• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyayam 5: Semparuththip poo

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
செம்பருத்திப்பூ 5:

திட்டமிட்டபடி வேலைகளை ஆரம்பித்தாள் உதயா. அன்று ஹோட்டலில் வைத்து அவளது அத்தான் ரவி பேசியது அவளது மனதை புண் படுத்தியிருந்தது என்றாலும் அவனது நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டாள். அது வேறு அவளை டென்ஷனாக்கியது. இருந்தாலும் இன்னும் இரு ஆண்டுகள் இருக்கின்றவனவே அதற்குல் என்னால் நிச்சயம் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு வேலைகளைத் தொடர்ந்தாள். பாட்டி கல்யாணியை முறைப்படி பங்குதாடர் ஆக்க ஒரு கம்பெனி செக்கரட்டரி மூலம் பத்திரம் எழுதி அதனை பதிவு செய்தாள். டைரக்டர்களில் ஒருவராக தனது பாட்டியை நியமித்தாள். அதற்காக பாட்டியின் கையெழுத்தை கொரியர் தபாலில் பேப்பர்களை அனுப்பி வாங்கினாள். பாட்டிக்கு அத்தனை சந்தோஷம். ஆனால் அம்மா தான் ஆதங்கப்பட்டாள்.

"உனக்கு பணம் கொடுத்தாங்கன்னு வயதான கிழவியை டைரக்டர் ஆக்கியிருக்கியே? ஏன் என்னையோ அப்பாவையோ ஆக்குனா என்ன?" என்றாள்.

"ஏம்மா நீ தான் கம்பெனியே ஆரம்பிக்கக் கூடாதுன்னு சொன்ன! இப்ப இப்படி சொல்ற?" என்றாள் உதயா.

"ஆரம்பிக்கக் கூடாதுன்னு சொன்னேன் தான். அதான் நீ என்னையும் மீறி ஆரம்பிக்கப்போறியே? அதோட ரவி கிட்ட பேசி அவன் கிட்டயும் ரெண்டு வருஷம் டயம் வாங்கிட்ட இனி நான் சொல்ல என்ன இருக்கு?"

"அம்மா நீ எந்த மாதிரின்னு புரிஞ்சுக்கவே முடியல்ல"

"நீ புரிஞ்சிக்கவே வேண்டாம். உனக்கு எப்போதும் பாட்டி தானே உசத்தி. நீ அவங்களையே கட்டிக்கிட்டு அழு. எனக்கு என் மக காவ்யா இருக்கா" என்றாள் சிரித்தபடி.

"அப்ப நான் உன் மக இல்லையா? என்னை வாடகைக்கா எடுத்துட்டு வந்தே?" என்றாள் உதயாவும் விடாமல்.

"நீயும் என் மக தான் உதயா. ஆனா உனக்கு ஒரு வயசகும் போது உங்க அக்கா காவ்யாவுக்கு உடம்புக்கு ரொம்ப முடியாமப் போயிரிச்சு. அப்ப அவளுக்கு மூணே வயசு தான். அந்த ஜுரத்துலயும் உடம்பு வலியிலயும் கூட அவ என் சேலையை விடவே இல்ல. அம்மா அம்மான்னு தான் அனத்துனா. அந்த நேரம் எப்போதும் அவ பக்கத்துலயே இருக்க வேண்டி இருந்தது. அதனால உன்னைக் கொண்டு போயி கல்யாணி பாட்டி வீட்டுல விட்டாரு உங்கப்பா. அதுல இருந்து உனக்கு அவங்க தான் எல்லாம்னு ஆயிடிச்சு. நான் பின்னுக்கப் போயிட்டேன்" என்றாள்.

"அம்மா அப்படிச் சொல்லாத! எனக்கு நீயும் முக்கியம் தான். சில சமயம் நீ வெறுப்பேத்தும் போது தான் எனக்குக் கோவம் வருது"

"நான் சொல்ல வேண்டியதை நீ சொல்லதேடி! இன்னி வரைக்கும் உங்க அக்கா நான் சொன்ன ஒரு வார்த்தையைக்கூட மீறினதில்ல. இப்ப நல்லா இருக்கா. ஆனா நீ ஒரு நாளும் நான் சொன்னதைக் கேட்டதில்ல. இதுல உனக்கு உங்க பாட்டி சப்போர்ட் வேற." என்றாள்.

