• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

AVAV 13 to FINAL & EPILOGUE

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
அத்தியாயம் - 13



குழந்தைகளின் உலகம் மிக அழகானது, சுவாரசியமானது. அதில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு கிடையாது ஜாதி மத மாச்சரியங்கள் கிடையாது, உள்ளொன்று வைத்து புறமொன்று பேச அவர்களுக்கு நிச்சயமாய் தெரியாது. அவர்கள் தேசம் கடந்தவர்கள். உள்ளதை அப்படியே எடுத்துக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் எவருமில்லை. பூக்கள் பூக்கும் நந்தவனத்தில். மல்லிகையை ரோஜா பழிக்குமா என்ன?., அந்நந்தவனத்தில் நங்கையின் அனுபவங்கள் அழகானவை... சுவாரஸ்யமானவை..., விவகாரமானவை...சில திகிலானவை.



ஒரு தமிழ் குழந்தை ஏழு வயதே நிரம்பிய பிள்ளை இவளது கிரீச்சில் சேர்ந்தது. பேச்சுவாக்கில், மங்கை தனக்குத் தமிழ் தெரியும் என்று சொல்லிவிட, "இவன் யு.கே.ஜி. வரைக்கும் தமிழ் படிச்சான். இப்போ இந்த ஒன்ற வருஷமா நான்தான் நேரம் கிடைக்கும்போது சொல்லித்தரேன். ஃப்ரீயா இருக்கும்போது கொஞ்சம் தமிழ் வேர்ட்ஸ் டிக்டேட் பண்ணுங்க ப்ளீஸ்", என்று குழந்தையின் அம்மா சொல்லிவிட்டு சென்றிருந்தார்.



அவ்வாறு ஒருநாள் அக்குழந்தையை தமிழ் வார்த்தைகளை எழுதச் சொல்லும் போது, நங்கை கூறிய வார்த்தை பாராட்டு. அப்பிள்ளை பா எழுதி, பிறகு ரா-வையும் யோசித்து எழுதியது, அதற்கு மேல் அவனுக்குத் தெரியவில்லை. எழுதுகிறானா என்று பார்த்துக் கொண்டிருந்த நங்கை, அவன் திருதிருவென முழிப்பதைப் பார்த்து, 'ட்' போட்டு 'டு' போடு என்றாள். பிறகு அ டு ஃ எழுது என்றாள்.



நந்தகுமார் என்ற அந்த சிறுவனும் சட்டென எழுதி முடித்து இருந்தான். "இவ்ளோ சீக்கிரம் எழுதிட்டானா?", யோசித்த நங்கை அவன் எழுதியதை சரிபார்க்க....., அப்பிள்ளையோ, "பாரா it 2" என்றும், "அ 2 ஃ" என்றும் எழுதியிருந்தான். அதை பார்த்த நங்கை முதலில் திகைத்தாலும்.... பின்னர் சிரிக்க ஆரம்பித்தாள். ட், டு என்று தமிழில் எழுதச் சொன்னால், அவன் ஆங்கிலத்தில் it-டையும், எண்களின் இரண்டையும் எழுதுவான் என்று கனவா கண்டாள்? அதையும்விட அ முதல் ஃ வரை எழுதச் சொன்னால்.... அ 2 ஃ என எழுதி, நங்கைக்கு "இப்பவே கண்ண கட்டுதே", என்ற உணர்வை கொடுத்தான் அந்தப் பிள்ளை.



ஒரு சீக்கிய பெண் பிள்ளை, பெயர் குர்ஷரன் கவுர், கிரீச்-ல் உள்ள ஒரு இஸ்லாமிய குழந்தையுடன் விளையாடுவதை வழக்கமாகிக் கொள்ள, அவள் அடிக்கடி சொல்லும் "இன்ஷா அல்லா", குர்ஷரனையும் தொற்றிக் கொள்ள... அது வீட்டில் பிரச்சனையை உருவாக்கி... விளைவு? மறுநாள் ..பெற்றோர், அவர்களது பெற்றோர் என அனைவரும் நேராய் நங்கையிடம் வந்து நின்றனர். அனைவரையும் அமர வைத்து என்ன விஷயம் என்று கேட்டாள்.



"நீங்க ஏன் முஸ்லிம் குழந்தைங்களோட எல்லாம் என் பிள்ளைய பழக விடுறீங்க, பாருங்க அவங்க பழக்கமும் இவளுக்கு வருது. வீட்ல முட்டி போட்டு தொழுகை பண்றா, இன்ஷா அல்லா-ன்னு எப்ப பாரு சொல்றா", என அவர்கள் புகாராய் சொல்லிக் கொண்டிருக்க.., நங்கையோ அப்பிள்ளையை பார்த்துக் கொண்டிருந்தாள். சற்றே வெளிறிய முகத்துடன், அன்னையின் கை பிடித்துக்கொண்டு அவரருகில், கொஞ்சம் பயத்துடன், புருவம் சுருக்கி உதடு பிதுக்கி அழுகத் தயாராக நின்றிருந்தாள், அச்சிறுமி.



நேரே அவள் அருகில் சென்று, "நீ ஷெரின் பண்ற மாதிரி வீட்ல நமாஸ் பண்ணினயாடா?", என்று கேட்க, அக்குழந்தை... அண்ணார்ந்து நங்கையைப் பார்த்து, "ம்ம்.." என்றது. அதற்குள்ளாகவே கண்களில் நீர் திரண்டு அழவே ஆரம்பித்தது.



"நோ பேபி அழக்கூடாது. இன்ஷா அல்லாவும் சொன்னீங்களா?", என்று முட்டி போட்டு அப் பிள்ளையின் உயரத்துக்கு குறைந்து, குழந்தையின் கைபிடித்து அவளருகே இழுத்து வைத்துக்கொண்டு கேட்க.., சற்று நம்பிக்கை வரப்பெற்ற அப்பிள்ளை இப்பொழுது அழுகையை நிறுத்தி இருந்தது. தேம்பிக் கொண்டே, "ம்ம்", என மண்டையை உருட்டியது.

"வெரி குட். அதோட அர்த்தம் என்னன்னு ஷெரின் சொன்னாளே, அத அம்மா கிட்ட சொல்லலையா?, சொல்லியிருந்தா உன்னை திட்டி இருக்கமாட்டாங்க., சொல்லுங்க அதோட அர்த்தம் என்ன?", என்று நங்கை கேட்டாள்.



"GOD இஷ்டப்படி", மிகச் சுருக்கமாய் அழகாய் கூறியது அக்குழந்தை. ஆம் அதன் அர்த்தம் அவ்வளவுதான்.. அப்பெண்ணிற்கும் (ஷெரின்) அவ்வாறே பயிற்றுவிக்கப்பட்டிருந்தது.



"இப்போ சொல்லுங்க இன்ஷா அல்லா சொல்றதுல என்ன தப்பு இருக்கு?", என்று வந்திருந்த பெரியவர்களைப் பார்த்து கேட்டாள்.



பதிலளிக்க வார்த்தை ஏது?



"இவங்க சின்ன குழந்தைங்க, அவங்களுக்குள்ள இப்பவே மதத்தைப் புகுத்தி பிரிச்சு விட்டுடாதீங்க ப்ளீஸ், அல்லாஹ்-ன்னா உங்க பொண்ணுக்கு உங்க குருமார்கள் தான் ஞாபகம் வருவாங்க, நமாஸுக்கும், நம்ம பண்ற நமஸ்காரத்திற்கும் அதிக வித்தியாசமில்லை. விளக்கம் போதும்ன்னு நினைக்கிறேன்", பெரிய விளக்கம் கூறி முடித்தாள் நங்கை நல்லாள்.



இன்னொரு குழந்தையின் விஷயம்... சற்று விவகாரமானது. பத்து வயது நிரம்பிய பெண் பிள்ளை, சற்றே போஷாக்கான பிள்ளையும் கூட. , வளர்ச்சியும் சற்று அதிகமே. பள்ளி முடிந்து மூன்று மணிக்கெல்லாம் வரவேண்டிய குழந்தை, சில நாட்களாய் தொடர்ந்து அரை மணி நேரம் தாமதமாக வருவதால்., காரணம் என்ன? என்று கேட்டாள் நங்கை. அச்சிறுமி தினம் ஒரு காரணம் கூற..., நங்கைக்கு சந்தேகம் வந்தது.



அவர்கள் குடியிருப்பில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது நங்கையின் நினைவிற்கு வர.... இவளது விடுதியின் முன் நடந்த பதிவுகளை காண வேண்டும் என்று குடியிருப்பு கண்காணிப்பாளரை கேட்டாள். அவரும் இவள் கேட்ட பதிவுகளைத் தர, பார்த்த நங்கைக்கு அதிர்ச்சி... அச்சிறுமி, அவளது கார் ஓட்டுனருடன் சற்று எல்லைமீறி பழகுவது தெரிந்தது. அவனும், அச்சிறுமிக்கு புத்திமதி சொல்லாமல், அப்பிள்ளையின் இனக்கவர்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருந்தான்.

நங்கை இதைப்பார்த்து வெலவெலத்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.



உடனடியாக அவளது அம்மாவினை தொடர்பு கொண்டு, அச்சிறுமி பள்ளிக்கு சென்றிருந்த நேரத்தில் வந்து பார்க்குமாறு கூறியிருந்தாள். அப்பெண்மணியும் வந்தார். மேற்படி விஷயங்களைக் கூற.... முதலில் அவ்வாறெல்லாம் தவறான காரியங்களை மகள் செய்யமாட்டாள் என்று அறுதியிட்டுக் கூறியவர், நங்கை கேமரா பதிவினை காண்பிக்க... அமைதியானார்.



மகளை கண்காணிப்பதாகவும், இயன்றால் வேறு ஊருக்கு மாறுதலாகி போவதாகவும் சொன்ன அந்த அன்னை, மனதார நன்றி கூறி விடைபெற்றார். ஆனால், இந்த விவரங்கள், அந்த ஓட்டுனருக்கு எப்படியோ தெரிந்து, நங்கையின் மீது வெறியானான். அவளை எவ்விதத்திலாவது பழி வாங்க நேரம் பார்த்துக் காத்திருந்தான். முன்னேற்பாடாக, அருகிலேயே ஒரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து, அங்கே வேன் ஓட்டுநராக பணி புரியும் அவனது நண்பனையும் குடியமர்த்தினான்
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
திரிவிக்கிரமன், நங்கை பகிரும் தினப்படி நிகழ்வுகளுக்கு பெரிய விசிறியாகி இருந்தான். அவனுக்கு குழந்தைகளின் உலகம் புதிதுதானே? கூடவும், அவற்றை நங்கை விவரிக்கும்போது, அவள் முக பாவங்களில், உடல் மொழியில் மழலைகள் செய்வதை தத்ரூபமாய் காண்பிப்பாள். அதில் கவரப்பட்ட அவன், ஒரு மாலை வேளையில், அக்குழந்தைகளை, அவர்கள் அடிக்கும் கொட்டத்தினை நேரே சென்று காண்போம் என நினைத்து... அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குச் செல்லாமல் நேரே அவளது க்ரீச்சிற்கு சென்றான். எப்படியும் வீட்டில் தனியாகத்தான் இருக்க வேண்டும், நங்கை இரவு ஏழுமணிக்கு அல்லவா வீடு திரும்புவாள்? எனவே தனியாக இருப்பதை விட பிள்ளைகளோடு இருப்பது மேல் என நினைத்தான். தவிர, ப்ரஜன் அவனிடம் பகிர்ந்த ஒரு விஷயத்தை நங்கையிடம் கூறி, எச்சரிக்கை செய்ய வேண்டியிருந்தது



அங்கே அவன் கண்டது....பத்து பதினைந்து பிள்ளைகளோடு பிள்ளையாக, அவனது மனைவி மைதானத்தில் கபடி ஆடிக்கொண்டிருந்தாள். ஒரு புறம், சற்று வளர்ந்த பிள்ளைகள்,.. தோராயமாக ஒன்பதிலிருந்து பனிரெண்டு வயதுவரை இருக்கும், இன்னொரு புறம் நங்கை மற்றும் ஆறிலிருந்து பத்து வயதுவரை இருந்த பிள்ளைகள், அவர்களுக்கு ஆட்டத்தினை பயிற்றுவித்தபடி.... மைதானத்தை இரண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். காரில் அமர்ந்திருந்தவனுக்கோ, தூசியும், வியர்வையுமாய் டிராக் பேண்ட்.. டீ ஷர்ட்டில் விளையாடிய நங்கை .. பேரழகியாய் தெரிந்தாள். காரணம் வேறொன்றுமில்லை... அவளுக்கு பிடித்த உலகத்தில் அவளது வேலையை அமைத்துக் கொண்டிருந்ததால், அகமும் முகமும் மலர்ந்திருந்தாள் நங்கை நல்லாள்.



பார்த்த அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.. உடனடியாக வீடு திரும்பி, அவனும் விளையாட்டு உடைக்கு மாறி, மைதானத்துக்கு வந்து சேர்ந்தான். விளையாட்டில் மிக கவனத்துடன் இருந்த நங்கை, இவனை கவனிக்கவில்லை. "நானும் விளையாட வரலாமா?", என்று த்ரிவிக் கேட்க, திடீரென்று கணவனின் குரல் கேட்டதில், தூக்கிவாரிப் போட திரும்பியவள்... அவனது சிரிப்பான முகத்தைக் கண்டு... உள்ளார்ந்து சிரித்து... "தாராளமா", என்றாள்.



நங்கையின் எதிரணியில் ஒருவனாக சேர்ந்தவனுக்கு, அடுத்து வந்த ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.. பிள்ளைகளுக்கும், நங்கைக்கும்தான்... விளையாட்டு முடிந்த பின்.. த்ரிவிக்ரமன், நேரே நங்கையிடம் வந்து, வியர்வையை துடைத்தவாறு "தேங்க்ஸ் டியர், எப்போ இவ்வளவு ரிலாக்ஸ்சா நான் விளையாடினேன்-ன்னு ஞாபகத்திலேயே இல்லை.. ஐ தரொலி [thoroughly] என்ஜாய்ட். இனி டைம் கிடைக்கும்போதெல்லாம் வருவேன்.. கட்டாயம் என்னையும் கேம்-ல சேத்துக்கணும்.", என்றான்.



"ஹ ஹ .. நிச்சயமா, நம்ம கேம்ஸ் டீச்சர் கிட்ட சொல்லி வைக்கிறேன், நீங்க விளையாட வருவீங்கன்னு... இன்னிக்கு அவங்க லீவ்.. அதான் நானே கிரவுண்ட்க்கு வந்துட்டேன்."

என்ற நங்கைக்கு, சிறு பிள்ளைபோல பேசிய, விளையாடும்போது சற்றும் கோடு தாண்டாத, குழந்தைகளோடு குழந்தையாக... அவர்களுக்கும் வாய்பளித்து, ஊக்குவித்து விளையாடிய கணவனை மிகவும் பிடித்திருந்தது.



அவள் கூறாமல் விட்டது, விளையாட்டு ஆசிரியை இருந்தாலும் நங்கை அடிக்கடி பிள்ளைகளோடு விளையாடுவது வழக்கம், என்பதைத்தான். கணவன் மனைவி இருவரும் ஆடி முடித்த களைப்பில் வீடு திரும்பினர். இன்றைய நிகழ்வு அவர்களது அன்னியோன்னியத்தை மேலும் அதிகமாக்கியது.



வீடு வந்து சேர்ந்த இருவரும் வியர்வை தூசு போக குளித்து வந்து.. இரவு உணவை எடுத்துக் கொண்டனர். பின்னர் படுக்கைக்கு சென்ற இருவருக்கும் அவரவர் யோசனை. நங்கை, த்ரிவிக்-கை குறித்து யோசனை செய்து கொண்டிருந்தாள். அவனது பிள்ளைப் பருவம் குறித்து, வைதேகி கூறியதை மனம் அசை போட்டது. படிப்பில் தீவிரமாக இருந்ததால், விளையாட்டு என்பதை, த்ரிவிக்...கிட்டத்தட்ட மறந்திருந்தானாம் அப்போது. அவ்வாறு படித்ததால் தான், இந்த நிலையை அடைந்துள்ளான், என்றும் அவர் கூறியிருந்தார்.



