• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagana Ratchasiye - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அத்தியாயம்-1

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.

சென்னையிலிருந்து மேட்டுபாளையம் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் இரவு 9 மணிக்கு செல்ல ஆயுத்தமாகி கொண்டிருந்தது.

முதல் வகுப்பு கம்பார்மென்ட்டில் ஜன்னல் ஒரத்தில் சரண்யா வசதியாக சாய்ந்து அமர்ந்து கொண்டு சிப்ஸ் பாக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு வெளியில் நடக்கும் கலவரங்களை ரசித்துக் கொண்டிருந்தாள்.

சரண்யாவின் கண்களில் எதிரில் இருந்த கடையில் ராஜேஷ்குமாரின் நாவல் தென்பட்டது.

"அண்ணா... வாட்டர் பாட்டில் வேணும்" என்று காலியான வாட்டர் பாட்டிலை எடுத்துக் காண்பித்து கேட்டாள் சரண்யா.

சில நிமிடங்களில் ஸ்ரீநிவாஸ் வாட்டர் பாட்டிலோடு ராஜேஷ்குமார் புத்தகத்தையும் தர வாங்கிக் கொண்ட சரண்யா "ரொம்ப தாங்கஸ் அண்ணா" என்றாள்.

ஸ்ரீநிவாஸ் அவள் எதிரில் அமர்ந்துக் கொண்டு பூளுடூத் ஹெட்செட்டை காதில் மாட்டிக் கொண்டு செல்போனில் ஒடிக் கொண்டிருந்த இசையை ரசித்துக் கொண்டே தலையாட்டினான்.

ஸ்ரீநிவாஸ் இருபத்தி நான்கு வயது இளைஞன். சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய அவனை கடந்து செல்லும் அனைத்து பெண்களும் ஒரு நிமிடம் பார்த்துவிட்டு செல்லத் தோன்றும் அளவுக்கு அழகன்.

சரண்யா அவனது செல்லத் தங்கை. நல்ல சிவப்பு நிறம் என்றாலும் கனத்த சரீரம், பெரிய கண்கள், புசுபுசு கன்னங்கள், சிறு இதழ்கள், சற்றே தொப்பையுடன் ஜோதிகா போன்ற தோற்றம் உடையவள்.

ரயில் செல்வதற்கு ஸ்டேஷன் மாஸ்டர் பச்சைக் கொடி அசைக்க நீலகிரி எக்ஸ்பிரஸ் தன் சக்கரங்களை அசைத்துக் கொண்டு தண்டவாளத்தில் தன் பயணத்தை ஆரம்பித்தது.

ரயிலின் தடக் தடக் என்று சத்தத்தோடு தொட்டிலில் குழந்தை ஆடிக் கொண்டே தூங்குவதைப் போல ரயிலின் மடியில் சுகமாய் செல்ல ஆரம்பித்தனர்.

ஸ்ரீநிவாஸ் இசையில் மூழ்கியபடி பயணிக்க, சரண்யாவோ நாவலில் தன்னைத் தொலைக்க ஆரம்பித்திருந்தாள்.

ரயில் அமைதியாக பயணித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு அழகிய யுவதி கம்பார்ட்மெண்ட் கதவைத் திறந்துக் கொண்டு வேகமாக வந்தாள்.

அவளின் எதிரில் சீட்டில் அமர்ந்திருந்த இருவரையும் அலட்சியம் செய்துவிட்டு சரண்யாவின் இருக்கையின் அடியில் பதுங்கிக் கொண்டாள்.

யார் இந்த பெண்? ஏன் அவசரமாக வந்தாள்? ஏன் இருக்கையின் அடியில் பதுங்கிறாள்? என்று இருவரும் யோசித்துக் கொண்டிருந்தனர்.

கம்பார்ட்மெண்ட் கதவைத் திறந்துக் கொண்டு இரு ஆண்கள் வேகமாக வந்தனர்.

"இங்க ஒரு குட்டி வந்துச்சா?" என்றான் ஒருவன்.

நல்ல பணக்கார இளைஞர்கள் என்பது அவர்களின் உடையிலும் , தோற்றத்திலும் தெரிந்தது. அவர்கள் இருவரும் நன்கு குடித்து இருக்கிறார்கள் என்பது அவர்கள் முகமும் பேச்சும் காட்டிக் கொடுத்தது.

சரண்யா மருண்ட விழிகளுடன் அவர்களை பார்த்தாள்.

