• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 20: Akathiyar Kaalam...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அகத்தியர் காலம் ...

அத்தியாயம் 20:

"மலராளுக்கு குளிகை கொடுக்கும் சமயமாகி விட்டது! கொடுத்து விட்டு வருகிறேன்" என்று சொல்லிச் சென்றவள் கதவுகளை அடைத்துக்கொண்டு சென்றாள். மிகவும் களைப்பாக உணர்ந்த ஆதவன் அங்கிருந்த படுக்கையில் அப்படியே சாய்ந்தான். அவனது மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.

"இப்போது எனக்கு பொன்மகள் மட்டுமே துணையாக வந்திருக்கிறாள். பூங்குன்றனை எவ்வளவோ கெஞ்சினேன். அவன் வர மறுத்து விட்டான். அவன் வந்திருப்பானானால் கூடவே வண்டார்குழலியும் வந்திருப்பாள். எனது வேலை சுலபமாக முடிந்திருக்கும். பொன்மகளுக்கு என் மேல் நம்பிக்கை இருக்கும் அளவுக்கு புத்திசாலித்தனம் இல்லை. ஆனால் இவள் தான் இப்போது எனக்கிருக்கும் ஒரே சொந்தம். நான் செய்ய உத்தேசித்திருப்போது மிகவும் அரிய காரியம். துணையாக ஒரு புத்திசாலி இருந்தால் கூடப் போதும். மலராளுக்கு வெறும் மன நோய் தான். அந்தக் குளிகைகளால் எந்தப்பயனும் இல்லை என்பதே இன்னமும் பொன்ம்களுக்குத் தெரியவில்லை. மலராளின் மனதில் இருக்கும் ஆழ்ந்த வருத்தங்களையும் பயங்களையும் களைந்தாலே அவள் சரியாகி விடுவாள். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் மந்திரம் என்ற பெயரில். அதை பொன்மகள் உணரவிலை என எண்ணுகிறேன். இவளிடம் என் திட்டத்தை எப்படிப் பகிர்ந்து கொள்வது? இவள் உதவி இல்லாமல் என்னால் அதனை தனியாகச் செய்யவும் முடியாது" என்று யோசித்தபடியே உறங்கியும் விட்டான்.

குளிகைகளைக் கொடுத்து விட்டு வந்த பொன்மகள் ஆதவன் உறங்கிக்கொண்டிருப்பதைப்பார்த்து விட்டு மெல்லிய புன்னகையோடு குடிலின் உட்பகுதியில் இருந்த அறைக்குச் சென்று ஓலைச் சுவடிகளில் ஏதோ எழுதத்தொடங்கினாள். மீண்டும் ஆதவன் கண் விழித்த போது குடிலில் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. இரவு துவங்கி ஒரு நாழிகை ஆகிவிட்டிருக்குமோ? அத்தனை நேரமா உறங்கி விட்டேன்" என்ற பதற்றத்தோடு எழுந்தான் ஆதவன். புன்சிரிப்போடு அவனை அணுகினாள் பொன்மகள்.

"பதற்றம் தேவையில்ல! இன்னமும் மாலை தான். இரவு வர இன்னும் இரு நாழிகைகள் உள்ளன! மழை பொழிவதால் இப்படி இருளடர்ந்து இருக்கிறது" என்றாள். எதுவும் பேசாமல் எழுந்து தனது உடைகளை சரி செய்து கொண்டிருந்தான்.

"ஆதவா! நாம் இருவரும் சில முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும போது தான் நீ உறங்கி விட்டாய்"

"நன்றாயிருக்கிறதே! நீ தான் மலராளுக்குக் குளிகை கொடுக்க சமயமாகி விட்டது என ஓடினாய்! அவளுக்கு என்ன நோய்? என்ன விதமான சிகிச்சை அளிக்கிறேன் என்பதைப் பற்றிக்கூட நீ என்னிடம் கேட்கவில்லை" என்றான் எரிச்சலாக. ஏனோ அவனுக்கு அனைவர் மீது ஆத்திரமும் கோபமும் வந்தது.