" நங்கை...", என்று த்ரிவிக் கூப்பிட, " ம்..சொல்லுங்க", என்றவாறே அவனை நோக்கித் திரும்பினாள். "நம்மகிட்ட franchise க்கு கேட்டவங்கள்ள ரெண்டு மூணு பேரு, உன்மேல ரொம்ப கோவமா இருக்காங்க, எப்படியாவது நம்ம க்ரீச்சை, மூட வைக்கணும் ன்னு ப்ளான் பண்றாங்களாம். ப்ரஜன் காதுக்கு நியூஸ் வந்தது, கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கச் சொன்னான்.", பேசியவன் குரலில் கவலை இருந்தது.



" ம்ம்... என்ன பண்ணிடுவாங்க?", கலவரமாகி கேட்டவள், "வேணும்னா அப்பாகிட்ட சொல்லட்டுமா? இல்ல சின்னண்ணனை இங்கே வரச் சொல்லட்டுமா? அவர் ஒருத்தர் இருந்தா பத்து பேருக்கு சமம்", கணவனிடம் ஆலோசனை கேட்டாள்.



"அதெல்லாம் தேவையில்லை, இப்போதைக்கு க்ரீச்சுக்கு செக்யூரிட்டியை டைட் பண்ண சொல்லி இருக்கான். நீயும் எங்க போறதா இருந்தாலும் தனியா போக வேண்டாம், டிரைவர் போட்டுடறேன், ஓகே?", என்றான் த்ரிவிக்.



இன்னமும் அவள் முகத்தில் பயம் தெளியாததை கண்டு, "உங்க சின்ன அண்ணனை வேணா வர சொல்லு, வரும்போது, முத நாள் எனக்கு ஒரு டிரிங்க் கொடுத்தாரு, சுத்தமா ஸ்மெல் இல்லாத ஏதோ ஒன்னு, அத குடிச்சிட்டு தான்... உன்கிட்ட பேசி... என்ன பத்தி சொல்லி...நமக்குள்ள அண்டர் ஸ்டாண்டிங் வந்ததக்கு அப்புறம்தான், ஃபர்தரா..... மூவ் பண்ணனும்னு நினைச்சிட்டிருந்தேன். பட், அது உள்ள போன உடனே... என் கண்ட்ரோல் எல்லாம் போச்சு.. ", எப்போதும்போல இடதுகையால் தலைமுடியை அளைந்தவன், நீளமாய் பெருமூச்சு விட்டபடி, தனக்குத்தானே பேசுவதுபோல சன்னமாக, "அன்னிக்கே பேசி இருக்கணும் உன்னையும் பேசி வச்சிருக்கனும்...ம்ப்ச்", என்று தொடர்ந்தவன், சட்டென்று நங்கையைப் பார்த்து, பளிச்சென சிரித்து, "பட் அந்த டேஸ்ட் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அவர் வந்தா எடுத்துட்டு வர சொல்லு, ஓகே?", என்று முடித்தான்.

அதுவரை அவனை கண் இமைக்காமல் பார்த்து இருந்தவள், இப்போது முறைத்தாள். "ம்ம்ம்....அவர் வரவே வேண்டாம்.... நீங்க சொன்னதையே பண்ணிடலாம்", விரைப்பாய் பதிலளித்து.... ரஜாய்க்குள் புகுந்து கொண்டாள்.

த்ரிவிக்கும், குறு நகையுடன் உறங்க ஆரம்பித்தான்.

+++++++++++++++++++++++++

"கள்வன் பெரிதா காப்பான் பெரிதா?", என்று கேட்டால், கள்வனே பெரிது என்பர். அச்சொலவடைக்கு ஏற்றாற்போல்... அதிகப் படுத்தப்பட்ட பாதுகாப்பையும் மீறி...நங்கையின் க்ரீச்சில் இருந்து, ஒரு பெண் பிள்ளை காணாமல் போயிருந்தாள். அச்சிறுமியின் பெயர் குர்ஷரன் கவுர்.. ஆம் இன்ஷா அல்லாஹ், என்று வீட்டில் கூறிய அதே குழந்தைதான்.
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
அத்தியாயம் - 14



அது ஒரு மிக சாதாரணமான நாளாகத்தான் விடிந்தது நங்கைக்கு. அலுவலக வேலையாய் த்ரிவிக் இரண்டு நாள் வெளியூர் சென்றிருந்தான். நங்கையை ஜாக்கிரதையாக இருக்கும்படி குறைந்தது நூறு முறையேனும் சொல்லியிருப்பான், "ரெண்டு நாள்ல உலகம் ஒன்னும் புரண்டுடாது, சுத்தி இத்தனை பேர் இங்க இருக்காங்க, பாத்துக்கறேன், டென்ஷனில்லாம போயிட்டு வாங்க", என்று தேறுதல் சொல்லி அவனை அனுப்பவேண்டியதாய் ஆனது.



நேற்று ஒரு நாள் கணவன் இல்லாமல், வீடே வெறிச்-செனத் தெரிந்தது நங்கைக்கு. இதற்கு முன்பும் வேறு ஊர்களுக்கு/ நாடுகளுக்கு செல்வான்தான். ஆனால், அப்போது இருவருக்கிடையே பேச்சுக்கள் மிகக் குறைவே, ஏன் பேசியதே இல்லையென கூறலாம். இப்போது அப்படியில்லையே? இருவருமே அன்றாட நிகழ்வுகளைப் பேசி,அவர்களது உணர்வுகளை பகிர்ந்து பழகியிருந்ததால், இந்த தனிமை முகத்தில் அறைந்தது.



த்ரிவிக் -கிற்கும் அப்படித்தான் என்பது அவனிடமிருந்து அரைமணிக்கு ஒருமுறை வந்த அலைபேசி அழைப்பில் தெரிந்தது. ஒன்றுமில்லாத "எழுந்துட்டியா?", "காஃபி குடிச்சியா?", போன்ற உப்பு சப்பில்லாத கேள்விகள்... நங்கை மனதுக்குள் "உன்னை யாருடா டூருக்கு போகச் சொன்னது?", என்று வைதாள்.



கடனே என்று எழுந்து, மெதுவாக அவளது வேலைகளை செய்தவள்... சமைக்கவும் வீடு துடைக்கவும் வேலையாட்கள் வந்து விட, பத்தி நிமிடத்தில் காஃபியும் வந்தது. குடித்த பின், குளிப்பதற்கு அவர்களது அறைக்குச் சென்றாள்.



குளித்து முடிக்கக்கூட இல்லை. மீண்டும் த்ரிவிக்-கின் அழைப்பு வர, அவசரமாக பாத் ரோபை [bath robe], கட்டிக்க கொண்டு வெளியே வந்தாள். அவனது இப்போதைய கேள்வி "குளிச்சிட்டியா?", "சாப்டியா?", பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு பதிலளித்தவள்.....



"என்ன டிரஸ் போட்டிருக்க?", என்ற அவனது கேள்வியில் கடுப்பானாள், "என்ன போட்டிருந்தா உங்களுக்கு என்ன? உப்பில்லாத பத்தியக்காரனுக்கு ஊறுகாயப் பத்தி என்ன கவலை?" என்றாள், வெடுக்கென.



"ஆங்...", என திகைத்தவன் ... அவள் சொன்னது புரிந்து... முறுவலித்தபடி, "சாப்பிடக்கூடாதுன்னு தான் பத்தியம், பாக்கறதுல ஒன்னும் தப்பில்லையே?", சன்னமான சிரிப்புடன்தான் சொன்னான், ஆனால் ஆழ்ந்து ஒலித்த அவனது குரலில், அவன் வலி தெரிந்தது மனைவிக்கு. கணவனின் ஆர்வப்பார்வைகள் இவள் அறியாததா? பார்வையோடு நிற்பதுதான் விந்தை. இவளுக்கே அவ்வப்போது தோன்றும், எப்படி இத்தனை கட்டுப்பாட்டுடன் இருக்கின்றான் என்று. இத்தனைக்கும் ஒரே படுக்கை, முக்கால்வாசி இரவுகளில், அவன் கைகள்தான் மனைவிக்குத் தலையணையாய்.



சரி, அவன்தான் முன்னேறி அடுத்த அடி வைக்கவில்லை, அவளாய் போய் அணுகினாளா என்றால் அதுவும் இல்லை. இல்லாத பொல்லாத வெக்கம், தயக்கம்.. அனைத்திற்கும் மேலாய் பயம்.. ஆம். பயமேதான். அவன் இரண்டு அடி அடித்தால் கூட பரவாயில்லை, ஆனால், என்னவாவது சொல்லிவிட்டால்? அதன்பிறகு மொத்த வாழ்க்கைக்கும் அந்த வடு நிற்குமே? எனவே, படுத்தவுடன் உறங்கவேண்டும் என்பதற்காகவே, நிறைய உடலுழைப்பை செய்தாள், விளையாட்டும் அதில் சேர்த்தி.



ஒரு நாள் நடுநிசியில் த்ரிவிக், மற்றொரு அறை சென்று அங்கிருந்த எக்ஸ்சர்சைஸ் சைக்கிளை மிதியோ மிதியென்று மிதித்து, வியர்வையில் தொப்பமாக நனைந்து வந்தான். கால் போட ஆளுமில்லை/தலையணையும் இல்லை என்பதில் நங்கை முழித்து விட்டிருந்தாள். அவனைத் தேடித் செல்ல... ஹாலிலேயே அந்த சைக்கிளின் சப்தம் கேட்டுவிட, அரவமின்றி சென்று படுத்து விட்டாள். அவன் குளித்துவிட்டு வந்து படுத்தவனிடம், தாளமாட்டாது ... "ஏதோ கோபத்துல தெரியாம ஒரு வார்த்தை சொல்லிட்டேன்? அதை இத்தனை சீரியஸா எடுத்துக்கணுமா?", என்று அவனிடம் கேட்டே விட்டாள். கண்கள் கலங்கிப் பார்க்கும் மனைவியை கூர்மையாகப் பார்த்து...கரகரத்த குரலில் , "நானும் தெரியாமத்தான் நீ வேலைக்கெல்லாம் ஆகமாட்ட-ன்னு சொன்னேன். நீ விட்டுட்டியா என்ன?", என்று எதிர்க்கேள்வி கேட்டான். என்னவென்று பேசுவாள்??



ஊர்ல உலகத்துல ஹஸ்பண்ட் வொய்ப் சண்டை போட்றதே இல்லையா? எல்லாரும் இப்படியா இருக்காங்க?, நங்கையின் மனம் குமுறியது. இவளது மனதை, தெளிவாக விளக்கினால்தான் எல்லாமும் என்றால், என்னதான் செய்ய முடியும்?



இப்பிரச்சனை தீர நங்கைக்கு ஒரே வழிதான் தெரிந்தது. க்ரீச்-சில் செய்திருந்த முதலீட்டை, அதன் வருமானம் மூலம் ஈட்டிய பின்தான் கணவனுடன் மனம் விட்டு பேசவேண்டும், என்று எப்போதோ முடிவெடுத்து இருந்தாள். இன்னமும் பத்து பதினைந்து நாட்கள். அடுத்த மாத க்ரீச்-சின் வரவுடன், நங்கை செய்த முதலீட்டு தொகை நேராகிவிடும். அதன் பின் வரும் வருமானமெல்லாம், லாபக்கணக்கில் சேரும். அந்த நன்னாளை எதிநோக்கி காத்திருந்தாள் நங்கை.



த்ரிவிக் லைனில் இருப்பது நினைவுக்கு வர... "இப்ப பாத் ரோபோட இருக்கேன்... ", என்றாள்.



"ஓஹ்... ஸாரி", என்றுவிட்டு அவசரமாக அழைப்பைத் துண்டித்தான்.



"சரியான சாமியார்", முணுமுணுத்தவாறு, அலைபேசியை அதனுடைய ஸ்டாண்ட்-ல் வைத்து... த்ரிவிக்கினை வீடியோ காலில் அழைத்தாள்.



அவனுக்கு ஸ்க்ரீனில் நங்கை தெரியவில்லை,புடவைதான் தெரிந்தது. "எங்க காணோம்? அதுக்குள்ள டிரஸ் சேஞ் பண்ணிட்டயா?", த்ரிவிக்.



"ம்ஹூம்.... டிரஸ் செலக்ட் பண்ணத்தான் போன் பண்ணினேன்", ஹாங்கரில் தொங்கிய பனாரசி கோரா காட்டன் புடவை ஒன்றையும், உப்படா லைட் வெயிட் புடவை ஒன்றையும் போனில் காண்பித்து, "ரெண்டுல எதை கட்டிக்க? சொல்லுங்க"



கோபமாக , "எதையோ கட்டிக்கோ ... போடி", என்று விட்டு கட் செய்தான். பின்னென்ன? வீடியோ கால் வந்ததும், அவளைப் பார்க்கலாம் என்று நினைத்தவனுக்கு வெறும் புடவையை காட்டி ஏமாற்றினால்?



அவனுக்கு பத்து மணிக்கு மீட்டிங் இருந்தது. த்ரிவிக், காலையிலேயே எழும் பழக்கமுடையவனாதலால் விழிப்பும் வந்து விட்டது. மனைவியைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தான், என்றோ... ஒரு வார்த்தை அவளை ஏசப்போய்... அது பூமராங்காக இவனைத் திருப்பி தாக்கியதை... அவளது வைராக்யத்தை.. விளைவாய் துவங்கிய தொழிலை... திட்டமிடலை .... விளம்பர யுக்தியை ... பிரச்சனைகளை கையாளும் அவளது லாவகத்தை... என பலவும்.



ஐந்து நிமிடங்களில் புடவை மாற்றி, துளி ஒப்பனை செய்து, சுவாமிக்கு விளக்கேற்றிய நங்கை, கணவனை அழைத்தாள் .. எதிர்முனையில் அவன் எடுத்தால்தானே? வாட்சாப்பில் ஆன்லைன் என்று காண்பித்தது. உடனே கால் மீ மெசேஜ் அனுப்பினாள். ம்ஹூம்.. ஒன்றும் வரக்காணோம்.. காலை உணவு தயாராகி விட்டதாக அமிர்தம்மா சொன்னதால், சாப்பிட்டு முடித்தாள். அதுவரையில் கூட, அவனிடமிருந்து அழைப்பில்லை. இரண்டு மூன்று ஸெல்ஃபி எடுத்து அப்படியே அவனுக்கு ஷேர் செய்தாள். மேலும் அரைமணி நேரம் சென்றது. அவளும் க்ரீச் செல்லத் தயாராகி இருந்தாள்.



அவளே த்ரிவிக்-கை அழைத்தாள். இரு முறை முழுதாக அடித்தபின்னும் பதில் இல்லாது போக.. மனது மத்தளம் வாசிக்க ஆரம்பித்தது. மீண்டும் பத்து நிமிட இடைவெளி விட்டு அவனை அழைத்தாள். ம்ஹூம்... போன் அடித்தவாறே இருந்தது. நங்கைக்கு முகமே வெளிறிவிட்டது. என்னாச்சு தெரிலையே ? என்னை பத்திரமா இருக்கச் சொல்லிட்டு இவர் கேர்லெஸ்-சா இருக்காரோ? ஆண்டவா முருகா அவர்க்கு எதுவும் ஆகக்கூடாது.... புலம்பித் தவித்து விட்டாள்.



சிறிது நேரத்தில் நங்கையின் அலைபேசி அழைக்க... முதல் ரிங்கிலேயே எடுத்து, "விக்ரம், விக்ரம் .....", பதட்டமாக பேச...



"ஹே ... என்னாச்சு? ஏன் இவ்வளவு டென்சன்?", என்ற அவன் குரல் கேட்கவும்தான் அவளுக்கு உயிரே திரும்ப வந்தது.



"நீங்க ஏன் போன் எடுக்கல ?", என்றாள் நடுக்கத்துடன் புகார்க் குரலில்.



