• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 3: Panneerp poo....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அப்படியே காலம் கடந்து விடாதா என இருந்தது உதயாவுக்கு. அனாலும் தான் வந்த காரியம் அம்மாவின் எரிச்சலூட்டும் பேச்சு இவைகள் அவளை நிகழ் காலத்துக்குக் கொண்டு வந்தன. பாட்டியின் விளக்கத்தில் சில சந்தேகங்கள் வந்தன. அப்பா மேல் தவறில்லை எனத் தோன்றுகிறது என நினைத்தவள் பாட்டியைப் பார்த்துக் கேட்டாள்.

"அப்ப தப்பு அம்மா பேர்லயா?"

"இதுல தப்பு சரின்னு எதுவுமே இல்ல உதி! உங்கம்மா ரொம்ப நல்லவ! தன் விருப்பம் நிறைவேறணும்னு நினைக்குறதை எப்படி தப்புன்னு சொல்ல முடியும்? உங்க நன்மைக்காகத்தானே அவ வேலைக்குக் கூடப் போகாம இருந்தா" என்றாள்.

பாட்டியை நினைத்துப் பெருமையாக இருந்தது.

"சரி சரி! இப்ப பழசைப் பேசி என்ன பயன்? நீ சொல்லு?"

"நான் தான் சொல்லிட்டேனே பாட்டி!"

"உம்! நான் இப்ப சில கேள்வி கேக்குறேன் எனக்கு பதில் சொல்லு! முதல்ல நீ செய்யப்போற தொழில் என்னது? அதை எப்படி ஆரம்பிக்க திட்டம் போட்டிருக்கே?"

"சொல்றேன் பாட்டி! நான் கட்டிடம் கட்டிக்கொடுக்கும் தொழில் செய்யலாம்னு இருக்கேன். வெறும் அப்பார்ட்மெண்ட்னு இல்லாம ஆபீசுகள், ஆஸ்பத்திரி இப்படி எல்லாமே கட்டணும்னு எனக்கு ஆசை."

"வெரி குட்! அதை எப்படி ஆரம்பிக்கப் போற?"

"நான் பொறியியல் முடிச்சதும் ஒரு பெரிய கன்ஸ்டிரக்ஷன் கம்பெனியில ரெண்டு வருஷம் வேலை பார்த்து எல்லா விவரமும் தெரிஞ்சுக்கிட்டேன் பாட்டி! இப்ப என்னால சொந்தமா கம்பெனி ஆரம்பிச்சு நல்லபடியா நடத்த முடியும்னு நம்பிக்கை இருக்கு. உத்யா கன்ஸ்டிரக்ஷன்னு பெயரும் வெச்சிட்டேன். "

"சரிம்மா! அதுக்குப் பணம்?"

"அது தான் பிரச்சனை பாட்டி! என் கல்யாணத்துக்கு சேர்த்து வெச்சிருக்குற பணத்தைக் கொடுங்க பிசினஸ் சூடு பிடிச்சதும் நான் திருப்பிக் கொடுத்துடறேன்னு சொன்னேன். ஆனா அதுக்கு ரெண்டு பேரும் ஒரேடியா மறுத்துட்டாங்க" என்றாள்.

"உம்! சட்டுனு கல்யாணத்துக்கான பணத்தை பிசினஸ்ல போட குடுக்க யாருக்குமே மனசு வராது தான். அதனால நீ அவங்களை தப்பா நினைக்காதே!"

மௌனமானாள் பேத்தி.

"உனக்கு எவ்வளவு பணம் தேவை?"

"பத்து கோடி ரூவாய்க்கு பட்ஜெட் போட்டு வெச்சிருக்கேன் பாட்டி! ஆனா வேலை ஆரம்பிக்க எனக்கு குறைஞ்சது பத்து லட்சம் தேவைப்படும். எங்கிட்ட அஞ்சு இருக்கு. மீதி அஞ்சு தான் தேடி அலையுறேன். கெடச்சிட்டா உடனே வேலையை ஆரம்பிச்சிடுவேன்."