"சரி விடும்மா! உனக்கு அக்கா தான் எப்பவுமே உசத்தி! நான் சொல் பேச்சுக் கேக்காத அடங்காப்பிடாரி போதுமா? இப்ப என்னை விடு. எனக்கு வெளிய போகணும்" என்று சொல்லி தப்பித்து வந்து விட்டாள்.

நகரின் மையத்தில் இருந்த ஒரு ஷாப்பிங்க் காம்பிளெக்சில் ஒரு சிறு அறையை தனது ஆபீசுக்கு என்று வாடகைக்கு எடுத்துக்கொண்டாள். அது கிடைப்பதற்குள் அவள் பட்ட பாடு. ஒரு பெண் ஆபீஸ் போடுகிறாள் என்றதும் என்னென்ன கேள்விகள் கேட்டார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு டூ வீலரில் செல்லும் போது சிறிய ஆபீஸ் அறை காலியாக உள்ளது என்ற போர்டைப் பார்த்து உள்ளே நுழைந்தாள் உதயா. கொஞ்சம் நெருக்கமாக இருந்த போதிலும் நகரின் மையத்தில் இருந்ததால் அந்த இடத்தையே முடித்து விடலாம் என தீர்மானித்துக்கொண்டாள். அந்த ஷாப்பிங்க் காம்பிளெக்சின் உரிமையாளர் அவளோடு பேசியனர். பெண் என்றதும் எடுத்த எடுப்பிலேயே மறுத்தார்.

"தனியா சின்னப்பொண்ணுங்களுக்கு நான் வாடகைக்கு தரதில்ல!" என்றார்.

"எதுனால சார் அப்படி? ஏன் என்னால நீ கேக்குற வாடகை தர முடியாதுன்னு நினைக்கறீங்களா?"

"அது இல்லம்மா! நீ என்ன ஆபீஸ் போடுறியோ? நாளைக்கே போலீஸ் பிரச்சனை வந்தா எனக்குத்தான் ஆபத்து நீ முதல்ல இடத்தைக் காலி பண்ணு" என்றார்.

அவர் எதனை உத்தேசித்துச் சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது உதயாவால். கோபம் தலைக்கேறியது.

"என்ன சார் மனசுல நெனச்சுக்கிட்டு பேசுறீங்க நீங்க? என்னைப் பார்த்தா அந்த மாதிரி பொண்ணாத் தெரியுதா? நான் இஞ்சினியரிங்க் முடிச்சிருக்கேன். சொந்தமா கன்ஸ்டிரக்ஷன் பிசினஸ் செய்யலாம்னு தான் ஆபீஸுக்கு இடம் பார்க்குறேன். " என்றாள்.

"ஏன்மா? இதை நான் எப்படி நம்புறது?" என்றார் எகத்தாளமாக.

"ஏன் சார் இப்படி இருக்கீங்க? பொண்ணுங்கன்னா உடனே அந்தத் தொழில் தானா? இல்லைன்னா சின்ன லெவெல்ல தான் செய்யணுமா? எங்களாலயும் பெரிய லெவெல்ல பிசினஸ் செய்ய முடியும் சார்! முதல்ல பெண்களை மதிக்கக் கத்துக்கோங்க! பொண்ணுங்கன்னா வெறும் உடம்பு மட்டுமில்ல. அதுல மனசு அறிவு திறமை எல்லமே இருக்கு. அதை தெரிஞ்சுக்குங்க" என்று சொல்லி விட்டு திரும்பிக்கூடப் பார்க்காமல் வந்து விட்டாள்.

அந்த முதலாளிக்கு என்ன தோன்றியதோ அவளைக் கூப்பிட்டார்.

"அம்மா! நீ உன் சைடுலருந்து பேசுற. நீ சொல்றதெல்லாம் கரெக்டு தான். ஆனா எங்க கண்ணோட்டத்துலயும் நீ பார்க்கணும்மா! எத்தனை பேர் பொய் சொல்லி ஏமாத்தி தப்பான தொழில் நடத்தறாங்க தெரியுமா? அதுக்காகத்தான் கேட்டேனே தவிர உன்னை தவறா சொல்லல்ல! அதுக்குள்ள கோவிச்சுக்கிட்டுப் போறியேம்மா?" என்றார் தன்மையாக.