சற்று கோபமாக... "ஏண்டி ? ஏன்? காலைலேர்ந்து போன் பண்ணிட்டே இருக்கேன்-ன்னு நீதான் கோவப்பட்ட. சரி போய் ப்ரேக்பாஸ்ட முடிக்கலாம்னு போனேன், செல்லுல சார்ஜ் வேற கம்மி. சார்ஜிங்-ல போட்டுட்டு போனேன்". என்று அவன் எகிறினான்.



"சாரி அது ரெண்டு, மூணு முறை கால் பண்ணினேன், எடுக்கவேயில்லையா .. அதான் கொஞ்சம் பயந்துட்டேன்.", என்றாள் உண்மையாக.



சட்டென டென்சன் வடிய..... "அச்சோ.. நங்கை.. எனக்கு என்னைப் பாத்துக்க தெரியும், இப்போ மீட்டிங் கிளம்பிட்டேன், முடிஞ்ச உடனே, நான் பேசறேன். ஓகே? ", என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான். கண்கள், அவள் ஷேர் செய்திருந்த

படங்களைப் ரசனையாய் பார்த்தது. விரல்கள் தன்னை அறியாமல்... "அழகுடி நீ... " என மெசேஜை பதிந்து அனுப்பியது. பார்த்த நங்கையின் முகம் இளங்காலை சூரியனாய் பிரகாசித்தது.

 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
அத்தியாயம் – 14



வேலைகளை முடித்து வேலையாட்கள் கிளம்பியதும், வீட்டை பூட்டிக் கொண்டு அவளது அலுவலகம் வந்து விட்டாள். மதியம் வரை அனைத்தும் ஒரே தாள கதியில் சென்றது. பின்னர், மூன்று மணி அளவில், இரு பெற்றோர்கள் அவர்களது பிள்ளையை சேர்ப்பதற்காக வந்தனர். இவளது காரியதரிசி, அவர்களுடன் பேசி தேவையான விண்ணப்பங்களை கொடுத்து, அனைத்து விவரங்களையும் சேகரித்தார். பின், க்ரீச் செயல்பாட்டினை பார்க்கவேண்டும் என்று அவர்கள் கேட்க, காரியதரிசி-யை அலுவலகத்தில் இருக்கப் பணித்து, நங்கை அழைத்துச் சென்றாள். உள்ளே அதன் வசதிகளை, கட்டுப்பாடுகளைக் குறித்து விளக்கியவள், மைதானத்திற்கு அழைத்து சென்றாள். இன் டோர்/அவுட் டோர் இரண்டையும் காண்பித்தவள், "இதை நாங்க, இந்த பிளாட் ஓனர்ஸ் அசோசியேஷன்-ல பேசி, தினமும் மூணு மணி நேரம் க்ரீச்-க்கு, வாடகைக்கு எடுத்திருக்கோம். மொதல்ல பசங்க, எதுல இன்ட்டெரஸ்ட் காமிக்கறாங்கன்னு பாத்து, அதுல அவங்களை டெவலப் பண்ண உங்ககிட்ட சொல்லுவோம்".



இவளது அணுகுமுறையில், வந்தவர்களுக்கு முழு திருப்தி. உடனடியாக, பாரத்தினை [forms] பூர்த்தி செய்து, பணம் கட்டி செல்வதாகக் கூறி...பேச்சு நீண்டது.



சரியாக அதே நேரத்தில், ஆபிஸில், ஒருவன் அரக்கப்பரக்க வந்தான், குர்ஷரன் அப்பாவிற்கு ஆக்ஸிடென்ட் ஆகி விட்டதென்றும், அவளை அழைத்துப் போக தன்னை அனுப்பியதாகவும் கூறினான். காரியதரிசி, உடனே குர்ஷரனின் தாயாருக்கு அழைப்பு விடுக்க... அது நாட் ரீச்சபிள் என்று பதிலளித்தது.



"அவங்க ஹாஸ்பிடலுக்கு உள்ள இருப்பாங்க, போன் ரீச் ஆகாது, ப்ளீஸ் உடனே குழந்தையை அனுப்புங்க, அவங்கப்பா பாக்கணும்ங்கிறார்", என்று கெஞ்சி கேட்டவுடன், மீண்டும் அவளது அன்னையை தொடர்பு கொள்ள முயன்றவர், தோல்வியை தழுவ... நங்கைக்கு அழைத்து விபரம் சொன்னார். சற்று நேரம் யோசித்தவள்... "ம்ம்.. வந்திருக்கறவரோட, ID ப்ரூப், காண்டாக்ட் நம்பர் வாங்கிட்டு அனுப்பிடுங்க", என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவள்.. ஏதோ தோன்ற... மீண்டும் காரியதரிசியை அழைத்து.... "எந்த ஹாஸ்பிடல்-ல அட்மிட் பண்ணிருக்காங்கன்னு கேட்டு, அங்க போன் பண்ணி கிராஸ் செக் பண்ணிக்கோங்க. "என்றாள்.



அவரும் அவ்வாறே செய்தார், அந்த மருத்தவமனையில், "இங்க மூணு ஆக்சிடென்ட் கேஸ் வந்துருக்கு, இன்னும் பேர் அட்ரஸ்-ல்லாம் கேட்கலை, எமெர்ஜென்சி வார்டு-கு போயிருக்காங்க, இனிமேதான் விவரங்களை கேட்டு வாங்கணும்." என்று பதில் வர, போனை வைத்தவர், அடுத்த அறையில் காத்திருந்தவனைப் பார்த்து, "சரி, கூட்டிட்டு போங்க", என்று அப்பிள்ளையை அழைத்துவர சொன்னார். அவளோ, யாரோ புதிதாய் வந்துள்ளதைக் கண்டு, போகமாட்டேன் என்று முரண்டு பிடிக்க... சமாதனப் படுத்தி அக்குழந்தையை அவனுடன் அனுப்பிவைத்தார்.



அவர்கள் சென்ற ஐந்தே நிமிடத்தில், பிள்ளையை அழைத்துச் செல்லவென, குர்ஷரனின் அன்னை வந்தார். அவரைப்பார்த்த காரியதரிசி, பதட்டமானார். அவசரமாக..., "அஞ்சு நிமிஷம் முன்னாலதான உங்க வீட்டுக்காரருக்கு ஆக்சிடென்ட் ஆகி ஹாஸ்பிட்டல்-ல இருக்கறதா ஒருத்தன் வந்து ஷரனை கூட்டிட்டு போனானே?", எனவும்,



"வாட்?... அப்படி எதுவும் இல்லையே?",



"அப்ப சீக்கிரமா வந்திருக்கீங்க?", அவர் வரும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பே வந்திருந்ததால் காரியதரிசி கேட்க..



" நான் தலைவலிக்குதுன்னு ஆஃபீஸ்ல ஒன் ஹவர் பர்மிஷன் போட்டு வந்தேன். யார் வந்து கூப்பிட்டாலும் அனுப்பிடுவீங்களா?", என்று அவர் ஹைப்பர் டென்ஷானாகி கத்த...., நங்கை உள்ளே வந்தாள். நொடியில் விஷயத்தை கிரகித்தவளின் அடிவயிற்றில் அட்ரினல் அதிகமாய் சுரந்தது. நங்கை, முதன்முறையாக பயம் என்றால் என்னவென உணர்ந்தாள்.



"ஹாஸ்பிடலுக்கு செக் பண்ணுங்கன்னு சொன்னேனே?", என்று காரியதரிசியைக் கேட்க, "பண்ணினேன் மேம், மூணு கேஸ் வந்திருக்கு, இன்னமும் பேர் அட்ரஸ் வாங்கலைன்னு சொன்னாங்க., அவசரமாச்சேன்னு அனுப்பினேன்", வியர்வை ஊற்றாய் பெருக... கையைப் பிசைந்தார்.



"உங்க போனுக்கு என்னாச்சு?", குர்ஷரனின் அம்மாவைப் பார்த்து நங்கை கேட்டாள்.



"ஏன்? என்கிட்டத்தான் இருக்கு.", கைப்பையில் கைவிட்டு தேடியவர், "இல்ல தெரில.. எங்கயோ மிஸ் பண்ணிட்டேன்", அவருக்கு அழுகை ஆரம்பமாகி இருந்தது. மனதை ஒருமுகப்படுத்தி முழுதாக ஒரு நிமிடம் யோசித்தவள்.... "வாங்க போலாம், உங்க பொண்ணை கண்டுபிடிக்க வேண்டியது என் பொறுப்பு.", சொன்னவள் வார்த்தையில் எஃகின் உறுதி.



காரை எடுத்தவள், நேராக சென்றது, CCTV பதிவுகளைத் தேடி. இவள் சென்ற நேரம்... அந்த மேலதிகாரி இல்லை, அவருக்கு கீழ் பணிபுரிபவன், தனக்கு பதிவுகளைத் தர அதிகாரமில்லை என்று தர்க்கம் செய்தான். ஷரனின் அம்மா அழுகையோடு அவனிடம் கெஞ்ச... நங்கை...நேராக அவனது காபினுக்குள் வந்து, கொத்தாக அவன் சட்டையைப் பிடித்தாள், "டேய்... அந்த பொண்ணு உன் பொண்ணா இருந்தா இப்படித்தான் சொல்லுவியா?" அட்சர சுத்தமாய் தமிழில் கேட்டாள்.



அவள் கண்களின் தீவிரம் கண்ட அவனுக்கு என்ன புரிந்ததோ?, அடுத்த பத்து நொடியில் திரையில் அவளது மழலையர் விடுதியின் முன் நடந்தவைகள் ஓட ஆடம்பித்தது. அதிலிருந்து கார் நம்பரை குறிப்பெடுத்தவள், அந்த பணியாளை நோக்கி "இதனால என்ன ப்ரோப்ளம் வந்தாலும், என்னை காண்டாக்ட் பண்ணுங்க", அவளது விசிட்டிங் கார்டு கொடுத்தாள்.



போனை எடுத்தவள், முதலில் த்ரிவிக்-கை அழைக்க நினைத்தவள்.... யோசித்து ... ப்ரஜனை கூப்பிட்டாள்,

"நமஸ்தே தீதி.. நீங்களே கூப்பிட்டு இருக்கீங்க. என்ன விஷயம் சொல்லுங்க? ", என்க ....



"கிரீச்-லேர்ந்து ஒரு பொண்ணை கடத்திட்டங்க, கிளம்பி பதினஞ்சு நிமிஷம் ஆச்சு. கார் நம்பர் sms பண்றேன், உடனே கண்டிபிடிக்கணும்", ரத்தினைச் சுருக்கமாக சொன்னவள், தொடர்ந்து... ஷரினின் அன்னையைப் பார்த்தபடி "ஆப் தி ரெக்கார்ட்" , என்றாள்.



"ஓ மை காட் !!!, நான் என்ன பண்ணலாம்னு பாக்கறேன்", என்றவன், காவல் துறையின் உயர்பதவியல் இருந்த நண்பனை அழைத்து விபரங்கள் தெரிவிக்க... அவர் கார் பதிவு என்னை வைத்து, அடுத்த பத்து நிமிடங்களில் அது எங்கே இருக்கிறதென கண்டுபிடித்து, தானும் அங்கே வருவதாகக் கூறினார்.



அந்த பத்து நிமிட காத்திருப்பு.... பத்து யுகமாய்.... நரக வேதனையுடன் கழிந்தது, காரிலிருந்து இரு பெண்களுக்கும். பிரதான சாலையில் தான், காரை இருத்தி இருந்தாள், எங்கே செல்வதென தெரிய வேண்டுமல்லவா? இப்பொழுது அக்காரின் இருப்பிட வரைபடமே வர.... நங்கை கைகளில் கார் பறந்தது. அவளது தற்போதைய பயம், அப்பெண்ணை கார் மாற்றி அனுப்பி இருக்கக்கூடாதென்பதே, ஆனால் அத்தனை நேரமாகவில்லை என்று அவளுக்கு அவளே சமாதனப் படுத்தியும் கொண்டாள்.



இவரகள் மேப் காண்பித்த அப்பழைய கட்டிடத்தைச் சென்று சேரும்போது, பிரஜனின் காவல் துறை நண்பர், அவ்விடத்திற்கு அருகாமை சரகத்தில் பணியில் இருந்த இரண்டு காவல் துறை அதிகாரிகளை அனுப்பி இருக்க... அவர்களும் வந்து விட்டனர்.



அவர்களுக்கு முகமன் தெரிவித்து நங்கை உட்பட அனைவரும் அவ்வீட்டில் நுழையும்போது, நல்லவேளையாக எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்பட்டிருக்கவில்லை. வீடு வெளியே மட்டுமே சற்று சிதிலமடைந்து இருந்தது.உள்ளே ஓரளவுக்கு சுத்தமாகவே இருந்தது. ஹாலில் ஆளில்லாததை பார்த்து குர்ஷரனின் அன்னைக்கு மயக்கமே வந்தது. ஒரு அதிகாரியை அவருக்கு துணையாய் நிற்க வைத்து, மற்ற இருவரும் ஆளுக்கு ஒரு அறைக்கு சென்று சப்தமின்றி தேடத் துவங்க... இரண்டு அறை தள்ளி பேச்சு சப்தம் கேட்க... அந்த அறைக்கு விரைந்த நங்கைக்கு .... அக்குழந்தை கையில் சாக்கோ பாரை வைத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததும், அருகே அமர்ந்திருந்த அவன் பேசியபடியே அவளது உடைகளை களைந்து கொண்டிருந்ததும் மட்டுமே தெரிந்தது.



ஆளரவம் கேட்டு அவன் திகைத்து நிமிர, 'ஙொய்', .... வந்த வேகத்தில் அவனை அறைய ஆரம்பித்த நங்கை, தொடர்ந்து கண்மண் தெரியாமல் அடித்துக் கொண்டே இருந்தாள். சப்தம் கேட்டு காவலரும் வர, அவன் அலறிப் புடைத்து கட் பனியன் மற்றும் உள்ளாடையோடு வெளியே ஓடினான்.



அதற்குள் மயக்கம் தெளிந்த அந்தப் பெண்மணி மகளின் குரல் கேட்க, பாய்ந்து உள்ளே சென்று கட்டிக்கொண்டாள். நடந்த கலவரத்தில் அது பயந்து அழுக ஆரம்பித்து இருந்தது. மெல்ல சமாதானம் கூறி அக்குழந்தையின் ஆடையை திருத்தி, இருவரும் வெளியே வந்தனர். அங்கே...



நடுத்தெருவில்... வாயிலிருந்து ரத்தம் ஒழுக, தப்பிக்கும் நோக்கில் வேகமாக கூடத்திற்கு ஓடியவன், அவனைப் பிடிக்க வந்த இரண்டு காவல் அதிகாரிகளையும் தள்ளிவிட்டு வெளியே செல்ல எத்தனிக்க... பின்னாலேயே வந்த நங்கையின் கையில் அகப்பட்ட கட்டையை அவன் கால்களை பார்த்து தூக்கி ஏறிய.. நீட்டிக்கொண்டிருந்த ஆணிகளோடு இருந்த அக்கட்டை, அவனது பின்னந்தொடையை குத்தி நிற்க... ஓடிய வேகத்தில் நான்கு அடி சென்ற பின்னர், அவன் ஓட இயலாது தெருவில் விழுந்தான். விழுந்தவன், கையால் அந்த கட்டையை தன் உடலில் இருந்து பிய்த்து எடுக்க... வலி பொறுக்காது மல்லாந்து கிடந்தான்.



அவன் விழுந்ததை பார்த்தவள், குர்ஷரனையும், அவள் அன்னையையும் பார்த்து, "நீங்க இங்க இருக்கறது யாருக்கும் தெரிய வேண்டாம். வீட்டுக்கு போங்க",என்று சொல்லி குர்ஷரனை ஒரு முறை ஆரத் தழுவி விடை கொடுத்தாள். அவர்களுடன் காவலர் ஒருவர் துணையாக சென்றார். மற்றொருவர், காவல் நிலையத்திற்கு போன் செய்து விபரங்களை தெரிவித்துக் கொண்டிருந்தார்.



