• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 18: Tharkaalam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
தற்காலம்:

அத்தியாயம் 18.

பேராசிரியர் பூபாலனின் முகம் சீரியசானதைப் பார்த்ததும் மற்றவர்களும் சீரியசானார்கள். ஏதோ ஒரு மிக முக்கியமான விஷயம் இருக்கிறது. அது இனிமேல் தான் வெளி வரப்போகிறது என்று புரிந்துகொண்டார்கள். அதை எத்ரிபார்ப்பது போல அனைவரும் மௌனமாக பூபாலனை ஏறிட்டார்கள். அவர் மெல்லிய குரலில் தொடர்ந்தார்.
"சார்! இப்ப நான் சொல்லப்போறது நமக்குள்ள மட்டுமே இருக்க வேண்டிய ரகசியம்! இதை நீங்க மறந்தும் கூட வெளியில மூச்சு விடக் கூடாது"

சிரித்தார் ராமநாதன்.

"என்ன சார் இது? இந்த ஓலைச் சுவடிகள் தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்துல காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கு. யார் வேணும்னாலும் போய் ஜெராக்ஸ் எடுத்துக்கலாம்! அப்ப இது எப்படி ரகசியமா இருக்கும்?"

"உண்மை தான்! ஆனா இந்த சுவடியில இருக்குறதை எத்தனை பேரு சீரியசா எடுத்துக்கப்போறாங்க? அதுவும் தவிர நாளையோட அந்த சுவடிகள் பாதுகாப்புப் பெட்டகத்துக்குப் போயிரும். அதுக்கப்புறம் யாராலயும் இதைப் பார்க்க முடியாது"

"சரி சொல்லுங்க! என் மூலமாவோ என் மனைவி மூலமாகவோ இந்த ரகசியம் வெளியில போகாது" என்றார் நாராயணனும் அதை ஆமோதித்தார்.

"இப்ப சொல்லுங்க"

"இந்த ஓலையில இருக்குறது பாதியில நிக்குது இல்ல? இதோட தொடர்ச்சி ஓலையை நாம தேடுனா என்ன?" என்றார் பூபாலன்.

மற்ற மூவரும் சாவித்திரி உட்பட சிரித்து விட்டனர்.

"நீங்க சிரிக்குறதுக்காக நான் இதைச் சொல்லல்ல! உங்களால என் கூட சேர முடியுமா முடியாதா?" என்றார் கோபமாக.

"கோபடப்படாதீங்க புரஃபசர் பூபாலன்! பரந்த தமிழ் நாட்டுல இந்த ஓலைச் சுவடி எங்கே இருக்குன்னு எப்படித் தேட முடியும்? அது பத்திரமா ஒருக்கா? இல்லை அழிஞ்சு போயிரிச்சான்னு கூட நமக்குத் தெரியாது. ஒரு பேச்சுக்கு நாம தேடுறோம்னே வெச்சுக்குங்க அதனால என்ன பயன்? "

"நாம தமிழ் நாடு முழுக்கத் தேட வேண்டியது இல்ல! பொதிகை மலைக்க்காடுகளுக்குள்ள தேடுனாப் போதும்.காரணம் இது அகத்தியரோட மாணவர்கள்ல ஒருத்தி மல்லிகை என்பவளால எழுதப்பட்டது. அகத்தியர் பொதிகை மலைக்க்காடுகள்ல தான் வாழ்ந்தாருன்னு எல்லாருக்குமே தெரியுமே?"

எதுவும் பேசாமல் ராமநாதன் புரஃபசர் பூபாலனையே பார்த்தார். அவருக்கு ஏதோ நெருடியது. பட்டென எல்லாவற்றையும் போட்டு உடைத்து விடும் குணம் கொண்ட அவர் இடத்தை விட்டு மெல்ல எழுந்தார். பூபாலனின் அருகில் வந்து நின்று கொண்டார்.