அவளும் சற்றே சமாதானமானாள். பிறகு அவரது ஆபீஸ் அறைக்குப் போய் அமர்ந்து கொண்டு பேசினார்.

"இதைப்பாரும்மா! இது பிசி எடம். இங்க நிறைய ஆபீசுங்க இருக்கு. அதுல நீயும் ஆபீஸ் போடுறேன்னு சொல்ற. நீ பார்க்கப் போறதோ கட்டிட வேலை. அதுக்கும் இந்த ஆபீசுக்கும் பொருந்துமா? நீ பாட்டுக்கு சிமிண்டு சாக்கு செங்கல் லோடை இங்க இறக்குனா என் பில்டிங்க் என்ன ஆகும்?" என்றார்.

சட்டென சிரித்து விட்டாள் உதயா.

"என்னம்மா சிரிக்குற?"

"சிரிக்காம என்ன சார் செய்ய? நீங்க எனக்கு தரப்போற எடம் மொத்தமே பத்துக்கு ஆறு தான். அதுல நான் எங்க இருந்து சிமிண்டு மூட்டையையும் செங்கல்லையும் வைக்க முடியும்? அதை நெனச்சு தான் சிரிப்பு வந்தது." என்றாள்.

"ஹி ஹி! அது சரி தான். இருந்தாலும் நான் முதல்லயே சொல்லிட்டேன். அப்புறம் சொல்லல்லைன்னு சொல்லக் கூடாது."

"சரி சார் வாடகை எவ்வளவு? அட்வான்ஸ் எவ்வளவு தரணும்? எனக்கு என்னென்ன வசதி செஞ்சு தருவீங்க? எல்லாத்தையும் சொல்லுங்க"

"வாடகை 20 ஆயிரம் ரூவா. அட்வான்ஸ் 2 லட்சம் கொடுத்துடணும். அப்புறம் டேபிள் சேர் இதெல்லாம் நீ தான் கொண்டு வரணும்." என்றார்.

"சார் 20 ஆயிரம் ரொம்ப ஜாஸ்தி. அதுக்கு நீங்க எந்த வசதியும் செஞ்சு தர மாட்டேன்னு சொல்றீங்களே?

"இங்க எல்லாரும் அப்படித்தானே இருக்காங்க? நீ வேற என்ன வசதி கேக்குற?"

"கார்டுபோர்டு வெச்சு ஒரு சின்ன அறையைத் தடுத்துக்குடுங்க. அதோட ஒரு ரோலிங்க் சேரும் சில நாற்காலிகளும் குடுங்க. இதுக்கு நீங்க சரின்னா நான் நாளைக்கே கொண்டு வந்து அட்வான்ஸ் பணத்தைக் கொடுத்துடறேன்" என்றாள்.

"ஏயப்பா! நீ பிசினஸ்ல நல்லா வருவேம்மா! எங்கிட்டயே இப்படி பேசுறியே? சரி உனக்காக நான் செஞ்சு தரேன். ஆனா நீ காலி செஞ்சு போகும் போது அத்தனையும் அப்படியே இருக்கணும். உடைஞ்சு இருந்தா அட்வான்சுல கழிச்சுக்கிட்டு தான் தருவேன். "

"சார் இப்பத்தான் நான் பிசினசே ஸ்டர்ட் பண்ணப் போறேன். அதுக்குள்ள ஏன் காலி செய்யுறதைப் பத்திப் பேசுறீங்க?"

"நீ சொந்தமா இடம் வாங்கி அங்க ஆபீஸ் போடுறதைத்தான் நன் சொன்னேன். சரி உனக்கு நான் சொன்ன கண்டிஷன் சம்மதமா?"

"உம் சம்மதம்" என்று சொல்லி மறு நாளே சென்று அட்வான்ஸ் கொடுத்து விட்டு வந்தாள். கையில் இருந்த பணம் கணிசமாகச் செலவாகி விட்டது. இனி வரும் நாட்களை எப்படி சமாளிப்பது? ஆட்களை வேலைக்கு எடுத்தால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமே? காண்டிராக்ட் சீக்கிரமே கிடைக்கவில்லையென்றால் என் கதி என்ன? என்று பலவாறு எண்ணிக் கலங்கினாள்.

