• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagiye marry me.....-12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
ஹாய்!!! ஹாய்!!! ப்ரெண்ட்ஸ்!!!

சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி!!!

இன்னைக்கும் ud படித்து விட்டு ஒரு லைக், ஒரு கமெண்ட்ஸ் எதிர்பார்க்கும் இந்த சிறு பிள்ளையை ஏமாற்றி விடாதீங்கோ மக்கா;);)


ranveer.jpg386823101c0df7d88e4f72fd30039da0.jpgnp.png
கீழே சுருண்டு வீழ்ந்து கிடந்த மதுவின் தலை முடியை கொத்தாகப் பற்றி அவளை தூக்கி நிறுத்திய அகிலா


"என்னடி காரியம் பண்ணிருக்க நீ? இத்தனை நாள் ஏதோ சின்ன பொண்ணுனு உன்னை கண்டிக்காம விட்டா நீ இப்படி அசிங்கம் பண்ணிட்டு இருக்க. பழகுறது ஒருத்தன் கூட கல்யாணம் ஒருத்தன் கூடயா? நடத்தை கெட்டவளே!" என்றவர் மீண்டும் மதுவை அடிக்க போக அவர் கை பற்றி தடுத்தான் கார்த்திக்.


"அம்மா!!! கொஞ்சம் அமைதியாக இருமா...எல்லோரும் நம்மளையே தான் பார்க்குறாங்க. எதுவாக இருந்தாலும் வீட்டில் போய் பேசிக்கலாம் வாம்மா..." என்று கார்த்திக் கூறவும் சுற்றிலும் பார்த்து விட்டு மதுவின் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்று காரில் தள்ளி ஏற்றிய அகிலா அவளருகில் அமர்ந்து கொண்டார்.


ஒன்றுக்கு மேல் ஒன்றாக அதிர்ச்சியடைந்த மதுவோ அவள் கன்னத்தை பிடித்தவாறே கண்களில் நீர் வழிய வீதியை வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தாள்.


மதுவின் வீட்டை வந்தடைந்ததும் மதுவின் கையை பிடித்து இழுத்து கொண்டு அவளை வீட்டினுள் அழைத்து சென்ற அகிலா
"அருணா......." என்று வீடே அதிரும்படி கத்தினார்.


ஏற்கனவே கலக்கத்தில் அமர்ந்திருந்த அருணா அகிலாவின் குரல் கேட்டு அவசரமாக ஹாலுக்கு வர அங்கே மது நின்ற கோலத்தைப் பார்த்து பதறிப் போனார்.


வெளியே தோட்டத்தில் நின்றிருந்த அருணாசலமும் அகிலாவின் குரல் கேட்டு வீட்டினுள் வர அகிலாவின் பிடியில் கண்ணீரோடு நின்றிருந்த மதுவின் அருகில் அவசரமாக ஓடி வந்து மதுவை தன் புறம் இழுத்து கொண்டார்.


"என்ன அக்கா இதெல்லாம்? எதுக்கு மதுவை இப்படி பிடிச்சுட்டு நிற்குறிங்க? மது எதுக்குமே அழாதவ அவ அழுற அளவுக்கு என்ன பண்ணிங்க?" என்று கோபம் பாதி பதட்டம் பாதியாக அருணாசலம் கேட்கவும்


"என்ன எதுக்கு கேட்குற? நீ வளர்த்து வைச்சுருக்கியே உன் சீமந்தப் புத்திரி அவள் கிட்டயே கேளு. அவள் பண்ண வேலைக்கு அவளை கொன்னு போட்டாலும் பரவாயில்லை" என்று ஏறக்குறைய கத்தி கொண்டு நின்றார் அகிலா.


