• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 7: Thazam poo..

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
தாழம் பூ 7:

கோபத்தின் உச்சத்தில் இருந்தாள் உதயா. தனக்கு காண்டிராக்ட் கிடைக்கவில்லை என்பது கூட அவளுக்கு வேதனையாக இருக்கவில்லை. ஆனால் ஒரு பெண்ணை நம்பி எப்படிப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வேலையைக் கொடுப்பது என்று தன் முதுகுக்குப் பின்னால் பேசியது தான் ஆத்திரத்தை மூட்டியது.

என்ன ஒரு நரித்தனம்? ஒரு உயிரையே இறைவன் பெண்ணை நம்பித்தான் கொடுக்கிறான். அபப்டி இருக்க கேவலம் 15 கோடி ரூபாய் கட்டிடத்தை பெண்ணை நம்பிக் கொடுக்க முடியாதாமா? அப்படியாவது அதை நேரிடையாகச் சொனனாரா? எவ்வளவு பொய்? முகமூடி அணிந்த அழகான முகத்தைக் கண்டு ஏமாந்து விட்டேன். அதற்குள் இருக்கும் அசிங்கமான முகத்தை இப்போது தான் தெரிகிறது. என்ன ஒரு ஆணாதிக்க மனப்பான்மை?" என்று பொருமினாள். அவரை அப்படியே விட்டு விட மனம் இல்லை அவளுக்கு. கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

"சார்! உங்களை மாதிரி நடிக்குறவரை நான் பார்த்ததே இல்ல? என்னை நம்பி உங்களால புராஜெக்ட் கொடுக்க முடியாதுன்னா அதை சொல்ல வேண்டியது தானே? அதை விட்டுட்டு ஏன் இப்படி நல்லவர் மாதிரி வேஷம் போட்டீங்க?" என்றாள்.

முதலில் உதயாவை அங்கே எதிர்பார்க்காத வாசு தேவன் முகம் மாறியது. இருந்தும் சாமாளித்துக்கொண்டர்.

"என் அனுமதி இல்லாம என் ரூமுக்கு வெளிய இருந்து ஒட்டுக்கேட்டியா? உன் பொம்பளை புத்தியைக் காட்டிட்ட பார்த்தியா?" என்றார் கோபமாக.

இன்னும் கோபம் தலைக்கேற அவரைப் பார்த்துக் காத்தினாள்.

"ஒட்டுக் கேக்குறது பொம்பளைங்க மட்டும் தானா? ஆம்பிளைங்க இல்லியா? பேசுறதுல கூட எத்தனை ஆணாதிக்க வெறி பிடிச்சுப் பேசுறீங்க? அப்படி நான் ஒட்டுக்கேக்கலைன்னா உங்களை இன்னமும் நல்லவர்னு நம்பிக்கிட்டு நீங்க என்னை மத்தவங்களுக்கு ரெக்கமெண்ட் பண்ணுவீங்கன்னு நம்பிக்கிட்டு உங்க கிட்டப் பேசிக்கிட்டு இருந்திருப்பேன்.எத்தனை அவமானத்துல இருந்து தப்பினேன்? உங்க மாதிரி ஆண்கள் இருக்குறதால தான் பெண்களால அவங்க சாதிக்க நினைச்சதை சாதிக்க முடியல்ல" என்றாள்.

"என்னம்மா ரொம்ப பேசுற? உன்னைப் பார்த்தா பாவமா இருந்திச்சி. அதான் உண்மையைச் சொல்லல்ல! இப்ப என்னங்குற அதுக்கு?"

"எது சார் உண்மை? லேடீசால சுய தொழில்ல சாதிக்க முடியாதுன்னு சொல்றீங்களா?"

"சாதிக்க முடியாதுன்னு நான் சொல்லல்ல! சுய தொழில்னா ஏதோ ஊறுகாய் விக்கிறது. மசாலாப் பொடி விக்கிறது, சாப்பாடு விக்குறதுன்னு இதைத்தான் பெண்களால செய்ய முடியும். அது அவங்களுக்குத் தெரிஞ்ச தொழில். அதை விட்டுட்டு செங்கல் சிமிண்டு கல்லு இதுல போயி விளையாட நினைக்குறியே?"

பொங்கி எழுந்தாள் உதயா.

"நீங்க மட்டுமில்ல! உங்களை மாதிரி நிறையப்பேரு இப்படிப் பேசுறாங்க! பெண்கள்னா சமையக்கட்டு மாத்திரம் தான் இல்ல? இல்லைன்னா அழகு சாதனம் பியூட்டி பார்லர் வைக்கணும். இவ்வளவு தான் நீங்க எதிர் பார்க்குறது. அதுக்கு மேல எந்தப் பெண்ணாவது வந்தாங்கன்னா அவங்களை முன்னேற விடாமத் தடுப்பீங்க அப்படித்தானே?"

"இதைப் பாரும்மா! உன்னை மதிச்சு நான் இத்தனை நேரம் பேசிக்கிட்டு இருந்ததே அதிகம். இடத்தைக் காலி பண்ணு. ரொம்ப அதிகப்பிரசங்கித்தனமாப் பேசுறியே?"

"எது சார் அதிகப்பிரசங்கித்தனம்? நான் காட்டிடத்தொழில்ல ஈடுபடுறதா?"