"ஏய்... யார்டா நீங்க? என்ன குட்டி கிட்டின்னுட்டிருக்கீங்க?" என்று அதட்டல் தொனியில் கண்களை உருட்டி முறைத்தபடி கேட்டான் ஸ்ரீநிவாஸ்.

ஸ்ரீநிவாஸின் கம்பீர தோற்றத்திலும், அதட்டல் பேச்சிலும் மிரண்ட அவர்கள்,
"சாரி பிரதர்... நாங்க ஒரு பொண்ணை தேடிட்டு வந்தோம். அவ இல்லை. நாங்கவர்றோம்" அங்கிருந்து அகன்றனர்.

பணக்கார குடிகார இளைஞர்கள் சென்றபின் "நீங்க இனி வெளில வரலாம்" என்றாள் சரண்யா.

அழகான யுவதியான அவள் மெல்ல சீட்டுக்கடியில் இருந்து வெளியில் வந்து சரண்யாவின் அருகில் தலை குனிந்து அமர்ந்துக் கொண்டாள்.

அவளின் தலைமுடி சற்று கலைந்து இருந்தது. அவள் அணிந்திருந்த சேலை கலைந்து கசங்கி இருந்தது. அவளின் ரவிக்கை பின்புறத்தில் கிழிந்திருந்தது.

அவள் உதடுகளில் ரத்தமும், கன்னங்களில் கீறல்களும், உடலின் நடுக்கமும் அவளின் நிலையை சொல்லாமல் உணர்த்தியது.

"தண்ணி குடிங்க" என்று சரண்யா வாட்டர் பாட்டிலை நீட்டினாள்.

அவள் நடுங்கிய கைகளுடன் வாங்கி அவசரமாய் குடிக்க அவள் மேலும் தண்ணீர் சிந்தியது.

அவள் சில மடக்கு குடித்தபின் பாட்டிலை இறக்கி சீட்டில் வைத்துவிட்டு வாயை புடவை நுனியில் துடைத்துக் கொண்டு தலை குனிந்துக் கொண்டாள்.

"பயப்படாதீங்க... இனி அவங்க வரமாட்டாங்க. அண்ணா அவங்கள மிரட்டி அனுப்பிச்சிட்டாங்க" என்றாள் சரண்யா.

அவள் சரி என்பது போல் தலையசைத்தாள்.

"உங்க டிரஸ், திங்க்ஸ் எல்லாம் எங்கன்னு காட்டுனிங்கன்னா அண்ணாவோட போயி எடுத்துட்டு வந்திடலாம்" என்றாள் சரண்யா.

அவள் மெளனமாக அழ காரணம் புரியாமல் சரண்யா புரியாமல் விழித்தாள்.

"அழாதீங்க..." என்று சரண்யா சொல்ல கண்களைத் துடைத்துக் கொண்டபின் மெளனம் கலைத்தாள்.

"எங்கிட்ட மாத்து துணி கூட இல்லே" என்றாள் அவள்.

சரண்யா அந்த வார்த்தைகளால் அதிர்ந்து அவளையே பார்த்தாள்.
 




Last edited:

MahalingaM

மண்டலாதிபதி
Joined
Mar 15, 2018
Messages
104
Reaction score
144
Location
Anthiyur
அத்தியாயம்-1

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.

சென்னையிலிருந்து மேட்டுபாளையம் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் இரவு 9 மணிக்கு செல்ல ஆயுத்தமாகி கொண்டிருந்தது.

முதல் வகுப்பு கம்பார்மென்ட்டில் ஜன்னல் ஒரத்தில் சரண்யா வசதியாக சாய்ந்து அமர்ந்து கொண்டு சிப்ஸ் பாக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு வெளியில் நடக்கும் கலவரங்களை ரசித்துக் கொண்டிருந்தாள்.

சரண்யாவின் கண்களில் எதிரில் இருந்த கடையில் ராஜேஷ்குமாரின் நாவல் தென்பட்டது.

"அண்ணா... வாட்டர் பாட்டில் வேணும்" என்று காலியான வாட்டர் பாட்டிலை எடுத்துக் காண்பித்து கேட்டாள் சரண்யா.
இவலுவுதானுங்கலா
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
பெண்களை போகப் பொருளாக நினைக்கும் ஆண்கள் இருக்கும் வரை இப்படித்தான் பல பெண்களின் நிலை கேள்விக் குறிதான்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
பெண்களை போகப் பொருளாக நினைக்கும் ஆண்கள் இருக்கும் வரை இப்படித்தான் பல பெண்களின் நிலை கேள்விக் குறிதான்
நல்லா சொன்னிங்க சக்தி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top