"மது என்னடா ஆச்சு? ஏதாவது சொல்லுடா!" என்று அவள் கையை பிடித்து கொண்டு அருணா கேட்க


மதுவின் ஒரு கன்னம் வீங்கி சிவந்திருந்ததைப் பார்த்து கோபம் கொண்ட அருணாசலம்
"அக்கா என் பொண்ண என்ன பண்ணி வைச்சிருக்கீங்க? அவ தப்பு பண்ணிருந்தாலும் என் பொண்ண எப்படி நீங்க அடிக்கலாம்? ஒரு சின்ன துரும்பு கூட அவளை காயப்படுத்திடக் கூடாதுனு கண்ணுக்குள்ள வைச்சு வளர்த்த பொண்ணு என் மது. அவள அடிக்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது?" என்று கேட்டார்.


"என்ன நடந்ததுனு சொன்னதுக்கு அப்புறம் உன் பொண்ணோட லட்சணத்தை நீயே தெரிஞ்சுக்க" என்ற அகிலா மாலில் மது ஒருவனிடம் நின்று பேசி கொண்டிருந்தது முதல் அவன் அவளை முத்தமிட்டு சென்றது வரை கூற அருணாசலம் உச்ச பட்ச அதிர்ச்சி அடைந்து நின்றார்.


ஆனால் அருணாவோ அகிலாவின் முன்னால் வந்து நின்று
"என் பொண்ணு எந்த கலங்கமும் இல்லாதவ. எவனோ ஏதோ பேசிட்டானு என் பொண்ண நான் சந்தேகப்பட மாட்டேன். அவ எல்லோரையும் ஒரே மாதிரி நினைச்சு பழகுறவ. அதை அந்த பையன் தப்பா பயன்படுத்தி இருக்கான். இப்போ கூட என் பொண்ணு மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. அவ தப்பானவ இல்ல" என்று கூற


"அம்மா!!!!!!!!!!" என்று ஓடி வந்து அருணாவை கட்டி கொண்டு தேம்பி தேம்பி அழுதாள் மது.


"என் பொண்ணு வேற யாரையாவது விரும்பி இருந்தா அவ அப்பாகிட்ட சொல்லுறாளோ இல்லையோ என்கிட்ட சொல்லி இருப்பாள். இப்படி பொய்யா நடிச்சு உங்கள ஏமாத்தணும்னு நினைச்சுருக்க மாட்டா. சின்ன வயசுலே இருந்து அத்தான் அத்தானு உன் பின்னாடியே தானே மது வருவா கார்த்திக். நீ கூட அவளை நம்பலயா?" என்று வலியோடு அருணா கேட்க தலை குனிந்து நின்றான் கார்த்திக்.


"அத்தை, கார்த்திக் அவன் யாருனே எனக்கு தெரியாது. அந்த மால்ல தான் அவனை பார்த்தேன். சும்மா பேசிட்டு தான் நான் நின்னேன். திடீர்னு அவன் அப்படி பண்ணிட்டான். நான் எந்த தப்பும் பண்ணல அத்தை" என்று கண்ணீர் மல்க மது கூறவும் அமைதியாக நின்றார் அகிலா.


"இந்த கல்யாணம் நடக்காது அருணாசலம்...எல்லாத்தையும் நிறுத்திடலாம்" என்று அகிலா கூறவும்


"அக்கா...." என்று அதிர்ச்சி அடைந்தார் அருணாசலம்.


"இது என்ன சின்ன புள்ளைங்க விளையாடுற பொம்மை கல்யாணமா அண்ணி? ஊரெல்லாம் பத்திரிகை கொடுத்து இன்னும் மூணு நாளையில் கல்யாணம்னு இருக்கும் போது இப்படி சொன்னா என்ன அர்த்தம் அண்ணி?" என்று அருணா கேட்கவும்
அவரை உறுத்து விழித்த அகிலா


"அதெல்லாம் உங்க பொண்ணு அடுத்தவன் கூட நின்னு தப்பா நடக்குறதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கனும். இப்போ வேஷம் போட்டு பலன் இல்லை" என்று கூறி விட்டு கார்த்திக்கின் கை பிடித்து இழுக்க அவனோ அசையாமல் நின்றான்.