"புரஃபஸ்ர் பூபாலன் என்னை நீங்க தவறா நினைக்கக் கூடாது! ஆனா நீங்க எங்க கிட்ட உண்மையைச் சொல்றீங்கன்னு என்னால நம்ப முடியல்ல"

"என்ன சார் நீங்க? உங்க கண்ணு முன்னால படம் இருக்கு அது ஓலைச் சுவடியில இருந்து தான் எடுக்கப்பட்டது நான் சத்தியமாச் சொல்றேன்" என்றார் பூபாலன்.

"பேச்சை மாத்தாதீங்க! இதை பொய்னு நான் சொல்லல்ல! ஆனா நீங்க இதை எங்கருந்து எடுத்தீங்க? இந்தச் சுவடி மட்டுமில்ல இன்னும் வேற சில சுவடிகளும் உங்க கிட்ட தான் இருக்குன்னு எனக்கு சந்தேகமா இருக்கு. ஏன்னா தொல்லியல் துறையில இப்படியோரு அரிய சுவடிகள் கெடச்சா அதை செய்தித்தாள்கள்ல விளக்கமா சொல்லுவாங்க! கடந்த ஒரு மாத காலமா அந்த மாதிரி எதுவும் இல்ல! ஆனா உங்க கட்டுரை தான் திடீர்னு வந்திருக்கு. அப்ப உங்களுக்கு இந்தச் சுவடிகள் வேற எங்கிருந்தோ தான் கெடச்சிருக்கணும் சரி தானா?"

சட்டென தாக்கப்பட்டவரைப் போல முகம் வெளிறிக் கிடந்தார் பூபாலன். அவரது முகமே புரஃபஸ்ர் ராமநாதன் ஊகித்தது சரியெனச் சொல்லியது. இதனை எதிர்பார்க்காத தமிழ்ப்பேராசிரிசியர் நாராயணன் அவரை சற்றே கோபத்தோடு நோக்கினார். சில நிமிடங்களுக்கு யாருமே பேசவில்லை.

"நீங்க சொல்றது உண்மை தான் புரஃபசர் ராமநாதன். இவை தொல்லியல் துறையால கண்டுபிடிக்கப்பட்டது கிடையாது. இந்த ஓலை இருக்குறது கூட நம்ம அரசாங்கத்துக்குத் தெரியாது. இதை நான் என் சொந்த முயற்சியில கண்டு பிடிச்சேன். நான் பழைய ஓலைச் சுவடிகளைத்தேடி நாடு முழுக்கப் போனேன். அப்ப அம்பாசமுத்திரத்துல ஒரு வீட்டுல பழைய பெட்டி ஒண்ணு அவங்க வீட்டுல பரம்பரையா இருக்கறதாகவும் அதை யாரும் திறக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்கன்னுன் சொன்னாங்க! அவங்க அதை ஒரு அபசகுனமா நெனச்சு எங்கிட்டக் கொடுத்தாங்க! அந்தப் பெட்டியே வித்தியாசமான ஈட்டி மரத்தால செய்யப்பட்டிருந்தது."

புரியாமல் பார்த்தனர் மற்றவர்கள்.

"ஓலைச் சுவடிகள் இல்ல மற்ற அழியக்கூடிய பொருளை பலகாலம் பாதுகாப்பா வைக்கணும்னு நினைக்கறவங்க ஈட்டி மரத்துல பெட்டி செஞ்சு அதுல சில ரசாயனங்களைப் பூசி அரக்கால சீல் வெச்சிருவாங்க! அந்த மாதிரியான பெட்டி தான் அது. அதை நான் பார்த்தப்பவே ஏதோ சில முக்கியமான ஓலைச் சுவடிகள் இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன். ஓப்பன் செஞ்சு பார்த்தப்ப தான் இந்த சுவடிகள் இருந்தது"

மீண்டும் மௌனம் சூழ்ந்தது அந்த இடத்தில். பூபாலன் தொடர்ந்தார்.