"ஆமாம்! உங்க அம்மா இல்லை அப்பா பெரிய கம்பெனி வெச்சிருக்காங்களா? இல்லை அவங்க பெரிய பணக்காரங்களா? நீ வெளி நாட்டுல போயி எம் பி ஏ படிச்சிருக்கியா? இது எதுவுமே இல்லாம எப்படிம்மா உன்னை நம்புறது?"

"அம்மா அப்பா தொழிலதிபரா இருந்தா அந்தப் பெண்களால மட்டும் தான் சுயமா தொழில் செய்ய முடியும் அப்படித்தானே நான் எதுக்கு சார் எம் பி ஏ படிக்கணும்? கட்டடம் கட்டத் தேவையான இஞ்சினியரிங்க் படிப்பை நான் படிச்சிருக்கேன். அனுபவமும் இருக்கு. திறமையும் நாணயமும் வாய்ப்புக் குடுத்தாத்தானே தெரியும்? அதை விட்டுட்டு இப்படி அவமானப்படுத்திப் பேசாதீங்க!" என்றாள் கோபமாக.

நாற்காலியிலிருந்துஎ எழுந்து விட்டார் வாசு தேவன்.

"என்னடி ரொம்பத் துள்ளுற? பொம்பளையா லட்சணமா அடக்கமா இருக்க மாட்டியா நீ? நானும் போனாப்போகுது பொம்பளையாச்சேன்னு பார்த்தா என்னையே குறை சொல்றியா நீ? வெளிய போடி! " என்றார். கண்மண் தெரியாமல் கோபம் வர அவரை உற்று நோக்கினாள்.

"நீயெல்லாம் ஒரு மனுஷனா? சீ" என்றாள்.

கோபத்தில் கண்கள் சிவந்து விட்டன வாசுதேவனுக்கு. மிருகவெறி கண்களில் தெரிந்தது. அத்தனை நேரம் மிகவும் நல்ல மனிதரைப் போல காட்சியளித்த அவரது தோல் உரிந்து பயங்கரமான முகம் வெளியில் வந்தது.

"என்னையாடி சீன்னு சொன்ன? உனக்கு என்ன திமிரு? இந்த சிட்டியில நான் யாரு தெரியுமா? என்னோட செல்வாக்கு என்னன்னு தெரியுமா? யாரைப் பார்த்து சீன்னு சொன்ன? உன்னை சும்மா விடுவேன்னு நெனச்சியா? இனி இந்த சிட்டியில நீ எப்படி உன் தொழில்ல முன்னுக்கு வரேன்னு நான் பார்த்துடறேன். என்னை மீறி உனக்கு யாரு காண்டிராக்ட் கொடுப்பாங்க? அப்படியே கொடுத்தாலும் அதனை கெடுக்க எனக்குத் தெரியும். இனி உன் வாழ்க்கை சூனியம் தான். நீயே வந்து எங்கிட்ட மன்னிப்புக்கேட்டு என் கம்பெனியில வேலை வேணும்னு கெஞ்சப்போற. அப்படி அந்த நிலைக்கு உன்னைக் கொண்டு வரல்ல நான் பெரிய எம் டி இல்லடி" என்று கர்ஜித்தார்.

அவரது செக்கரட்டரி ரூபியா ஸ்தம்பித்து நின்ற உதயாவிடம் வந்தாள் காதோடு காதாக "தயவு செஞ்சு வெளிய போயிரும்மா! சார் ரொம்பக் கோவமா இருக்காரு. நான் எப்படியாவது சமாதானப்படுத்தப் பார்க்க்றேன்" என்று சொல்லி அவளை வெளியில் அழைத்து வந்தாள்.

மனம் கோபத்திலும் அச்சத்திலும் கொதிக்க தனது ஃபைலை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள் உதயா. கடுமையான வெயிலில் திக்குத்திசை தெரியாத ஒரு பாலை வனத்தில் தான் நிற்பது போல உணர்ந்தாள் உதயா. இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கவலையில் இலக்கே இல்லாமல் நடக்கத்தொடங்கினாள்.
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Vasudevan pazhi vanga porara? Udhaya ini enna seiya pora? Epadi samalikka pora..Yar udhaya ku support seiya poranga...waiting to read next update..
 




ugina

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,193
Reaction score
1,314
hayooooo pavi yenna panuvaanooooo aathukku udhya yenna patheeladi kudaappaaalll
waiting nxt ud sis
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
thalampoovil irukum poonagam vasudevan........... thangam pol jolikum pithalai:(:(:(:mad:
சுய தொழில்னா ஏதோ ஊறுகாய் விக்கிறது. மசாலாப் பொடி விக்கிறது, சாப்பாடு விக்குறதுன்னு இதைத்தான் பெண்களால செய்ய முடியும். அது அவங்களுக்குத் தெரிஞ்ச தொழில். அதை விட்டுட்டு செங்கல் சிமிண்டு கல்லு இதுல போயி விளையாட நினைக்குறியே?"
enna oru mindset:(:(:(
"நீங்க மட்டுமில்ல! உங்களை மாதிரி நிறையப்பேரு இப்படிப் பேசுறாங்க! பெண்கள்னா சமையக்கட்டு மாத்திரம் தான் இல்ல? இல்லைன்னா அழகு சாதனம் பியூட்டி பார்லர் வைக்கணும். இவ்வளவு தான் நீங்க எதிர் பார்க்குறது. அதுக்கு மேல எந்தப் பெண்ணாவது வந்தாங்கன்னா அவங்களை முன்னேற விடாமத் தடுப்பீங்க அப்படித்தானே?"
well saidView attachment 252sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top