வெளியே வந்த நங்கை பாதி மயக்கத்தில் இருந்த அக்கயவனைப் பார்க்க பார்க்க .. கோபம் கொப்பளிக்க அருகிருந்த கட்டையை எடுத்தவள்... கைகளை ஆணிகள் பதம் பார்த்ததையோ... குருதி கொப்பளித்ததையோ அறியாதவளாய்... அவன் அருகே வர... உயிர் பயத்தோடு அவன் எழுந்து ஓட நினைக்க.... அவன் மேல் காலை வைத்து, அவன் எழுந்து தப்பிக்கவோ, திருப்பித் தாக்கவோ முடியாதவாறு தன் மொத்த பலத்தையும் பிரயோகித்து, கட்டையை அவன் அடி வயிற்றில் இறக்கினாள். அக்கயவனின் கத்தலைக் கேட்டு வேடிக்கை பார்க்கவென கூட்டம் சேர ஆரம்பிக்க, அதில்.. கடவுள் சிலா ரூபங்களை தட்டில் ஏந்தியவாறு வீடு வீடாக சென்று பிச்சை கேட்கும் சாது ஒருவரும் இருந்தார். இவள் நின்ற கோலத்தில் பார்த்து அதிர்ந்தார். மங்கையவள் மாகாளி அவதாரமாய் நின்றிருந்தாள்.



"பேட்டி.. இஸ்க்கோ சோட் தோ , மாரோ மத் , சப் பக்வான் தேக்கூங்கீ", என்று அவனை விட்டுவிடுமாறும், அவனைக் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று இவளை சாந்தப்படுத்தவெனக் கூற...,



அதுவரை கோபமாய் இருந்தவள் ...திரும்பி அவரைப் பார்க்கும்போது .... ரௌத்திரமே உருவாக நின்றாள், கோவைப்பழமென சிவந்திருந்த கண்களால் உறுத்து விழித்து, அடித்தொண்டையில் இருந்து கர்ஜித்தாள். " பக்வான்?.. கோன் பக்வான்?.. கிஸ்கோ பக்வான்? .. , யஹா கோயி பக்வான் நஹி. பந்த் கரோ, சப் மந்திர், மஸ்ஜித் அவுர் சர்ச் கோ பந்த் கரோ". [கடவுளா? யார் கடவுள்? யாரோட கடவுள்? இங்கே எந்த கடவுளும் இல்லை. எல்லா கோவிலையும், மசூதியையும், சர்ச்களையும் இழுத்து மூடுங்க], என்று கோபாவேசத்தோடு கூறியதோடு,



அவரது கையில் இருந்த விக்கிரகங்களையும், படத்தினையும் பார்த்து, மனதுக்குள் "ஐஞ்சு வயசுக்கு குழந்தையை வக்கிரமா பாக்கறவன் மனுஷன்னா, அவனை மாதிரி ஆளுங்களை படைக்கிற நீ கடவுளா?, ஒம்பது மாசக் குழந்தையை புணர்ச்சிக்கு தூக்கிட்டு போற, ஏழு வயசு பிஞ்சை எரிச்சு கொல்ற ஆளுங்களை படைக்கிற நீ கடவுளா?, கடவுள்ன்னா காப்பாத்துவார், இங்க எத்தனை நிர்பயாக்கள்? ஒருத்தர காப்பாத்தக் கூட நீ வரலியே?, உனக்கெல்லாம் கோவில்? கும்பாபிஷேகம்?", என நினைத்து ஆத்திரத்தில் அவர் கையில் வைத்திருந்த சுவாமி படங்கள் இருந்த தட்டினைத் தூக்கி வீசினாள்.
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
அத்தியாயம் – 15



cross talk :



இந்நிகழ்வில் அங்கு அந்த மேல் உலகமே ஆட்டம் கண்டிருந்தது. ஆம் அவ்வுலகில் இருந்த ஒருவர் பாக்கி இன்றி, பூலோகத்தில் நங்கை விக்ரகங்களையும் படங்களையும் தூக்கி எறிந்த வினாடியில்..அனைவரும் ஒருமுறை சுழன்று... குலுங்கி... பிறகு நின்றனர். " சுவாமி என்ன இது?", என்று பார்வதி வினவ..



"ஒரு பெண்ணின் ஆக்ரோஷமான கோபத்தின் விளைவு இது", என்று ஈசன் புன்னகை புரிய....



தன் ஞான திருஷ்டியால் பூவுலகில் நடந்ததை அறிந்த பார்வதி, "சர்வேசா.... அப்பெண்ணின் கோபத்தில் நியாயம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். உங்கள் ப்ரதிமைகளை தூக்கி எறிந்தது தவறென்றாலும் ஏன் இவ்வாறான மனிதர்களைப் படைக்கிறீர்?", என்றார் வேதனையுடன்.



ஈசன் பதிலுரைத்தார்::



"தேவி தற்போதுதான் மாயை அகலப் பெற்றீர்போலும்?, தங்களது பொறுப்புகளை எமக்குத்தந்து, பூலோகவாசியைப் போல், இல்லம் நடத்த தலைப்பட்ட, உங்கள் நாடகம் முற்றுப் பெற்றதா? "



"ருத்ரா... பொழுது போக்குக்காக நாங்கள் செய்ததை குற்றம் கூறாது, கேட்ட கேள்விக்கு பதில் அளியுங்கள்..."



"உமையே சொல்கிறேன் கேள், இறையாகிக யாம் அனைத்து உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்துள்ளோம், தேவி. மானுடர்கள் எண்ணுவதுபோல திருக்கோவில்கள் , மசூதிகள், தேவாலயங்கள் எம்முடைய வசிப்பிடங்கள் இல்லை. அனுவிற்கு அணுவாய், அப்பாலுக்கு அப்பாலாய் அனைத்திலும் வியாபித்துள்ளோம் சகல ஜீவராசிகளிலும் யாம் உள்ளோம் ."



"இதை அறிய மானிடர்களுக்கு ஆறாம் அறிவாய் பகுத்துணரும் அறிவையும் தந்தோம். என்ன செய்தார்கள் இவர்கள்? எமை அறிய கொடுத்த அறிவைக் கொண்டு, எத்தனை தூரம் எமை விட்டு விலக முடியுமோ அத்தனை தூரம் விலகி செல்ல என்னென்ன கண்டுபிடிப்புகள்? வானொலி கண்டான், பாடலில் பழியாய்க் கிடந்தான், தொலைக்காட்சி, அலைபேசி, கணினி என அனைத்திலும் சிற்றின்பமே."



"எப்போதாவது எவராவது விழித்தெழுந்து ஆபாச விரலிகளை தடை செய்தால், ஆண் பெண் அடங்கலாய் அனைவரும் போர்க்கொடி தூக்கினர், இச்சமூகத்தில்".



"கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத இந்த சமூகம், கண்டதென்ன? எங்கும் காமம், எதிலும் காமம், இங்கே புத்தனா வளர்வான்?"



"கேள் தேவி... இதுபோன்ற காமுகர்களை நான் படைக்கவில்லை. இவர்களை இந்த சமூகம் செதுக்கியது. பிள்ளைகளை ஏனென்று கேள்வி கேட்காது, கேட்டதை வாங்கித் தந்து பணத்தை அள்ளி இறைக்கும் பெற்றோர், பணமிருந்தால் எதையும் செய்யலாம் என்ற மனோபாவத்திற்கு சென்று விட்ட இந்த சமூகம், நிச்சயம் நான் படைத்ததல்ல. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரைத்தவிர.. உலகமே போகம் போகம் என கடமையை மறந்து போகத்தில், மயக்கத்தில் திளைக்கிறது."



"ருத்ராணீ ... இன்னும் கேள். யாம் வகுத்த நாட்ய சாஸ்திரத்தில்...



யதோ ஹஸ்த, ததோ த்ருஷ்ட்டி;

யதோ த்ருஷ்ட்டி, ததோ மனஸ்;

யதோ மனஸ் , ததோ பாவ [ bhaava] ;

யதோ பாவ , ததோ ரஸா;

Where the hands (physical actions) are, there go the sight ;

where the sight is, there lies the mind;

Where the mind fixes, there the feelings come

and in accordance with feelings the enjoyment( rasa) takes place.]



"என்று ரஸம் குறித்து வரும் வாக்கியங்களை நீ அறிவாய். இது நாட்டியத்துக்கானது மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதனுக்குமானது. மனிதனின் செயல்களே அவன் தலைவிதியை எழுதுகின்ற எழுத்தாணி."



"வீணையில் லயித்து வாசிப்பவன், வித்வத்துவம் அடைகிறான், வீணே சிற்றின்பத்தில் உழல்பவன், இவனைப்போல் ஒன்றுமில்லாமல் போகிறான்."



"ஸர்வேசா நீங்கள் கூறுவதை எல்லாம் ஒப்புக் கொள்கிறேன், ஆயினும் இச் சிசுக்கள் இவ்வாறு வதைபடத்தான் வேண்டும் என்கிறீரா?"



"கலி முற்றுகிறது தேவீ... என் செய்ய?"



"கலி குறித்து மானுடன் பேசலாம், வேதநாயகன் பேசுவது விந்தையினும் விந்தை".



"ஸக்தி, அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒரு விதியின் கீழ் இயங்குபவை, மாற்ற எம்மால் ஆகாது."



"பத்து அகவை வரை பிள்ளைகள், அவர்களை எந்த நாளும் கோளும் ஒன்றும் செய்யாதென்ற ஓர் விதி உண்டே, அது காற்றில் போனதோ? அன்றி கங்கையில் போனதோ?"



"உமையே.. நாவடக்கமின்றி பேசுகிறாய்..."



"உண்மை பேசுகிறேன்.."



"இல்லை.. எம்மை குறை கூறுகிறாய்.. "



"குற்றமெனில் கூறத்தான் செய்வேன், ஈசனே... உம்மையும் எம்மையும் படைத்த ஆதிபராசக்தியின் அம்சம் நான். பயமில்லை எனக்கு, கூறுங்கள் இச்சிசுக்களின் வாதைகளை என்ன சொல்லி இட்டுக்கட்டப் போகிறீர்?"



நீண்ட நெடிய பெருமூச்சொன்றை விட்ட மகாதேவன், "ஈஸ்வரி கேள், துர்மரணமோ/ துர்நிகழ்வோ எதிர்கொள்ளும் அச்சிசுக்களை மயக்கமெனும் மாயையில் தள்ளி, வலிகளை யாம் ஏற்கின்றோம்.", என மிகுந்த மன வருத்தத்துடன் மொழிந்தார் பரமசிவன்.



அவர் வருத்தம் உணர்ந்த ஸக்தி, "ப்ரபோ ... இது ஒன்றுதான் மார்க்கமா? இவர்கள் மாற வழியே இல்லையா?"



"இல்லாமல் என்ன? ஒழுக்கம் என்ற ஒன்றை பற்றினால் போதும், ஆனால்...."



"ஆனால் என்ன ம்ருத்துஞ்சயா?"



"ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது ஸர்வாணீ "



"புரிகிறது.. சிறு வயதில் ஒழுக்கத்தை விதைக்கவேண்டும் என்கிறீர்."



"ஆம்.. தேவி, விவசாயியை தேர்ந்தெடுத்தாயிற்று. இனி, விதைகளை அவள் தூவுவாள். காலத்தே, நல்ல தேர்ந்த பயிர்கள் அறுவடையாகும். அவை விளையும் வரை... வலி தாங்குவோம்"என்றவர் .... தொடர்ந்து...



"எங்கே இருளோ... அங்கிருந்தே ஒளி., எங்கே கூச்சலோ.. அங்கிருந்தே அமைதி, எங்கே பிரச்சனையோ? அங்கிருந்தே தெளிவு.. "



கிராஸ்டாக் நிறைவு....

 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
அத்தியாயம் – 16



நங்கை நல்லாள் தொலைபேசி அழைப்பு விடுத்தவுடன், தேவையான நடவடிக்கைகளை எடுத்ததும், ஒரு நொடி தாமதிக்காமல் நங்கையைத் தேடி ப்ரஜன் வேகமாய் நிகழ்விடம் வர, அங்கு அவன் கண்டது... தீயை ஒத்த கண்களுடன்... தலை கலைந்து, அணிந்திருந்த ஆடை... பாதி வியர்வையிலும் பாதி குருதியிலும் நனைந்திருக்க மூச்சு வாங்கியவாறு., மிக மிக ஆவேசமாக நங்கை இருப்பதும், அவளைச் சுற்றி சிறு கூட்டம் சேர்ந்திருப்பதும் தெரிய... அவளை நோக்கி விரைந்தான்.



அங்கோ... அக்காமுகனை அத்தனை அடித்தும் இன்னமும் ஆத்திரம் அடங்காதவளாய் நின்றாள் நங்கை. சுற்றும் முற்றும் பார்த்தவள் கண்ணில், ஒருவன் கணினி பையுடன் அருகே நிற்பது தெரிய... அவனிடமிருந்து அதைப் பிடுங்கி, கீழே விழுந்திருந்தவனின் தலையில் போட எத்தனித்து, "உன்னையெல்லாம் உயிரோடவே விடக்கூடாதுடா நாயே", கடித்த பற்களிடையே நறநறத்து கூறி, அவன் தலையில் போடப்போக.. "தீதி ...", உரத்து கூறியவன், அவள் கையைப் பிடித்து இழுத்து தடுத்திருந்தான். கூடவே, "அவன் மேலேருந்து காலை எடுங்க , என்ன பண்றீங்க நீங்க? , இவ்வளவு கூட்டத்துல செத்து கித்து தொலைச்சான்னா என்ன ஆறது?", என்று கடிந்தான்.



ப்ரஜனை பார்த்த நங்கைக்கு அவன் கேட்ட கேள்வி.. மனதில் பதியவே சற்று நேரம் பிடித்தது. சுற்றும் முற்றும் பார்த்தவள், அப்பொழுதுதான்... தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தவளாய், காலை அந்த பாதகன் மேலிருந்து எடுத்தாள்.



ப்ரஜன் குரலைக் கேட்டபின்னர் தான் அவளுக்கு தான் வீதியில் போட்டு ஒருவனை அடித்துள்ளோம் என்பதை உணர்ந்தாள். சுற்றுமுற்றும் பார்த்தவள், அவளைச் சுற்றி கூட்டமாய் மக்கள் இருக்க... வேடிக்கை பொருளானோமே... என்ற வருத்தம் வந்தது. நங்கைக்கு.... உடலின் வலு அனைத்தும் வடிந்தாற்போல், வெறும் கூடாகி விட்டதுபோல ஒரு உணர்வு. அடுத்தவர் கவனத்தை ஈர்க்கும் அளவாகக் கூட பேசாதவள், அமைதியானவள் என்று வரையறை இவளுக்குப் பொருந்தாது ஆயினும், காட்சிப்பொருளாய் அடுத்தவர் கவனத்தை ஈர்ப்பதில் விருப்பம் இல்லாதவள். அவளது குடும்ப அமைப்பும் அவ்வாறே. ஆனால் இன்றோ..? கீழே கிடந்தவனோ பேச்சு மூச்சின்றி கிடந்தான். ஒருவேளை இறந்து விட்டானோ? என்ற சந்தேகம் வந்தது.



கைகள் பிசுபிசுக்க, என்னவென்று குனிந்து பார்த்தாள். இரண்டு கைகளிலும் ரத்தம் வழிந்து அது பாதி காய்ந்திருந்தது. அடிப்பதற்காக எடுத்த கட்டையில் ஆணிகள் வரிசையாக இருந்தது அப்போதுதான் நினைவிற்கு வந்தது. திடீரென உண்டான பிரச்சனையில், அச்சிறுமியை பாதுகாப்பாய் மீட்பது மட்டுமே எண்ணமாயிருக்க, அவளைக் கண்ட மாத்திரத்தில் அகுழந்தை இருந்த நிலையோ...? கடத்தியவனின் கயமையும், அவன் தப்பிச்செல்ல முயன்றதும், அவளை வெகுண்டெழ வைத்தது. அந்நேரத்தில் கையில் கிடைத்ததை கொண்டு தாக்கி.. அவனை வீழ்த்துவதிலேயே குறியாகிப்போனாள். தனது மொத்த சக்தியையும் விட்டிருக்க, அவளது வலிகளை உணரவேயில்லை. இன்னமும் அந்த நிகழ்வுகளின் தாக்கம், படபடப்பு.. உடலுக்கும் மனதுக்கும் இருந்தது. விளைவு... நடக்க முயன்ற நங்கைக்கு கால்கள் தள்ளாடியது.