"கார்த்தி....." என்று அதிர்ச்சியாக அகிலா அவனைப் பார்க்க அவர் கைகளில் இருந்து தன் கையை விலக்கி கொண்டவன் நேராக மதுவின் அருகில் சென்றான்.


அவள் கண்ணீரை துடைத்து விட்ட கார்த்திக்
"என்ன நடந்தாலும் சரி எனக்கு நீ தான் மனைவி. இதை யாராலும் மாற்றமுடியாது"
என்று விட்டு அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறு பெட்டியை எடுத்தான்.


அனைவரும் அதிர்ந்த போய் கார்த்திக்கைப் பார்க்க எந்த வித பதட்டமும் இல்லாமல் அந்த பெட்டியை திறந்தவன் அதிலிருந்த தாலியை கையில் எடுத்தான்.


"கார்த்தி...." என்று அனைவரும் அதிர்ச்சியடைந்து நிற்க மதுவை நெருங்கி நின்றவன்


"எனக்கு மது தான். மதுவுக்கு நான் தான்னு நீங்க எல்லாரும் சின்ன வயசுல இருந்தே சொல்லி சொல்லி வளர்த்துட்டு இப்போ தூக்கி எறிஞ்சுட சொன்னா என்ன நியாயம்? இனி மதுவை பிரிஞ்சு நான் வாழ மாட்டேன்" என்று கூறி விட்டு அவள் கழுத்தில் தாலி கட்ட கையை அவள் கழுத்தின் அருகே கொண்டு சென்றான்.


"கார்த்தி......" என்று அகிலா கத்தவும் திரும்பி பார்த்தவன் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் நின்றிருந்த அகிலாவைப் பார்த்து விட்டு அவள் கழுத்தில் ஒரு முடிச்சு போட்டான்.


அவசரமாக அவனை நெருங்கி அவன் கையில் இருந்த தாலியை அகிலா பறிக்க அது மதுவின் கழுத்தை வெட்டி விட்டு அவர் கைக்கு சென்றது.


வலியால் மது
"அம்மா...." என்று கத்த அவளை பிடித்து கொண்ட அருணா


"ஏன் இப்படி மூர்க்கத்தனமா நடந்துக்குறீங்க? உங்களுக்கு மனுஷ தன்மையே இல்லையா?" என்று அகிலாவைப் பார்த்து கேட்டவர்


"கார்த்தி போதும்பா போதும். என் பொண்ண விட்டுடு. வாழ்க்கை பூரா உங்க அம்மாவோட ஏச்சு, பேச்சை கேட்டுட்டு என் பொண்ணு கஷ்டப்படனுமா? உங்க அம்மா எப்ப என் பொண்ண நம்புறாங்களோ அப்போ உங்களுக்கு நானே முன்னின்று கல்யாணம் பண்ணி வைக்கிறேன். இப்போ தயவுசெய்து என் பொண்ண கஷ்டப்படுத்தாம விட்டுடுங்க" என்று கையெடுத்து கும்பிடவும்
அவசரமாக அவர் கையை பிடித்து தடுத்த கார்த்திக்


"கண்டிப்பாக நான் திரும்பி வருவேன் அத்தை என் மதுவுக்காக.." என்று விட்டு
விறுவிறுவென வெளியேறி சென்று விட அகிலாவும் அவனைப் பின் தொடர்ந்து சென்றார்.


கீழே முழங்காலிட்டு அமர்ந்த மது முகத்தை மூடிக் கொண்டு கதறி அழவும் அவளருகில் வந்த அருணாசலம் அவள் தலையை ஆதரவாக கோதிவிட்டார்.


"மது போய் முகத்தை கழுவிட்டு வா சாப்பிடலாம்" என்று அருணா கூறவும்


"வேண்டாம்மா...." என்று மது கூற அவளை அருணா முறைத்து பார்க்க எதுவும் பேசாமல் எழுந்து சென்ற மது முகத்தை கழுவி விட்டு வந்தாள்.


அமைதியாக சாப்பிட்டு விட்டு எழுந்து சென்ற மது அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டாள்.