"அந்தப் பெண்ணுக்கு மன நோய் என்றும் நீ அவள் ஆழ்மனதில் இருப்பதை கண்டறிந்து குணப்படுத்த முயற்சி செய்கிறாய் என்றும் எனக்குத் தெரியும் ஆதவா! நீ கொடுத்திருக்கும் குளிகைகள் அவளது தாயின் கண்களைக் கட்டுவதற்குத்தான் என எனக்குத் தெரியாதா?"

படுக்கையிலிருந்து எழுந்தவன் அப்படியே மீண்டும் அமர்ந்து விட்டான். அவனால் அவனது செவிகளை நம்பவே முடியவில்லை.

"என்ன சொன்னாய்? மீண்டும் ஒரு முறை சொல்"

"ஒரு முறை என்ன ஆயிரம் முறைகூடச் சொல்லுவேன். ஆனால் நான் முதன் முறை சொன்னதே உனக்குக் கேட்டு விட்டது எனும் போது எதற்காக அதனை திரும்பச் சொல்வது?" என்றாள் பொன்மகள் அமைதியாக.

அவளையே கண் கொட்டாமல் பார்த்தான் ஆதவன்.

"என்ன பெண் இவள்? ஒரு நாழிகை எதுவுமே தெரியாத அறிவிலி போல குளிகைகளைக் கொண்டு செல்கிறாள். மறு நாழிகையே எனக்கு எல்லாம் தெரியுமே என சொல்லிச் சிரிக்கிறாள். இவளை நம்பலாமா? இவள் புத்திசாலியா? இல்லை அறிவிலியா? இவளைக் கணிக்க முடியவில்லையே?" என்று யோசனை செய்தபடி அமர்ந்திருந்தான். எதுவும் சொல்லாமல் குடிலின் கதவைத் திறந்து வெளியில் சென்றாள்.

"அனைவரும் நாளை காலையில் வாருங்கள்! ஆசான் தியானத்தில் இருக்கிறார். எப்போது உணர்வார் எனச் சொல்ல முடியாது! இறை சக்தியோடு அவர் கலந்து விட்டால் பின்னர் நேரம் காலம் என்பதே இல்லை! நாளை காலை இறைவன் அருளால் நீங்கள் வந்தீர்கள் என்றால் எல்லாவற்றையும் சரியாக்கி விடுவார்" என்றார். சில காலடியோசைகள் கேட்டன பின்னர் மீண்டும் அமைதி சூழ்ந்தது அந்த இடத்தில்.

"ஏன் அவர்களை திருப்பி அனுப்பினாய் பொன்மகளே! ஏதேனும் அவசர சிகிச்சை தேவையிருந்தால் என்ன செய்ய?"

"அப்படி எதுவும் இல்ல! அதனால் தான் நாளை வருமாறு கூறினேன்"

அவளை மீண்டும் கண் கொட்டாமல் பார்த்தான் ஆதவன். நாணத்தால் தலை கவிழ்ந்தாள் பொன்மகள்.

"உன்னை என்னால் கணிக்கவே முடியவில்லை பொன்மகளே! ஒரு புறம் எதுவும் அறியாதவளைப் போல குளிகைகளைக் கொண்டு செல்கிறாய். மறு கணம் என் கருத்தைக் கூடக் கேட்காமல் வந்தவர்களை அனுப்புகிறாய்! நீ என்ன வகையான பெண் பொன்மகளே?" என்றான் அவனது குரல் மென்மையாக ஒலித்தது.

"நீ என் கழுத்தில் மங்கல நாண் அணிவிக்கா விட்டாலும் என் மனதளவில் உன்னையே என் கொழுநனாக வரித்து விட்டேன் ஆதவா! நீயும் என்னையே உன் மணவாட்டியாக நினைக்கிறாய் என்பது தெரியும். அதனால் தான் சில உரிமைகளை எடுத்துக்கொண்டேன். இன்று நாம் இருவரும் பேசி விவாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதனால் தான் வந்த நோயாளிகளை போகச் சொன்னேன்"

அவளை நெருங்கி அணைத்துக்கொள்ளப் போனான் ஆதவன்.

