• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 13: Agathiyar kaalam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம்13.

ஆசான் அகத்தியரின் மாணவர்கள் அனைவருமே எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அன்று அமர்ந்து பாஅம் கேட்டுக்கொண்டிருந்தனர். மிக முக்கியமான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முஇடித்து அதனை விளக்கிக் கொண்டிருந்தார் ஆசான். தலையில் அடிபட்டு குருதி உறைந்து விட்டால் எப்படி அறுவை சிகிச்சை செய்து உயிர் பிழக்க வைக்க வேண்டும் என்பதைப் பற்றியும் அடிபட்ட இரு நாழிகைப் பொழுதுக்குள் நோயாளி கொண்டு வரப்பட்டால் எங்கே குருதி உறைவைத் தேட வேண்டும் என்பது பற்றியும் விளக்கம் அளித்தார் அகத்தியர். அவற்றை கவனமாகக் கேட்ட மாணவர்கள் தங்கள்து ஐயங்களைக்கேட்டலாயினர்.

"புரிந்தது ஆசானே! குருதி உறைவைக் கண்டறியத்தான் நீங்கள் காயத்தைச் சுற்றிலும் துவாரம் ஏற்படுத்தினீர்கள் அல்லவா? ஆனால் எதற்காக செப்புக்கம்பியை அவனது இதயத்தில் பொருத்தினீர்கள்?"

"மூளையின் பணி என்ன சரகா?"

"நரம்பு மண்டலத்துக்கு செய்தி கொண்டு செல்வது, குருதி ஓட்டத்தை சீராக்குவது, மனிதர்களை மூச்சு விடச் செய்வது, கை கால்களை அசைக்கும் கட்டளைகளைக் கொண்டு செல்வது..இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ஆசானே"

"மிகவும் சரி! ஆனால் மூளை செயலிழந்தாலும் இதயம் தானே துடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். காரணம் இதயத்துக்கு மூளையின் கட்டளை தேவையில்லை. துடிக்கத் தேவையான ஆற்றல் மட்டுமே அதற்குப் போதும் ஆனால் அந்த ஆற்றலைத் தருவது மூளை தான். அதனால் தான் தற்காலிகமாக மூளையை செயலிழக்கச் செய்தேன். அதன் காரணமாக அவனது உடல் மூளையின் கட்டளை இல்லாமல் இருந்தது. இதயம் துடிப்பதற்குத் தேவையான ஆற்றலை அதாவது சக்தியைத்தான் மின் கலம் வழியாக செப்புக்கம்பிகள் மூலம் அளித்தேன். அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் மூளை செயல்பட ஆரம்பித்ததும் மின் சக்தியை அகற்றினேன் அவ்வளவு தான்."

"ஆசானே! உங்களது ஆற்றலையும் திறமையையும் பாராட்டாவோ புகழவோ எங்களுக்குத் தகுதி இல்லை!"

"இதில் புகழுக்கோ பாராட்டுக்கோ எதுவும் இல்லை மல்லிகை! நமது உடல் கடவுளால் படைக்கப்பட்டது. எப்படியாகிலும் உயிரோடு இருக்க வேண்டும் என்ற துடிப்பு அதன் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்துள்ளது. நாம் சிறு உதவி செய்தோமானால் அவை தனக்குத்தானே உதவிக்கொண்டு உயிரை நிலைப்படுத்தும். அந்த ஆற்றல் நமது உடலுக்கு உண்டு. அதைத்தான் நான் தட்டி எழுப்பினேன்." என்றார்.

அது வரையில் மௌனமாக இருந்த செங்குன்றன் வாய் திறந்தான்.

"ஆசானே! பொன்மகளும் ஆதவனும் மனம் திருந்தி விட்டார்கள் என நினைக்கிறேன்"

அவர்கள் பெயரைக் கேட்டதும் முகம் சிவந்தது ஆசானுக்கு.

"இப்போது என்ன அவர்களைப் பற்றி?"

"மன்னிக்க வேண்டும் ஆசானே! நேற்று நீங்கள் அறுவை சிகிச்சை செய்த இளைஞனை நமது பாடசாலையை நோக்கி வழி காட்டியவர்கள் அவர்கள் இருவரும் தானாம். இதனை அந்தப் பெண்மணியே சொன்னார்கள்."

"அப்படியா?"

"ஆம் ஆசானே"

"என்னவென்று வழிகாட்டினான்? எனது ஆசான் மந்திரமாயங்கள் செய்து இவனைக் காப்பாற்றுவார் என்றானா? இல்லை தானே ஏதோ ஒரு இறைவனின் தூதுவன் போல நடித்தானா?" என்றார்.

மாணவர்கள் அனைவரும் மீண்டும் ஆசானின் அறிவாற்றலைக் கண்டு வியந்தார்கள்.

"என்ன மௌனமாக இருக்கிறீர்கள்? அவன் என்ன சொன்னான்? தன்னை தூதுவன் என்றானா இல்லை என்னை மாயாவி என்றானா? இல்லை இரண்டையுமே சொன்னானா?" என்றார்.

"அவன் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை! ஆனால் அவர்கள் அப்படிக் கருதிய போது மறுத்தும் பேசவில்லை" என்றாள் வண்டார்குழலி.

அகத்தியரின் முகம் இறுகியது.

"இனி அவர்களைப் பற்றிய பேச்சு வேண்டாம்! இத்தோடு இன்றய படம் முடிந்தது" என்று சொல்லி விட்டு எழுந்து விட்டார்.

செங்குன்றனை சூழ்ந்து கொண்டனர் மற்ற மாணவர்கள்.

"நீ ஏன் அவரிடம் சொன்னாய் செங்குன்றா? பார் அதனால் அவர் எங்களது பாடத்தைப்பாதியில் நிறுத்தி விட்டார்" என்றாள் மல்லிகை.

"இல்லை ஒருக்காலும் ஆசான் எதையும் பாதியில் நிறுத்த மாட்டார். நமக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியதைக் கற்றுக் கொடுத்து விட்டார். இனி நாம் நமது சொந்த முயற்சியால் சிலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுவே நமது பாடசாலையின் முறை." என்றான் சரகன்

"உண்மை தான் சரகா! இன்று நடந்த அறுவை சிகிச்சையையும் மரபணு புணர்ச்சிப்பிழை பற்றியும் எழுதி வைக்கப் போகிறேன். நாளை நமக்கே கூட அவை உதவியாக இருக்கும். இன்றைக்கு நடந்த பாடத்தைக் கூட வண்டார் குழலி எழுதி வைத்தாள் என எண்ணுகிறேன்" என்றாள் மல்லிகை.

"ஆம் மல்லிகை! உண்மை தான்! "

"செங்குன்றா நீயும் உனது மின் கலத்தை எப்படி ஆசானின் உதவியுடன் வடிவமைத்தாய் என்பதை எழுது! நமக்குப் பின்னால் வரும் மக்களுக்கு அவை உதவியாக இருக்கும்" என்றாள் மல்லிகை.

மாணவர்கள் அவரவர்க்குப் பிடித்த துறையில் சாதித்த்தை சாதிக்க இருப்பதைப் பற்றி விவாதித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தார்கள். ஆனால் அதே நேரம் வேறு ஒரு வஞ்சகத் திட்டத்தைத் தீட்டிக்கொண்டிருந்தனர் ஆதவனும் பொன்மகளும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top