கால்கள் பின்ன.. களைத்த விழிகளுடன் இருந்த அவளைப் பார்த்த ப்ரஜனுக்குமே மனது பிசைந்தது. எத்தனை ஆளுமையான பெண்?, இப்போது எப்படி இருக்கிறாள்? என்ற நினைவு. "ஒன்னும் இல்ல.. வாங்க வீட்டுக்குப் போகலாம்", என்று அவளை தன் தோளோடு அணைத்தவாறு தாங்கி நடக்க ...



கழிவில் ஊரும் புழுவைப் போல தரையில் கிடப்பவனை ஒரு பார்வை பார்த்து..., "இவனை......?," என பிரஜனிடம் கேட்க...



"பக்கத்து ஸ்டேஷன்லேர்ந்து இன்ஸ்பெக்டர் வர்றார். என் ஃப்ரெண்ட் அவர் கிட்ட பேசிட்டான். ஏதாவது கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவாங்க", என்று பேசியவனுக்கு 'அதுக்கு முதல்ல அவன் உயிரோட இருக்கணும்' என்ற நினைவில் மனம் பதைத்தது. காரணம் அடி வாங்கியவன் வேரற்ற மரம் போல் கிடந்தான். ஒரு சின்ன அசைவுமில்லை. சுற்றிலும் இத்தனை கூட்டம் வேறு, என்னாகுமோ என பயமாய் இருந்தது, என்னதான் காவல்துறையில் நண்பனிருந்தாலும், நங்கை அடித்ததை இக்கூட்டமே அல்லவா வேடிக்கை பார்த்திருக்கிறது? கலக்கத்தினை வெளியே காண்பிக்காமல் நடந்தான்.



இது தற்செயலாக நடந்த நிகழ்வாய் அவனுக்கு தோன்றவில்லை, த்ரிவிக்ரமன் ஊரில் இல்லையென்பதையும், சிறுமியின் பெயர் தெரிந்துகொண்டு .. எந்த நேரம், எப்படி அழைத்தால் அக்குழந்தையை விடுவார்கள் என்பதையும் கணக்கிட்டு, அதே நேரத்தில் அச்சிறுமியின் அம்மாவின் கைபேசியை களவாடி... என அனைத்தும் மிக நன்றாக ஆற அமர திட்டமிடப்பட்ட செயல்களே. இது இங்கிருக்கும் ஒருவன் மட்டும் செய்த செயலாக இருக்க முடியாது. இத்தோடு நிற்குமா, இல்லையெனில்.. அந்த முகம் காட்டா எதிரிகளின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்..? நண்பனிடம் கூறி, தீர விசாரித்து, யாருடைய வேலை இது என்று அறிந்து,.. அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலவாறாக யோசித்தான்.



நங்கை சற்று ஆசுவாசமானதும் உடனடியாக இது குறித்து பேச நினைத்தான். நடந்தவாறே "கார் சாவி கொடுங்க", என்று நங்கையிடம் கேட்க, அவளோ மலங்க மலங்க விழித்தாள், அவள் வந்த வேகமென்ன? அவசரமென்ன? வண்டியிலிருந்து சாவி எடுக்கும் அளவிற்கா அவளது எண்ணவோட்டம் இருந்தது? காரின் கதவையே மூடினாளா இல்லையா என்பது தெரியாது, இதில் சாவியை எங்கே?



தெரியாதென்று இடவலமாய் தலையை ஆட்டினாள்.



"ம்ஹூம்...... ", பெருமூச்சோடு கூடி இருந்த மக்களைத் தாண்டி சென்றவனின் காதுகளில்,

"பொண்ணுன்னா அடக்க ஒடுக்கம் வேணும். எப்படி பஜாரி மாதிரி அடிக்கிறா பாரு?",

"அவ மதராஸி, கல்யாணமானவ.. கூட போறவன் நம்மூர்காரன்... என்ன கசமுசாவோ யாருக்கு தெரியும்?",



என்பதைப் போன்ற பேச்சுக்கள் .. இவர்கள் கடந்ததென்னவோ நாற்பதடி கூட இல்லாத தூரம்.... அதற்குள் இப்படியான அனுமானங்கள். காதில் விழும் அவச்சொற்களைக் கேட்ட ப்ரஜன்... ஐயோ என்றானது. நங்கை அந்தக் கயவனை அடிக்கும்போதுதானே கூட்டம் கூடியது? அதற்கு முன் நிகழந்தவைகளைத்தான் மூன்றாம் பேருக்குக் தெரியாமல் அவள் மறைத்திருந்தாளே? ப்ரஜன் திரும்பி நங்கை முகத்தைப் பார்க்க.. அவள் முகமோ தீவிர சிந்தனையில் இருந்தது, பார்த்தவனுக்கு ஓரளவு நிம்மதி.



இச்சமூகத்தில் ... பெண் என்பவள் எப்போதும் பேசுபொருள்தான், யார் வேண்டுமானாலும், எவ்விதமாகவேனும், உண்மையோ பொய்யோ, உள்ளதோ அல்லதோ எதுவாயினும் பேசலாம். எதிராக தட்டிக் கேட்டால், வரும் ஒரே பதில் "நீ ஏன் மற்றவர்கள் பேசுவது போல் நடக்கின்றாய்?", என்பதுதான். முதலில் அவளை.... அவள் பின் புலத்தை, அவள் நடத்தையைக் கூறுபோட்ட பின்னர் தான் நிகழ்வுகள் ஆராயப்படும். முடிவென்னவோ ஒன்றுதான். இருக்கிறதோ இல்லையோ என்ற வதந்தி ஆரம்பிக்கப்படும், பின் அதுவே திரிந்து அப்படித்தான் போல என்று பரவும்.



இவ்வாறான பழிகளுக்கு பயந்தே, வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் / முடக்கப்படும் பெண்கள் எத்தனை கோடியோ?

"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்", என்ற பாரதியின் வார்த்தைகள்... இன்றுவரை கனவாகவே உள்ளது. இருபத்தியோறாம் நூற்றாண்டு... விஞ்ஞான சாதனைகளும் கண்டுபிடிப்புகளும் உச்சத்தில் உள்ள காலமல்லவா? கண்டம் விட்டு கண்டம் பறந்தாலும், மனிதர்கள்/சொந்தங்கள் தொடர்பில் இருக்கவென, கண்டுபிடிக்கப்பட்ட அலைபேசி எனும் சாதனம், புல்லாங்குழல் அடுப்பூத பயன்படுவதைப் போல... தன் சுயம் மறந்து... புறணி பேசத்தான் கண்டுபிடிக்கப்பட்டதோ என எண்ணும் அளவிற்கு... தற்போது அதில் ஹேஷ்யங்களே பிரதானமாய்.


ஹும்ம்ம்... நல்லவேளையாக நங்கை இதையெல்லாம் உள்வாங்கும் மனநிலையில் இல்லை, ஊராரின் பார்வை துளைப்பதை மட்டுமே உள்ளுணர்வு உணர்த்தியது, அதைக்கூட புறம் தள்ளி.... அப்பெண்பிள்ளை மட்டுமே அவளின் சிந்தனையில் இருந்தாள். அவர்கள் வீட்டில் இந்நிகழ்வை எவ்விதமாய் எடுத்துக் கொள்வார்களோ?, மனதளவில் அக்குழந்தையை முடமாக்கி விடுவார்களோ?, என்பதுபற்றி சிந்தனை ஓடிக் கொண்டு இருந்தது.
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
இருவரும் காரின் அருகில் சென்றதும், சாவி காரிலேயே பொருத்தியவாறு இருந்ததைக் கண்ட ப்ரஜன், நொடியில் வண்டியை எடுக்க, நேரம் தாழ்த்தாமல் மருத்துவமனைக்கு சென்றான். துருப்பிடித்த ஆணிகளால் ஏற்பட்ட காயம் அல்லவா, அவ்வாறே விட்டால் செப்டிக் ஆகும் வாய்ப்புள்ளதால் நேரே மருத்துவமனை விரைந்தான்.



சிகிச்சைகள் முடிந்த பின், அவர்கள் வீடு சேர்வதற்குள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கடந்திருந்தது. வீட்டினைப் பார்த்த நங்கைக்கு, காலையில் தான் இங்கிருந்து அலுவலுக்குச் சென்றோமா? என்பதுபோல தோன்றியது. ஏதோ ஒரு யுகம் கடந்து வீடு வந்ததைப்போல் இருந்தது. மருத்துவமனையில் இரண்டு கைகளிலும் கட்டு போட்டு விட்டிருந்தனர். நங்கையிடம் கேட்டு, வீட்டு சாவியை வாங்கி(அது ஆட்டோமேட்டிக் லாக் என்பதால், தானாகவே பூட்டிக் கொள்ளும்), ப்ரஜன் வீட்டைத் திறந்து மின்விளக்கை உயிர்ப்பித்தான். நங்கைக்கு கைகளில் ட்ரெஸ்ஸிங் செய்யும்போதே, அவள் இரவில் சாப்பிடுவதற்கென உணவினை பார்சல் செய்து ஹோட்டலிலிருந்து வாங்கி வந்திருந்தான்.



இப்போது நங்கை சற்று தெளிந்திருந்தாள். ஒரு நெகிழ்ச்சியான முக பாவத்துடன், "ரொம்ப தேங்க்ஸ் பிரஜன். நிஜமா.. இன்னிக்கு நீங்க இங்க இல்லன்னா என்ன ஆகியிருக்குமோ தெரியாது. தேங்க்ஸ்ங்கிறது ரொம்ப சின்ன வார்த்ததான். பட்.., வேற சொல்ல தெரில.", என குரல் தழுதழுக்க சொன்னவள்..., "அவர் இருந்திருந்தா கண்டிப்பா உங்கள தொந்தரவு பண்ணி இருக்க மாட்டேன். I seriously don't know how to express my gratitude", என்க...



"ஹோ... தீதி, நமக்குள்ள இதெல்லாம் தேவையில்ல, சோட்தோ", என்றுரைத்து.. "ஆங்... நான் த்ரிவிக்குக்கு கால் பண்ணி மேட்டர் என்னன்னு சொல்லிட்டேன், ரொம்ப டீட்டெயிலா சொல்லலை. அதுக்கே ரொம்ப டென்ஷானாகிட்டார். இந்நேரம் அவர் வந்திட்டு இருப்பார்-னு நினைக்கிறேன்".



"ஓ !!...", என்று புருவம் உயர்த்திய நங்கையின் மனதில்... பயமா? அலைப்புறுதலா? என இனம் காண இயலாத ஓர் உணர்வு , த்ரிவிக் என்ன சொல்வானோ? திரிவிக்ரமனின் இல்லாளாக மனம் குழம்பினாள். இவள் சம்பந்தப்பட்ட விஷயம் மூன்றாம் நபர் மூலமாக அல்லவா அவனைச் சென்றடைந்தது? எப்படி எடுத்துக் கொள்வான்? என பலவாறான சிந்தனைகள். எதுவாகிலும் கணவன் என்றும் என்னுடன் பக்கபலமாய் இருக்கவேண்டும் என்பதாக, ஒரு சாதாரண மனைவியின் அலைப்புறுதல் இருந்தது. கோடி பேர் கூட வரினும் கொண்டவன் போல் வருமா என்ன?



"ஓகே நான் வீட்லேர்ந்து அண்ணிய அனுப்பிவைக்கிறேன், அதுவரைக்கும் நீங்க பாத்துக்குவீங்களா? கிளம்பட்டா?" என்ற பிரஜனிடம்.....



"இல்லல்ல... ப்ளீஸ் வேணாம், அவங்களை தொந்தரவு பண்ணாதீங்க. நானே பாத்துப்பேன்.விரலெல்லாம் நல்லா அசைக்க முடியுது. ஐ வில் டேக் கேர். நீங்க நைட் சாப்பாடு வாங்கி குடுத்துடீங்க, இனி சாப்பிட்டு படுக்கறதுதான். தவிர அவரும் வந்துடுவாரு சொன்னீங்க, யாரையும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாமே", என்று சற்று தன்மையாகவே கூறினாள். அவள் கூறியதைப் போல உள்ளங்கை மற்றும் விரல்களின் அடிப்பகுதியில்தான் ஆணிகள் அழுத்தமாக இறங்கி இருந்தன. விரல்களின் மேற்புறத்தில் பாதிப்பு சற்று குறைவே.



"ம்ம்ம்..", என்று சிறிது யோசித்து.. "ஓகே தீதி, நான் நாளைக்கு வர்றேன். பை. ", என்று விடைபெற்றான். வெளியே நன்றாக இருட்டி இருந்தது. நங்கை உடல் அசதியைதர .. கூடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்து ஆசுவாசமாய் அவளது அலைபேசியை எடுத்து திரிவிக்கிரமன் நம்பருக்கு அழைத்தாள். "நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டு உள்ளார்." என்று பதில் வந்தது... "ம்ப்ச்...", சலித்தவள்.... கீழே வைக்கப்போக.. சரியாக அதேநேரம் வாட்ஸ் அப்பில் இருந்து ஒரு செய்தி வந்திருப்பதாக ஒளிர்ந்தது. ... மெதுவாக அதை திறந்து பார்த்தவளது அதிர்வினை... உலகில் உள்ள எந்த ரிக்டர் அளவுகோல் கொண்டும் அளக்க முடியாது.



"கள்ளக்காதல் அதன் உச்சம் தொட்டது. தட்டி கேட்டவனின் அவல நிலை", என்ற கொட்டை எழுத்தோடு, இரண்டு மணி நேரம் முன் நடந்தவைகள்.. தெளிவாக ஆங்காங்கே தணிக்கை செய்யப்பட்டு, நங்கை ஒருவனை அடிப்பதும், ப்ரஜன் அவளைத் தோளோடு அணைத்தவாறு கூட்டிச் செல்வதும், நங்கை த்ரிவிக்ரமன் இருவரின் திருமண புகைப்படமும் இருந்த வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டு இருந்தது. விழிகள் நிலை குத்த பதினைந்து நொடிகளே ஓடிய அந்த வீடியோவினை பார்த்த நங்கைக்கு, சட்டென உலகத்தின் இயக்கமே நின்றுவிட்டது போல தோன்ற.... ஸ்தம்பித்திருந்தாள்.
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
அத்தியாயம் – 17



எத்தனை பெரிய பழி இது..., எத்தனை சுலபமாய், எத்தனை வேகத்தில் ஜோடிக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு சென்றுவிட்டதே!!. ஏதும் செய்ய முடியாத நிலையில் அல்லவா இருக்கிறாள், அங்கே ஏன் சென்றாள்?, ஏன் அம்மனிதனை ( மனிதனா ?) அடித்தாள்? என்றெல்லாம் கேள்விகள் வருமே? குர்ஷரன் கவுர் குறித்தும் கூட தெரியவருமோ? த்ரிவிக் இதை எப்படி எடுத்துக் கொள்வான்? அப்பாவுக்குத் தெரிந்தால் என்ன ஆவது? இனி இந்த ஊரில் எப்படி தலை நிமிர்ந்து நடப்பது? யார் செய்திருப்பார்கள் இதை? என பலவாறான கலவர சிந்தனைகள். அவளறியாமலே நங்கையின் கண்கள் கலங்கியது .



அதிர்ச்சியில்... கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆன பின்னும் எவ்விதமான சிந்தனையும் இல்லாது வெறுமையாய் இருந்தாள். மெது மெதுவாக நடப்பிற்கு புத்தியைக் கொணர்ந்து... கணவனுடன் பேச... .. தயக்கத்துடனேயே த்ரிவிக்-கின் அலைபேசிக்கு அழைத்தாள்... அது 'உபயோகத்தில் உள்ளது என்ற பழைய பல்லவியையே பாடியது. மீண்டும் மீண்டும் முயற்சித்தும் அவ்வாறே பதில் வர... ஓய்ந்தே போனாள் பெண். அவனுக்கு இவ்விஷயம் தெரிந்திருக்குமோ? தன்னைத் தவிர்கிறானோ?,அவமானமாய் உணர்கிறானோ?, போன்ற எதிர்மறை எண்ணங்கள் சூறாவளியாய் சுழன்றடிக்க.... கட்டுப்படுத்தும் வகையறியாது நின்றாள்.