அது வரை அடக்கி வைத்திருந்த மொத்த சோகத்தையும் அடக்க மாட்டாமல் கண்ணீராய் வடித்தாள் மது.


சமையலறைக்குள் சென்ற அருணா வாயை மூடிக்கொண்டு அழுது கொண்டிருக்க அவரை ஆதரவாக அணைத்துக் கொண்டார் அருணாசலம்.


அழுது கொண்டிருந்த மது அப்படியே உறங்கி விட அன்றைய இரவு அவர்கள் அனைவருக்கும் கவலை
மிகுந்ததாகவே கழிந்தது.


காலையில் கண் விழித்த மது நேற்று நடந்த சம்பவங்களை நினைத்து பார்க்க அவள் கண்கள் கலங்கியது.


சிறு வயதில் இருந்து தன் தாய், தந்தை தன்னை திட்டும் போதும் அவளுக்கு துணை நின்ற அவளது அன்புக்குரிய அத்தை அகிலா தன்னை புரிந்து கொள்ளவே இல்லையே என்ற கவலை அவளை பாடாய்ப்படுத்த எழுந்து அமர்ந்தவள் குளித்து விட்டு பூஜையறைக்கு சென்றாள்.


மனமுருக கடவுளை வேண்டி கொண்டவள் அருணாவை தேடி செல்ல அவரோ சமையலறையில் நின்று கொண்டிருந்தார்.


அருணாவின் கைகள் தான் சமைப்பதில் ஈடுபட்டிருந்ததே தவிர அவர் மனம் முழுவதும் அவரிடம் இல்லை.


சிறிது நேரம் அருணாவைப் பார்த்து கொண்டிருந்தவள் அவளது தந்தையை தேடி சென்றாள்.


வழக்கமாக அதிகாலையில் எழும்பி விடும் அருணாசலம் மணி ஒன்பது ஆகியும் எழும்பாமல் இருக்க அவரை தேடி சென்றாள் மது.


அவரது அறைக் கதவில் கை வைக்க கதவு தானாக திறந்து கொண்டது.


"அப்பா..." என்றவாறே அருணாசலத்தை நெருங்கி சென்ற மது அவர் கையை தொட அவரது கைகள் சில்லென்று இருந்தது.


"அப்பா...அப்பா...அப்பா..." என்று பலமுறை அவரை அழைத்தும் அருணாசலம் எழும்பாமல் இருக்க பதட்டமடைந்த மது


"அம்மா!!!!!!" என்று கத்தி கொண்டு சமையலறையை நோக்கி ஓடினாள்.


மதுவின் சத்தம் கேட்டு வந்த அருணா
"என்ன மது? எதுக்கு இப்படி சத்தம் போட்ட?" என்று கேட்கவும்


"அ...ம்...மா...அங்க...அப்...அப்பா....அப்பா.." என்று மது திணறிய படி நின்றாள்.


ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து அவசரமாக அறைக்குச் சென்ற அருணா அருணாசலத்தை எழுப்ப அவரோ மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தார்.


நேற்று நடந்த சம்பவங்களின் தாக்கத்தில் தவித்துப் போய் இருந்த அருணா தன் கணவரை கவனிக்கவில்லையே என்ற சுயபச்சாதாபத்தில் கதறி அழுதார்.


அவர்களுக்கு துணை இருந்த அருணாசலமும் அவர்கள் இருவரையும் தவிக்க விட்டு விட்டு சென்று விட கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல தவித்தார் அருணா.


யாரிடம் சென்று என்ன சொல்வது எனப் புரியாமல் தவித்தவர் முதலில் அழைத்தது கார்த்திக்கை தான்.


அருணா சொன்ன செய்தியை கேட்டு பதறியடித்து கொண்டு வந்த அகிலா நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்.


மதுவோ நடப்பதை எல்லாம் பார்த்து கொண்டு கல்லாக இறுகிப் போய் இருந்தாள்.
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
அவசரமாக செயல்படும் ஒரு காரியத்தின் விளைவு எத்தகைய இழப்பை ஏற்படுத்துகிறது
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
அவள் கண்களில் இருந்து
ஒரு சொட்டு நீர் வரவில்லை.