யோசனையில் ஆழ்ந்தாள் பாட்டி. சற்று நேரம் கழித்து மெல்லப் பேசினாள்.

"ஏன் கண்ணு! உன்னால இந்தத் தொழிலை நல்லாச் செஞ்சு முன்னுக்கு வர முடியும்னு நம்பிக்கை இருக்கு இல்ல?"

"நிச்சயம் இருக்கு பாட்டி! இப்பவே சில பேர் எங்கிட்ட காண்டிராக்ட் கொடுக்க ரெடியா இருக்காங்க! ஆனா பணம் தான் பிரச்சனையா இருக்கு"

"நான் தரேன் கண்ணு! ஆனா ஒரு நிபந்தனை"

திடுக்கிட்டாள் உதயா. பாட்டியோடு பேசினால் மன பாரம் குறையும் என்ற நோக்கத்தில் தான் வந்தாளே தவிர பாட்டியே பணம் தருவார் என அவள் எதிரே பார்க்கவில்லை.

"பாட்டி நீங்களா? நீங்க எதுக்கு எனக்கு பணம் தரணும்? இதுக்கு அப்பா ஒப்புக்கவே மாட்டாரு."

"உணர்ச்சி வசப்பாடதே உதி! இது நான் சொந்தமா சேமிச்சு வெச்ச பணம். வயல்ல வந்த வருமானத்தை என் செலவுக்குப் போக நான் சேர்த்து வெச்சதுல ஆறு லட்சம் இருக்கு. அதுல அஞ்சு உனக்குத் தரப்போறேன். அதுக்கு உங்கப்பா பெர்மிஷன் எனக்கு எதுக்கு?"

வாயடைத்துப் போனாள் இளையவள். பாட்டியின் பெருந்தன்மையான மனது அவளை வியப்பில் ஆழ்த்தியது. அதுவும் தவிர பெற்றோர்களே தொழிலுக்குப் பணம் கொடுக்க யோசிக்கும் போது அதற்கும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பாட்டி பணம் தர முன் வந்தது பேராச்சரியமாக இருந்தது. பாட்டி தொடர்ந்தாள்.

"நான் இதை உனக்கு சும்மா தரப்போறதில்ல! கடனும் இல்ல! உன் தொழில்ல நானும் பங்கு தாரர். நீ அத்தனை கணக்கையும் எங்கிட்ட காட்டணும். இன்னும் எத்தனை வருஷத்துல உன்னால இந்தக் கடனை திருப்பிக் கொடுக்க முடியும்னு நீ எல்லாமே எங்கிட்ட உறுதியாச் சொல்லணும்." என்றாள்.

பாட்டியைக் கட்டி பிடித்து முத்தம் கொடுத்தாள் உதயா.

"நீங்க போடுற அத்தனை கண்டிஷனுக்கும் சம்மதம் பாட்டி. உங்களை என்னோட பங்குதாரரா சேர்த்துக்கறேன். என் ஒவ்வொரு அசைவும் உங்களுக்குத் தெரியும் படி பார்த்துக்கரேன். இன்னும் ரெண்டே வருஷத்துல உங்க கடனை நான் கடைச்சுருவேன். இது நிச்சயம்" என்றாள்.

மேலும் சில நாட்கள் தங்கியிருந்து விட்டு அத்தனை விஷயத்தையும் பாட்டியோடு விவாதித்தாள் உதயா. பாட்டிக்கு கட்டிடத்துறையில் இருந்த ஞானம் அவளை வியப்பில் ஆழ்த்தியது. இதைப் பற்றிக்கேட்டபோது பாட்டியின் தந்தை முத்துசாமி இந்தத் துறையில் அந்தக் காலத்திலேயே சிறந்து விளங்கினர் என்று சொன்னாள். மீண்டும் சென்னைக்கு ரயில் ஏறும் போது நிறைந்த உற்சாகமான மனதோடும் பாட்டி கொடுத்த செக்கோடும் பயணித்தாள் உதயா. அவள் மனதில் பல வண்ண கனவுகள் கோலமிட்டன.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top