செய்தான். வேப்பிலை ஆடையை மாற்றி சாதாரண பருத்தித்துணிகளை அணிந்து கொண்டார். நேரே அந்தக் கூட்டத்தினர் அமர வைக்கப்பட்டிருந்த குடிலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும் அந்த இளைஞனின் தாயைப் போலிருந்தவள் ஓடி வந்தாள்.

"ஐயனே! என் மகன் பிழைப்பானா? இப்போது எப்படி இருக்கிறான்?"

"பிழைத்து விடுவான் தாயே! இனி அவனுக்கு எந்த அபாயமும் இல்லை. மூச்சு சீராக வரத் தொடங்கி விட்டது. ஆனால் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவைகள் சில இருக்கின்றன அவற்றைத் தவறாமல் கடைப்பிடித்தால் இன்னும் உங்கள் மகன் நூறாண்டுகள் வாழ்வான். "

"என்ன செய்ய வேண்டும் ஐயனே?"

"இன்னும் பதினைந்து நாட்கள் அவனை எங்கேயும் அழைத்துச் செல்ல இயயலாது ஆகையால் அவன் அந்தக் குடிலுக்குள்ளேயே தான் இருக்க வேண்டும். யாராவது ஒரே ஒருவர் தான் சென்று அவனுக்குத் தேவையானவைகளை அளிக்க வேண்டும். அதுவும் அவர்கள் நாங்கள் தரும் வேப்பிலை ஆடையை உடுத்துக்கொண்டு தான் செல்ல வேண்டும். இது மிகவும் முக்கியம்"

"அப்படியே செய்கிறேன் ஐயனே! என் மகனுக்கு நானே பணிவிடை செய்கிறேன்."

"நல்லது! இன்னும் இரு வாரங்களில் நீங்கள் அவனை ஊருக்கு அழைத்துச் செல்லலாம். தலையில் இருக்கும் காயம் ஆற எப்படியும் ஒரு திங்கள் பிடிக்கும். அது வரையில் அவனை மிகவும் எச்சரிக்கையுடன் பார்த்துக்கொள்ள வேண்டும். அவனை வேப்பிலைப் படுக்கையிலேயே தான் படுக்க வைக்க வேண்டும். அவனோடு பேசுபவர்கள் ஐந்தடி தள்ளி நின்று தான் பேச வேண்டும். நாங்கள் கொடுக்கும் மூலிகைத் தைலத்தத்தவிர வேறு எதையும்தலையில் தடவக்கூடாது. முக்கியமாக முடியை அவ்வப்போது களைந்து கொண்டே இருக்க வேண்டும். "

"மறுக்காமல் செய்கிறோம் ஐயனே! என்ன மந்திரமோ மாயமோ தெரியவில்லை! நீங்கள் எப்படியோ என் மகனைக் காப்பாற்றீ விட்டீர்கள். இனி நீங்கள் தான் எங்கள் குல தெய்வம்" என்று சொல்லி அவரது காலில் அந்தப் பெண் விழ மற்றவர்களும் அவ்வாறே செய்தனர்.

"தாயே! நான் கடவுள் அல்லன்! அவரால் படைக்கப்பட்ட ஒரு உயிர் அத்தனை தான். என்னை நீங்கள் வணங்கக் கூடாது! அதுவும் தவிர நான் மந்திரம் மாயம் எதுவும் செய்யவில்லை. அவைகளை நான் நம்பவும் இல்லை. அறுவை சிகிச்சை செய்து தான் உங்கள் மகனைக் காப்பாற்றினேன்"

"ஐயனே! உங்களது பண்பு தற்புகழ்ச்சியைத் தவிர்க்கிறது. நீங்கள் கிட்டத்தட்ட நான்கு நாழிகை நேரம் அந்தக் குடிலுக்குள் போராடியிருக்கிறீகள். நிச்சயம் மனித சக்தியால் என் மகனைக் காப்பாற்ற முடியவே முடியாது. நீங்கள் தெய்வாசம் பொருந்தியவ்ர் என்பதால் உங்களது மந்திரத்துக்கு இறைவன் இரங்கி என் மகனுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தான். அந்தக் குடிலே ஒளி மயமாக இருப்பதை நாங்கள் பார்க்கிறோம். இறைவனது அருள் ஒளி தானே அது" என்றன் அந்த இளைஞனின் சகோதரனைப் போலத் தோன்றியவன் .

எதுவும் பேசாமல் அவர்களை விடுத்து அருவிக்கரைக்கு நீராடச் சென்று விட்டார் அகத்தியர். அவரது மனம் சங்கடப்பட்டது.

"என்ன சொல்லி என்ன? இந்த மக்கள் ஏன் எல்லாவற்றையும் மந்திரத்தால் தான் செய்ய முடியும் என நினைக்கிறார்கள்? கடவுள் இயற்கையின் வழியாக நமக்கு அளித்திருக்கும் பெரும் ஆற்றல்களை உணரவோ பாராட்டவோ இவர்களால் ஏன் முடியவில்லை? இப்படியே போனால் இனி வரும் காலத்தில் மக்கள் எல்லாவற்றையும் மந்திரத்தின் மூலம் தான் சாதிக்க முடியும் என நம்பத்துவங்கி விட்டால் என்ன ஆவது? பல முனிவர்களும் நானும் கண்டுபிடித்து செயலாற்றிக்கொண்டிருக்கும் அறிவியல் துறை காணாமலே போய் விடுமோ? இல்லை நிச்ச்சயம் இல்லை! எங்களது அறிவியல் தத்துவங்களைப் புரிந்து கொண்டு பாராட்டும் தலைமுறை கட்டாயம் தமிழகத்தில் வரும். அப்போது எங்களின் ஆராய்ச்சிகளை வழி காட்டியாக அவர்கள் பயன்படுத்துவார்கள். அது வரையில் நான் அவற்றை பாதுகாப்பாக வைக்க வேண்டும்" என்று நினைத்தபடியே நீராடினார். தாமிர பரணி அவரது உடலைத் தழுவி தூய்மையாக்கியது.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
artificial ventilation with minkalam, your writing is amazing sis (y)(y)(y)(y)
"என்ன சொல்லி என்ன? இந்த மக்கள் ஏன் எல்லாவற்றையும் மந்திரத்தால் தான் செய்ய முடியும் என நினைக்கிறார்கள்? கடவுள் இயற்கையின் வழியாக நமக்கு அளித்திருக்கும் பெரும் ஆற்றல்களை உணரவோ பாராட்டவோ இவர்களால் ஏன் முடியவில்லை? இப்படியே போனால் இனி வரும் காலத்தில் மக்கள் எல்லாவற்றையும் மந்திரத்தின் மூலம் தான் சாதிக்க முடியும் என நம்பத்துவங்கி விட்டால் என்ன ஆவது? பல முனிவர்களும் நானும் கண்டுபிடித்து செயலாற்றிக்கொண்டிருக்கும் அறிவியல் துறை காணாமலே போய் விடுமோ
arumaiyana varigalView attachment 228
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Super epi.. Agathiyar appothe enna mathiri sikkichai ellam seithirukkar.. Brammippa irukku.. Makkalil innum silar appadithan irukkirarkal
 




Hadijha khaliq

புதிய முகம்
Joined
Apr 17, 2018
Messages
5
Reaction score
37
Location
Chennai
Wow....antha kaala aruvaisigichai muraiyai azhaga vizhakki irukeenga....nam munnorkal evvalavu thiramaisaligal
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top