மாறாக அவள் மனமோ இதற்கெல்லாம் காரணம் அந்த அருள் தானே என நினைத்து கட்டுக்கடங்காமல் கோபம் கொண்டது.


"அவனைப் பார்த்தது தப்பு. அவன் கூட பேசுனது தப்பு. என் கார்த்தி அத்தான் இருந்த இடத்தில் அவனைப் பார்த்தது தப்பு" என்று மனதில் வெதும்பி கொண்டிருந்தவள்


"அவனுக்கு என் மனசுல இடமா நெவர்..." என்று அழுத்தமாக கூறி கொண்டாள்.


மும்பையில் இருந்து வந்திறங்கியதும் நடந்த விடயம் எதுவும் அறியாமல் ஸ்ரீதர் மதுவின் வீட்டை நோக்கி புறப்பட்டான்.


வீட்டைச் சூழ நிறைய நபர்கள் நிற்கவும் குழப்பமாக அவர்களைப் பார்த்தவாறே வீட்டினுள் நுழைந்த ஸ்ரீதர் அங்கே அருணாசலத்தின் உடல் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போய் நின்றான்.


சுற்றிலும் பார்வையை சுழல விட்டவன் அருணா ஒரு மூலையில் அழுது கொண்டிருக்கவும் அவசரமாக மதுவை தேடினான்.


அவளோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு விட்டத்தையே வெறித்துக் கொண்டிருப்பதை பார்த்து அவளின் அருகில் சென்றான்.


"ம..மது..." என்று ஸ்ரீதர் அழைக்கவும் அவனைத் திரும்பிப் பார்த்தவளின் கண்கள் கலங்கியது.


அவளின் அருகில் அவன் அமர்ந்து கொள்ளவும் "ஸ்ரீ...." என்றவாறு தாயைக் கண்ட பிள்ளை போல அவன் மடி மேல் விழுந்து கதறி அழத் தொடங்கினாள்.


கார்த்திக்கிற்கும், அகிலாவிற்கும் அங்கு நின்ற அனைவருக்குமே மதுவை பார்க்க பாவமாக இருந்தது.


மதுவை மெல்ல மெல்ல சமாதானப்படுத்தி அழ விடாமல் பார்த்து கொண்ட ஸ்ரீதர் அவளை அழைத்து கொண்டு தோட்டத்திற்கு சென்றான்.


"என்ன மது ஆச்சு? என்கூட போன்ல பேசும் போது கூட நல்லா தானே பேசுன. அப்பாவுக்கு எப்படி இப்படி???" என்று ஸ்ரீதர் கேட்கவும் விம்மிக் கொண்டே கடந்த நான்கு நாட்களாக நடந்த அனைத்து சம்பவங்களையும் ஒன்று விடாமல் கூறினாள்.


கை முஷ்டி இறுக கேட்டுக் கொண்டு நின்ற ஸ்ரீதர்
"இன்னைக்கு அவன் வருவான்லே. அங்கேயே அவனை வெட்டி போட்டுட்டு வரேன்" என்று கோபமாக கிளம்ப போனவனின் கைகளை பிடித்து கொண்டாள் மது.


"வேண்டாம் ஸ்ரீ போகாதே! எனக்கு பயமாக இருக்கு. அப்பா இல்லாமல் ரொம்ப பயமாக இருக்கு. திரும்பவும் அத்தை திட்டி, அடிப்பாங்கனு பயமாக இருக்கு ஸ்ரீ போகாதே!" என்று கண்ணீர் மல்க மது கூறவும் பேச்சற்று நின்றான் ஸ்ரீதர்.


"எப்படி இருந்த பெண் இவள்???" என்று கவலையுடன் நினைத்து கொண்டவன் அருணாசலத்தின் இறுதி காரியங்கள் வரை அனைத்தையும் ஒரு மகனாக முன்னின்று செய்து வைத்தான்.