"ஆ! இதனால் தான் இத்தனை நாளும் நான் என் மனதை உன்னிடம் சொல்லவில்லை! நமது இலக்கை நோக்கிப்பயணிக்கும் வேளையில் காதலின்பத்துக்கு நீ எங்கே முக்கியத்துவம் கொடுத்து விடுவாயோ என்று அஞ்சித்தான் எனது உணர்வுகளைப் பூட்டி வைத்தேன்." என்றாள். அவளது குரலில் இருந்த உறுதி ஆதவனைக் கட்டிப்போட்டது.

"பொன்மகளே! இலக்கு என்கிறாய் அதனை அடைய வேண்டும் என்கிறாய் ஆனால் நான் அவற்றைப் பற்றி உன்னிடம் பேசியதே இல்லையே?"

பொன்மகள் உள்ளே சென்று சில சுவடிகளை எடுத்து வந்து அவன் முன்னால் இட்டாள்.

"இவை என்ன தெரியுமா? இங்கு வந்த பிறகு நீ சீய்யும் சிகிச்சை முறைகளையும் மந்திர சக்தி என்று சொல்வதையும் பற்றி விவரமாக எழுதியுள்ளேன். பின்னால் வருபவர்கள் கூட இவை மந்திரத்தால் தான் நிகழ்கிறது எனக் கருத வேண்டும் என்பதே என் நோக்கம்" என்றாள்.

அவளை பிரமிப்போடு பார்த்தான் ஆதவன்.

"இவற்றை ஏன் செய்தாய் பொன்மகளே?"

"நமது காலத்துக்குப் பின்னரும் மக்கள் நம்மை இழிவாக நினைக்கக் கூடாது அல்லவா? அதனால் தான் அப்படி எழுதினேன். மேலும் இப்படிச் செய்வதில் தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது. மக்களுக்கும் இவை தான் விருப்பம்.மந்திரங்களில் தான் நம்பிக்கை என்பதை ஆசானின் மற்ற மாணாவ்ர்டளும் உணர வேண்டும் என்றே அப்படி எழுதினேன். " என்றாள்.

முகத்தில் வெறுப்பு தோன்ற அவற்றை தள்ளி விட்டு அமர்ந்தான் ஆதவன்.

"நீ குளிகை கொடுக்கச் செல்வதற்கு முன் நான் ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தேன். அவற்றைப் பற்றி இப்போது என்னால் பேச இயயலவில்லை"

"தேவையில்ல ஆதவா! முதலில் நாம் நம்மிடம் வரும் மக்களின் நன் மதிப்புக்குப் பாத்திரமாவோம். பின்னர் நமது இலக்கை நோக்கி நடப்போம், முதலில் மலராளைக் குணமாக்குவோம்."

அவள் மலராளைப் பற்றிக் குறிப்பிட்டதும் அவனது முகம் மாறியது.

"அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறது எனச் சொல்கிறார்கள் ஆனால் அப்படி ஒன்றும் கிடையாது. அவளது மனதில் ஏதோ ஒரு பிரச்சனை கூடு கட்டி அமர்ந்துள்ளது ஏதோ ஒன்றை நினைத்துக் கலங்குகிறாள் அவள். அது தான் இந்த மனச் சிதைவு."

"எனக்கும் அப்படித்தான் தோன்றியது ஆதவா! அதனால் தான் அவளைக் குறித்து அவளது தோழி சங்குமாலையிடம் கேட்டேன். அதோடு மிகவும் அன்பாகப் பேசி அவளை மயக்கத்துக்கு உட்படுத்தியும் அறிந்து கொண்டேன்."

ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியப்பட்டான் ஆதவன்.

"இன்னும் என்னென்ன திறைமைகளை ஒளித்து வைத்திருக்கிறாய் நீ?" என்று அவளைப் பிடிக்கப் போனான்.

"உன் கைக்கு அகப்படாமல் தப்பும் மந்திரமும் எனக்குத் தெரியும். " என்று சொல்லிச் சிரித்தாள் அவள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top