மனதுக்குள் .... 'நல்லதே நினை, நல்லதே நடக்கும்..', திரும்ப திரும்பச் சொல்லி உருவேற்றிவாறு, ஒருவேளை கணவன் தனக்குத்தான் முயற்சிக்கிறானோ என நினைத்து, இவளது பேசியின் அழைப்பை நிறுத்தி கீழே வைத்தாள். இவள் வைத்ததுதான் தாமதம்.... உடனே அழைப்பு வர... முகம் மலர ஆவலோடு திரையைப் பார்த்தவளுக்கு அது தெரியாத எண்ணாய் இருக்க, ஏமாற்றமாய் உணர்ந்தபோதும்.... எடுத்தாள்.



"என்ன மேடம்.. ஊர் எல்லாம் உங்க புகழ் கொடி கட்டி பறக்குது?"... இவள் பேசும்முன்னே... மறு முனையில் அதிரடியாக அக்குரல் ஆரம்பித்தது. உடனடியாக பேசியை காதிலிருந்து எடுத்துப் பார்த்தவள்... ஏதோ விவகாரமான அழைப்பு என்ற உள்ளுணர்வு தோன்ற சமயோஜிதமாய் அந்த உரையாடலைப் பதிவு செய்யும் (கால் ரெக்கார்டிங்) பொத்தானை அழுத்தினாள். எதிர்முனையில் முகமறியா அவன் "உங்க வாட்ஸாப் வீடியோ.. சும்மா தீயா பரவுது போல? ம்ம்ம்...மொதல்லயே நாங்க சொன்ன மாதிரி செய்திருக்கலாம். இப்ப பாருங்க, உங்க பேரும் கெட்டு..... லைஃப்ம் கெட்டு.... இனி உங்களால வெளிய வாசல்ல நடக்க முடியுங்கிறீங்க? ஹி ஹி ... என்ன சொன்னாரு வீடியோ பாத்து உங்க புருஷன்? உடனே ஊருக்கு பொட்டி கட்டு-ன்னாரா ?"

"..... "

"எப்படிடா அவருக்கு தெரியும் யோசிக்கிறீங்களா? இந்த வீடியோவை மொதல்ல அனுப்புனது அவருக்குத்தான். அப்புறமாதான் உங்களுக்கு... ... அதுக்கப்புறம் ஊருக்கே...... ஹ ஹ ஹ ....", என்றவன்....தொடர்ந்து,



"ரொம்ப புத்திசாலித்தனமா இந்த நம்பரை வைச்சு என்ன ட்ராக் பண்ண நினைக்காதீங்க. இதை, இந்த நம்பரை இந்த வேலைக்காக மட்டும் தான் வாங்கினேன். முடிச்சிட்டு மொபைலையே தூக்கி போட்... ", என்று அவன் முடிக்கக்கூட இல்லை...



"ஷட்டப்... யார்டா நீ? நீதான் அந்த பொண்ண கடத்தினயா? ", என்று நங்கை குறுக்கிட....



"சாரிங்க அம்மணி... ரொம்ப பேசினா நமக்குத்தான் ஆபத்து... தவிர, பேலன்ஸ்-ம் இல்ல. பை....", என்றுவிட்டு எதிர்முனையில் இருந்தவன் தொடர்பை துண்டித்தான்.



கையிலிருக்கும் கருவியை.. புது வகை ஆட்கொல்லியென வெறித்து நின்றாள். கொடிய மிருகங்கள் வாழும் அடர்ந்த காட்டின் நடுவே, வெளியேற திசையறியாது நிற்பது போன்ற நிலையில் இருந்தால் நங்கை நல்லாள். வீடியோ ஆடியோ இரண்டு பதிவினையும் காவல்துறையிடம் கொடுத்தாலோ அல்லது ஊடகங்களிடம் கொடுத்தாலோ, மிக சுலபமாக தான் குற்றமற்றவள் என நிரூபித்துவிட முடியும். ஆனால், அப்போது அப்பெண்பிள்ளை குறித்தும் சொல்ல வேண்டி இருக்கும். அவ்வீட்டினர் அனுமதி கொடுத்தாலும் இது குறித்து பேச நங்கைக்கு விருப்பமில்லை.



அனாமதேய அழைப்பிலிருந்து... நங்கை முதலில் கிரகித்தது.. த்ரிவிக்-கிற்கு வீடியோ விஷயம் தெரியும் என்பதைத்தான். அவன் என்ன நினைக்கிறான்? யோசிக்க யோசிக்க மனஅழுத்தம் அதிகரித்து தலைவலி வந்தது. ஆழ மூச்செடுத்து, வேதனைப்படுவதோ, குழம்புவதோ பிரச்சனையை தீர்க்காது, குழப்பத்துடன் எடுக்கும் முடிவுகள் சரியான தீர்வைத் தராது என்பதைப் புரிந்து... எதுவாயினும் பிறகு பார்த்துக் கொள்ளலாம், என்ற முடிவுக்கு வந்தாள்.



த்ரிவிக்ரமனுக்கு அழைக்க... அவனது அலைபேசி இன்னமும் பிசியாக இருந்ததால் பதிவு செய்யப்பட்ட உரையாடலை அவனுக்கு வாட்ஸாப்பில் அனுப்பிவிட்டு, பின் குளியலறை சென்றவள், முகம் கழுவி தன்னை ரிஃப்ரஷ் செய்தாள். ப்ரஜன் வாங்கி வந்திருந்த உணவினை... பசி என்ற ஓர் உணர்வே இல்லாதபோதும்... எதையும் எதிர்த்து நின்று போராட உடலுக்கு சக்தி தேவை என்பதால் உண்டு விட்டு, டாக்டர் கொடுத்த மாத்திரைகளையும் விழுங்கிவிட்டு படுத்தாள்.

படுத்து விட்டாலும்....உறக்கம் வருவேனா பார்? என்றது. கண்களை இறுக்க மூடி, 'சிவ சிவ சிவ', என சொல்லிக் கொண்டே இருந்தாள். திக்கற்றவனுக்கு தெய்வமே துணையல்லவா?



நங்கை நிலைமை இவ்வாறிருக்க...



வெளியூரிலிருந்த த்ரிவிக்ரமன்..., காலை அவன் சென்றிருந்த நிறுவனத்தின் மென்பொருள் திட்ட ஆய்வுக்கான கலந்துரையாடல் மதிய உணவுநேரத்தையும் தாண்டிச் செல்ல, அவ்வேலையை முடித்த பின்னரே அனைவரும் விடைபெற்றனர். அந்த நிறுவனத்திலேயே, உணவு தருவிக்கப்பட... பரபரப்பில்லாமல் நிதானமாய் சாப்பிட்டு விட்டு அலைபேசியை Do not Disturb மோட்-ல் இருந்து நார்மல் மோட்-க்கு மாற்றினான். சுமார் அரைமணிநேரம் கழித்து, ப்ரஜன்.. போனில் அழைத்து , குழந்தை குர்ஷரன் கடத்தப்பட்டதையும், நங்கை அக்குழந்தையைத் தேடி சென்று கொண்டிருப்பதையும் கூறியவுடன், பதைபதைத்தான். அந்த நொடி ... மனைவியின் அருகே பக்கபலமாய் நிற்க தான் அங்கு இல்லையே என்று நொந்தவன்... மாலை அதே ஊரில்.. இன்னுமொரு நிறுவனத்திற்கு செல்லவேண்டி இருந்ததை .... தள்ளிவைத்து, அவர்களுக்கு தகவல் அளித்து.. நேரம் தாழ்த்தாது... விமான நிலையம் சென்றான்.



இடையில்... ப்ரஜனை தொடர்பு கொள்ள முயற்சிக்க... அது முழுமையாய் அடித்து ஓய்ந்தது. அடுத்து நங்கைக்கு அவன் அழைக்க... அதுவும் எடுக்கப்படவில்லை. சரி... சிக்கலில் இருந்திருக்கிறாள், அதை தீர்க்க அவளாளான பிரயத்தனம் செய்து, அயர்ந்திருப்பாள், தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அமைதியானான். கூடவே சின்னதாய் ஒரு நெருடல். பிரச்சனை என்றவுடன் மனைவி தன்னை அனுகவில்லையே?, என ஒருபுறம் மனம் சுணங்க.... தான் ப்ரஜனைப்போல்.. களத்தில் அவளுடன் கூட நின்றிருக்க முடியாதல்லவா? தவிர , மீட்டிங் முடியும்வரை, பேசியை DND -ல் போட்டிருந்தோமே? எனவே சகி சரியாகத்தான் முடிவெடுத்திருக்கிறாள் என்று அறிவு இடித்துச் சொன்னது. இது மனதிற்கும் அறிவிற்குமான முரண்.



விமானம் ஏறியதும் அலைபேசி ஏர்ப்பிளேன் மோட்-ல் போனதால்... நங்கை, இவனது மிஸ்ட் கால் பார்த்து திரும்ப த்ரிவிக்-கினை தொடர்பு கொள்ள முயற்சித்த போது ... அவளால் முடியவில்லை. இரண்டு மணி நேரத்தில் தாய்த்திருநாட்டின் தலைநகர் வந்து சேர்ந்த த்ரிவிக்ரமனுக்கு... இடியாய் வந்தது புலனத்தில் வந்த காணொளி.



சிறுவயதில் இருந்து எதையும் தெளிவாக திட்டமிட்டு செய்யும் வழமையுடையவனான த்ரிவிக்ரமன், வாழ்வில் முதன்முறையாக.. அடுத்தென்ன செய்வதெனப் புரியாது அதிர்ந்து நின்றான். கையறுநிலையில் விமான நிலையத்திலேயே சிலையென சமைந்தவன்... தலை சுற்றுவது போல தோன்ற... அருகிருந்த இருக்கையில் அமர்ந்தான். பயணப்பொதியில் இருந்த தண்ணீரை மடக் மடக்-கென குடித்து... ஓரளவு தன்னை நிலைப்படுத்திக்கொண்டான். மனதுக்குள்...., 'செயலாற்ற வேண்டிய நேரமிது.. மனமே மயங்காதே, துக்கத்தை தூர வை... அடுத்தென்ன? யோசி... என்று கட்டளையிட்டான். என்ன செய்ய...? ஓடிப்போய் மனைவியின் அருகே இருந்து ஆறுதல் சொல்வதா? அல்லது இந்த அவதூறினை பரப்பியவனை தேடிச் சென்று... இவ்விஷ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமா?', அமர்ந்திருந்த த்ரிவிக், முழுதாய் ஐந்து நிமிடங்கள் சிந்தனையில் செலவளிக்க.. அவனது கேள்விகளின் பதிலாக நங்கை செய்த ஓர் செயலே மனதில் தோன்றியது.



அன்றொருநாள், பார்ட்டியில் நங்கைக்கு ஹிந்தி தெரியாதென இவன் நினைத்துப் பேச, தெரியுமென ப்ரஜன் அனைவர் முன்னும் போட்டுடைக்க... நொடியில் "அவருக்கு சொல்லாம சஸ்பென்ஸா வச்சிருந்தேன்", என்று சமாளித்து தன்னைக் கீழே இறக்காமல் பேசிய மனையாள் நினைவுக்கு வந்தாள். ஆம்.. என்ன செய்யவேண்டும் என தீர்மானித்து விட்டான். இந்த வீடியோவை திரித்து நங்கை மேல் வீண் பழி சொன்னவன்.. அம்பலத்தில் ஏறவேண்டும்... ஊராரின் முன் மண்டியிட்டே தீரவேண்டும், இந்த செய்தி வதந்தியென நிரூபிக்க வேண்டும் என்ற ஒரு முடிவுடன்... செயல் முடிக்கத் தயாராய், தெளிவான திட்டமிடலுடன்.. விமான நிலையத்தில் இருந்து வெளிவந்தான்.



கால் டாக்ஸி பிடித்து, போகும்போதே, ப்ரஜனின் அலைபேசிக்கு அழைத்தான், அவன் அப்போதுதான் நங்கையை மருத்தவமனையில் இருந்து வீட்டில் விட்டு, அவனது இல்லம் சென்று கொண்டிருந்தான். அவர்கள் எதற்காக மருத்துவமனை சென்றார்கள் என்று கேட்டறிந்த த்ரிவிக்ரமனுக்கு, எதிராளியை கொலையே செய்யுமளவிற்கு கோபம் வந்தது. பின்னர், பிரஜனிடம் தான் டெல்லி வந்துவிட்டதையும், அடுத்து என்ன செய்யவிருக்கிறான் என்பதையும் கூறி, ப்ரஜனது காவல்துறை நண்பனின் தொடர்பு எண்ணைக் கேக்க, அவனோ, தன் நண்பனையும் அழைத்துக் கொண்டு தானும் வருவதாகக் கூற... நேரே..'இணையதள குற்றங்களை விசாரிக்கும் தலைமையகம்', வருமாறு சொன்னான்.



பிறகு அவனுக்குத் தெரிந்த அமைச்சரின் உதவியாளரைத் தொடர்பு கொண்டு... அமைச்சரிடம் பேசி, அவனுக்கு துறை ரீதியான ஒத்துழைப்பை வேண்டினான். அவரும் ஒப்புதல் அளிக்க..., அடுத்து... நங்கையின் தந்தையை அழைத்து தகவலளித்து, உடன் டெல்லி வர பணித்தான். கூடவே.. நங்கை கையில் கட்டுடன் இருப்பதையும் கூறி, பெண்கள் யாரையாவது அழைத்து வர அறிவுறுத்தினான்.



பின் த்ரிவிக், தனது வழக்கறிஞரிடம், நங்கையின் முன் ஜாமீனுக்கு தாக்கல் செய்யுமாறு சொல்லி இருந்தான். அவர் தேவையான விண்ணப்பங்களை எடுத்துக்கொண்டு காலை வீட்டிற்கு செல்வதாக கூறினார். இது குறித்து பேச நங்கைக்கு முயற்சிக்க.... அதில் எங்கேஜ்ட் டோன் வந்தது... இருமுறை முயற்சித்தவன், அவன் செல்லவேண்டிய அலுவலகம் வந்துடவே... திட்டமிட்ட வேலைகள் மூளையில் அணிவகுக்க.... அவற்றைச் செயலாற்ற... வேக எட்டுக்கள் எடுத்து உள்சென்றான். இவன் அவ்வலுவகம் செல்வதற்குள், அமைச்சர் அத்துறையின் மேலதிகாரிக்கு பேசி இருந்தார். எனவே, அவர்களுமே இவனது வரவிற்காக காத்திருந்தால்.. உடனடியாக வேலை துவங்கியது.



சற்று நேரத்தில் ப்ரஜனும், அவன் நண்பனும் வர... முதலில் அந்த வீடியோ, எந்த எண்ணிலிருந்து வந்ததோ... அந்த எண்ணின் உரிமையாளர் யார், என்ன முகவரி போன்றவைகளைத் திரட்டி, [அவனது யூகம் அவை போலியானவைகளாய்த்தான் இருக்கும் என்பது, ஆயினும்] ஏதோனுமொரு நூல் கிடைக்காதா? என்றொரு கோணத்தில், அம்முகவரிக்கு இரு காவலரை அனுப்பி, தகவல்களை சரிபார்க்கச் செய்தனர். அவன் யூகம் சரியே, அது போலியான முகவரி, யாரோ எப்பொழுதோ வாடகைக்கு இருந்தவரின் அடையாள அட்டையை உபயோகித்து, சிம் கார்டு வாங்கியுள்ளனர். பின் அந்த எண்ணிற்கு வந்த அழைப்புகளை பதிவெடுத்து, அடுத்த கட்ட விசாரணை துவக்கினர். பலன் பூஜ்யமே.