இறுதிக் காரியம் முடிந்து எல்லோரும் கிளம்பி விட அருணாவின் அருகில் வந்த அகிலா


"என் தம்பி இருக்குற வரையும் தான் நீங்க என் குடும்பம் இப்போ அவனே போயிட்டான் இனி சொந்தம்னு சொல்லிட்டு எங்களைத் தேடி வரவேண்டாம்" என்று கூறி விட்டு செல்ல போக அவர்கள் முன்னால் வந்து நின்றான் ஸ்ரீதர்.


"அப்போ உங்க பையனோட கல்யாணம்??" என்று ஸ்ரீதர் அகிலாவைப் பார்த்து கேட்கவும்


"அந்த நடத்தை கெட்டவளால தான் என் தம்பி உயிரே போயிடுச்சு. அவள என் பையனுக்கு கட்டி வைச்சு என் பையனும் அல்ப ஆயுசல போறதுக்கா?" என்று அகிலா கூற கோபமாக அவரை அடிக்க கை ஓங்கினான் ஸ்ரீதர்.


அவனின் கை பிடித்து தடுத்த மது
"நான் தப்பு பண்ணிட்டேன் தான். உங்க பையனுக்கு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைங்க. இப்போ நீங்க போகலாம்" என்று கூற கோபமாக கார்த்திக்கை இழுத்து கொண்டு சென்றார் அகிலா.


மது மனதினுள் ஊமையாக அழுது கொண்டிருந்தாள்.


"நல்லவர்கள் என்று நம்பியவர்கள் எல்லோருமே அவர்கள் நல்லவர்கள் இல்லை என்பதை நன்றாக நிரூபித்து விட்டனர்" என்று எண்ணிக் கொண்ட மது விரக்தியாக புன்னகத்து கொண்டாள்.


இரண்டு, மூன்று நாட்கள் சோகமாக இருந்த மது மறு நாள் ஸ்ரீதரை போன் பண்ணி வரச் சொன்னாள்.


வீட்டு வாயிலில் பதட்டமாக நின்ற மதுவை பார்த்து
"எதுக்கு அவசரமாக வரச்சொன்ன மது?" என்று ஸ்ரீதர் கேட்கவும் அவனைக் கை பிடித்து அழைத்து கொண்டு மாலை நோக்கி சென்றாள் மது.


"இங்க எதுக்கு வந்த மது?" என்று ஸ்ரீதர் குழப்பமாக கேட்கவும்


"அருளைப் பார்த்து பேச" என்று மது கூறவும் உச்சக்கட்ட அதிர்ச்சியில் நின்றான் ஸ்ரீதர்.


"என்ன மது விளையாடுறியா? வா வீட்டுக்கு போகலாம்" என்று ஸ்ரீதர் அழைக்கவும்
அவன் கையை உதறிவிட்டு முன்னால் சென்றாள் மது.


சிறிது தூரம் சென்றதும் மது தயங்கி நிற்பதைப் பார்த்து அவளருகில் சென்ற ஸ்ரீதர்
"என்ன மது நின்னுட்ட?" என்று கேட்கவும்


"அவனைப் பார்த்தா பாவமாக இருக்கு ஸ்ரீ. முகமே வாடிப் போய் இருக்குது. இதோட எல்லாவற்றையும் விட்டுட்டு போகலாம்" என்று மது கூற அவளை வியப்பாக பார்த்தான் ஸ்ரீதர்.


"மதுவை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவன் யாரென்று பார்க்க முடியவில்லை. ஒரு நாள் இல்ல ஒரு நாள் கண்டிப்பாக அவனுக்கு இதற்கு பதிலடி கொடுப்பேன்" என்று மனதிற்குள் உறுதி பூண்டு கொண்ட ஸ்ரீதர்


"தனக்கு இத்தனை பெரிய பிரச்சினை தந்தவனைக் கூட மன்னித்து விட்டாளே! இவள் எத்தனை நல் உள்ளம் கொண்டவள்" என்று மதுவை எண்ணி மகிழ்ச்சி அடைந்தான்.