"சார் இதை நாம அரசாங்கத்துக்கிட்ட கொடுத்தா என்ன ஆகும்? அவங்க பத்தோடு பதினொண்ணா இதைப் பூட்டி வைப்பாங்க! மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய எங்க கிட்ட ஃபண்டு இல்லைன்னு சொல்லுவாங்க! ஆனா நாம இதை எடுத்துக்கிட்டு மத்த சுவடிகளைத் தேடினா என்ன? மனித சமுதாயத்துக்கு தமிழ் கொடுத்த நன்கொடையா இது இருக்குமே?"

ராமநாதன் இன்னமும் சிந்தனையில் தான் இருந்தார். ஆனால் எளிதில் உணர்ச்சி வசப்படும் நராயணன் தமிழ் என்றது மயங்கி விட்டார்.

"கட்டாயம் செய்வோம் சார்! நானும் ரிடயர் ஆகிட்டேன். இதை விட ஓய்வு நேரத்தை உருப்படியா செலவிட முடியவே முடியாது" என்றார் நாராயணன் உணர்ச்சியுடன்.

நெற்றியைத் தேய்த்தபடி மௌனமாக இருந்தார் ராமநாதன்.

"நீங்க என்ன சார் சொல்றீங்க?"

"இதை நீங்க தனியாகவே தேடலாமே? எதுக்கு எங்க உதவியைக் கேக்கறீங்க?"

"இளைஞர்கள் கட்டாயம் இதுக்குத் தேவை! அதிலும் ஜீன்கள் பற்றியும் ம்யூட்டேஷன் பத்தியும் படிச்சவங்க தெரிஞ்சவங்க இதுல ஈடுபட்டா நல்லாயிருக்கும்னு நெனச்சேன். உங்க ஆராய்ச்சி மாணவர்கள் இதுக்கு உபயோகப்படுவாங்க இல்லியா?" என்றார் பூபாலன்.

எதுவும் பேசாமல் மறுபடியும் சிந்தனையில் ஆழ்ந்தார் ராமநாதன்.

திட்டம் போட்டுத்த்தான் இவர் என்னைத் தேடி வந்திருக்கிறார். நான் மறுத்தாலும் வேறு யார் உதவியுடனோ நிச்சயம் இதனைத் தேடத்தான் போகிறார். ஒருவேளை தொடர்ச்சி ஓலையில் வெற்றிகரமாக சூப்பர் இம்போசிங்க செய்வது எப்படின்னு இருந்தா இந்த உலகத்துக்கே அது எவ்வளவு நல்லது? அப்படியே இல்லைன்னாலும் ஓய்வு நேரத்தை உருப்படியாக் கழிக்கலாம் நாராயணன் சொல்றா மாதிரி. இதுனால ஒண்ணும் நஷ்டம் வராதே என்று முடிவு செய்து கொண்டார்.

தனது வலகரத்தை பூபாலனை நோக்கி நீட்ட அதை ஆவலோடு பற்றிக்குலுக்கினார் பூபாலன் அவர்களோடு இணைந்து கொண்டார் நாராயணன்.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
"ஓலைச் சுவடிகள் இல்ல மற்ற அழியக்கூடிய பொருளை பலகாலம் பாதுகாப்பா வைக்கணும்னு நினைக்கறவங்க ஈட்டி மரத்துல பெட்டி செஞ்சு அதுல சில ரசாயனங்களைப் பூசி அரக்கால சீல் வெச்சிருவாங்க! அந்த மாதிரியான பெட்டி தான் அது. அதை நான் பார்த்தப்பவே ஏதோ சில முக்கியமான ஓலைச் சுவடிகள் இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன். ஓப்பன் செஞ்சு பார்த்தப்ப தான் இந்த சுவடிகள் இருந்தது"
nide details sis(y)(y)(y)(y)sema ud sis............ what willthese moovar kootani do waiting sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top