எந்த அழைப்புகளும் அந்த எண்ணிற்கு வரவில்லை. ஒரே ஒரு புலனக்காணொளி தெரியாத ஒரு எண்ணிலிருந்து வந்திருக்க , அதையடுத்து ஒரு காணொளி தொகுப்பு மென்பொருள் [வீடியோ எடிட்டிங் சாஃப்ட்வேர்] தரவிறக்கம் [download] மாத்திரமே இருந்தது. வந்திருந்த நேரம் சரியாக... நங்கையை ப்ரஜன் காரில் மருத்துவமனை கூட்டிச் சென்ற நேரத்தினை ஒத்திருந்தது. பின்னர் சுமார் ஒன்றேமுக்கால் மணி நேரம் கழித்து அதிலிருந்து பற்பல எண்களுக்கு காணொளி சென்றிருந்தது, அதில் த்ரிவிக், நங்கை எண்களும் அடக்கம். இந்த கண்டறிதலுக்கே நேரம் நள்ளிரவைத் தொட்டிருந்தது.
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
இதற்கிடையில் மருத்துவமனையில், காயம்பட்டவனின் சட்டையில், அவன் ஓட்டும் வேனின் டிராவல்ஸ் முகவரி கிடைத்தது. அங்கு சென்று விசாரித்ததில், அவனது வீட்டு விலாசம் கிடைக்க.. நள்ளிரவென்றும் பாராமல்.. அங்கு சென்றனர். வீட்டின் உரிமையாளர், இந்த நபருடன் கூட ஒருவன் குடியிருப்பதும்... இருவரும் வாகனம் ஓட்டுபவர்கள், என்ற விபரமும் தெரிவிக்க.., "வீட்டுக்குள்ள பாக்க முடியுமா ?", என்க...

"ஆங்.. அது.. வந்து.. "என்று தயங்க.."நாங்க போலீஸ், திறங்க.. ", மிடுக்காக தோரணையுடன் கூறியவுடன்.. "சரி வாங்க", என்று சாவியைக் கொடுத்தார். அவ்வீட்டினைத் திறந்து பார்த்ததில், ஒரு ஓரமாக மூலையில் பெரியதாக இருந்த ஸ்பீக்கரின் மேல் நண்பர்கள் இருவரும் எடுத்த புகைப்படம் இருக்க.., நங்கை இவனைப் பற்றி ஏற்கனவே த்ரிவிக்கிற்கு, சிசிடிவி பதிவினையும் காண்பித்தல்லவா சொல்லி இருந்தாள்? எனவே த்ரிவிக்கிற்கு அவனைப்பார்த்த உடனே அடையாளம் தெரிந்தது.



அந்த மற்றொருவன் வேறு யாருமல்ல... நங்கை, விடுதிக்கு வந்த பதின்ம வயதுப் பெண் ஒருவள்.., அவளது கார் ஓட்டுனருடன் வரம்பு மீறி பழகுவதாய் அபெண்ணின் அன்னையிடம் கூறி, அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியதால்... பாதிக்கப்பட்டவன். அந்த கார் டிரைவரின் பெயர் ரியாஸ்..., நங்கையினால் அடிபட்டுக் கிடப்பவன், இவனது நண்பன் வேன் டிரைவர், அமர்.



இடைப்பட்ட நேரத்தில்.. நங்கை அனுப்பிய.. பதிவு செய்யப்பட்ட அலைபேசி உரையாடல் பதிவினை கேட்டவனுக்கு... சிற்ச்சில யூகங்கள் தோன்றின. நங்கையின் தொழில் முறை எதிரி, அவளது செயலால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு எதிரியுடன் கூட்டு சேர்ந்து செய்த பழிவாங்கும் நடவடிக்கை இது என்பது... அந்த மூன்றாமவன் சற்று புத்திசாலி என்பது கண்கூடு.



போலி முகவரி கொடுத்து புது அலைபேசி எண் வாங்கி , அதே எண்ணில் காணொளி உருவாக்கும் மென்பொருளைத் தரவிறக்கி.. அவ்வாறு மாற்றிய காணொளியை அனைவர்க்கும்.. பொது அருகலை உபயோகித்து.. பகிர்ந்து.. IMEI குறித்து தெரிந்தவனாய்அந்த மொபைலையே தூக்கி வீசி... நிச்சயம் புத்திசாலியே. அவன் யார் என்பது.. அடிபட்டு மயக்கத்தில் இருப்பவனோ, அல்லது தலைமறைவாக இருக்கும் ரியாஸோ வந்து சொன்னாலன்றி பிடிப்பது கடினம்.



மருத்துவமனையில் அமரின் உடல் நலம் பற்றி கேட்டறிய, எதுவும் முன்னேற்றமில்லை என்ற போதும் பின்னடைவும் இல்லை என்று மருத்துவர்கள் சொன்னதாக தகவல் வந்தது.



இத்தனை மணி நேர இடைவெளியில்.. ரியாஸ் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் சென்றிருக்கலாம். என்ன செய்து, எப்படி அவனைப் பிடிப்பது? அவனைத்தேடி ... டெல்லி ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில், த்ரிவிக்கும், ப்ரஜனும், அவனது காவல்துறை நண்பனும், அவனது குழுவும் .. கையில் இருந்த ரியாஸின் புகைப்படத்தோடு திசைக்கொரு குழுவாக...அலைந்து, திரிந்து கொண்டிருந்தனர்..



++++++++++++++++++++++++++++++



காலையில் இருந்து அலைக்களித்த நிகழ்வுகளால், தன்னையுமறியாது நங்கை உறங்க ஆரம்பித்தாள். சற்று நேரத்தில் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, விழிப்பு வந்து எழுந்தவள், மணி பார்க்க அது இரவு பதினொன்று எனக் காட்டியது. யார் இந்த நேரத்தில்?... ஒருவேளை கணவனாய் இருக்குமோ என்று நினைத்து கட்டுக்களால் மூடப்படாத விரல்களைக் கொண்டு கதவைத் திறந்தாள். அங்கு இருந்தது த்ரிவிக்கிரமன் அல்ல, இவளது தந்தை மோகனசுந்தரமும், சின்ன அண்ணனும் அண்ணியும் வந்திருந்தனர். அதற்குள் இவர்களுக்கு தகவல் சென்றுவிட்டதா? என சற்று திகைத்தாலும், "வாங்கப்பா, வாண்ணா, வாங்க அண்ணீ..", என்றபடி கதவை விரியத் திறந்தாள். சின்ன அண்ணி முதலில் கைகளைப் பார்த்தவர்... வேகமாக வீட்டினுள் வந்து "நல்லா...", என்றபடி இவளைக் கட்டிக்கொண்டார். சப்தமின்றி அண்ணியின் உடல் குலுங்குவதை உணர்ந்தவள்... அவர் அழுவது தெரிய.."ம்ப்ச். அண்ணீ.....", என்று கடிந்தாள்.



ஒருவித கனமான அமைதி அங்கு நிலவ.... "எல்லாரும் சாப்பிட்டீங்களா? ஏதாவது ரெடி பண்ணவா?", என்க.., "ச்சு... எல்லாம் சாப்பிட்டுத்தான் கிளம்பினோம்.. சும்மாவே இருக்க மாட்டியாடி நீ? கையை இப்படி செஞ்சுவச்சிருக்க?", கண்களைத் துடைத்துக்கொண்டே.. உரிமையாய் கடித்தார். மணமான பெண்களுக்கு... பிறந்தகத்து சொந்தங்கள் திட்டினாலும் சுகமே. காரணம் அவர்களின் அக்கறையல்லவா? திருமணம் என்று ஒன்றானபின்.. பெண்கள் மருமகளாகவோ.. குடும்பத்தலைவியாகவோ அல்லது தாயாகவோ தானே பார்க்கப்படுகிறார்கள்? அவர்களின் பசி, வலி, துக்கம் அனைத்தும், அவர்களுக்கே இரண்டாம்பச்சம் எனும்போது, சுற்றியுள்ளவர் குறித்து கேட்கவே வேண்டாம். மிகப்புரிதலான கணவர்கள் அடைந்த பெண்கள், விதிவிலக்கு. அவர்கள் நிச்சயம் நல்வரம் பெற்றோரே.



மோகனசுந்தரம் அவள் முகத்தை தான் பார்த்திருந்தார். மகளது அழுது வீங்கிய முகம்... மனதை வருத்த... "அம்மாடி...", என்று ஆரம்பித்த தந்தையிடம், "ப்பா. டயர்டாருக்கு. டாக்டர் ஸ்லீப்பிங் டோஸ் குடுத்திருக்காங்கன்னு நினைக்கிறன். தூக்கம் தூக்கமா வருது, காலைல பேசிக்கலாம்பா", என அவரை அமர்த்தியவள்.. அவரவர்களுக்கு அறைகளை காண்பித்து.. ஏற்கனவே சிலமுறை இங்கு வந்தவர்கள்தான்.. எனினும் படுக்கை வசதியை சரிபார்த்து... அவளது அறைக்கு செல்ல... அண்ணி, அவளுடன் உடன் உறங்குவதாகக் கூற.. மறுப்பேதும் சொல்லாமல் அறைக்கு அழைத்துச் சென்றாள். உட்கொண்ட மாத்திரை யின் தாக்கத்தால்,. ஒருவாறு உறங்கியும் விட்டாள்.



மறு நாள்... காலை அனைவரும் எழுந்த பத்து நிமிடங்களில், அண்ணி நங்கையை அடுக்களைக்குள் வரவே கூடாது, என்று ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டு, காஃபி அவரே தயாரித்திட.... குடித்து முடித்து அனைவரும் கூடத்தில் இருக்க, மோகனசுந்தரம் நங்கை நல்லாளிடம், "கிளம்பும்மா... அடுத்த பிளைட் புடிச்சு ஊருக்கு போயிடலாம். என்ன ஆனாலும் அங்க போய் பார்த்துக்கலாம். மாப்பிள்ளை கிட்ட நான் சொல்லிக்கிறேன்", என்க...



பிறந்ததிலிருந்து இதுவரை அவரை மறுத்துப் பேசாத அவரது மகள், "இல்லப்பா இப்ப நா அங்க வர்றது சரியா வராது, அவருக்கு இந்த விஷயம் தெரியும். இப்ப என்ன பண்ணிட்டு இருக்காங்கங்கிறது எனக்கு தெரியாது, எப்படி இதை எடுத்துகிட்டு இருக்காங்கன்னும் எனக்கு தெரியாது, அதனால அவர் சொல்லாமல் நான் எங்கேயும் வரமாட்டேன்.. அதுவுமில்லாம இங்க என்னை நம்பி, கொஞ்சம் பேர் இருக்காங்க, என் தொழில் இருக்கு. ஒரு பிரச்சனைன்னா நின்னு சமாளிக்கணுமே தவிர... அம்போன்னு விட்டுட்டு ஓடிப்போனா... நம்ம தப்பானவங்கன்னு ஆகிடும். உங்க பேச்சை கேக்கலைன்னு நினைக்காதீங்கப்பா ", என ஸ்திரமாக அவளது நிலைப்பாட்டை கூறினாள்.



"மாப்பிள்ளை உன்ன சந்தேகப்படுவார் ன்னு நினைக்கிறயாம்மா?", கண்ணில் டன் கணக்கில் கவலையை தேக்கி வைத்து கேட்கும் தன் தந்தையிடம்...இல்லை என்பாளா அல்லது தெரியவில்லை என்பாளா? பதிலேதும் கூறாமல் சின்னதாய் ஒரு புன்சிரிப்பு சிந்திவிட்டு, அடுத்த வேலையை கவனிக்க சென்றாள்.



தனியே பால்கனிக்கு சென்றவள் பின்னாலே சென்ற அவளது அண்ணன்.., "யாருன்னு ஏதாவது ஒரு க்ளூ கிடைச்சா சொல்லும்மா, நம்ம பசங்க பத்து பேர வந்திட்டு இருக்காங்க. சாயங்காலத்துக்குள்ள தூக்கிடலாம், அடையாளமே தெரியாத அளவுக்கு பண்ணிடலாம்", என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் மொழிய.., "ண்ணா, அப்படியெல்லாம் எதுவும் பண்ணிடாதீங்க.", எனப் பதறியவள்.... "நேத்து ஒருத்தன் எங்கிட்ட பேசினான்ண்ணா, ரெக்கார்ட் பண்ணிருக்கேன். உங்களுக்கும் அனுப்பறேன்.அவருக்கும் அனுப்பிச்சிட்டேன். எதுவா இருந்தாலும் அவர் வரட்டும்..., அவரை கேட்டுட்டு செய்யலாம்", சொல்லி முடித்தாள்.



வீட்டில் வேளைக்கு ஆட்கள் வர... சமையல் அம்மாவிடம், தன் வீட்டினருக்கான பிடித்தங்களைக் கூறி... அதுபடி உண்டி தயாரிக்கச் சொல்லி.. குளிக்கச் சென்று விட்டாள். கைகளை இரண்டு கையுறைகள் கொண்டு மூடி இருந்ததால், தண்ணீர் படும் என்ற கவலை இல்லை. உதவிக்கு வருகிறேன் என்று சொன்ன அண்ணியையும் தவிர்த்து, தானே சமாளித்தாள்.



நேரம் சுமார் ஏழு நாற்பது எனும்போது, அவளது அறையில் போன் அடித்தது, வேகமாக வந்து எடுத்து "ஹலோ ", என்றதும்

"நங்கை.."... அழைத்தது த்ரிவிக். கணவனின் ஒற்றை விளிப்பு... உயித்தெழ வைக்குமா?, நங்கையை உயிர்பித்தது. "உங்கப்பாவ வர சொல்லி இருந்தேன் வந்துட்டாரா? ",

த்ரிவிக் மறுமுனையில் கேட்க .. அவனது குரலைக் கேட்டதும், நங்கைக்கு அப்படி ஒரு நிம்மதி... கண்கள் தானாக கலங்க... தன் நலத்திற்காக.. அக்கறையோடு வீட்டினரை வரவைத்துள்ளான், என்பது புரிய ... உணர்ச்சி மேலிட...."என்னங.........", கூறிய நங்கையின் தொண்டை கட்டிக் கொண்டு, குரல் வெளியே வர மறுத்தது.



"வீட்டுக்கு வக்கீல் ஒருத்தர் வருவாரு, சைன் பண்ணி அனுப்பு",



"ம்., வக்கீல் எதுக்கு? ", கேட்ட நங்கைக்கு 'அவன் செத்துட்டானோ?', என்று தோன்றியது. பதட்டமாக ... "த்ரிவிக்...அந்த அவனுக்கு ஏதாவது ஆயிடுச்சா?", என வினவ..



"இப்ப வரைக்கும் ஸ்டேபில் தான், ஹாஸ்பிடல்ல காலைல ஒரு தடவ முழிச்சிருக்கான். டாக்டர்ஸ் மானிட்டர் பண்றாங்க, " என்றதும் அமைதியானாள்.
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
"உனக்கு வேற ஏதாவது கால் இல்ல வாட்ஸப் மெசேஜ் வந்ததா?", என த்ரிவிக் துருவ...



"இல்லையே, ஒன்னும் வரல.. ஏன் கேக்கறீங்க?",



த்ரிவிக், நேற்று இரவு நடந்ததையெலாம் பகிர்ந்து, "அந்த ஆள் யாருன்னு தெரில. ரியாஸோ / அமரோ வந்து சொன்னாகூட.. ப்ரூவ் பண்ண முடியாது, உனக்கு ஏதாவது யாராயிருக்கும்னு ஐடியா இருக்கா?",கேட்டவன்..



சற்று யோசித்து ... "ம்ப்ச். இல்லங்க..தெரில", என்று நங்கை மொழிய..

ஒரு நீண்ட பெருமூச்சுடன், "டோன்ட் வொரி, எங்க போவான்? எப்படியும் கண்டுபிடிச்சிடலாம்.. என் கைல மட்டும் அவன் கிடைக்கட்டும், அப்பறம் இருக்கு அவனுக்கு.. " ஆறுதலாக ஆரம்பித்து வன்மமாக முடித்தான்.