அதன் பிறகு மதுவின் படிப்பை தொடர யார் உதவியும் நாடாது தனியாளாக நின்று அருணா கஷ்டப்பட்டு மதுவை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து சேர்த்தது வரை ஸ்ரீதர் கூறி முடிக்க அந்த இடத்தில் பெரும் நிசப்தம் நிலவியது.


அருள் தன் மனதில் என்ன மாதிரியான உணர்வு இருக்கின்றது எனப் புரியாமல் தவித்தான்.


ஸ்ரீதர் அருளை நிமிர்ந்து பார்க்க அவனோ தலை குனிந்து கொண்டான்.


"நீங்க தெரிஞ்சோ தெரியாமலோ மது லைப்ல நுழைஞ்சுட்டீங்க அருள். அவளும் உங்கள மனசுல ஒரு நல்ல நிலையில் வைச்சுதான் பார்த்துட்டு இருந்துருக்கா. ஆனா
இடையில் நீங்க அவசரப்பட்டு எல்லாவற்றையும் மாத்திட்டீங்க. இனியும் அவளை தொந்தரவு பண்ணிடாதீங்க ப்ளீஸ்" என்று விட்டு ஸ்ரீதர் சென்று விட கண்கள் இரண்டும் குளமாக நின்று கொண்டிருந்தான் அருள்.


வினித் வந்து அருளின் தோள் தொட தன் கண்களை துடைத்து கொண்டவன் ஸ்ரீதரை பின் தொடர்ந்து சென்றான்.


"ஸ்ரீதர்...ஒரு நிமிஷம்..." என்ற அருளின் குரலில் திரும்பி பார்த்தான் ஸ்ரீதர்.


"நான் பண்ண தப்புக்கு ஸாரி எல்லாம் கேட்க முடியாது. பட் ஒரே ஒரு தடவை மதுவை பார்த்துட்டு போயிடவா? ப்ளீஸ்" என்று அருள் கேட்கவும் சரியென்று ஸ்ரீதர் கூற மதுவை வைத்திருந்த அறைக்குள் சென்றான் அருள்.


தன் காதலால் ஒரு குடும்பமே சிதைந்து விட்டதே என்று வேதனை கொண்ட அருள் மதுவின் அருகில் சென்றான்.


அவள் கையின் மேல் தன் கையை வைத்த அருள்
"மது உன்னை எனக்கு பார்த்த உடனே பிடிச்சிடுச்சு. என்ன பண்ணுறோம்? ஏது பண்ணுறோம்னு தெரியாமலேயே உன் வாழ்க்கையை அழிச்சுட்டேன். காதலிச்சவங்க கிடைக்காமல் போனால் அது எவ்வளவு பெரிய வேதனைனு எனக்கும் தெரியும் மது. இரண்டு வருஷமாக உனக்காக நான் காத்துட்டு இருந்தேன். நீ எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பனு எனக்கு தெரியும் மது. நான் உன்னை எந்தளவுக்கு கஷ்டப்படுத்திருக்கேன் மது. இதற்கெல்லாம் என்ன பண்ணி பிராயச்சித்தம் தேட முடியும்? உன் வாழ்க்கையை நான் கெடுத்துட்டேனே மது நான் பாவி நான் பாவி" என்று கண்ணீர் வடிய பேசிக் கொண்டு நின்றான் அருள்.


மதுவின் கையில் அருளின் கண்ணீர் படவும் மெல்ல விழி திறந்த மது அவன் முகம் பார்த்து புன்னகத்து விட்டு

"வேந்தா....." என்று விட்டு மீண்டும் கண் மூடி உறக்கத்தில் ஆழ்ந்தாள்.......
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
அவசரமாக செயல்படும் ஒரு காரியத்தின் விளைவு எத்தகைய இழப்பை ஏற்படுத்துகிறது
Rompa crct chitra ma avasarama edukura entha mudivum periya vilaivuhalai tharum:confused::confused:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top