பாட்டியிடம் தன் மன குழப்பங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டாள். மனசு விட்டுப் போகாதே செல்லம் எல்லாமே நல்லா நடக்கும் என்று சொல்லி நம்பிக்கையூட்டினார் பாட்டி. கம்பெனியின் பெயரை பதிவு செய்தாயிற்று. அதற்கும் கொஞ்சம் பணம் செலவானது. ஆபீசில் வேலை செய்ய ஆட்களைத் தேடினாள். அனைவரும் 15,000 சம்பளம் கேட்டனர். அவளால் இப்போது அத்தனை கொடுக்க முடியாது என்று தீர்மானம் செய்து கொண்டு கல்லூரி மாணவர்களை பார்ட் டைமாக வேலை பார்க்கச் சொல்லலாம் என நினைத்து அதனை நெட்டில் போட்டாள். கூடுமானவரையில் பெண்களாகப் பார்த்து வேலைக்கு வைத்துக்கொண்டால் நல்லது என நினைத்தாள். அப்படி நெட்டில் பார்த்து விட்டு சிலர் வந்தனர். ஆனால் ஒருவரையும் அவளுக்குப் பிடிக்கவில்லை. சிலருக்கு வேலை எதுவும் தெரியவில்லை இன்னும் சிலருக்கு வேலை நேரம் ஒத்து வரவில்லை என்று வேண்டாம் எனச் சொல்லி விட்டாள்.

என்ன இது? ஆரம்பத்திலேயே இத்தனை தடங்கல் வருகிறது என நினைத்தவள் மற்ற வேலைகளில் கவனம் செலுத்தினாள். தான் முன்னால் வேலை செய்த போது கிடைத்த சில பெரிய கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கும் நபர்களுடன் ஃபோன் செய்து பேசினாள். அதில் ஒரு சிலர் ஆபீசுக்கு நேரில் வருவதாக இருந்தால் பேசுகிறோம் என்றனர். இன்னும் சிலர் ஒரு பெண்ணை நம்பி எப்படி காண்டிராக்ட் கொடுப்பது என யோசித்தனர். சிலர் அவமானப்படுத்தினர். எல்லாவற்றையும் பொறுமையாகக் கையாண்டாள். முதலில் யார் யார் ஆபீசுக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்தாள். அதில் மூன்று பெர் இருந்தனர். ஒருவர் சிறியதாக பிசினஸ் செய்து வருபவர். அவரை கடைசி முயற்சியாக வைத்துக்கொள்ளாம் என முடிவு செய்து கொண்டாள். முதலில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முக்கியமான அதிகாரி இருந்தார். அவர் நம்பிக்கையாகவே பேசினார். அவர் பெயர் வாசு தேவன் பெண்களை மிகவும் ஊக்குவிப்பராக இருந்தார். அவரை முதலாகவும், இரண்டாவதாக ஏஜென்சி ஒன்று வைத்திருந்த ராஜ கோபாலையும் போய்ப்பார்ப்பது என முடிவு செய்து கொண்டு செயலில் இறங்கினாள்.
 




Sindu_rr

மண்டலாதிபதி
Joined
Jan 27, 2018
Messages
202
Reaction score
651
Location
Mum
There is no connectivity between chapter 4 and 5
In chapter 5 you begin with Ravi.... and as far as I remember Ravi is never introduced in the previous chapters...
 




Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
Yes! he was introduced Madam. In the second chapter Uthaya's mother talks about her brother's son Ravi. THey are planning to marry off both of them. This was said in a line. Sorry for not expanding his episode. Because the narration flow might get spoiled and readers might feel bored. That is why a brief intro about Ravi.
 




Sindu_rr

மண்டலாதிபதி
Joined
Jan 27, 2018
Messages
202
Reaction score
651
Location
Mum
Yes! he was introduced Madam. In the second chapter Uthaya's mother talks about her brother's son Ravi. THey are planning to marry off both of them. This was said in a line. Sorry for not expanding his episode. Because the narration flow might get spoiled and readers might feel bored. That is why a brief intro about Ravi.
Thanks for the detailed reply
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
nallapathivusis,semparuthi idhal pol pala tharapatta makkalin sancippu nice(y)(y)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top