அவன் பேசியத்தைக் கேட்டதும், இவளது கண்களில் கரகரவென கண்ணீர் வழிய... நங்கையின் மன அலைப்புறுதல்களுக்கெல்லாம் ஒரே வாக்கியத்தில் முற்றுப்புள்ளி வைத்து, கணவனாய் நங்கைக்கு நிம்மதி அளித்தான்..



"நீங்க ஏன் நைட்டே போன் பண்ணல?", நங்கையால் மேலும் அழுகையை அடக்கமுடியாமல், கேவல் கிளம்ப... பின்னே இரவில் எத்தனை மன அழுத்தம்?



"ஏய்... அழறியா என்ன?", அதிர்ந்து கேட்டவனின் மனம் பிசைந்தது. "ஏண்டா ?", தான் பேசாததால் வருத்தப்பட்டிருக்கிறாள் என்றுணர்ந்து குரல் தானாக கனிந்து வந்தது. "நான் நிறைய வாட்டி ட்ரை பண்ணினேன்டா, பிஸின்னு வந்தது, அப்பறம் ரொம்ப அன்டைமா ஆயிடிச்சு. ப்ரஜன்.. மாத்திரை போட்டிருப்பாங்க, தூங்குவாங்க-ன்னு சொன்னானா, சரி டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நினச்சேன். ரியாஸைத் தேடி அலைஞ்சுட்டு காலைல அஞ்சு மணிக்கு தான் இங்க ஆபிசுக்கே வந்தோம், அசதில கொஞ்ச நேரம் தூங்கிட்டோம் போல., இப்போ முழிச்சதும் கால் பண்ணிட்டேன். சாரிடா"



மூக்குறிஞ்சியபடி... "ல்ல ..ஒண்ணுமில்ல.. ஏதோ ஸ்ட்ரெஸ்.. கொஞ்சம் எமோஷனாய்ட்டேன்", சற்று நிறுத்தி, "நீங்க சீக்கிரம் வாங்க..", தாய் மடி தேடும் பிள்ளையாய் நங்கை.



அப்படியே பறந்து அவளிடம் போகத் துடித்த மனத்தைக் கட்டுப்படுத்தி, " ஒரு லீட்-க்கு ட்ரை பன்றோம். கிடைச்சதும் வந்துடறேன். இவங்களே பாத்துப்பாங்க, பட் நானும் கூட இருந்தா நல்லாருக்கும்னு தோணுது. ஒரு சின்ன க்ளூ கிடைச்சா போதும்.. அவனை 'ஏண்டா இப்படி பண்ணிணோம்'ன்னு ஓரொரு செகண்டும் நினைக்க வைக்கணும்.", மனதின் தீ வார்த்தைகலாய் வந்தது. நெடுமூச்சுடன் "சீக்கிரம் வந்துர்றேன். ஓகே ? "



"ம்ம். ஓகே , வச்சிர்றேன். பை. ", அழைப்பைத் துண்டித்தாள். இந்த சில நிமிடப் பேச்சிலேயே, நங்கைக்கு யானை பலம் வந்திருந்தது. கணவனின் அன்பிருந்தால் கடைக்கோடியிலும் வெல்லலாம். கொண்டவன் துணையிருந்தால் கூரையேறியும் சண்டையிடலாம். தெரியாமலா சொன்னார்கள்?



சிறிது நேரத்தில், "நல்லா.. வக்கீல் வந்திருக்கார், பாக்கணும்ங்கிறாரு, இருக்கச் சொல்லட்டுமா?", அண்ணன் இவளது அறைக்கு வந்து கேட்டான். "ஆமாண்ணா, இப்போதான் அவர் போன்-ல சொன்னார். உக்காரைச் சொல்லுங்க. தோ வரேன்"



"இது தேவையாம்மா?, நான்தான் அடிச்சேன்னு, நான் சரண்டர் ஆயிடறேனே"



"ண்ணா, புரியாம பேசாதீங்க, நான் அடிச்சதை.. அங்க நிறைய பேரு பாத்திருக்காங்க, வீடியோ இருக்கு. அதுவுமில்லாம, இப்போ முன் ஜாமீனுக்குத் தான் அப்ளை பன்றோம். இதுவரைக்கும், எனக்கெதிரா யாரும் கம்ளைண்ட் பண்ணல. ஒரு சேஃப்டிக்குத்தான் இது. ஓகே ?", என்றுவிட்டு கூடத்தில் காத்திருந்த வக்கீல் கொடுத்த ஆவணங்களில் கையெழுத்திட்டாள். பின் அவருக்கு காஃபி கொடுத்து உபசரித்து அனுப்பி வைத்தாள்.



"மேடம் "... வாசலில் இருந்து செக்யூரிட்டியின் குரல் கேட்க... வெளியே வந்து, அவரைக் கேள்வியாய் பார்த்தாள் .



அவரோ ... தயக்கமாக மீண்டும் "மேம்", என்க ...



"என்ன விஷயம் சொல்லுங்க?",

"வேற வேற ப்ளாக்கிற்கு விசிட்டர்ஸ் னு சொல்லி ரிப்போர்ட்டர்ஸ் உள்ள வந்திருக்காங்க, த்ரிவிக் சார்ட்ட கால் பண்ணி கேட்டேன் அவங்கள வெளிய அனுப்பிடச் சொன்னாரு, ஆனா அவங்க கேட்க மாட்டேங்கிறாங்க." என்க...,



நொடியில் நிலைமையை யூகித்தவள், பளிச்சென ஒரு யோசனை தோன்ற....



"நான் பேசிக்கிறேன் நீங்க போங்க", என்றுவிட்டு அபார்ட்மென்டுக்கு கீழே குழுமி இருந்த அவர்களை நோக்கி சென்றாள். நங்கை வெளியே சென்ற வினாடியில் அறைக்குள் இருந்த அவளது அலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது.. அழைத்தவன் சாட்சாத் த்ரிவிக்ரமனே. ஹாலில் இருந்த அண்ணி, பேசியை எடுத்துப் பார்தது , "தம்பி, நங்கை வெளில போயிருக்கு போல.. வந்ததும் பேச சொல்றேன், ஏதாவது அவசரம்னா என்ட்ட சொல்லுங்க",என்றார்.



மறுபுறம் த்ரிவிக், என்ன செய்வதென்று தெரியாமல், "சரி அப்பறம் பேசறேன்", வைத்து விட்டான். உடனே கிளம்பினாலும், வீடு சென்று சேர எப்படியும் அரைமணி நேரமாவாது ஆகும். நங்கை தனியாக.. பத்திரிக்கையாளர்களை எவ்விதமாக எதிர்கொள்வாளோ? கவலை வர.. பிரஜனிடம் சொல்லிவிட்டு, கிளம்ப நினைக்க... அவனோ, தானும் உடன் வருவதாய் சொல்ல... இருவருமாக கிளம்பினர்.



நங்கையின் வீட்டிற்கு வெளியே ...



"ஹலோ மேம்.. நேற்று வெளியான அந்த வீடியோ பத்தி உங்களோட கருத்து சொல்ல முடியுமா?", என ஒரு நிருபர் கேட்க...



நிமிர்வாக.. நேர்கொண்ட பார்வையுடன் இளநகை முகத்தில் ததும்ப, " வொய் நாட்? நல்ல கிளாரிட்டி நல்ல எடிட்டிங்", என்று நிறுத்தி.... "உங்களுக்கெல்லாம் யாருனே தெரியாத என்னை ஓவர் நைட்ல ஃபேமஸ் ஆக்கிருக்கே?", இப்போது அவள் முகத்தில் முழு புன்னகை.



இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்காத நிருபர்கள்..., அவளை சற்று டென்ஷன் படுத்த, வரிசையாய் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தனர். அதுதானே அவர்களது தொழில் யுக்தி?



" மேம் அத பத்தி கேட்கலை, அதுல சொன்ன விஷயம் உண்மைதானா?", என்று ஒரு நிருபரும்...



"நீங்க அடிச்ச ஆளு இப்போ ஹாஸ்பிடல் இருக்கான், நீங்க அடிச்சதுக்கு ஆதாரம் இருக்கு, ஆனா போலீஸ் உங்களை அரஸ்ட் பண்ணாம, அவன் மேல கேஸ் போட்டு ட்ரீட்மென்ட் க்கு அனுப்பி இருக்காங்க. காரணம் உங்க செல்வாக்கா? ".... என இன்னொருவரும்...



"எதுக்கு அவரை அடிச்சிங்க?".. என்று மற்றொருவரும்.... ஏக காலத்தில் கேட்க...



மாறா மிடுக்குடன் அதே புன்னகை தவழ.., "வெல். ஃப்ரண்ட்ஸ்... நாங்களே ப்ரஸ்ஸைக் கூப்பிட்டு ஒரு அறிவிப்பு கொடுக்கணும்னு இருந்தோம். எங்க வேலையை ஈஸி ஆக்கிட்டீங்க.. என்ன விஷயம்னா .. எங்க ப்ளே ஸ்கூல் இன்னும் விரிவடையுது, அடுத்த அகடாமிக் இயர்ல டெல்லி சவுத் & நார்த் ல ரெசிடென்சியல் ஸ்கூல்ஸ் ஆரம்பிக்க போறோம். எங்களோட அடுத்த இலக்கு எல்லாத்துறைகளையும் உள்ளடக்கிய யுனிவர்சிட்டி, அடுத்த வாரம் அதுக்குண்டான வேலைகளை ஆரம்பிக்கறோம்.", யோசித்து சொல்வது போலில்லாமல்.. தடங்கலின்றி தெளிவாக.. பெருமையாய் கூறினாள்.



நங்கையில் தொழிலை முடக்கத்தானே எதிரி முயன்றான்? ஒளிந்திருந்து தாக்குபவனை வெளிக்கொணர வேண்டுமே? அவனது பொறாமைத்தீயைத் தூண்டினால்....? அது அவனை தவறான நடவடிக்கை எடுக்க வைக்கலாம் , அதுவே அவனை ஊருக்கு வெளிச்சம் போட்டும் காட்டலாம். த்ரிவிக் கேட்ட க்ளுவும் கிடைக்கலாம். கல்லெறிந்து விட்டாள், பழம் கிடைத்தால் வெற்றிதானே?



"உங்க நடத்தையைப் பத்தி ......", நிருபர்கள்...



"தோழர்களே... என்னைப் பத்தி கேள்வி கேட்கவும், கவலைப்படவும் என் கணவர் , என் குடும்பம் இருக்கு. வேற யாருக்கும் அந்த உரிமையை நான் தர விரும்பல, அதை அவரும் விரும்ப மாட்டார்.", பேச்சைச் சற்று நிறுத்தி, இடைவெளி விட்டு நிதானமாக..."உங்களுக்கான பதில்-ன்னா... இறை/பெண் குறித்த ஒரு கவிதை சொல்றேன்...

செதுக்கி செதுக்கி சிற்பமானேன்...

அனல் கக்கி குளிரானேன்..

விஷம் உமிழ்ந்து அமிழ்தானேன்...

நீர் பொழிந்து மேகமானேன்.

சிறுகல் தூசியோ, சிற்பமோ,

அனலோ, குளிரோ,

விஷமோ, அமிழ்தோ

நீரோ, மேகமோ,

தேர்வு உன் வசம்..



நீங்க எப்படி எடுத்துகிறீங்களோ அப்படித்தான் நான்", என்றவள் குறுநகையுடன்... "அதுக்காக என்ன வேணா எழுதலாம்னோ சொல்லலாம்னோ அர்த்தமில்லை... என்னை எனக்குத் தெரியும்ங்கிறதால, என்னை எதுவும் பாதிக்காது, சோ, தப்பா எடுத்துக்க மாட்டேன்... ஆனா என் ஃபாமிலி ... என்னோட வெல்விஷர்ஸ்.. அவங்களை... , அவங்க நடவடிக்கைகளை நான் ஒன்னும் செய்ய முடியாது.", என்றுரைக்க... இவ்வாறு சிரித்துக் கொண்டே மிரட்டல் விட இவளால் மட்டும்தான் முடியும், என்றுதான் தோன்றியது கேட்பவர்களுக்கு. ...



"என்ன மேம் இன்டைரக்டா மிரட்ரீங்களா?", ஒரு பெண் நிருபர் கேட்க...



"ஃபாக்ட்ஸ் சொன்னேன், அப்பறம் ... உங்க இஷ்டம்", "நம்ம வீடு வரைக்கும் வந்திருக்கீங்க... ஒரு பத்து நிமிஷத்துல பிரேக்பாஸ்ட் ரெடியாயிடும். ப்ளீஸ் சாப்ட்டுபோங்க."



நங்கை நல்லாள்..... நின்றாள்... பேசினாள்... (செ)வென்றாள். இது நேர்மையானவர்களின் நிமிர்வு. அஃதல்லாதோர்க்கு வராத ஓர் உடல்மொழி.



இதைக் காரில் வரும்போதே லைவ் டெலிகாஸ்ட்-டில் பார்த்துக்கொண்டிருந்த த்ரிவிக்கும், ப்ரஜனும்... ப்ரம்மித்தனர் என்றுதான் சொல்லவேண்டும். "தீதி ... கலக்கிட்டாங்க ", காரை ஒட்டிய ப்ரஜன் கூறினான்.



"ஹேய்.. உன் தோஸ்த்துக்கு போன் போடு.. எனக்கோ இல்ல நங்கைக்கோ வர்ற கால்ஸ் ட்ராக் பண்ண சொல்லு.. ", த்ரிவிக் பரபரத்தான்..



"ஒவ் வாவ்.. விக்கிண்ணா... இது அவனுக்கான ட்ராப்-பா?, செம செம", என்று உற்சாகமாக கூவ...



"மே பி..., ", என்று சிரித்தவன். "டேய் .. என்னை அண்ணா-ங்கிற... நங்கைய தீதிங்கிற?", மேலும் சிரித்தான்.



அதற்குள் ப்ரஜன் கால் செய்திருந்தான். ரிங் போக, அடுத்தவனுக்கு விபரம் சொல்லி விட்டு... வீடு நோக்கி இருவரும் சென்றனர்.



பத்து நிமிடத்தில்... தெரியாத என்னிலிருந்து த்ரிவிக்ரமனுக்கு அழைப்பு வர, இருவரும் கூர்மையானர்கள். உடனடியாக ப்ரஜன் நண்பனுக்கு மெசேஜ் அனுப்பி விட்டான். த்ரிவிக் எடுத்ததும், "ஏய்.. உன் பொண்டாட்டிக்கு அறிவே இல்லையா? அவ பேரே நாறிட்டு இருக்கு. ஊருக்கே பேட்டி குடுக்கறா? நாங்க ஸ்கூல் ஆரம்பிக்கப் போறோம், யூனிவர்சிட்டி ஆரம்பிக்கப் போறோம்னு.. ஒழுங்கு மரியாதையா.. எல்லாத்தையும் மூடிட்டு ஊருக்குப் போகச் சொல்லு... இல்ல.. தினமும் அவளைப்பத்தி ஒரு வீடியோ ரிலீஸாகும்", படபடவென பொரிந்தான் அந்த முகம் காட்ட பயந்து, முதுகில் தாக்கும் கோழை.



நங்கையை ஒருமையில் பேசும் அவனது குரல்வளையை நெறிக்க ஆசை வந்தது விக்ரமனுக்கு. ஆனால் .. "என்னது? பேட்டி குடுக்கறாளா?" அதிர்ச்சியாக காண்பித்துக் கொண்டான்.



"ஆமா... இப்போதான் பேசி முடிச்சா. என்னவோ பிளே ஸ்கூல் எக்ஸ்பான்ஷனாம், யூனிவர்சிட்டி கட்டப் போறாளாம்........ , ...................... ", இரண்டு நிமிடத்துக்கு மேல் இடைவிடாது பொருமினான். இவர்களுக்கும் அவன் அதிகம் பேச வேண்டும், அப்போதுதானே அவனது அலைபேசி சிக்னலை வைத்து அவனைப் பிடிக்க முடியும்?



அதற்குள் பிரஜனின் மொபைல் மெசேஜ் வந்திருப்பதாய்க்காட்டி ஒளிர..., "ஒற்றை கட்டை விரல்" வந்தது. பார்த்த இருவரும் புன்னகைத்தனர்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top